
சுருக்கம்



நீங்கள் 9 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் குழந்தை இப்போது முதிர்கரு (ஃபீட்டஸ்/foetus) என்ற பெயரை பெற்று விடுகிறது. இது வரையில் உங்கள் குழந்தை முளைக்கருவாக (எம்பிரியோ/embryo) இருந்தது. முதிர்கரு என்று குறிப்பிடுவது உங்கள் குழந்தை விரைவாக வளர்ச்சியடைவதை குறிக்கிறது. உங்கள் முதல் மும்மாதம் விரைவில் முடிவடைய போகிறது, உங்கள் குழந்தை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக உருப்பெற்று வருகிறது. 9 வாரங்களில், குழந்தையின் அளவு ஒரு திராட்சை அளவு இருக்கும். அதன் அளவு சுமார் 1.7 செ.மீ நீளம் இருக்கும்.
உங்கள் 9 வார கர்ப்ப வயிற்றில் பல விஷயங்கள் நடக்கிறது. இந்த சமயத்தில் உங்கள் குழந்தையின் பாலினத்தை அல்ட்ராசவுண்ட் உதவியுடன் சொல்வது சாத்தியமல்ல. எனினும் இந்த வாரத்திலேயே இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சி தொடங்கி விடும்.
இந்த சமயத்தில், மற்ற திசுக்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும். உங்கள் குழந்தையின் இதயம், அறைகளாக பிரிந்து விட்டது. தற்போது வீரியமாக துடித்துக் கொண்டிருக்கிறது. தசைகள் வளர்ச்சியடைய தொடங்கியிருப்பதால், 9-வார முதிர்கரு இப்போது தனது கை கால்களை அசைக்க முடியும்.
9 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கு பெரிய கண் இமைகள், சிறிய மூக்கு போன்ற முக அம்சங்கள் தெளிவாக வளர்ச்சி அடைகின்றன. உங்கள் குழந்தையின் காதுகளும் கூட திடமாக வளர்ச்சி பெறுகிறது. ஈறுகளும், சுவையுணர்வும் கூட உங்கள் குழந்தையின் வாயினுள் உருவாகிறது.
கால்களும், கைகளும் கூட நீளமாக வளரும். இப்போது உங்கள் குழந்தையின் விரல்கள் பெரிதாகவும், முனைகள் அகலமாகவும் ஆகியிருக்கும். பிற்காலத்தில், கைரேகைகள் உருவாகும். உங்கள் குழந்தை இப்போதே அசைய ஆரம்பித்திருந்தாலும் கூட, உங்கள் கர்ப்ப காலத்தின் பிந்தைய காலகட்டத்தில் தான் குழந்தையின் அசைவுகளை உங்களால் உணர இயலும்.
நீங்கள் 2 மாதங்கள் முடிந்து, 3-வது மாதத்தில் தான் அடியெடுத்து வைக்கிறீர்கள் என்றாலும் கூட, நிறைய விஷயங்கள் இதற்குள்ளாகவே நடந்திருக்கும். முதலில், உங்கள் வயிற்றில் பனிக்குடம் வளர ஆரம்பிக்கிறது. இந்த பனிக்குடம் தான் உங்கள் முதிர்கரு முழுவதும் வளர்ச்சி அடைந்தவுடன் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டு சேர்க்கிறது.
உங்கள் கருப்பையில் தான் எல்லா மாற்றங்களும் நிகழ்வதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் அப்படியல்ல. ஹார்மோன்கள் உங்கள் உடலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்திற்கேற்ப, வளர்சிதை மாற்றங்களும் நிகழ்கின்றன. குறைந்த இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை போன்ற மாற்றங்கள் நிகழ்கின்றன.
கர்ப்பமாவதற்கு முன்பு எப்படியிருந்தீர்களோ அது போலவே நீங்கள் ஏறக்குறைய இந்த வாரமும் இருக்கலாம். எனினும், 9 வார கர்ப்ப காலத்திற்கு பிறகு, நீங்கள் சிறிது எடை கூடுவீர்கள். இதனால், இறுக்கமான ஆடைகள் அணிவது அசௌகரியமாக தோன்றும்.
9 வாரங்களில் உங்கள் கர்ப்ப வயிறு மிகச் சிறிய அளவில் தான் வெளியே தெரியும், அல்லது சில சமயங்களில், வயிறு தெரியவே தெரியாது, ஆயினும், உங்கள் அடிவயிறு உறுதியாக இருப்பதை நீங்கள் உணரலாம். உங்கள் வளர்ந்து வரும் குழந்தையை தாங்கிக் கொள்வதற்கு ஏற்ப, உங்கள் கர்ப்பப்பை சீக்கிரமே பெரிதாகி விடும். உங்களுக்கு குமட்டல் இருந்தாலும் கூட உங்களின் எடை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் வேண்டுமானால் குமட்டலின் காரணமாக சிறிது எடை குறையலாம். உங்களுக்கு குமட்டல் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில், இன்னும் கூட எடை குறையலாம். ஆயினும், இந்த எடை குறைவு மிகக் குறைவாகவே இருக்குமென்பதால், கவலை கொள்ளத் தேவையில்லை. இருப்பினும், உங்கள் மருத்துவரிடம் இந்த மாற்றங்கள் குறித்து பேசி அதற்கான தீர்வு பெறலாம்.
கர்ப்ப காலத்தின் 9-வது வாரத்தில் உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகள், ஏறக்குறைய உங்கள் முந்தைய காலகட்டங்களில் தோன்றியது போன்றே இருக்கும். எனினும், 9 வாரம் கர்ப்பமாக இருக்கும் போது, கீழ்க்கண்ட அறிகுறிகளில் சிலவற்றை நீங்கள் உணரலாம்:
இந்த சமயத்தில் உங்களுக்கு அதிக சோர்வு ஏற்படக் கூடும். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கு தேவையான அதிக அளவிலான ஆற்றலை உங்கள் உடல் அளித்துக் கொண்டிருப்பதால், ஒவ்வொரு நாள் காலையிலும் படுக்கையை விட்டு எழும்புவதே உங்களுக்கு சிரமமாக இருக்கும்.
உங்கள் மார்பகங்கள் வீங்கிப் போய், அவை வெடித்து விடுவது போன்று உங்களுக்கு உணர்ச்சி ஏற்படும். 9-வது வார கர்ப்ப காலத்தில், ஹார்மோன்களின் காரணமாக உங்கள் மார்பகங்கள் பெரிதாகவும், வலி நிறைந்ததாகவும் ஆகி விடும்.
ஹார்மோன் மாறுதல்கள் மற்றும் உங்கள் சிறுநீர்ப்பையில் கூடுதல் அழுத்தம் ஆகியவை காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படும். இதனால், அடிக்கடி நீங்கள் கழிவறைக்கு செல்லும் படியாக இருக்கும்.
புரோஜெஸ்ட்டிரோன் செரிமானத்தை தாமதமாக்குகிறது. இதன் விளைவாக, வயிறு உப்பிசம் அல்லது அஜீரணம் உருவாகிறது.
உங்கள் முதல் மும்மாதத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் கூட இயல்பானது தான்.
மூக்கடைப்பு: ஹார்மோன்களின் செயல்பாட்டால் உங்களுக்கு அதிகமாக சளி உண்டாகும் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இதன் விளைவாக, உங்களுக்கு மூக்கு அடைத்துக் கொண்டு, ஒழுகிக் கொண்டும் இருக்கக் கூடும்.
இந்த சமயத்தில் தலைவலியும் கூட வழக்கமாக ஏற்படுவது தான். இதுவும் கூட ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக விளையக் கூடிய விரும்பத்தகாத பக்க விளைவு தான்.
உங்கள் கர்ப்பகாலமானது அதிக அபாயத்தில் இல்லாத பட்சத்தில், உங்கள் மருத்துவர் 8 மற்றும் 12-வது வாரங்களில் உங்களுக்கு முதல் அல்ட்ராசவுண்ட்-ஐ எடுப்பதற்கு ஏற்பாடு செய்வார்.
உங்கள் வயிற்றில் வளரும் கரு, கர்ப்பப்பையில் தான் வளருகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இது உதவும். மாறாக எக்டோப்பிக் அல்ட்ராசவுண்ட் பெண்ணுறுப்பின் உள்ளே கருவி வைக்கப்பட்டு செய்யப்படும். அல்ட்ராசவுண்ட் திரையில், 9 வார கர்ப்பத்தில் உள்ள சிசு ஒரு பட்டாணி அளவிற்கு தெரியும். நீங்கள் இதயத் துடிப்பை கேட்கலாம்.
உங்கள் கருவிலுள்ள சிசுவின் வெளிப்புற பிறப்புறுப்பு வளர்ந்து கொண்டிருந்தாலும் கூட, அல்ட்ராசவுண்ட் மூலம் இவ்வளவு சீக்கிரமாக பாலினத்தை கண்டறிய முடியாது. எனினும், உங்கள் கர்ப்பத்தில் அதிக அபாயமுள்ளது என்றால், குறிப்பாக தாயின் வயது அதிகமாக இருக்கும் பட்சத்தில், உங்கள் மருத்துவர் முதல் மும்மாதத்தில் பரிசோதனைகள் செய்வதற்கு பரிந்துரைப்பார்.
முதல் மும்மாத பரிசோதனையில் அல்ட்ராசவுண்ட் மற்றும் இரத்த பரிசோதனைகளையும் சேர்த்து செய்து கொள்வது, டிரைசோமி 21 போன்ற மரபணு கோளாறுகள் ஏற்படும் அபாயத்தினை தடுப்பதற்கு உதவும். முதல் மும்மாதத்தில் உங்கள் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்ளலாம், ஆயினும் இது மட்டுமே உங்கள் முதன்மையான நோக்கமாக இருக்கக் கூடாது.
இதையும் படிக்கலாமே! - 10 ஆவது வார கர்ப்ப அறிகுறிகள்
9 வாரங்களில் குழந்தையின் அளவு 1.7 செ.மீ நீளம் இருக்கும். உங்கள் குழந்தையின் இதயம் வளர்ச்சியடைந்து விட்டது. பரவலாக காணப்படும் பல அறிகுறிகள் மேலே பட்டியலிடப்பட்டுள்ளன. 9 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, கர்ப்ப வயிறு தெரியாமல் போகலாம். நீங்கள் அல்ட்ராசவுண்ட் டெஸ்ட் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் வீட்டிலேயே கூட டெஸ்ட் செய்து பார்க்கலாம். அதன் முடிவையும் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
9-வது வார மாற்றங்களையும் அசௌகரியங்களையும் எளிதாக்க, உங்கள் தினசரி பராமரிப்புக்கு துணை நிற்கும் தயாரிப்புகள்.

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each




Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns




Organic Aloe Vera (300 ml)
Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience



This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |