Diet & Nutrition
6 September 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் சில உணவுகளை சாப்பிடலாமா வேண்டாமா என்று யோசிப்பது உண்டு. ஏனெனில், சில உணவுகள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதில்லை. இவ்வாறு யோசனைக்கு உரிய ஒரு உணவாக இருப்பது மீன். இது ஆரோக்கியமான உணவு தான் என்றாலும், கர்ப்ப காலத்தில் மீன் உண்பது பாதுகாப்பானதா? மீன், கர்ப்ப காலத்திற்கு ஏற்றது தானா? இதோ அது பற்றிய ஒரு விரிவான ஆய்வு. படித்து பயனடையுங்கள்.
கர்ப்ப காலத்தில் மீன் உண்பது பாதுகாப்பானது தான். ஆனால், நீங்கள் சாப்பிடுவது சரியான மீன் ஆக இருக்க வேண்டும். அது என்ன சரியான மீன் என்று நீங்கள் யோசிக்கலாம். சரியான மீன் என்பது எந்த வித இரசாயனமும் இல்லாத நல்ல மீன் ஆகும்.
பொதுவாக மீனில் கால்சியம், வைட்டமின் டி, இரும்பு, ஜின்க், கோலின், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், மற்றும் அயோடின் நிறைந்துள்ளது. மேலும், இது லீன் புரோட்டீனின் மூலாதாரம் ஆக உள்ளது. மீனில் உள்ள இரும்பு மற்றும் ஜின்க் வயிற்றில் உள்ள குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
அது மட்டும் அல்ல, இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என்று அறிவியல் சார்ந்த சான்றுகள் உள்ளன. மீன் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என்றும் ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. மீன் சாப்பிடுவது எலும்பின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது உடல் பருமன் மற்றும் ரெக்டல் மற்றும் கோலன் கேன்சர் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கிறது.
அதனால் கர்ப்ப காலத்தில் மீன் பாதுகாப்பானது தான். ஆனால், ஒரு சில மீன்களில் அதிக மெர்குரி இருக்கும். அதிக மெர்குரி உள்ள மீனை அடிக்கடி சாப்பிட்டால், அது இரத்த ஓட்டத்தில் தேங்கி விடும். இந்த தேக்கம் குழந்தையின் நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கும்.
கர்ப்ப காலத்தில் மீன் உண்பது பாதுகாப்பானது தான் என்றாலும், அது குறைந்த மெர்குரி உள்ள மீன் ஆக இருக்க வேண்டும். வாரத்திற்கு 2 முதல் 3 முறை மீன் எடுத்துக் கொள்வது உங்களுக்கும் உங்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் நன்மை பயக்கும். ஆனால், மெர்குரி இல்லாத மீனை தேர்வு செய்து சாப்பிடுவது அவசியம் ஆகும்.
கர்ப்ப காலத்தில் எந்த மீன் நல்லது? என்று நீங்கள் சிந்திக்கலாம். அதற்காகத் தான் நாங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் எடுத்துக் கொள்வதற்கு சிறந்த மீன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்:
ஒவ்வொரு 100 கிராமில், சால்மன் மீன் 2200 மில்லி கிராம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் கொண்டுள்ளது. இது மற்ற மீன்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். அதோடு, இதில் 526 மில்லி கிராம் வைட்டமின் டி மற்றும் 91 மில்லி கிராம் கோலின் உள்ளது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. வைட்டமின் டி குழந்தையின் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கோலின் குழந்தையின் தண்டு வட வளர்ச்சியை ஆதரிக்கிறது.
அடுத்த சிறந்த தேர்வு ஷ்ரிம்ப். இதில் 500 மில்லி கிராம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், 81 மில்லி கிராம் கோலின், 48 மில்லி கிராம் செலீனியம் மற்றும் 20 மில்லி கிராம் புரதம் உள்ளது. இதில் உள்ள செலீனியம் தைராய்டு செயலிழப்பு, மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோய் முதலியவை ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. குழந்தையின் சருமம், முடி மற்றும் தசைகளுக்கு புரதம் அவசியமாகும்.
500 மில்லி கிராம், 92 மில்லி கிராம் கோலின், 51 மில்லி கிராம் வைட்டமின் டி மற்றும் 44 மில்லி கிராம் செலீனியம் கொண்டுள்ள அலாஸ்கா பொல்லாக் கர்ப்ப காலத்தில் உண்ணக் கூடிய ஒரு சிறந்த வகை மீனாகும்.
பெட்டியில் அடைத்து விற்கப்படும் டுனா மீனில் புரதம் நிறைந்துள்ளது. ஒரு செர்விங் (100 கிராம்) டுனா மீன் (சூரை மீன்) ஆனது ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் தினசரி புரதத் தேவையில் 32%-ஐ வழங்குகிறது. இது 197 மில்லி கிராம் டிஹெச்ஏ (DHA) என்னும் ஒரு வகையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டையும் கொண்டுள்ளது.
இதில் 400 மில்லி கிராம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், 81 மில்லி கிராம் கோலின் மற்றும் 36 மில்லி கிராம் மெக்னீசியம் உள்ளது. கரு வளர்ச்சிக்கு மெக்னீசியம் அவசியம் தேவை.
கர்ப்ப காலத்திற்கு உகந்த மற்ற மீன்கள் :
நன்னீர் நண்டு வகை. (Crawfish)
கெளுத்தி மீன். (Catfish)
ஃப்ளவுண்டர் (தட்டையான சிறுமீன் வகை). (Flounder)
ஹெர்ரிங். (Herring)
நெத்திலி. (Anchovy)
நெய் மீன். (Tilapia)
டிரவுட் (குளத்து மீன்). (Trout)
மத்தி மீன் மற்றும். (Sardines and)
ஸ்கால்ப் மீன். (Scallops)
கர்ப்பிணிப் பெண்கள் அதிக மெர்குரி கொண்ட மீன்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அதிக மெர்குரி கொண்ட சில மீன்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் தான் மிக உயர்ந்த அளவிலான மெர்குரி உள்ளது. இது 0.995 பிபிஎம் மெர்குரியைக் கொண்டுள்ளது, சிலவற்றில் இது 3.2 பிபிஎம் வரை இருக்கலாம்.
பொதுவாக குறைந்தபட்சம் 0.979 பிபிஎம், அதிகபட்சம் 4.54 பிபிஎம் மெர்குரியை சுறாமீன் கொண்டிருக்கும்.
ஒரு டைல்ஃபிஷில் சராசரியாக 1.123 பிபிஎம் மெர்குரி இருக்கும்.
இதில் சராசரியாக 0.73 பிபிஎம் மற்றும் சில நேரங்களில் 1.67 பிபிஎம் மெர்குரி இருக்கலாம்.
இது மிகப்பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும்; இதில் சராசரியாக 0.689 பிபிஎம் மற்றும் ஒரு சில மீன்களில் 1.816 பிபிஎம் வரை மெர்குரி இருக்கும்.
இதில் சராசரியாக 0.571 பிபிஎம் மற்றும் அதிகபட்சமாக 1.12 பிபிஎம் மெர்குரி இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் இதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
மார்லின் (கோலா மீன்) மற்றும் கொடுவாமீன் ஆகியவை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய மற்ற மீன்களாகும், ஏனெனில் இதில் அதிக மெர்குரி உள்ளது.
சரியான மீனைத் தேர்ந்தெடுத்து சரியான முறையில் சமைத்து உண்டால் மீன் சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது. இதில் அடங்கி உள்ள அபாயங்கள் என்ன?
சுறா, ராஜா கானாங்கெளுத்தி, வாள்மீன், முள்மீன் போன்ற பெரிய மீன்களில் அதிக மெர்குரி இருக்கும். அதிக மெர்குரி உள்ளதால், இது உங்கள் குழந்தையின் நரம்பு மண்டலத்தையும் மூளை வளர்ச்சியையும் பாதிக்கும்.
சுஷி, சிப்பிகள் மற்றும் மட்டி போன்ற சமைக்கப்படாத மீன்களை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை ஏற்படுத்தக் கூடும்.
சரியாக சமைக்கப்படாத மீனை உண்பதால் ஃபுட் பாய்சனிங் ஏற்படலாம். ஃபுட் பாய்சனிங் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க மீன்களை நன்றாக வேக வைத்து, வறுத்து அல்லது பேக் செய்து சாப்பிட வேண்டும்.
உள்ளூரில் உள்ளவர்களால் பாதுகாப்பானதாகக் கருதப்படும் வரை, உள்ளூர் நீரில் உள்ள மீன்களைத் தவிர்த்து விட வேண்டும். ஏன் என்றால், தண்ணீரில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருந்தால், அது மீன்களிலும் இருக்கக் கூடும்.
கர்ப்ப கால உணவில் மீனை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம். அதிக மெர்குரி உள்ள மீன்கள், சரியாக சமைக்கப்படாத மற்றும் வேகவைக்கப்படாத மீன்களை தவிர்த்தால் மீன் சாப்பிடுவது பாதுகாப்பானது தான்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் பீட்ரூட்டின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் உணவு, மருந்து அல்லது கடுமையான உடல் பயிற்சி என்று எதையாவது தங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளும் முன் அல்லது விலக்குவதற்கு முன், பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணரை அணுகி ஆலசோனைப் பெறுவது அவசியமாகும்.
References
1. Bramante CT, Spiller P, Landa M. (2018). Fish Consumption During Pregnancy: An Opportunity, Not a Risk. JAMA Pediatr.
2. Taylor CM, Emmett PM, Emond AM, Golding J.(2018). A review of guidance on fish consumption in pregnancy: is it fit for purpose? Public Health Nutr.
Is it safe to eat fish during pregnancy in Tamil, Which fish is good for pregnancy in Tamil, Which fish to avoid during pregnancy in Tamil, What are the risks of eating fish during pregnancy in Tamil, Fish In Pregnancy: Benefits and Risks in English, Fish In Pregnancy: Benefits and Risks in Hindi, Fish In Pregnancy: Benefits and Risks in Telugu, Fish In Pregnancy: Benefits and Risks in Bengali
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
கர்ப்ப காலத்தில் ரெட் ஒயின்: தொடர்புடைய பக்க விளைவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் | Red wine during pregnancy: Side Effects & Guidelines in Tamil
கர்ப்ப காலத்தில் செட்டிரிசைன்: பொருள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் | Cetirizine in Pregnancy: Meaning, Risks & Side Effects in Tamil
குழந்தையின் நகர்வு ஏன் அடிவயிற்றுப் பகுதியில் உணரப்படுகிறது? | Why you are feeling baby movement in lower abdomen in Tamil
கர்ப்ப காலத்தில் படபடப்பிற்கான அறிகுறிகள், காரணம் & சிகிச்சை | Palpitation in Pregnancy: Symptoms, Causes & Treatment in Tamil
கர்ப்ப காலத்தில் பர்கர் நன்மைகள் & விளைவுகள் | Burger During Pregnancy Benefits & Effects
பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
Diapers & Wipes - Baby Gear | Stroller | Dry Sheets | Bathtubs | Potty Seats | Carriers | Diaper Bags | Baby Cot | Carry Nest | Baby Pillow | Baby Toothbrush | Diapers & Wipes - Baby Clothing | Wrappers | Winter Clothing | Socks | Cap, Mittens & Booties | Baby Towel | Laundry Detergent | Diapers & Wipes - Feeding & Lactation | Feeding Bottle | Cloth Diaper | Maternity dresses | Stretch Marks Kit |