hamburgerIcon
login
STORE

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article Continues below advertisement

  • Home arrow
  • Pregnancy arrow
  • கர்ப்ப காலத்தில் கார்பஸ் லியூடியம்: செயல்பாடுகள், உருவாக்கம் மற்றும் கோளாறுகள் arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் கார்பஸ் லியூடியம்: செயல்பாடுகள், உருவாக்கம் மற்றும் கோளாறுகள்

    Pregnancy

    கர்ப்ப காலத்தில் கார்பஸ் லியூடியம்: செயல்பாடுகள், உருவாக்கம் மற்றும் கோளாறுகள்

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    Article Continues below advertisement

    கர்ப்ப காலத்தில் கார்பஸ் லியூடியம்

    வெவ்வேறு சுரப்பிகள் உடலில் பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன , அந்த ஹார்மோன்கள் உடலில் பல செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. இது போல ஹார்மோன் உற்பத்தி செய்யும் தளங்களில் ஒன்று கார்பஸ் லியூடியம். புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனை வெளியிடுவதன் மூலம் கருவின் வளர்ச்சிக்கு கருப்பையில் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதால் கர்ப்ப காலத்தில் கார்பஸ் லியூடியம் இன்றியமையாதது.

    கர்ப்ப காலத்தின் போதான கார்பஸ் லியூடியத்தின் செயல்பாடு :

    கார்பஸ் லியூடியம் என்பது மாதவிடாய் கொண்டுள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் கருப்பையில் உருவாகும் ஒரு சாதாரண நீர்க்கட்டி ஆகும். கர்ப்பம் தரிக்காத நிலையில், கார்பஸ் லியூடியம் 12-16 நாட்கள் வரை உடலில் நீடிக்கும். கர்ப்பம் தரித்த நிலையில் கார்பஸ் லியூடியம் கர்ப்பத்தின் முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும், ஆனால் அது 10 வாரங்கள் வரை செயல்பாட்டு ஆயுளைக் கொண்டிருக்கும்.

    கர்ப்ப காலத்தின் போது, புரோஜெஸ்ட்டிரோனை வெளியிடுவதன் மூலம் கருப்பையை கருவுக்கு உகந்த ஆரோக்கியத்தில் பராமரிப்பதே கார்பஸ் லுடியத்தின் முதன்மை செயல்பாடு ஆகும். ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபிக் (HCG) என்ற ஹார்மோன் இந்த செல்களைத் தூண்டி புரோஜெஸ்ட்டிரோன் உருவாக வழி வகுக்கிறது.

    இந்த நேரத்தில் இடது கருப்பையில் உள்ள கார்பஸ் லியூடியம், வலது கருப்பையில் உள்ள கார்பஸ் லியூடியம் பற்றியும் பேசுவோம். பெரும்பாலும் குழந்தையின் பாலினத்துடன் கார்பஸ் லியூடியத்தைத் தொடர்புபடுத்துவதுண்டு. ஆனால், கார்பஸ் லியூடியம் வலது கருப்பையில் உருவாகிறதா இடது கருப்பையில் உருவாகிறதா என்பதற்கும் பாலினத்துக்கும் தொடர்பு இல்லை. ஏனென்றால், குழந்தையின் பாலினம் குரோமோசோம் மூலம் தீர்மானிக்கப்படுகிறது, கார்பஸ் லியூடியம் எங்கு இருக்குறது என்பதைப் பொறுத்து அல்ல.

    லியூடியத்தின் உருவாக்கம் மற்றும் உடைவு

    லியூட்டல் கட்டத்தில் கருப்பையில் உருவாகும் கார்பஸ் லியூடியம் 14 நாட்கள் நீடிக்கும். கரு முட்டை நுண்ணறையை விட்டு வெளியேறிய உடனேயே எஞ்சியிருக்கும் பொருட்களிலிருந்து இது உருவாகிறது. கற்பத்தின் ஆரம்ப கட்டத்தில் கார்பஸ் லியூடியம் புரோஜெஸ்ட்டிரோனை வெளியிடுகிறது. அதே சமயம், பனிக்குடம் புரோஜெஸ்ட்டிரோனை உற்பத்தி செய்யத் தொடங்கும் போது, கர்ப்பத்தின் பத்து வாரங்களில் கார்பஸ் லியூடியம் உடலை விட்டு வெளியேறுகிறது. வலது கருப்பையில் அல்லது இடது கருப்பையில் உருவாகும் கார்பஸ் லியூடியம், கருப்பை நுண்ணறைகளில் காணப்படும் இரண்டு வகையான உயிரணுக்களிலிருந்து உருவாகிறது:

    Article continues below advertisment

    முட்டை கருவுறவில்லை என்றால், கார்பஸ் கார்பஸ் லியூடியம் உடைந்து, ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. புரோஜெஸ்ட்டிரோனின் இந்த திடீர் வீழ்ச்சியால் எண்டோமெட்ரியம் சிதைந்து அது மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கிறது. கருக்கலைப்பு ஏற்படும் நிலையில், பொதுவாகக் கருக்கலைப்புக்குப் பிறகு சில வாரங்களில் கார்பஸ் லியூடியம் மறைந்துவிடும், ஆனால் சில சூழ்நிலைகளில், முற்றிலும் மறைய மூன்று மாதவிடாய் சுழற்சிகள் கூட எடுக்கலாம்.

    கார்பஸ் லியூடியத்தின் உடற்கூறியல்

    கர்ப்பத்தின் ஆரம்பகால கார்பஸ் லியூடியம் அல்ட்ராசவுண்டில், ஒரு மயிர்க்கால் போன்ற சுரங்க வடிவ நுண்ணறையைக் காணமுடியும். முட்டை நுண்ணறையை விட்டு வெளியேறிய பிறகு, குங்குமப்பூ-மஞ்சள் நிற செல்கள் நுண்ணறை இருக்கும் இடத்தில் உருவாகி, அங்கு ஏற்பட்ட இடைவெளியை அடைத்து ஒரு புதிய வடிவத்தை எடுக்கும். கர்ப்பத்தின் துவக்க கட்டத்தில் கார்பஸ் லியூடியத்தின் அளவு சுமார் 2 சென்டிமீட்டர் இருக்கும் மற்றும் 5 சென்டிமீட்டர் வரை வளரும்.

    கார்பஸ் லியூடியம் குறைபாடு :

    கார்பஸ் லியூடியம் குறைபாடு, லியூடியல் கட்ட குறைபாடு என்றும் அழைக்கப்படுகிறது. கருப்பை புறணி தடிமனாவதற்குத் தேவையான அளவு புரோஜெஸ்ட்டிரோனை கார்பஸ் லியூடியம் உற்பத்தி செய்யாதபோது நிகழ்கிறது. இது கர்ப்ப காலத்தில் கார்பஸ் லியூடிய இரத்தக் கசிவுக்கு வழிவகுத்து, கர்ப்ப காலத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் கார்பஸ் லியூடியம் குறைபாடு காரணமாக கர்ப்பமாதல், குழந்தை பெறுதல் போன்றவை தடைப்படலாம்.

    கார்பஸ் லியூடியம் குறைபாட்டின் அறிகுறிகள் :

    • இரத்தக்கசிவு

    • கருவுறாமை

      Article continues below advertisment

    • ஒழுங்கற்ற மாதவிடாய்

    • தொடர்ச்சியான கருச்சிதைவு அல்லது ஆரம்ப கட்டங்களில் கரு கலைதல்

    கார்பஸ் லியூடியம் நீர்க்கட்டிகள் :

    சில நேரங்களில் உடைவதற்குப் பதிலாக, கார்பஸ் லியூடியம் தொடர்ந்து வளர்ந்து திரவத்தால் நிரப்பப்பட்டு, கார்பஸ் லியூடியம் நீர்க்கட்டியை உருவாக்குகிறது. கர்ப்பத்தின் ஆரம்பகால அல்ட்ராசவுண்ட் மூலம் கார்பஸ் லியூடியத்தில் இந்த நீர்க்கட்டியை எளிதாகக் கண்டறியலாம்.

    மாதவிடாயின் முதல் வாரத்தில் கர்ப்ப அல்ட்ராசவுண்டில் கார்பஸ் லியூடியம் நீர்க்கட்டிகள் பொதுவாக மறைந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இருப்பினும், கார்பஸ் லியூடியம் நீர்க்கட்டிகள் தொடர்ந்தால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.

    • இடுப்பு பகுதியில் கார்பஸ் லியூடியம் வலி

      Article continues below advertisment

    • வீக்கம்

    • வலிமிகுந்த மாதவிடாய் இரத்தப்போக்கு

    • அசாதாரண யோனி இரத்தப்போக்கு

    • உடலுறவில் சிரமம்

    • கீழ் முதுகுப் பகுதியில் வலி

      Article continues below advertisment

    இதையும் தெரிந்து கொள்ளலாமே! : கர்ப்ப காலத்தில் தலசீமியா பரிசோதனை

    கார்பஸ் லியூடியத்தின் ஆரோக்கியத்தைப் பரிசோதிப்பதற்கான சோதனைகள் :

    ஆரம்ப கர்ப்பகால அல்ட்ராசவுண்டில் கார்பஸ் லியூடியம் நீர்க்கட்டிகளைக் கண்டறியலாம். 5 வார கர்ப்பிணிப் பெண்களிலும் இதைக் கண்டறியலாம். கர்ப்ப காலத்தில் இடது கருப்பையில் அல்லது வலது கருப்பையில் கார்பஸ் லியூடியத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பதை மருத்துவர் அறிந்தால், பின்வரும் சோதனைகளைப் பரிந்துரைப்பர் .

    கருப்பை புறணியின் தடிமனை மதிப்பிட யோனியின் அல்ட்ராசவுண்ட். :

    நுண்ணறைத்-தூண்டும் ஹார்மோன்கள், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் லுயூடினைசிங் ஹார்மோன்களின் ஹார்மோன் அளவை அளவிட ஹார்மோன் சோதனைகள்.

    எண்டோமெட்ரியல் பயாப்ஸி

    இந்த சோதனைகளுக்குப் பிறகு வலது கருப்பையில் இருந்து அல்லது இடது கருப்பையில் இருந்து கார்பஸ் லியூடியத்தை அகற்ற லேப்ராஸ்கோபி போன்ற அறுவை சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படலாம்.

    முடிவுரை

    உடலில் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தி செய்வதன் மூலம் கார்பஸ் லியூடியம் கர்ப்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பின்னர் அது சிதைந்து உடலால் வெளியேற்றப்படுகிறது, ஆனால் அவ்வாறு ஆகாத நிலையில் நீர்க்கட்டிகள் உருவாகலாம். எனவே, நீர்க்கட்டிகள் திடமாக மாறி கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்காமல் இருப்பதைக் கண்டறிய கார்பஸ் லுயூடியம் சோதனை அவசியம்.

    Article continues below advertisment

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.