hamburgerIcon
login
STORE

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article continues after adveritsment

Article continues after adveritsment

  • Home arrow
  • Hair Problems arrow
  • முடி உதிர்வதைத் தடுக்கவும், முடியின் வலிமையை அதிகரிக்கவும் எளிய உதவிக் குறிப்புகள் ( Simple tips to prevent hair fall and increase hair strength in Tamil) arrow

In this Article

    முடி உதிர்வதைத் தடுக்கவும், முடியின் வலிமையை அதிகரிக்கவும் எளிய உதவிக் குறிப்புகள் ( Simple tips to prevent hair fall and increase hair strength in Tamil)

    Hair Problems

    முடி உதிர்வதைத் தடுக்கவும், முடியின் வலிமையை அதிகரிக்கவும் எளிய உதவிக் குறிப்புகள் ( Simple tips to prevent hair fall and increase hair strength in Tamil)

    5 December 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    Article continues after adveritsment

    முடி உதிர்வது தற்காலத்தில் பொதுவான மற்றும் அதிகரித்து வரும் பிரச்சனையாக உள்ளது. ஹார்மோன் சமநிலையின்மை, இரும்புச்சத்து குறைபாடு, புரத குறைவு, உச்சந்தலையில் தொற்று, தைராய்டு, தலைமுடிக்கு இரசாயன சிகிச்சை மற்றும்/அல்லது ஸ்ட்ரைட்னர்கள் அல்லது பெர்மனன்ட் வேவ்களைப் பயன்படுத்துதல் போன்றவை முடி உதிர்வுக்கான காரணங்கள் ஆகும். கர்ப்பம் தரித்துள்ளபோது மற்றும் பாலூட்டும் காலகட்டத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால் முடி உதிர்வு ஏற்படும்

    இப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும், தலைமுடியை பளபளப்பாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க இங்கே சில குறிப்புகள் உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.

    1.முறையான உணவு (Proper diet)

    முடி வளர்ச்சிக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் வைட்டமின் ஏ அடங்கிய சரியான உணவை எடுக்க வேண்டும். இதில் உள்ள நியாசின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் ஜின்க், செல் மீளுருவாக்கம் மற்றும் உச்சந்தலையில் மயிரடிசுரப்பு உற்பத்திக்கு உதவுகிறது.

    2. உடற்பயிற்சி( Exercise)

    வழக்கமான உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதன் மூலம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கலாம்.

    3. முடிக்கு எண்ணை சேர்த்தல் ( Oiling hair)

    உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி உதிர்வைத் தடுக்க, தலைமுடிக்கு தொடர்ந்து எண்ணெய் உபயோகிப்பது முக்கியம். தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற அடிப்படை எண்ணெயுடன் எஷன்ஷியல் ஆயில்களின் கலவையை நீங்களே உருவாக்கலாம். மாற்றாக, எண்ணெய்களின் கலவையைக் கொண்ட மைலோவின் ஹேர் ஃபால் கண்ட்ரோல் கிட்டை முயற்சி செய்யலாம். இதில் வெங்காய எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், பிருங்கராஜ் மற்றும் ஆர்கான் எண்ணெய் ஆகியவற்றின் கலவை சரியான விகிதத்தில் உள்ளது, இது உங்கள் உச்சந்தலைக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.

    4. சரியான ஷாம்புவைத் தேர்வு செய்தல் ( Selection of shampoo)

    தலைமுடியின் வகையை அறிந்து அதற்கேற்ப சரியான ஷாம்பூவைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் உச்சந்தலை மற்றும் கூந்தலை வலுப்படுத்த கந்தகத்தின் நன்மையால் செறிவூட்டப்பட்ட மைலோ கேர் ஆனியன் ஹேர் ஃபால் கன்ட்ரோல் ஷாம்பு போன்ற ஆர்கானிக் மற்றும் இயற்கையான பொருட்கள் கொண்ட ஷாம்பூவைத் தேர்வு செய்யலாம்.

    5. அதிக சூடான, குளிர்ந்த நீரில் குளித்தலைத் தவிர்தல்(Avoid extremely hot or cold showers)

    அதிக சூடான நீர் முடியின் அடர்த்தியை பலவீனப்படுத்துகிறது மற்றும் அதற்கு சேதம் விளைவிக்கிறது. எப்போதும் மிகவும் சூடான அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும், இது முடி உதிர்வதைத் தடுக்கும்.

    மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் அனைத்தும் முடி உதிர்வை குறைக்க உதவும். முடி அடர்த்தியாக வளர, பின்பற்றவேண்டிய வழிமுறைகள் (All the tips mentioned above can help reduce hair loss. Steps to follow to grow thicker hair):

    1. முட்டை உபயோகித்தல்( Use Egg)

    முட்டையில் உள்ள பயோட்டின், வைட்டமின் ஏ மற்றும் டி முடியின் வலிமையை அதிகரிக்கவும், பளபளப்பாகவும் வலுவாகவும் இருக்க உதவும். பின்வரும் படியைப் பின்பற்றவும்.

    a. ஒரு முட்டையை எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.

    b. ஒரு பேஸ்ட் போல கலந்து தலைமுடியில் தடவவும்.

    c. பதினைந்து முதல் இருபது நிமிடங்களுக்குப் பிறகு, தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு சுத்தம் செய்யவும்.

    2. நெல்லிக்காய் ஆயில் & தேங்காய் பால் (Amla oil & coconut milk)

    நெல்லிக்காய் எண்ணெய் பொடுகைத் தடுக்கவும், மயிர்க்கால்களின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது. முடியின் வலிமையை அதிகரிக்கும் வழிமுறைகள்:

    a. ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால் மற்றும் நெல்லிக்காய் எண்ணெயை சம அளவில் எடுத்து கலக்கவும்.

    b. கலவையை முடியில் தடவி மசாஜ் செய்யவும்.

    c. அதன் பிறகு, ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பூ கொண்டு சுத்தம் செய்யவும்.

    3. கற்றாழை(Aloe Vera)

    கற்றாழை முடியின் வலிமையை அதிகரிக்கிறது மற்றும் பொடுகை அகற்றுகிறது. இது உச்சந்தலையை குளிர்விக்கிறது மற்றும் முடி மெலிவதைக் குறைக்கிறது. உலர்ந்த கூந்தலோ எண்ணெய் பிசுக்கு கொண்ட கூந்தலோ, கற்றாழையை நேரடியாக தலைமுடியில் தடவி 1-2 மணி நேரம் கழித்து அலசவும்.

    முடிவுரை (Conclusion)

    தலைமுடிக்கு உகந்த எண்ணெய் உபயோகித்தல் மற்றும் சுத்தமாகப் பராமரித்தல் பல சிக்கல்களை அகற்றும்.

    மைலோவின் முடி உதிர்தல் கிட் இதற்கு பெறும் பலனளிக்கும். முன்பு கூறியது போல், ஆனியன் ஹேர் ஃபால் கண்ட்ரோல் ஆயில், பிரிங்கராஜ், ஆர்கன் எண்ணெய் மற்றும் ஹேரி ரூட் கல்ச்சர் மற்றும் முடி உதிர்தலை நிர்வகிக்க ஆனியன் ஹேர் ஃபால் கண்ட்ரோல் ஆயில் ஆகியவற்றின் கலவை இதில் உள்ளது. இந்த சக்திவாய்ந்த கலவை வேர்களை வலுப்படுத்துவதோடு, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    முடி உதிர்வை முற்றிலுமாகத் தவிர்ப்பது சாத்தியமில்லை, ஆனால் சிறிதளவில் வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்வது முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும். முடி உதிர்தல் பிரச்சனைகளைச் சமாளிக்க மேற்குறிப்பிடப்பட்டுள்ள முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

    Tags

    Simple tips to prevent hair fall and increase hair strength in Bengali, Simple tips to prevent hair fall and increase hair strength in Telegu, Simple tips to prevent hair fall and increase hair strength in English,

    effective tip for hair loss prevention in Tamil, hair loss problem home remedies

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Article continues after adveritsment

    Article continues after adveritsment

    Article continues after adveritsment

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.