This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

உடலுறவுக்கு முன்பே வெளியேறும் திரவம்,இந்த திரவத்தால் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளதா?

Getting Pregnant
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 30, 2026
உடலுறவுக்கு முன்பே வெளியேறும் திரவம்,இந்த திரவத்தால் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளதா?
Likes97 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • உடலுறவுக்கு முன்பே வெளியேறும் முன்வெளியேற்ற திரவத்திலும் உயிரணுக்கள் இருப்பதால், பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் பெண்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்புண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • ஆண் உச்சக்கட்டத்தை அடைவதற்கு முன்பாகவே ஆணுறுப்பில் இருந்து கசியும் இந்த திரவம் லூப்ரிகண்ட் போல செயல்பட்டாலும், அதில் உள்ள உயிரணுக்கள் கர்ப்பத்தை உண்டாக்கக்கூடும்.
  • கருமுட்டை வெளியேறாத காலத்திலும் கூட, உயிரணுக்கள் பெண் உடலில் 5 நாட்கள் வரை உயிர் வாழ்வதால், கர்ப்பம் நிகழ வாய்ப்புண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.
  • கர்ப்பத்தை உறுதி செய்ய வீட்டில் என்ன பயன்படுத்தலாம்? Explore our Baby Travel Kit.
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4

இந்தக் கேள்விக்கு சுருக்கமாக பதில் அளிக்க வேண்டுமென்றால், அது ஆம் என்பது தான். உடலுறவுக்கு முன்பே வெளியேறும் திரவத்தால் கர்ப்பம் நிகழக் கூடுமா என்று நீங்கள் ஆச்சரியம் கொண்டாலும், அந்த திரவத்திலும் உயிரணு உண்டு என்பதால் கர்ப்பம் அடைய வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் வைத்து நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். ஆக, நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்றால் கர்ப்பம் அடைய வாய்ப்பு உண்டு. உடலுறவுக்கு முன்பே வெளியேறும் திரவம் அல்லது முழுமையான விந்து வெளியேற்றம் என எதுவாக இருந்தாலும், அது பெண்ணுறுப்பின் உள்ளே சென்றால், அவர்கள் கர்ப்பம் தரிப்பதற்கு வாய்ப்புண்டு. கர்ப்பம் அடைவதை தடுக்கவும், விந்தணு உள் நுழைவதை தவிர்க்கவும் பல நபர்கள் ஆணுறுப்பை விந்து வெளியேற்றத்திற்கு முன்னதாக பெண்ணுறுப்பில் இருந்து வெளியே எடுக்கும் உத்தியை கையாளுகின்றனர். ஆனாலும், ஒரு செய்தாலும் கூட கர்ப்பம் நிகழ வாய்ப்பு உண்டு. விந்து முந்துதல் என்றால் என்ன? மற்றும் வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனைகளை செய்வது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

விந்து முந்துதல் எப்போது ஏற்படும்?

பாலியல் உறவில் ஈடுபடுகின்ற அதே சமயத்தில், அது குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும். நீங்கள் அவ்வபோது பாலியல் உறவில் ஈடுபடும் பெண் என்றால், உங்கள் ஆண் துணைவர் உச்சகட்டத்தை அடைவதற்கு முன்பாகவே அவரது ஆணுறுப்பில் இருந்து திரவம் கசிவதை உங்களால் உணர முடியும். எனினும், ஆணுறுப்பு விரைத்த உடனே உச்சக் கட்டத்தை அடைவதற்கு முன்பாகவே இந்த திரவம் கசிவதை பார்த்துள்ளீர்களா? அதற்கு பெயர் தான் விந்து முந்துதல் ஆகும். முழுமையான விந்து வெளியேற்றத்திற்கு முன்னதாகவே ஆணுறுப்பில் இருந்து திரவம் கசியும்.

முழுமையான விந்து வெளியேற்றத்தை ஒப்பிடுகையில் முந்து முந்துதல் திரவத்திலும் குறைவான அளவில் உயிரணுக்கள் இருக்கும். இதனை முன்வெளியேற்றம் என்று குறிப்பிடலாம். ஒரு நபர் பாலியல் ரீதியாக தூண்டப்பட்ட பிறகு எந்தவொரு சமயத்திலும் இது நடக்கலாம். சில சமயம், ஆணுறுப்பை ஒரு நபர் சரியாக சுத்தம் செய்யவில்லை அல்லது துடைக்கவில்லை என்றால் முன்வெளியேறிய திரவம் லேசான அளவில் அவரது ஆணுறுப்பின் நுனிப்பகுதியில் இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒரு நபர் பாலியல் ரீதியாக தூண்டப்பட்ட பிறகு இந்த முன் வெளியேற்றம் நடக்கக் கூடும். இது கட்டுப்படுத்தக் கூடியது அல்ல. பல ஆண்களுக்கு முன் வெளியேற்றம் நடந்து கொண்டிருப்பதே தெரியாது. முன்வெளியேற்றம் அல்லது முழுமையான விந்து வெளியேற்றத்திற்கு இடையிலான வேறுபாடு பல ஆண்களுக்கு தெரியாது. முழுமையான விந்து வெளியேற்றம் நிகழாத போதும், ஒருவரது ஆணுறுப்பின் நுனிப்பகுதியில் ஈரமாக இருப்பது தான் முன் வெளியேற்றத்தின் ஒரே அறிகுறியாகும்.

ஒரு நபர் பாலியல் ரீதியாக தூண்டப்பட்ட பிறகு, அவர் பாலியல் உறவில் சௌகரியமாக ஈடுபட உதவிடும் வகையில் ஒரு லூப்ரிகண்ட் போல இந்த முன் வெளியேற்றம் நடக்கும். ஆணுறுப்பானது பெண்ணுறுப்பில் இலகுவாக நுழைவதற்கு இந்த ஈரம் உதவியாக இருக்கும். சௌகரியமான பாலியல் உறவுக்கு இது தேவையானது தான். ஆனால், இதிலும் கூட உயிரணுக்கள் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முன்கூட்டிய விந்து வெளியேற்றத்தால் கர்ப்பம் நிகழுமா?

முன்கூட்டியே வெளியேறிய விந்துவில் கொஞ்சம் உயிரணுக்கள் இருக்கும். ஆனால், நிறைய உண்டு என்று சொல்லிவிட முடியாது. அதாவது, முன்கூட்டியே வெளியேறிய விந்து பெண்ணுறுப்பில் நுழைந்தாலும், அந்தப் பெண் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்பு உண்டு. முன் வெளியேற்ற திரவத்தால் ஒரு பெண் கர்ப்பம் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தாலும், அதை முழுமையாக நிராகரித்துவிட முடியாது.

முன்வெளியேற்ற திரவத்தில் உயிரணு இருக்காது என்று நம்பினேன்:

முன்வெளியேற்ற திரவம் என்பது வெறும் லூப்ரிகண்ட் என்றும், அதில் உயிரணு இருக்காது என்றும் பலர் நம்புகின்றனர். முன் வெளியேற்ற திரவத்தில் உயிரணு எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம், ஆனால் கொஞ்சம் உயிரணு இந்த முன் வெளியேற்ற திரவத்தில் இருக்கும் என்பதை மறுக்க இயலாது. ஒருவேளை இது பெண்ணுறுப்பின் உள்ளே நுழைந்தால், அதன் காரணமாக அந்தப் பெண் கர்ப்பம் அடையலாம். நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்றால் விந்து வெளியேற்றத்திற்கு பிறகான சூழல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆண்களின் சிறுநீர் பாதை சுவர்களில் உயிரணு ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். முன்வெளியேற்ற திரவத்துடன் இது கலந்து ஆணுறுப்பில் இருந்து வெளியேறக் கூடும். இதன் காரணமாகவும் தேவையற்ற கர்ப்பம் உண்டாகும்.

பெண்களுக்கு கருமுட்டை வெளியேறவில்லை என்றால், முன்வெளியேற்ற திரவத்தால் கர்ப்பம் அடைய முடியுமா?

உங்களுக்கு கருமுட்டை வெளியேறவில்லை என்றாலும் கூட, நீங்கள் கர்ப்பம் அடைய வாய்ப்பு உண்டு. பொதுவாக கருமுட்டை வெளியேறும் தருணங்களில் பெண்கள் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே போல கருமுட்டை வெளியேறாவிட்டாலும் பெண்கள் கர்ப்பம் அடைவதற்கு ஓரளவுக்கு வாய்ப்பு உண்டு. ஆணுறுப்பில் இருந்து வெளியேறிய உயிரணு (முன் வெளியேற்ற திரவத்தால் வந்ததாக கூட இருக்கலாம்) என்பது பெண் உடலின் உள்ளே 5 நாட்கள் வரையிலும் உயிர் வாழும். ஆகவே, கருமுட்டை வெளியேறும் காலங்களில் கர்ப்பம் நிகழும்.

வீட்டில் எப்போது கர்ப்ப பரிசோதனை செய்வது?

வீட்டிலேயே கர்ப்பத்தை பரிசோதனை செய்து கொள்வதற்கான பெரும்பாலான சாதனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் என்னவென்றால், நீங்கள் மாதவிலக்கு தவறவிடும் முதல் நாளில் பரிசோதனை செய்வது தான் சரியான தருணம் என்பதாகும். மாதவிலக்கு தவறுவதற்கு முன்பாகவே வீட்டில் நீங்கள் பரிசோதனை செய்யும் பட்சத்தில், நீங்கள் கர்ப்பமாக இருந்தாலும் கூட உங்களுக்கான முடிவு நெகட்டிவ்வாக வர வாய்ப்புகள் உண்டு. ஆகவே சரியான மற்றும் உறுதியான முடிவுகளை பெறுவதற்கு மாதவிலக்கு காலம் வரையிலும் காத்திருக்க வேண்டும். மாதவிலக்கு சுழற்சியின் முதல் நாள் அல்லது அதற்கு சில நாட்கள் கழித்து பரிசோதனை செய்ய வேண்டும்.

மருத்துவரை எப்போது ஆலோசிக்க வேண்டும்?

முன்வெளியேற்ற திரவம் மூலமாக கர்ப்பம் நிகழுவதற்கான வாய்ப்பு கொஞ்சம் குறைவாகும். ஆனால், ஆணுறை அல்லது பெண்ணுறை இல்லாமல் நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் இந்த முன்வெளியேற்ற திரவம் பெண்ணுறுப்பின் உள்ளே சென்றிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தருணத்தில் மருத்துவரை அணுக வேண்டியிருக்கும். உங்கள் பெண்ணுறுப்பில் எரிச்சல் உணர்வு அல்லது சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியம் போன்றவை தென்பட்டால் நீங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கலாம்.

கர்ப்பத்தை திட்டமிடும் பெண்களால் நம்பப்படுபவை

உங்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வீட்டிலேயே எளிதாக பெற உதவும் சரியான தேர்வுகள் இங்கே உள்ளன.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

407 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4026 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(44)
Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Gajalakshmi Udayar
Gajalakshmi Udayar

Related Articles

Questions about this article

  • trying to conceive

    12ஆம் தேதி குளிச்சேன் இந்த மந்த் வரவே இல்ல காரணம் எனக்கு தெரியல என்னன்னு பேசணும் சொல்றீங்களா

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.