


Diet & Nutrition
6 January 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்ப காலத்தில் நாம் எந்த உணவு எடுத்துக் கொள்வதாக இருந்தாலும், மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்வது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் ‘சாப்பிடத் கூடியவை’ மற்றும் ‘சாப்பிடக் கூடாதவை’ என பல்வேறு வதந்திகளும், ஆதாரமற்ற தகவல்களும் பரவி வருகின்றன; எனினும், இவற்றில் பல விஷயங்களுக்கு பெரும்பாலும் ஆதாரங்கள் இருப்பதில்லை.
கர்ப்ப காலத்தின் போது எலுமிச்சை சேர்த்துக் கொள்வது தொடர்பான பாதுகாப்பு குறித்து, எண்ணிக்கையில் குறைவான அளவு ஆய்வுகளே இருப்பினும், கர்ப்ப காலத்தின் போது எலுமிச்சைகளையும், பிற சிட்ரஸ் (ஆரஞ்சு வகை) பழங்களையும் உண்பது பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவுமே ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. எலுமிச்சைகளை போதுமான அளவிற்கு உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அவை தாயின் ஆரோக்கியத்திற்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகின்ற அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள், மற்றும் ஊட்டச்சத்துகளை சரியான விகிதத்தில் வழங்குகின்றன. ஒரு வேளை நீங்கள் அளவுக்கு மீறி எலுமிச்சைகளை சேர்த்துக் கொள்ள நினைத்தால், உங்கள் பேற்றியல்/மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
எலுமிச்சையில் அநேக நலம் பயக்கும் பண்புகள் உள்ளதால், கர்ப்ப காலத்தின் போது இதனை உண்பது மிகவும் நல்லதாகும். தாயாகப் போகும் பெண்களுக்கு எலுமிச்சை உண்பதால் ஏற்படும் சில நன்மைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன –
எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு உண்பது குமட்டலை கட்டுப்படுத்த உதவும். கர்ப்ப காலத்தின் போது எலுமிச்சையை வாய்வழியாக சாப்பிடும் போது குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு உதவுகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் கிட்டும் நன்மைகள் வெறும் பிளாசிபோவினால் ஏற்படும் நன்மைகளை விடவும் அதிகமானவையாகும். மீண்டும், 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 100 கர்ப்பிணிப் பெண்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில், லெமன் இன்ஹலேஷன் தெரபி (எலுமிச்சையை முகர்ந்து பார்ப்பது) மூலம் லேசானது முதல் மிதமான அளவிற்கு உள்ள குமட்டலையும், வாந்தியையும் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறிய எலுமிச்சையில் 2 கிராம் அளவு வைட்டமின் சி உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளதால், கர்ப்ப காலத்தில் வைட்டமின் சி ஒரு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி, தாயின் ஆரோக்கியத்திற்கும், பிறக்கப் போகும் குழந்தையின் உடல் எடை மற்றும் உயரம் போன்ற உடல்ரீதியான வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், கர்ப்ப காலத்தின் போது ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவும் இன்றியமையாத ஊட்டச்சத்தான, இரும்புச் சத்தினை உட்கிரகிப்பதற்கு கூட வைட்டமின் சி உதவுகிறது.
எனினும், கர்ப்பிணிப் பெண்கள் தங்களின் வைட்டமின் சி தேவைகளுக்கு எலுமிச்சைகளை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்று இங்கே குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. சமச்சீர் உணவினை எடுத்துக் கொள்வது அவசியமாகும், கீழ்க்காணும் உணவுகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்:
வைட்டமின் சி-யினால் சத்தூட்டப்பட்ட தானிய வகைகள் மற்றும் பழச் சாறுகள்
ப்ரோக்கோலி
ஆரஞ்சுப் பழங்கள்
பசலைக் கீரை (ஸ்பினாச்) மற்றும் பல
ஒரு சராசரியான அளவு எலுமிச்சையில் 6.38 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. வளரும் முதிர்கருவின் நரம்பு சார்ந்த வளர்ச்சிக்கு ஃபோலேட் அவசியமாக இருப்பதால், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தின் கூற்றுப்படி, தாயாகப் போகும் பெண்களுக்கு உணவு மற்றும் துணை உணவுப் பொருட்களிலிருந்து 600 மைக்ரோகிராம் ஃபோலேட் தேவைப்படும்.
எனினும், வைட்டமின் சி-ஐப் போலவே, கர்ப்பிணிப் பெண்கள் தங்களின் ஃபோலேட் தேவைகளுக்கு எலுமிச்சைகளை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது. ஃபோலேட் கிடைக்கப்பெறும் பிற உணவுப் பொருட்கள் பின்வருமாறு:
ஃபோலேட்-இனால் சத்தூட்டப்பட்ட காலை உணவிற்கான தானிய வகைகள் (1998-ஆம் ஆண்டு முதல், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) பிரட், பாஸ்த்தா, அரிசி, மற்றும் தானிய வகைகள் 140 மைக்ரோகிராம் ஃபோலேட்- இனால் சத்தூட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது)
பசலைக் கீரை (ஸ்பினாச்)
நீர்ச்சத்துடன் இருப்பது வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவசியமானதாகும், குறிப்பாக கர்ப்ப காலத்தில் முக்கியமாகும். கர்ப்பிணிகளும், தாய்ப்பாலூட்டும் பெண்களும், தங்களின் உடல் எடை மற்றும் இரத்த அளவு ஆகியவை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கமாக இருப்பதால், தினந்தோறும் அவர்கள் கூடுதலாக 300 மில்லிலிட்டர் தண்ணீரை கண்டிப்பாக அருந்த வேண்டும். கர்ப்ப காலத்தில் நிறைய தண்ணீர் அருந்துவது சங்கடமானதாக தெரிந்தாலும், அது மலச்சிக்கலை மட்டுப்படுத்துவதற்கும், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை தடுப்பதற்கும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் தண்ணீருடன் எலுமிச்சையை சேர்ப்பது முழுமையாக பாதுகாப்பானது. மேலும், ஒரு வேளை சிலருக்கு எலுமிச்சையின் ருசியும், மணமும் பிடித்துப் போகிற பட்சத்தில், அதனை வெறும் தண்ணீரில் கலந்து தருவது, அவர்களை அதிக தண்ணீரை அருந்துவதற்கு உதவுமென்றால், ஏன் முயற்சித்து பார்க்கக் கூடாது!
தாயாக போகும் பெண்கள் போதுமான அளவிற்கு எலுமிச்சையை உண்பது பாதுகாப்பானது தான் என்றாலும் கூட, மிதமிஞ்சிய அளவில் அவற்றை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கக் கூடும்.
கர்ப்பிணிப் பெண்கள் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆட்படும் அதிக வாய்ப்புள்ளது, உதாரணமாக சொத்தைப் பல் மற்றும் பெரிடான்டல் நோய்கள் (ஈறு சம்பந்தப்பட்ட நோய்) போன்றவை ஏற்படக் கூடும். மிதமிஞ்சிய அளவிற்கு எலுமிச்சையை உண்பது பற்களை சேதப்படுத்தி விடும். எலுமிச்சையிலுள்ள அதிக அளவிலான சிட்ரிக் அமிலம் டென்டினின் (பல்திசு) கடுமையான அரிப்பிற்கு வழிவகுத்து விடக் கூடும். எனவே தான், கர்ப்ப காலத்தின் போது மட்டுமின்றி பிற நாட்களிலும் கூட, எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை உண்ணும் போது போதுமான அளவில் மட்டுமே உண்ண வேண்டும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் மாம்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?
கர்ப்பிணிப் பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும் அதிக வாய்ப்புள்ளது. எலுமிச்சைகளில் உள்ள அதிக அளவிலான சிட்ரிக் அமிலம் அவர்களுக்கு நெஞ்செரிச்சல் அறிகுறிகளை அதிகப்படுத்தக் கூடும். எனினும், நெஞ்செரிச்சலைத் தூண்டக் கூடிய உணவுகள் என்பது நம் எண்ணத்தைச் சார்ந்தது, எனவே ஒருவர் சிட்ரஸ் பழங்களை உண்பதால் நெஞ்செரிச்சல் அறிகுறிகள் மோசமடையும் என்று தானாகவே அனுமானம் செய்து கொள்ளக் கூடாது.
கர்ப்ப காலத்தில் எந்த உணவையும் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு அதிகமாக சாப்பிட்டால் பிரச்சனை மட்டுமே மிஞ்சும். இதற்கு எலுமிச்சைகளும் விதிவிலக்கல்ல. கர்ப்ப காலத்தின் போது மிதமிஞ்சிய அளவில் எலுமிச்சைகளை உண்பது பல் பிரச்சனைகள், பல் அரிப்பு மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.
உங்கள் உணவு முறையில் அதிக எலுமிச்சைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் வாழ்வினை மேலும் ‘சுவையுள்ளதாக’ ஆக்குவதற்கு நீங்கள் விரும்பினால், கர்ப்பகாலத்தில் உண்ணத் தகுந்த சில எலுமிச்சை உணவு வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன –
ஒரு கப் கிரீக் தயிருடன் எலுமிச்சை சாற்றின் துளிகளை சேர்த்து, கூடவே சர்க்கரை குறைவான கிரானோலா மற்றும் தேனுடன் கலந்தால் எலுமிச்சை யோகர்ட் மிக ருசியாக இருக்கும்.
சிட்ரஸ் பழங்களின் மேற்புறத் தோல் மற்றும் உட்புறத் தோல் போன்றவையால் அலங்கரிக்கப்பட்ட பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்.
சாலட்களில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து விடவும்.
மாமிசத்தை மசாலாவில் ஊற வைக்கும் போது எலுமிச்சை சாற்றினை பிழிந்து விடலாம்.
tags
lemon in pregnancy in tamil benefits of lemon during pregnancy in tamil is lemon good for pregnancy in tamil uses of lemon during pregnancy in tamil risks of lemon during pregnancy in tamil can lemon cure heartburn during pregnancy in tamil
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips











பெண் சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா: கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை நீக்குதல் I Does Female Masturabation Cause Infertility: Dispelling the Myths and Misconceptions in Tamil

உங்கள் 7-மாத கர்ப்பகாலத்தை வாரங்களில் கணக்கிடுவது எப்படி?

6 மாத குழந்தைக்கான தடுப்பூசிகள்,சோதனைகள் மற்றும் பல

நர்சிங் டேங்க் டாப் வாங்கும் போது பின்வருவனவற்றில் மீது கவனம் கொள்ளவும்

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய விழிவெண்படல அழற்சி (இளம் சிவப்புக் கண் நோய்)

கர்ப்பத்தின் போது ஹலீம் / சாலியா விதை எடுத்துக்கொள்வதன் பயன்கள் | Aliv Seeds Benefits in Pregnancy in Tamil

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |