hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • மார்பக வலிக்கான காரணங்கள்: பெண்களுக்கு மார்பக வலி ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்(Breast Pain Reasons: Know Why Women Have Breast Pain In Tamil) arrow

In this Article

    மார்பக வலிக்கான காரணங்கள்: பெண்களுக்கு மார்பக வலி ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்(Breast Pain Reasons: Know Why Women Have Breast Pain In Tamil)

    Pregnancy

    மார்பக வலிக்கான காரணங்கள்: பெண்களுக்கு மார்பக வலி ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்(Breast Pain Reasons: Know Why Women Have Breast Pain In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் மார்பக வலியை அனுபவிக்கலாம். இத்தகைய பிரச்சனைக்கு எளிதாகச் சிகிச்சையளிக்கலாம் என்றாலும், மார்பக வலி சில சமயங்களில் அடிப்படை பிரச்சனையைக் குறிக்கக்கூடும். உண்மையில், இந்தப் பிரச்சினையானது மிகவும் தீவிரமான சிக்கலையும் குறிப்பிடலாம். மார்பகத்தில் வலி ஏற்படுவதற்கான சில காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுவதற்கான சில காரணங்கள்(A Few Reasons Why Women May Experience Breast Pain In Tamil)

    • ஏற்ற இறக்கமான ஹார்மோன்கள்(Fluctuating Hormones)

    சில நேரங்களில், ஏற்ற இறக்கமான ஹார்மோன்கள் மார்பகங்களில் வலியை ஏற்படுத்தும். உண்மையில், பெண்களுக்கு முதலில் மார்பக வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும். மாதவிடாய்க்கு சில நாட்களுக்கு முன்பு உங்களுக்கு மார்பகங்களில் வலி இருக்கலாம். இருந்தாலும், உங்களுடைய மாதவிடாய் தொடங்கிய பிறகு, இந்த வலி பிரச்சனை குறைகிறது.

    உங்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் மாதவிடாய் சுழற்சிக்கு முன்பே அதிகரிப்பதால் இத்தகைய வலியானது ஏற்படுகிறது. இதனால், இறுதியில், உங்களுடைய மார்பகங்கள் வீங்கி பிறகு மென்மையாக மாறும். நீங்கள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இருந்தால், உங்கள் மார்பகங்களில் வலியானது நீண்ட நேரம் இருக்கலாம். மேலும், மென்மையான மார்பகங்கள் என்பது மிகவும் பொதுவானது. இதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

    குறைந்த கொழுப்புள்ள உணவை உட்கொள்வதன் மூலமும், காஃபின் கலந்த பானங்களை சிறிது காலத்திற்கு சாப்பிடாமல் இருப்பதாலும், மேலும் உப்பு நிறைந்த உணவுகளைக் குறைப்பதாலும், உங்களுடைய மார்பகங்களில் இருக்கும் வலியை நீக்கலாம். இது தவிர, நீங்கள் சாப்பிடும் மருந்துகளின் அளவையும் கருத்தில் கொள்ளலாம். எந்த மருந்தும் இதை சரி செய்யவில்லை என்றால், மேமோகிராம் செய்யவதற்கான நேரமாக இருக்கலாம்!

    • மார்பகத்தில் இருக்கும் காயம்(Breast Injury)

    விபத்து காரணமாக உங்கள் மார்பகங்களில் காயம் ஏற்பட்டு இருக்கலாம். அதனால்தான், நீங்கள் மார்பக வலியை அனுபவிக்கிறீர்கள். விபத்திற்குப் பிறகு நீங்கள் கடுமையான வலியை அனுபவித்தால் மற்றும் ஒரு சில நாட்களுக்கு தொடர்ச்சியாக மென்மையாக இருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக நீங்கள் உங்களுடைய மருத்துவரை அணுக வேண்டும். இருந்தாலும், குறிப்பாக கட்டி, வீக்கம், சிவத்தல் அல்லது கடுமையான வலி போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், நீங்கள் கட்டாயமாக உங்களுடைய மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    • ஆதரவு இல்லாத பிரா (உள்பாடி)(Unsupportive Bra)

    உங்களுடைய பிரா உங்கள் மார்பகத்திற்கு ஏற்றவாறு சரியாகப் பொருந்தவில்லை என்றால், இதன் விளைவாக உங்கள் மார்பகச் சுவரில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உங்களுடைய மார்பகச் சுவர் நீட்டப்பட்டதாகவோ அல்லது ஆதரவற்று இருப்பதாகவோ நீங்கள் உணரலாம். இதனால், மார்பகங்களில் புண் அல்லது லேசான வலி கூட ஏற்படலாம். இந்த வலியானது உங்களுடைய மார்பகச் சுவரில் இருந்து வெளியேறி, தொடர்ந்து சோர்வு மற்றும் வலியை ஏற்படுத்தும்.

    பொருத்தமான பிராவைத் தேர்ந்தெடுப்பது, குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது, மார்பகங்களில் வலி ஏற்படுவதைத் தடுக்க உதவும். வலி தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக பல பெண்கள் தங்கள் உடற்பயிற்சியின் போது ஸ்போர்ட்ஸ் பிராவைத் தேர்வு செய்கிறார்கள். உங்களுடைய மார்பகங்களுக்குச் சரியாகப் பொருந்தக்கூடிய மற்றும் செளகரியமாக இருக்கும் பிராவை நீங்கள் பயன்படுத்தலாம்.

    • தாய்ப்பால் ஊட்டுதல்(Breastfeeding)

    சில நேரங்களில், நீங்கள் உங்கள் பிள்ளைக்கு பாலூட்டுவதால் உங்களுடைய மார்பகங்கள் மென்மையாக மாறும். இது தவிர, குழந்தை முறையற்ற நிலையில் தாய்ப்பால் குடித்தாலும் முலைக்காம்புகளில் வலி ஏற்படும். தாய்ப்பால் கொடுக்கும் போது ஏதேனும் வலி ஏற்பட்டால், உங்களுடைய பால் சுரப்பு ஆலோசகரிடம் பேசுவது சிறந்தது. எனவே, இந்த வழியில், நீங்கள் மார்பக வலிக்கான பிரச்சனையை எளிதாகச் சமாளிக்க முடியும். குறிப்பாக உங்களுடைய குழந்தைக்கு பாலூட்டும் போது.

    சில நேரங்களில், முலைக்காம்புகளைச் சுற்றியிருக்கும் தோலில் விரிசல் இருக்கும் போது உங்களுடைய குழந்தை வாய் வைத்து பால் குடிப்பதாலும் வலி ஏற்படும். முலைக்காம்புகளின் வறட்சியைத் தடுக்க உதவும் பல மருந்துகள் இன்று உள்ளன. இருந்தாலும், மார்புப் பகுதியில் இருந்து வலி வெளியேறுவது போல உணர்ந்தால், நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    • மார்பகத்தில் ஏற்படும் தொற்று(Breast Infection)

    மார்பகத் தொற்று முலையழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது மார்பகங்களில் கடுமையான வலியினை ஏற்படுத்தும். உண்மையில், மார்பக தொற்று காரணமாக காய்ச்சல் மற்றும் பிற சாத்தியமான அறிகுறிகள் போன்றவை ஏற்படும். முலையழற்சியானது ஒரு மார்பகம் அல்லது இரண்டு மார்பகங்களையும் பாதிக்கலாம். கடுமையான வலி, வீக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட மார்பகம் சிவந்திருத்தல் போன்ற ஒரு சில அறிகுறிகளும் இதில் அடங்கும். இதுபோன்ற பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டால், நீங்கள் உங்களுடைய மருத்துவரை அணுக வேண்டும்.

    முலையழற்சி தொடர்பான அறிகுறிகள் மற்றும் பிரச்சனைகளை நீங்கள் புறக்கணிக்காமல் இருப்பது மிகவும் முக்கியம். எனவே, இது எதனால் என்றால், இந்த நிலையானது பல பிரச்சனைகளை கொண்டு வரலாம், குறிப்பாக நீண்ட காலத்திற்கு. இதுபோன்ற சூழ்நிலைகளில், அத்தகைய சிக்கலை முன்கூட்டி கண்டறிவது சிறந்த தீர்வாகும். எனவே, அடிப்படை பிரச்சினை ஏதாவது இருக்கிறதா என்பதை முன்கூட்டியே கண்டறிவதற்கு, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    • மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்(Medication Side-Effects)

    குறிப்பாக நீங்கள் தற்போது சில மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தால், இதன் விளைவாக மார்பக வலி ஏற்படலாம். ஆக்ஸிமெத்தோன், குளோர்ப்ரோமசைன், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் டையூரிடிக்ஸ் போன்றவை மார்பக வலியை ஏற்படுத்தும் சில மருந்துகளாகும். அதுமட்டுமின்றி, டிஜிடலிஸ் மற்றும் மெத்தில்டோபா போன்றவையும் பெண்களுக்கு மார்பக வலியை ஏற்படுத்தும்.

    • மார்பக மாற்று அறுவை சிகிச்சை(Breast Implants)

    மார்பக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான சிக்கல்களில் ஒன்று புண் மற்றும் மார்பக வலி ஆகும். சில நேரங்களில், வடுக்களுக்கான திசுக்கள் உள்வைப்புகளை மிகவும் இறுக்கமாக சூழ்ந்து, கடுமையான வலி மற்றும் புண்களை ஏற்படுத்தும். கூடுதலாக, இந்த மாதிரியான வலியானது உள்வைப்பின் சிதைவை சித்தரிக்கும். அது உப்பு அல்லது சிலிகானில் செய்யப்பட்டதாக இருக்கலாம். எனவே, நீங்கள் கூடிய விரைவில் உங்களுடைய மருத்துவரைத் தொடர்புகொள்வது நல்லது.

    • மார்பக புற்றுநோய்(Breast Cancer)

    இது எதிர்பாராத விதமாகவும் திடீரென்றும் வரலாம். மார்பக புற்றுநோயின் மற்றொரு உண்மை என்னவென்றால், இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். மார்பகங்களின் நிறமாற்றம் அல்லது சிவத்தல், மார்பகங்களின் வீக்கம், புண் மற்றும் தோலில் குத்துதல் போன்றவை சில அறிகுறிகளில் அடங்கும். தீவிர வலியானது, புற்றுநோய்க்கான ஒரு அழற்சி புண் உருவாகியிருப்பதையும் குறிக்கலாம்.

    • உங்களுடைய மருத்துவரை நீங்கள் எப்போது பார்க்க வேண்டும்?(When Should You Consider Seeing Your Doctor? In Tamil)

    பெண்களுக்கு மார்பக வலி சில சமயங்களில் ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அதை நீங்கள் அலட்சியப்படுத்தக்கூடாது. நீங்கள் தொடர்ந்து தாங்க முடியாத வலியை அனுபவிக்கும் பட்சத்தில் உங்களுடைய உடல்நல பராமரிப்பாளரிடம், உங்கள் அனைத்து கவலைகளைப் பற்றி பேசலாம். இத்தகைய நிலைமைகளைத் தடுப்பதற்கு நீங்கள் உங்களுடைய மார்பகங்களை தவறாமல் பரிசோதித்துக் கொள்ளுங்கள். கட்டிகள் ஏதேனும் உருவாவதை முன்கூட்டியே கண்டறி்வதற்கு, நீங்களே உங்களுடைய மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    Tags :

    breast pain in tamil, breast feeding in tamil, reasons for breast pain in tamil, treatment for breast pain in tamil

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Related Topics

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.