
சுருக்கம்




ஒரு பெண்ணின் கர்ப்பமானது அவளின் கடைசி மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் இருந்து 40 வார காலம் வரை நீடிக்கும் ஒரு பயணமாகும். கர்ப்பத்தைக் கண்டறிவது என்பது கடைசி மாதவிடாய் காலத்தைப் (எல்எம்பி/LMP) பொருத்து கணக்கிடப்படுகிறது.ஒரு தாய் தனது குழந்தையை எத்தனை மாதங்கள் சுமக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ள அவளுக்கு மாதவிடாய் வந்து எத்தனை நாட்கள் ஆனது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளானது அப்பெண்ணின் கர்ப்பகால பயணத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது. இதனைத் தெரிந்து கொண்டு, 7 வார கர்ப்பம் என்றால் எத்தனை வாரங்கள் என்பதை எளிதில் கணக்கிடலாம்.
பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சீரானதாக இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு முறையும் மாதவிடாயானது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழ வேண்டும். ஒரு பெண்ணின் மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால், எல்எம்பி-க்கான சரியான தேதியை கண்டுபிடிப்பது கடினம். மாதவிடாய் சுழற்சி காலமானது வேறுபடுமாயின், அப்பெண்ணின் எல்எம்பி-ன் முதல் நாளில் இருந்து எண்ணுவது சரியான விடையை நமக்கு தராது. இருப்பினும், கர்ப்பமாக இருக்கும் பெண்களின் மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால், அவரகள் முந்தைய மாதவிடாய் காலத்தை கண்டுபிடிப்பது ஒரு சவாலான காரியம் தான்.
ஒரு கர்ப்பிணி பெண்ணின் ஒவ்வொரு டிரைமெஸ்டரும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். ஒவ்வொரு குழந்தை பிறப்பும் மூன்று டிரைமெஸ்டர்களை உள்ளடக்கியது மற்றும் சராசரியாக ஒன்பது மாதங்களைக் கொண்டது. டிரைமெஸ்டரைப் பொறுத்து அப்பெண் மற்றும் குழந்தையின் உடம்பில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்.
முதல் டிரைமெஸ்டர் என்பது ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் முதல் 13 வாரங்கள் மற்றும் 6 நாட்கள் நீடிக்கும். இரண்டாவது டிரைமெஸ்டர் என்பது கர்ப்பத்தின் 14 வது வாரம் முதல் 27 வது வாரம் வரை மற்றும் கூடுதலாக 6 நாட்களை உள்ளடக்கி இருக்கும். மூன்றாவது டிரைமெஸ்டரானது கர்ப்பத்தின் 28 வது வாரத்தில் தொடங்கி, குழந்தை பிறக்கும் போது முடிவடைகிறது.
முதலாவது டிரைமெஸ்டரில் குழந்தையை பெற்றெடுக்க போகும் பெண்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற தொடங்குவார்கள். அவர்களது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வார்கள். தங்கள் உடலில் நடக்கும் இந்த மாற்றங்களுக்கு தங்களது உடலானது பழகிவிடுவதால் இரண்டாவது டிரைமெஸ்டரில் அவர்கள் ஓரளவு சௌகரியமாக உணர்வார்கள். ஒரு சில பெண்களுக்கு மார்னிங் சிக்னஸ் ஏற்படலாம். மூன்றாவது டிரைமெஸ்டரில் தங்களுக்குள் நடக்கும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க ஏராளமான ஆற்றல் கர்ப்பிணிகளுக்கு தேவை என்பதால், இந்த சமயத்தில் அவர்கள் மிகவும் களைப்பாகவும், பல விதமான மனநிலை மாற்றங்களுக்கு உட்பட்டும் இருப்பார்கள்.
பொதுவாக, கர்ப்ப காலம் என்பது 40 வாரங்கள் வரை நீடிக்கலாம். பெரும்பாலான பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தை எல்எம்பி-ன் முதல் நாளில் இருந்து 40 என கணக்கிட்டு கொள்வார்கள். லூனார் மற்றும் கிரிகோரியன் மாதங்கள் இதிலிருந்து வேறுபடும்.
பொதுவாக கர்ப்பமானது 37 முதல் 40 வாரங்கள் வரை இருக்கலாம். 37 வாரங்களுக்கு முன்னதாக அப்பெண் குழந்தையை பிரசவித்தால் அது குறைப்பிரசவம் என்று அழைக்கப்படும். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு கூடுதல் பராமரிப்பு, உணவு மற்றும் கவனிப்பு தேவை.
7 வார கர்ப்பம் என்பது கிட்டத்தட்ட 2 மாதங்கள். அதேபோல் 7 மாத கர்ப்பம் என்பது 25 வது வாரத்தில் இருந்து 32 வாரங்கள் வரை இருக்கும். 7 வாரம் அல்லது 2வது மாதத்தில், குழந்தையானது பெர்ரி பழத்தின் அளவில் இருக்கும். உறுப்புகள் வளர ஆரம்பிக்கும்.
எதிர்ப்பார்க்கப்படும் பிரசவ தேதி என்பது குழந்தையை பெற்றெடுக்கப் போகும் தாயால் தோராயமாக கணிக்கப்பட்ட ஒரு தேதி ஆகும். இது ஒரு மதிப்பிடல் மட்டுமே தவிர குழந்தை இந்த தேதியில் தான் பிறக்கும் என்பதை குறிப்பிடாது. குழந்தையானது கர்ப்பத்தின் 37 வாரங்களில் இருந்து 40 வாரம் வரை எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம்.
உங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை கணக்கிட மருத்துவர் கர்ப்ப காலத்தின் வாரங்களை கணக்கிடுவார். உங்கள் கர்ப்ப காலத்தின் வாரம் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்களின் மகப்பேறு மருத்துவரை நீங்கள் அணுகலாம்.
பிரசவ தேதியுடன் வாரங்களை ஒரு சார்டில் எழுதி உங்கள் கர்ப்ப காலத்தை நீங்கள் வீட்டிலே கணக்கிட்டு கொள்ளலாம். உங்கள் குழந்தை பிறக்க போகும் பிரசவ தேதி மற்றும் அது எந்த வாரத்தில் அமையலாம் என்பதை குறிப்பிட்டு வையுங்கள். அந்த நாளை உங்களின் தற்போதைய கர்ப்ப வாரத்தில் இருந்து எண்ணவும்.
தற்போது நீங்கள் உங்கள் கர்ப்பத்தின் ஐந்தாவது வாரத்தில் இருந்து, உங்களின் பிரசவ தேதி திங்கட்கிழமை வந்தால் அந்த தேதியை வாரம் 5 என நீங்கள் குறிப்பிடலாம்.
பின்னர், திங்கட்கிழமையை பொருத்து நீங்கள் ஆறு வாரங்கள் கர்ப்பம் என்பதையும் குறிப்பிடவும். அடுத்த திங்கட்கிழமை வரும்போது நீங்கள் ஏழு வார கர்ப்பமாக இருப்பீர்கள். 40 வாரங்கள் வரை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் உங்கள் கர்ப்ப காலத்திற்கு ஒரு வாரத்தை சேர்த்துக் கொண்டே செல்லுங்கள்.
உங்கள் கர்ப்பத்தை வாரங்கள், மாதங்கள் மற்றும் டிரைமெஸ்டர்கள் என கணக்கிடுவது சற்று சவாலாக இருக்கலாம். நீங்கள் முதல் அல்லது கடைசி டிரைமெஸ்டரில் கவனம் செலுத்த வேண்டுமா என்பதைப் பொறுத்து உங்கள் கர்ப்ப காலத்தை மாதங்களாக ஒழுங்கமைக்க பல வழிகள் உள்ளன.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பம் அடைந்ததை அறியாமல் இருப்பது - ரகசிய கர்ப்பம்
இப்போது 7 மாதங்கள் கர்ப்பம் என்பது எத்தனை வாரங்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கலாம்.
நீங்கள் உங்களின் முதல் டிரைமெஸ்டரை கவனித்தில் வைக்கும் போது, ஏழாவது மாதம் என்பது 29 முதல் 32 வாரங்கள் வரை இருக்கும். அதுவே நீங்கள் உங்களின் மூன்றாவது டிரைமெஸ்டரை கணக்கில் கொண்டால், 25 முதல் 28 வாரங்கள் வரை இருக்கும். இவை அனைத்துமே தோராயமாக கணக்கிடப்படுவதால், இவை ஓரளவு சரியாக இருக்கலாம். இது உங்கள் கர்ப்பத்தை சிறந்த முறையில் திட்டமிட உதவும்.
Tags
How Many Weeks is 7 Months Pregnant in English, How Many Weeks is 7 Months Pregnant in Bengali
உங்கள் வளரும் வயிற்றுக்கு ஆதரவும், ஆரோக்கியமான கர்ப்ப பயணத்திற்கு தேவையான பராமரிப்பும் அளிக்கும் தயாரிப்புகள் இங்கே உள்ளன.

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress




Compression Stocking Socks - S
Compression Stockings for Varicose Veins | Reduces Swelling | Boosts Blood Circulation




Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)
Made with Natural Ingredients | Tightens Skin | Prevents New and Fades Old Stretch Marks |




Organic Aloe Vera (300 ml)
Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience



This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |