Pregnancy Journey
17 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பெரும்பாலும் அனைவரும் பாப்கார்ன் விரும்பி சாப்பிடுவோம், அதிலும் குறிப்பாக டிவி பார்த்துக்கொண்டே பாப்கார்ன் சாப்பிடுவது தனி சுகம் தான். எனினும், பாப்கார்ன் ஒரு நொறுக்குத் தீனியாக கருதப்படுகிறது. ஆகையால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இயல்பாகவே இந்த கேள்வி எழுகிறது: நான் கர்ப்ப காலத்தில் பாப்கார்ன் சாப்பிடலாமா? கர்ப்ப காலத்தில் பாப்கார்ன் சாப்பிடுவது பாதுகாப்பானதா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் இந்த பதிவில் உள்ளது.
ஆம், கர்ப்ப காலத்தில் பாப்கார்ன் சாப்பிடுவது பாதுகாப்பானது தான். சரியான அளவில் சாப்பிடும் வரை பாப்கார்ன் ஒரு பாதுகாப்பான ஸ்நாக்ஸ் ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், அதில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல், பாப்கார்ன் சமைக்கப்படும் விதமும், அதில் சேர்க்கப்படும் பொருட்களையும் பொறுத்தே அது பாதுகாப்பானதா இல்லையா என்பது அமையும். ஆரோக்கியமற்ற ஆட்-ஆன்களான வெண்ணெய் மற்றும் உப்பு சேர்க்கப்படும் போது, அது பாப்கார்னை ஆரோக்கியமற்றதாக மாற்றிவிடுவதால், அதனை சாப்பிடுவது நல்லது இல்லை.
பாப்கார்ன் ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகை. பாப்கார்னின் ஊட்டச்சத்து மதிப்பு குறித்து அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போகலாம். ஏனெனில், பெரும்பாலான நபர்களுக்கு இது பற்றி தெரியாது மற்றும் இதனை நொறுக்குத் தீனியாகவே நினைப்பார்கள். பாப்கார்னில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பே இதனை ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகையாக்குகிறது.
100 கிராம் பாப்கார்னில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பின்வருமாறு:
நார்ச்சத்து: இதில் 15 கிராம்கள் நார்ச்சத்து உள்ளது. எக்கச்சக்கமான நார்ச்சத்து கொண்டதால் இது நார்ச்சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.
புரதம்: பாப்கார்னில் உள்ள புரதம் 13 கிராம்கள் ஆகும்.
கார்போஹைட்ரேட்டுகள்: 78 கிராம்கள்
கொழுப்பு: 5 கிராம்கள்
பாப்கார்னில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்:
மெக்னீசியம்: பரிந்துரைக்கப்பட்ட உணவுசார் உட்கொள்ளலில் 36% கொண்டுள்ளது
பாஸ்பரஸ்: 36%
மாங்கனீசு: 56%
துத்தநாகம்: 21%
செம்பு: 13%
இரும்புச்சத்து: 18%
பொட்டாசியம்: 9%
வைட்டமின் பி1, பி3 மற்றும் பி6: சராசரியாக 9%
இது பாலிபீனால் ஆன்டி-ஆக்சிடன்டுகளின் சிறந்த மூலமாகும்.
இது பல விதமான நன்மைகள் வழங்குவதால் பெண்கள் கர்ப்ப காலத்தில் பாப்கார்ன் சாப்பிடலாம்:
இதில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கலை தவிர்க்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் பிரீஎக்லாம்ப்சியா ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் கர்ப்ப காலத்தில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். மேலும், இது கர்ப்பிணிப் பெண்களின் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் உதவுகின்றன.
பாப்கார்னில் அதிக புரதச்சத்து உள்ளது. குழந்தையின் வளர்ச்சிக்கு புரதச்சத்து மிகவும் அவசியம்.
பாப்கார்னில் உள்ள மாங்கனீசு மூலம் பரிந்துரைக்கப்பட்ட உணவுசார் உட்கொள்ளலின் 56% பூர்த்தி ஆகிறது.
குழந்தையின் எலும்பு மற்றும் குருத்தெலும்பு உருவாக்கத்திற்கும், குழந்தையின் சரியான வளர்ச்சிக்கும் மாங்கனீசு அவசியம்.
குழந்தையின் வலுவான எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் என்ற தாது பாப்கார்னில் காணப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் துத்தநாகம் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது, குறைப் பிரசவத்திற்கும் குழந்தையின் குறைவான பிறப்பு எடைக்கும் வழிவகுக்கும். பாப்கார்னில் துத்தநாகம் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இது குறைவான கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே, கர்ப்ப காலத்தில் எடை அதிகரித்து விடுமோ என நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக் வகை தான்.
பாப்கார்னில் உள்ள பாலிபினால் ஆன்டிஆக்சிடன்டுகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
எதுவும் சேர்க்காத பிளைன் ஆன பாப்கார்ன் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு எந்தவொரு அபாயமும் ஏற்படாது. அதிக கார்போஹைட்ரேட்கள் இருப்பது மட்டுமே பிளைன் ஆன பாப்கார்னில் உள்ள ஒரே சிக்கல் ஆகும். கர்ப்ப கால நீரிழிவு நோய் உள்ள பெண்கள் அதிக கார்போஹைட்ரேட்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஆட்-ஆன்கள் மற்றும் சமைக்கப்படும் முறையும் பாப்கார்னை ஆரோக்கியமற்றதாக மாற்றும்:
தியேட்டர்களில் நீங்கள் வாங்கும் ஏற்கனவே செய்யப்பட்ட பாப்கார்ன்களில் அதிக சோடியம் அளவுகள் இருக்கும். கர்ப்ப காலத்தில் அதிக சோடியம் எடுத்துக்கொள்வது, அதிக இரத்த அழுத்தம் மற்றும் பிற உடநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதிகப்படியான வெண்ணெய், உப்பு மற்றும் சர்க்கரை சேர்ப்பது பாப்கார்னின் சுவையை அதிகரிக்கலாம். ஆனால், அதுவே அதனை ஒரு ஆரோக்கியமற்ற ஸ்நாக் வகை ஆக்குகிறது. இது உடல் எடை அதிகரிப்பு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
சேர்க்கப்படும் மூலப்பொருட்கள் பாப்கார்னின் நிறைவுற்ற கொழுப்பை அதிகரிக்க செய்யும். கர்ப்ப காலத்தில் அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு சாப்பிடுவது பிரீஎக்லாம்ப்சியா, குறைப்பிரசவம், மற்றும் கர்ப்ப கால நீரிழிவு நோய் போன்ற கர்ப்ப கால சிக்கல்கள் ஏற்பட காரணமாகும்.
சரியான வழிமுறைகளை பின்பற்றி மைக்ரோவேவில் சமைக்கப்பட்ட உணவுகள் கர்ப்ப காலத்தில் சாப்பிட பாதுகாப்பானவை தான். இருப்பினும், மைக்ரோவேவபிள் பைகளில் அடைக்கப்பட்ட மைக்ரோவேவபிள் பாப்கார்ன்கள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த பைகளில் ஃப்ளோரோடெலோமர்கள் உள்ளன. அவை அதிகப்படியான வெப்பநிலையில் பிஎஃப்ஓஏ (PFOA) ஆக உடைந்து குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தும். அது மட்டும் அல்லாமல், மைக்ரோவேவபிள் பைகளில் அடைக்கப்பட்ட பாப்கார்ன்களில் அதிக உப்பும், ஆரோக்கியமற்ற டாப்பிங்ஸும் இருக்கும்.
நீங்களே மைக்ரோவேவ் பாப்கார்ன்களை செய்து சாப்பிடலாம். இதற்கு கார்ன் விதைகளை ஒரு பேப்பர் பையில் நன்றாக மூடி மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சமைக்க வேண்டும். சமைக்கப்பட்ட பாப்கார்ன்களில் ஆலிவ் ஆயில், பீனட் பட்டர், தேன், நொறுக்கப்பட்ட பாதாம் பருப்புகள், மேப்பிள் சிரப், உலர்த்தப்பட்ட மூலிகைகள், பட்டை தூள் மற்றும் சீவப்பட்ட சீஸ் போன்ற ஆரோக்கியமான டாப்பிங்ஸும் சேர்த்து செய்யலாம்.
இதையும் படிக்காலாமே! - கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது பாதுகாப்பானதா?
ஆம், கர்ப்பிணிப் பெண்கள் பாப்கார்ன் ஷ்ரிம்ப் சாப்பிடலாம். எனினும், அதனை அடிக்கடி சாப்பிடக்கூடாது. இதில் அதிக அளவில் கொழுப்பு இருப்பதால், எப்பொழுதாவது சாப்பிடலாம். அது மட்டும் இல்லாமல், இறாலை நன்கு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பாப்கார்ன் சாப்பிடுவது பாதுகாப்பானது. அதனை சரியான முறையில் சமைத்து, அதிக உப்பு மற்றும் கொழுப்பு இல்லாமல் சாப்பிடும் வரை பாப்கார்ன் ஆரோக்கியமானது தான். வீட்டிலே பாப்கார்ன் சமைத்து, ஆரோக்கியமான ஆட்-ஆன்களை சேர்த்து சாப்பிடுவதே கர்ப்ப காலத்தில் பாப்கார்ன் சாப்பிடுவதற்கான சரியான வழியாகும்.
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
தொடை சிராய்ப்பு: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை
அக்கி (ஹெர்பெஸ்): காரணங்கள், அறிகுறிகள், ஆபத்து மற்றும் சிகிச்சை
மலக்குடல் இறக்கம் (Rectocele): காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை
உங்கள் குழந்தை புரள ஆரம்பிக்கும் போது நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்
கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய உணவுகள்
கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு: காரணங்கள், அறிகுறிகள் & எப்படி தவிர்ப்பது?
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Tea Tree | Aloe Vera | Skin - Hair | Hairfall | Dry and Damaged Hair | Shop By Ingredient | Onion | Aloe Vera Range For Hair | Coconut | Neelibrigandi | Skin - Bath & Body | By Ingredient | Skin - Pregnancy & New Mom | Stretch Marks | Skin - Health & Wellness | Digestive Health | Lactation | Pain management | By Ingredient | Saffron |