Growth & Development
19 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
உங்கள் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுத்து வந்தால், மேலும் அதனை தொடர்வது நல்லது. இரண்டு மாத குழந்தைக்கு ஒரு நாளில் எட்டு முறையாவது நீங்கள் பாலூட்ட வேண்டும். மேலும், மாத வாரியாக குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்து இது இன்னும் அதிகரிக்கலாம். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக உங்கள் குழந்தை இரவில் நீண்ட நேரம் தூங்கினாலும், அவ்வப்போது உங்கள் குழந்தை விழிக்கும் போது அவருக்கு நீங்கள் பாலுட்ட வேண்டும்.
இந்த வயதில் உங்கள் குழந்தைக்கு ஒரு கண்டிப்பான பாலூட்டுதல் அட்டவணையைப் பின்பற்றத் தேவையில்லை என்றாலும், பாலூட்டுவதற்கு நீங்கள் ஒரு சீரான முறையைப் பின்பற்றுவது நல்லது.
ஒரு இரண்டு மாத குழந்தையின் பெற்றோராக உங்களது தேவைப் பட்டியலில் தூக்கமானது முதலிடத்தில் இருக்க வேண்டும். ஒரு சில குழந்தைகள் இந்த வயதில் இரவு நேரங்களில் ஓரிரு முறை மட்டுமே விழிப்பார்கள். அவ்வாறு விழிக்கும் போது கூட உடனடியாக மறுபடியும் தூங்கி விடுவார்கள்.
மறுபுறம், ஒரு சில குழந்தைகள் இரவு முழுவதும் விழித்திருப்பார்கள் அல்லது பல முறை விழித்துக் கொண்டு அழுவார்கள். எனவே, ஒரு பெற்றோராக இந்த கட்ட வளர்ச்சியின் போது, உங்கள் குழந்தை இரவு நேரத்தில் விழிப்பதற்கு நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.
இன்னும் உங்கள் குழந்தை ஒரு நாளைக்கு 14-17 மணி நேரம் தூங்குவார்கள். ஆனால் இந்த தூக்கத்தில் பெரும்பான்மையாது பகல் நேரத்தை விட இரவிலே இருக்கும்.
பகல் நேரத்தில் மூன்று முதல் நான்கு வரை உங்கள் குழந்தை குட்டித் தூக்கம் தூங்குவார்கள். இதனை விரைவில் படிப்படியாக குறைத்து ஒரு நாளில் மூன்று, இரண்டு என தூங்க ஆரம்பிப்பார்கள்.
உங்கள் குழந்தை பகல் நேரத்தில் குறைவாக தூங்கும்போது, அவர் விழித்திருக்கும் போது அவரின் நேரத்தை சரியான முறையில் செலவிட நீங்கள் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
உங்கள் குழந்தையிடத்தில் நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்த திறமைகள் மற்றும் திறன்கள் மூலம் உங்கள் குழந்தையின் குரோத் சார்ட்டினை ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?
உலகத்திற்கு ஏற்றவாறு உங்கள் குழந்தை வளர அவருக்கு உதவி செய்யுங்கள். அவரை பார்க், வனவிலங்கு பூங்கா போன்ற இடங்களுக்கு அதிகமாக வெளியே அழைத்து செல்லுங்கள். பேபி கேரியர் அல்லது ஸ்ட்ரோலர் போன்றவற்றில் உங்கள் குழந்தையை அமர வைக்கும் போது, கவனமாக இருங்கள். உங்கள் குழந்தை என்ன பார்க்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றாலும் கூட, அழகான நிறங்களை பார்த்து உங்கள் குழந்தை ஆர்ப்பரித்து வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்கூடும். இதற்கு உங்கள் குழந்தையின் மாத வாரியான குரோத் சார்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே! - குழந்தைகள் இரவில் அழுவதற்கான காரணங்கள்
உங்கள் குழந்தைக்கான 2-வது மாத மருத்துவர் பரிசோதனை கூடிய விரைவில் வர உள்ளது.
நீங்களும் உங்கள் குழந்தையும் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் நேரம் இது. மருத்துவரின் சந்திப்பின்போது, உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் குறித்து பேசுங்கள். அவர் உங்கள் குழந்தையை பரிசோதிப்பார். உங்களுக்கு ஏதேனும் கவலை இருந்தால், அது குறித்து உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசியுங்கள். நீங்கள் சிறந்த பெற்றோராக மாற மருத்துவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
இந்த தடுப்பூசிகள் நன்கு ஆய்வு செய்யப்பட்டு பல மில்லியன் குழந்தைகளுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, உங்கள் குழந்தை ஒரே நேரத்தில் பல ஊசிகளை பெற வேண்டியதில்லை. ஏனெனில், இந்த தடுப்பூசிகள் காம்பினேஷன்களாக வழங்கப்படுகின்றன.
Yes
No
Written by
chandrikaiyer
chandrikaiyer
ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும் போது, பிரவச தேதியை எப்படி கணக்கிடுவது எப்படி?
பெண்களுக்கான 8 உடல் எடை குறைப்புப் பயிற்சிகள்
பாப்பில்லரி (காம்பு வடிவ) தைராய்டு கார்சினோமா
குழந்தையின் டயாப்பரை எத்தனை முறை மாற்ற வேண்டும்?
குழந்தைகள் அழும்போது செய்ய வேண்டியவை
சிஸ்டோசெல்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Diapers & Wipes - Feeding & Lactation | Feeding Bottle | Grooved Nipple | Fruit Feeder | Manual Breast Pump | Diapers & Wipes - For Mom | Maternity Dresses | Maternity Pillows | Pregnancy Belt | Skin | Acne & Blemishes | Dry & Dull Skin | Tan Removal | Anti Ageing | Skin brightening | Dark Circles | Skin hydration | Shop By Ingredient | Kumkumadi | Ubtan |