Nail Care
16 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உங்கள் நகங்கள் உண்மையில் ஆரோக்கியமாக உள்ளதா? யோசித்து பதிலளியுங்கள். நமது கைகளை பல இடங்களில் பயன்படுத்துகிறோம். இது நகங்களுக்கும் பொருந்தும். நகங்களில் கெரட்டின் என்ற ஒரு புரதம் உள்ளது. இது நகங்களில் உள்ள மேல் அடுக்க தண்ணீர் மற்றும் வியர்வையில் இருந்து பாதுகாக்கிறது. இது நக பராமரிப்பை இன்னும் கடினமாக்குகிறது. இதனை தவிர்ப்பது மிகவும் கடினம். குறிப்பாக உங்களிடம் நீண்ட நகங்கள் இருந்தால் விஷயம் இன்னும் மோசமாகலாம். உங்கள் நகங்கள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறிவது அனைத்தையும் விட முக்கியமான விஷயம் ஆகும். எனவே, உங்கள் நகங்கள் ஆரோக்கியமாக உள்ளதா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?
ஆரோக்கியமான நகங்கள் நல்ல சுகாதாரம் பேணுவதற்கு மிகவும் அவசியம். ஒருவர் தனது உடல் உறுப்பை கவனித்துக்கொள்வது போலவே நகங்களையும் பராமரித்தல் வேண்டும். நகங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வது அவசியம். ஆரோக்கியமான நகங்களைப் பெற ஒருவர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ.
உங்கள் நகம் பின்க் (இளஞ்சிவப்பு) நிறத்தில் இருக்க வேண்டும். பின்க் நிற நகப்படுக்கை ஆரோக்கியமான நகங்களைக் குறிக்கிறது.
கிடைமட்டமாக கூர்வரைகள் இருத்தல் கூடாது.
நகங்கள் விறைப்பாகவும், உறுதியாகவும் இருத்தல் வேண்டும். எளிதாக உடையக் கூடிய வகையில் உள்ள நகங்கள் ஆரோக்கியமானவை அல்ல.
உள்நோக்கி வளர்ந்த நகங்கள் அல்லது தொற்றுடன் கூடிய நக அடுக்கு இருத்தல் கூடாது.
நக படுக்கை சிவப்பாகவோ, வீங்கியோ அல்லது வீக்கமாகவோ இருக்க கூடாது.
நகங்களை பராமரித்தல் என்பது நீங்கள் நினைப்பது போல கடினமான காரியம் அல்ல. ஆரோக்கியமான நகங்களைப் பெற ஒரு வழக்கமான நக பராமரிப்பு முறையைப் பின்பற்றுவது உங்களுக்கு உதவும். இப்போது நீங்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த ஐந்து நக பராமரிப்பு டிப்ஸ் குறித்து பார்க்கலாம்-
நக பராமரிப்பு முறையின் முதல் படியானது நகங்களை டிரிம் செய்வதே ஆகும். இதனை செய்வது உள்நோக்கி வளரும் நகங்களை தவிர்க்க உதவும். உங்கள் நகங்களை மென்மையாக வைக்க குளித்த உடனேயே அதனை வெட்ட முயற்சி செய்யுங்கள். நெயில் ஃபைல் அல்லது எமரி போர்டை பயன்படுத்தி நகங்களை வட்டமாக டிரிம் செய்யுங்கள். உங்கள் நகங்கள் பலவீனமடையாமல் இருக்க, எப்போதும் ஒரே திசையில் அதனை ஃபைல் செய்யவும். 0% அல்லது அதற்கு மேற்பட்ட ஐசோபிரைல் ஆல்கஹாலைப் பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் நக பராமரிப்பு கருவிகளை கிருமி நீக்கம் செய்யுங்கள். உங்கள் நகம் ஃப்ளெக்சிபிளாக இருக்கவும், நகங்கள் பிளவுப்படுவதைத் தடுக்கவும் நகங்களை வெட்டிய பின் அதனை மாயிஸ்சரைஸ் செய்ய மறந்துவிடாதீர்கள்.
அடிக்கடி நகங்களை ஈரப்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில், ஈரப்பதமானது நகங்களில் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். தொடர்ந்து அல்லது அடிக்கடி தண்ணீருடன் தொடர்பு கொள்வதால் விரல் நகங்கள் பிளவுபடலாம். சுத்தம் செய்யும் போது, பாத்திரங்களை கழுவும் போது அல்லது அடர் இரசாயனங்கள் பயன்படுத்தும் போது, காட்டன் லைனிங் கொண்ட ரப்பர் கையுறைகளை அணிந்து கொள்ளவும்.
போதுமான அளவு தண்ணீர் குடித்து உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது ஒரு நல்ல சுய பாதுகாப்பு முறையாகும். இது உங்கள் நகங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் முழு உடலுக்கும் உதவிகாரமாக அமையும். மாயிஸ்சர் உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் அல்லது அல்மான்ட் எண்ணெய் போன்ற வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கக்கூடிய எண்ணெயை உங்கள் க்யூட்டிகல் பகுதிகள் மற்றும் நகப் படுக்கைகளில் இரவில் தடவவும், இது அவை உலர்வதையும், உடைவதையும் அல்லது செதில்களாக மாறுவதையும் தடுக்கும். அலோவேரா ஜெல் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துவதும் ஒரு சிறந்த வழிமுறையாகும். மருந்துக் கடைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாளர்களிடமிருந்து க்யூட்டிகல் மாய்ஸ்சரைசர்களை வாங்கியும் பயன்படுத்தலாம்.
நகங்களை கடிப்பது மற்றும் நக அடுக்குகளை சுரண்டுவது போன்ற நகங்களை பாதிக்கக்கூடிய பழக்கங்களை கைவிடவும். ஒருவருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை உடனடியாக அவர் கைவிட வேண்டும். ஏனெனில், நகம் கடிப்பதன் மூலமாக ஆரோக்கியமான நகங்களை ஒருவர் இழக்க நேரிடும். நக அடுக்கானது பார்ப்பதற்கு அழகாக இல்லாமல் போனாலும், அது நகங்களை பாதுகாக்கக்கூடிய ஒன்றாகும். நக அடுக்குகளை தொந்தரவு செய்வது நகங்களின் சிறிய பகுதிகளை இழக்க வழிவகுக்கும். மேலும், இதனால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை உடலுக்குள் நுழையும் வாய்ப்பு உண்டாகிறது. இதனால் தொற்று பரவக்கூடும்.
நெயில் பாலிஷ் மற்றும் நெயில் ஆர்ட் போடுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். டிரெண்டில் இருக்கும் விஷயங்களை செய்வதும், புத்தம்புது வண்ணங்கள் மற்றும் டிசைன்களை முயற்சி செய்வதும் பலருக்கு மிகவும் பிடிக்கும். இருப்பினும், நாம் நெயில் பாலிஷ் போன்ற தயாரிப்புகளின் தரத்தை சரிபார்க்க மறந்து விடுகிறோம். ஒரு சில நகங்கள் சம்மந்தமான தயாரிப்புகளில் ஒருவரின் நகங்களை சேதப்படுத்தும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அவை தீவிர நோய்த்தொற்றுகள் அல்லது அலெர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும்.
இன்னும் நிறைய டிப்ஸ்களை எதிர்ப்பார்க்கிறீர்களா? நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. உங்களுக்கு உதவக்கூடிய சில போனஸ் டிப்ஸ் இதோ-
க்யூட்டிகல் அல்லது நகப் படுக்கையைச் சுற்றி வீக்கம், சிவத்தல் அல்லது அரிப்பு இருந்தால் சொறிவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, குளிர்ந்த நீரை சிறிது ஐஸ் கட்டிகளுடன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயைச் சேர்த்து, வேகமாக கலக்கவும். அதில் உங்கள் நகங்களை முப்பது முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் நனைக்கவும்.
நகங்கள் எளிதில் உடையக்கூடியவாறு இருந்தால், அதனை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மாயிஸ்சரைஸ் செய்வது நல்லது. இருப்பினும், இது நீண்ட காலம் நீடித்தால், தோல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. பயோட்டின் போன்ற சப்ளிமெண்ட் மருந்துகளை உட்கொள்வது ஆரோக்கியமான நகங்களை வளர்க்க உதவும்.
இதையும் படிக்கலாமே! - முகத்தில் வைட்டனிங் கிரீம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
ஆரோக்கியமான நகங்களைப் பராமரிக்க ஒரு வழக்கமான நகப் பராமரிப்பு முறையைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற தொற்றுகளைத் தவிர்க்க உதவுகிறது. மேலும், இது சுகாதார முறையைப் பராமரிக்கவும் உதவும். உங்கள் நகங்களை நல்ல நிலையில் வைத்திருக்க அவற்றை டிரிம் செய்து ஈரப்பதத்துடன் வைத்திருப்பதை பயிற்சி செய்யுங்கள்.
Yes
No
Written by
dhanalakshmipillai
dhanalakshmipillai
மார்பக வீக்கம் (பால் கட்டுதல்) பற்றி மேலும் அறிக- காரணங்கள், சிகிச்சை & அறிகுறிகள்
நேர்மறையான குழந்தை வளர்ப்பின் நன்மைகள் என்னென்ன?
குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடுவதில் உள்ள முதல் 8 ஆச்சரியமான உண்மைகள்
கிட் மூலம் வீட்டிலேயே பிரக்னன்ஸி சோதனை செய்தல்
IUI (Intrauterine Insemination) பரிசோதனைக்கு விந்தணு பெறுவது எப்படி?
கர்ப்ப காலத்தில் சோயாபீன்சின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் டிப்ஸ்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Saffron | Shatavari | Nivarini | Skin - Weight | Weight Management | By Ingredient | Wheatgrass | Apple Cider Vinegar | Skin - Fertility | PCOS | By Ingredient | Chamomile | Skin - Hygiene | Intimate Area Rashes | Diapers & Wipes | Disposable Diapers | Cloth Diapers | Baby Wipes | Diapers & Wipes - Baby Care | Hair |