Pregnancy Best Foods
1 December 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
இந்தியர்கள் அனைவரின் சமையலறையிலும் நெய் இருக்கும். இது நம் பாரம்பரியச் சமையலில் கண்டிப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நெய் கண்டிப்பாக அவசியம். வயிற்று வலி, இருமல், ஜலதோஷம் போன்ற பொதுவான நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை நெய் அளிப்பதால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தினமும் நெய்யை உணவில் சேர்க்கிறார்கள்.
பெரும்பாலும், கர்ப்பிணிப் பெண்களும் நெய்யை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், குறிப்பாக குடும்பத்தில் வயதானவர்கள், நெய் சுகப்பிரசவத்திற்கு உதவும் என்று நம்புகின்றனர். ஆனால், இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. மேலும், கர்ப்ப காலத்தில் பெண்கள் நெய்யை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது சீரான செரிமானத்திற்கு உதவும் என்றும், குடலை மென்மையாக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள்.
நெய்யில் நல்ல கொழுப்பு அடங்கியுள்ளது. தயிரிலிருந்து கடைந்தெடுத்த வெண்ணெயை சூடுபடுத்தும்போது தெளிந்த நெய் கிடைக்கிறது. காய்ச்சிய நெய் சூடாக இருக்கும்போது திரவமாக இருக்கிறது. ஆறிய பின் நெய் இறுகுகிறது.
நெய்யில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே, ஒமேகா 6 & 9 கொழுப்பமிலங்கள், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பியூட்ரிக் அமிலம், பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் மிதமான அளவு நெய் உட்கொள்வது பாதுகாப்பானதே. நெய் ஜீரணிக்க எளிதானது என்பதாலும் வளர்சிதைமாற்றத்தைத் தூண்டுகிறது என்பதாலும், நீங்கள் அதிக எடையுடனோ அல்லது பருமனாகவோ இருந்தால் மற்ற பால் பொருட்களைப் போலல்லாமல், அதைக் குறைந்த அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கூடுதலாக, உருக்கிய நெய் ஆரோக்கியமான கொழுப்பு என்பதால் , எண்ணைக்குப் பதிலாக பெரும்பாலும் நெய்யை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், அதை உணவில் சேர்ப்பதற்கு முன்பு நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் தினம் சுமார் இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் நெய் சேர்க்கலாம். உணவில் ஒரு நாளைக்கு ஆறு தேக்கரண்டி கொழுப்பு இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், அதில் நெய் போன்ற நிறைவுற்ற கொழுப்பின் அளவு 10 முதல் 12% இருக்கலாம்.
நெய், குடலிளக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால், இது பிரச வலியைத் தூண்டும் என்று நம்பப்படுகிறது. மூன்றாவது டிரைமெஸ்டரில் நெய் உண்பது குடலை இளக்கச்செய்து, கருப்பை சுருக்கங்களுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பிரசவத்தைத் தூண்டுகிறது. நெய் யோனியின் உராய்வுநீக்கியாகச் செயல்படுவதாகவும் சுலபமான பிரசவத்திற்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது. இருப்பினும், அறிவியல் ஆதாரங்கள் கொண்டு இவை இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. எப்படியாயினும், நெய் கொழுப்பின் ஆரோக்கியமான மூலமாக இருப்பதால் இது உங்களுக்கும் குழந்தைக்கும் பயனளிக்கிறது.
நெய்யில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றத்தடுப்பிகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை இருப்பதால், இது கர்ப்ப காலத்தில் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி செரிமானமாகாமல் அவஸ்தைப்படுவதால், நெய் பரிந்துரைக்கப்படுகிறது. நெய்யில் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அதில் ப்யூட்ரிக் அமிலமும் உள்ளது. இது குடல்கள், பெருங்குடல் செல்கள், மற்றும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியம் அனைத்திற்கும் உதவியாக இருக்கும் ஒரு குறுகிய சங்கிலிக் கொழுப்பமிலமாகும். ஒரு சில டீஸ்பூன்கள் நெய் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி, செரிமானத்திற்கு உதவி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
பல ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்ற எடைஇழப்பு உணவுகளில் நெய் இடம்பெறுகிறது. ஹார்மோன் சமநிலையைப் பராமரிக்க இது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தம் தொடர்பான பல பிரச்சினைகளை அனுபவிப்பதால், நெய் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உகந்தது. நெய்யில் வைட்டமின்களும் ப்யூட்ரேட்டும் இருப்பதால் இது நிலையற்ற மூலக்கூறுகளையும் (ஃப்ரீ ரேடிக்கல்ஸ்) ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உங்கள் உடல் மந்தமாக இல்லாமல் இருக்க உதவுகிறது.உணவில் சுவையைக் கூட்டுவதோடு உடலுக்குத் தேவையான சத்துக்களையும் கொடுக்கிறது.
நெய் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்தும் ஒரு சுவையான மற்றும் நல்ல கொழுப்பின் மூலாதாரமாக உள்ளது. இது சேர்க்கப்படும் ஒவ்வொரு உணவின் சுவையையும் வாசனையையும் மேம்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 200-300 கூடுதல் கலோரிகள் தேவை. எனவே, நெய் கொண்டு தாளிப்பதாலோ அல்லது சப்பாத்தியின் மேல் நெய் தடவியோ இந்தத் தேவையான கலோரிகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். நெய்யில் தயாரிக்கப்பட்ட உலர்பழ லட்டுக்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுண்டு பசியைத் தணித்துக் கொள்ளவும் திருப்தியடையவும் உதவுகின்றன.
நெய் ஈரப்பதமூட்டும் விளைவைக் கொண்டிருப்பதால், இது சருமம் நீரிழக்காமல் பாதுகாக்கிறது. பெரும்பாலும், ஆயுர்வேத முறையில் மசாஜ் செய்யும் போது இது ஒரு முக்கியமான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வீக்கம், காயங்கள், வெட்டுக்கள், புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பமிலங்கள் நிறைந்திருப்பதால், நெய் மசாஜ் செய்வது அடிக்கடி வீக்கத்தால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப்பெண்களுக்குப் பயனளிக்கும்.
நெய் என்பது கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும் வைட்டமின்கள் நிறைந்த சூப்பர்ஃபுட் ஆகும். இதில் ஒமேகா -3 கொழுப்பஅமிலம் டிஹெச்ஏ (DHA) உள்ளது, இது ஞாபகசக்திக்கும் அறிவாற்றல் திறன்களுக்கும் நல்லது. மனித மூளை கொழுப்புகளால் ஆனது. நெய் ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டிருப்பதால் கருப்பையில் குழந்தையின் சரியான உடல் வளர்ச்சியையும் மூளை வளர்ச்சியையும் உறுதிசெய்கிறது. இது வைட்டமின்கள் ஏ, டி, கே ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பிரசவத்திற்குப் பிறகு அதிகப்படியான கொழுப்பை எரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் டிஹெச்ஏ (DHA) மற்றும் சிஎல்ஏ (CLA) நிறைந்திருப்பதால் கொழுப்பு இழப்பு உணவுகளிலும் அவசியம் இடம்பெறுகிறது.
நெய்யில் வைட்டமின் கே2 இருப்பதால் அதிகப்படியான கால்சியம் படிவுகளால் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளிலிருந்து பாதுகாக்கிறது. நெய்யில் காணப்படும் சி.எல்.ஏ கெட்ட கொழுப்பைக் குறைத்து உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது; வீக்கத்தையும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது. எளிதில் பாதிக்கப்படக்கூடிய கர்ப்ப காலத்தில் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எளிதாகப் பிரசவமாகவும் உதவுகிறது.பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க உணவுகளில் நெய் சேர்க்கப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் நீட்சிக்கோடுகள் ஏற்படுவது சாதாரணமானது. ஏனெனில் வயிற்றில் வளர்ந்துவரும் குழந்தைக்கு இடமளிக்க தோல் வேகமாக விரிவடைகிறது. பிரசவம் நெருங்கும்போது, வயிறு மிகவும் நீட்சியடைகிறது. சில சமயங்களில் கைகள், கால்கள், பிட்டம் ஆகியவற்றிலும் நீட்சிக்கோடுகள் உருவாகின்றன. வீட்டு வைத்தியத்திற்கும் பயனப்டுத்தப்படுகிறது. நெய்யை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெதுவாகத் தடவினால், அது நீட்சிக்கோடுகளை அகற்ற உதவும்.மேற்கண்ட நன்மைகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லையெனினும் பொதுவாகப் பலரால் நம்பப்படுகின்றன.
நெய் இயற்கையானது மற்றும் மருத்துவப் பண்புகளைக் கொண்டிருப்பது என்பதால் நெய்யை உட்கொள்வது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. குழந்தைக்கு ஊட்டச்சத்தை வழங்க வழக்கமான உணவை விட கர்ப்பிணிப் பெண்கள் கூடுதலாக 300 கலோரிகளை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், எல்லாவற்றையும் மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். அதிக அளவு நெய்யை உட்கொள்வது பின்வருவனவற்றுக்கு வழிவகுக்கும்.உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எடை அதிகரிக்கும். கூடுதல் நெய் உண்பது கர்ப்பத்தின் கடைசி சில வாரங்களில் உடல் செயல்பாட்டைக் குறைப்பதோடு சாதாரண பிரசவத்தை கடினமாக்கிவிடலாம்.நீங்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை உண்டால் அல்லது சத்தற்ற உணவை அடிக்கடி உட்கொண்டால், அது உடலைப் பருமனாக்கும். இறுதியில் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும்.பிரசவத்திற்குப் பிறகு கூடுதல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமாகிவிடும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் கிவி பழத்தின் பலன்கள்
நெய்யை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது சமைக்கும்போது உணவுகளில் சேர்க்கலாம். பரோட்டா, ரொட்டி, சாதம் அல்லது சப்பாத்தி மீது ஊற்றி சாப்பிடலாம். சுவையுள்ள சாதம் அல்லது காய்கறிகளில் சேர்த்து சாப்பிடலாம். லட்டு, பாயசம் போன்ற இனிப்புகளில் சேர்த்து சாப்பிடலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான, சீரான உணவை உட்கொள்ள வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக 9வது மாதத்தில், கர்ப்பிணிப் பெண்கள் கருப்பை சுருக்கங்களுக்கு உதவும் மற்றும் சீரான பிரசவத்திற்கு உதவும் உணவுகளை உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பத்தின் கடைசிக் கட்டத்தில் நெய் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இது மலச்சிக்கலைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டது மற்றும் பிரசவத்தைத் தூண்ட உதவுகிறது. இவை இன்னும் அறிவியல் ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்கப்படவில்லை, எனவே இதை மிதமாக உட்கொள்வது நன்மை பயக்கும்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பதைத் தவிர நெய்யை உட்கொள்வதில் அறியப்படாத ஆபத்துக்கள் எதுவும் இல்லை என்றாலும், மிதமான அளவில் அதைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு சீரான உணவு அவசியம். நெய் உங்களுக்கும் குழந்தைக்கும் ஊட்டமளிக்கிறது. நெய் ஒமேகா கொழுப்பின் நல்ல மூலமாக இருப்பதால் உங்கள் உணவில் சரியான அளவுகளில் சேர்க்கலாம். கர்ப்ப காலத்தில் நெய் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கர்ப்ப காலத்தில் ஏதேனும் உணவு மாற்றங்களைச் செய்யத் திட்டமிடும்போதெல்லாம் மருத்துவரின் ஆலோசனையைக் கர்ப்பிணிகள் கண்டிப்பாகப் பெறவேண்டும்.பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.
References
1. Sharma H, Zhang X, Dwivedi C. (2010). The effect of ghee (clarified butter) on serum lipid levels and microsomal lipid peroxidation.
2. Aditi P, Srivastava S, Pandey H, Tripathi YB. (2020). Toxicity profile of honey and ghee, when taken together in equal ratio.
Ghee During Pregnancy is Safe or Not in Tamil, What are the Side effects of Ghee During Pregnancy in Tamil, How to Consume Ghee During Pregnancy in Tamil, Is Ghee Good During Pregnancy in English, Is Ghee Good During Pregnancy in Hindi, Is Ghee Good During Pregnancy in Telugu, Is Ghee Good During Pregnancy in Bengali
Yes
No
Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips
சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவம், இரண்டில் எது சிறந்தது | Which Is Better Normal Or Cesarean Delivery in Tamil
ஆனியன் ஆயிலுடன் இயற்கையான முடி பராமரிப்பு முறையை உருவாக்கி தலைமுடிக்கு பொலிவைச் சேர்க்க 3 படிகள் | 3 Steps For Building A Natural Hair Care Regimen With Onion Oil To Add Lustre To Your Hair in Tamil
பேடிங் கொண்ட மகப்பேறுகால பிரா, தாய்ப்பால் கசிவைத் தடுக்குமா? | Can A Padded Maternity Bra Prevent Breastmilk Leakage in Tamil
கர்ப்ப காலத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நர்சிங் பேட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது|Is is Safe to Use Reusable Nursing Pads during Pregnancy in Tamil
கர்ப்பிணி பெண்கள் அதிகமாக வாயுவை வெளியேற்றுகிறார்களா?(Do Pregnant Women Fart A Lot in Tamil)
தொப்புள் கோடி இரத்த சேமிப்பு என்றால் என்ன, அதை ஏன் செய்ய வேண்டும்?|What is Cord Blood Banking and Why Should You Get It Done in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |