hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • குழந்தைக்கு பயனுள்ள பொருட்களை வாங்குவது எப்படி?: உங்களுக்கான பட்டியல் இதோ!(How To Shop Sensibly For Your Baby: Here's A Checklist In Tamil) arrow

In this Article

        குழந்தைக்கு பயனுள்ள பொருட்களை வாங்குவது எப்படி?: உங்களுக்கான பட்டியல் இதோ!(How To Shop Sensibly For Your Baby: Here's A Checklist In Tamil)

    Baby Care

    குழந்தைக்கு பயனுள்ள பொருட்களை வாங்குவது எப்படி?: உங்களுக்கான பட்டியல் இதோ!(How To Shop Sensibly For Your Baby: Here's A Checklist In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    சிலர் தங்கள் குழந்தைக்காக நிறைய ஆடைகளை வாங்குவதும், அவற்றை எப்போதாவது பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தாமலே போவது என்ற விஷயம் குறித்து நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதே தவறை நம்மில் பலரும் கூட செய்து கொண்டிருக்கிறோம். பச்சிளம் குழந்தை அல்லது பிறக்கப் போகும் குழந்தை என ஏதோ ஒரு குழந்தைக்காக பொருட்களை வாங்க வேண்டும் என்று வந்து விட்டால், அது சற்று சிரமமான காரியமாக இருக்கும். ஆர்வம் மற்றும் குழப்ப மிகுதியில் நாம் அவ்வபோது பல தவறுகளை செய்து விடுகிறோம். எனினும், பொருட்கள் வாங்குவதை சிறப்பானதாக மாற்றவும், பணத்தை சேமிக்கவும் உதவுகின்ற வகையில் சில பட்டியல்களை இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

    • லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள வயதைக் காட்டிலும், அளவு மிக முக்கியமானது(Size is important, not the age mentioned on the label):

    பிறக்கும்போதே ஒவ்வொரு குழந்தையின் உயரம் மற்றும் உடல் எடை வெவ்வேறு மாதிரியாக இருக்கும் என்பதால், ஆடைகளின் லேபிளில் ஒட்டப்பட்டுள்ள அளவு சில சமயங்களில் மட்டும் தான் பொருத்தமானதாக இருக்கும். இதை அனைத்து சமயங்களிலும் நினைவில் வைத்துக் கொள்வது அவசியமாகும். பிறந்த பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் அல்லது பிறக்கப்போகும் குழந்தையாக இருந்தாலும், குழந்தையின் எடையை பொருத்து உடையை வாங்கவும். உங்கள் குழந்தையின் உடல் எடை சராசரியை விட சற்று கூடுதலாக இருப்பின் கொஞ்சம் பெரிய ஆடைகளைத் தேர்வு செய்யவும்.

    • குறிப்பிட்ட அளவில் சில ஆடைகளை மட்டும் வாங்கினால் போதுமானது(Only purchase a few clothes in one size):

    குழந்தைகளுக்கான ஆடைகள் அழகானதாக இருக்கும். இதனால், நம் கண் பார்வையில் படுகின்ற அத்தனை ஆடைகளையும் வாங்க வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கும். ஆனால், குழந்தைகள் வேகமாக வளர்ச்சி அடையக் கூடியவர்கள். ஆகவே, எப்போதும் சரியான அளவு கொண்ட ஆடையை குறைவாக வாங்கவும். அதேபோல ஒன்று அல்லது இரண்டு எண் அடிப்படையில் அளவில் பெரிய ஆடைகளை வாங்கலாம்.

    • பருவச்சூழலை நினைவில் கொள்ள வேண்டும்(Remember the weather):

    ஒரு ஜோடி சார்ட்ஸ்களை நீங்கள் வாங்கியிருப்பீர்கள். அவற்றை அடுத்த சில மாதங்கள் வரையிலும் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருப்பீர்கள். மேலும், வெளியே உறைகின்ற அளவுக்கு குளிர் சூழல் நிலவிக் கொண்டிருக்கும். எனினும், அடுத்த கோடை காலத்திற்குள் இந்த சார்ட்ஸ் சிறியதாக மாறிவிடும். ஆகவே, குழந்தைக்கான ஆடைகளை வாங்கும்போது அவர்களது அளவு மற்றும் வளர்ச்சி நிலை ஆகியவற்றுடன் பருவநிலையையும் பரிசீலனை செய்ய வேண்டும்.

    • கடன் வாங்குவதால் தவறொன்றும் இல்லை(It's not too bad to borrow):

    குழந்தைகள் மிக வேகமாக வளர்ச்சி அடையும் நிலையில், மிக குறைவாக பயன்படுத்தப்பட்ட ஆடைகள் அனைத்து பெற்றோரிடமும் இருக்கும். ஆகவே, உங்கள் குடும்பத்தில் நெருங்கிய உறவுகள் மற்றும் தோழிகளிடம் அவர்களுடைய குழந்தைகளின் ஆடைகளை கேட்டு வாங்குவதற்கு தயக்கம் காட்ட வேண்டாம்.

    • சிறப்பு விற்பனை நடைபெறும் நேரம் குறித்து திட்டமிட்டு வாங்கவும்(Plan and buy at the time of sale):

    ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் கவர்ச்சிகரமான சலுகையுடன் விற்பனை நடைபெறுகிறது. அத்துடன் குழந்தைக்கு ஒவ்வொரு சமயத்திலும் புத்தாடை தேவைப்படும். உங்கள் குழந்தையின் வளர்ச்சி, பருவநிலை மற்றும் எதிர்வரும் பண்டிகைகள் அல்லது கொண்டாட்டங்கள் போன்றவற்றை மனதில் வைத்து, 6 மாதங்களுக்கான ஆடைகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

    • மொத்தமாக வாங்குவது(Buy in bundles):

    தளர்வான ஆடைகள், மெடி போன்ற குழந்தைகளுக்கான ஆடைகள் பெரும்பாலும் மொத்தமாக விற்பனை செய்யப்படுகின்றன. அவை நம்பிக்கைக்குரிய பிராண்ட் வகையைச் சேர்ந்ததா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால், நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

    • சௌகரியமான விலை(Value comfort):

    நீங்கள் வாங்கும் ஆடைகள் மென்மையானதாக, காற்றோட்டமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய ஜிப் மற்றும் பட்டண் கொண்டதாக இருக்கக் கூடாது. குழந்தைகள் மென்மையானவர்களாக இருக்கும் நிலையில், க்யூட்டாக காட்சியளிக்கும் பல ஆடைகள் அவர்களுக்கு அசௌகரியத்தை தருவதாக இருக்கலாம். மேலும், ஆடையின் கழுத்துப் பகுதியானது தளர்வானதாகவும், எளிதில் விசித்து அணிவிக்கக் கூடியதாகவும், கழட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

    • கருத்துக்களை பரிசீலனை செய்வது(Take feedback):

    நம் ஆர்வத்தை தூண்டுகின்ற வகையில் குழந்தைகளுக்கான ஆடைகள் நிறைய பிராண்டுகளில் வரும். அவை அனைத்துமே நல்ல தரத்தில் இருக்கும் அல்லது நீண்ட நாட்களுக்கு உழைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆகவே, ஆடைகள் குறித்த மற்றவர்களின் கருத்துக்களை பரிசீலனை செய்யவும் அல்லது ஆன்லைனில் உள்ள ரிவியூ குறித்து படிக்கவும். இதன் மூலமாக குறிப்பிட்ட பிராண்டுகளின் தரம் மற்றும் கொடுக்கும் பணத்திற்கான மதிப்பு ஆகியவை குறித்து நீங்கள் தீர்மானிக்கலாம். அதேபோல, கருத்துக்களை தெரிந்து கொள்ள நீங்கள் இணைய வர்த்தக தளங்களை பார்வையிடலாம்.

    • பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்(Prioritise safety):

    இறுதியாக, ஆடைகளை பயன்படுத்தும் முன்பாக அவற்றை துவைத்து, உலர வைத்து பயன்படுத்தவும்.

    பச்சிளம் குழந்தைக்காக முன்கூட்டியே வாங்கி வைக்க வேண்டிய அத்தியாவசியமான பொருட்கள்(Essentials To Buy For Your Newborn In Advance In Tamil)

    உங்கள் குழந்தை பிறக்கும் தேதி நெருங்கி வரும் நிலையில், செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கி ஒன்று சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பது குறித்து இங்குள்ள பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளலாம். குழந்தைக்கு பாலூட்டுவது, ஆடை அணிவிப்பது, பராமரிப்பு, டயப்பர் நடவடிக்கை, குளிப்பாட்டுவது உள்ளிட்ட அனைத்திற்குமான பொருட்களை கொண்டதாக இந்தப் பட்டியல் இருக்கும்.

    குழந்தை பராமரிப்புக்கான பொருட்கள்(Nursery checklist)

    • தொட்டில் மற்றும் தொட்டிலுக்கான மேட்ரஸ்(Crib and crib mattress):

    குழந்தைகளுக்கு தேவையான பொருட்களில் தொட்டில் தான் முதன்மையான இடத்தில் இருக்க வேண்டும். குழந்தை தூங்குவதற்கு தொட்டில் தேவைப்படும். நாளொன்றுக்கு 16 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வரையிலும் குழந்தைகள் தொட்டிகள் உறங்கும். குழந்தை பிறந்த முதல் சில நாட்கள் மற்றும் வாரங்களுக்கு இந்த நிலை நீடிக்கும். தொட்டில் விலை உயர்ந்ததாக இருக்கலாம். எனினும், நீங்கள் சரியான ஒன்றை தேர்வு வாங்கினீர்கள் என்றால் அதை பல ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு வளரும் குழந்தைகளுக்கான மெத்தை மற்றும் அதற்குப் பிறகு பகல் நேர மெத்தை என பல விதமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சிளம் குழந்தைகளுக்கான மற்றுமொரு அத்தியாவசிய பொருள் என்னவென்றால் தொட்டிலில் பயன்படுத்த தகுந்த மேட்ரஸ் ஆகும். தூங்குவதற்கு பாதுகாப்பான தளமாக இதுதான் இருக்கும்.

    • மெத்தை(Bedding):

    தண்ணீர் புகாத மேட்ரஸ், அதுவும் உங்கள் தொட்டில் மேட்ரஸ் உடன் பொருந்தக் கூடிய ஒன்று உங்களுக்கு தேவைப்படும். தொட்டிலை குறைவாக பயன்படுத்துவதன் மூலமாக குழந்தைக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் திடீர் குழந்தை இறப்பு போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

    • இரவு விளக்கு(Night light):

    நடு இரவில் உங்கள் குழந்தைக்கு பாலூட்டுவதற்காக நீங்கள் எழ வேண்டியிருக்கும். ஆகவே, பச்சிளம் குழந்தைக்கான பட்டியலில் இரவு பயன்பாட்டு விளக்கும் இருக்க வேண்டும். வெளிச்சம் மிகுந்த விளக்குகளை இரவில் பயன்படுத்தாமலேயே எங்கே நடக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள இரவு விளக்கு பயனுள்ளதாக அமையும். வளர்ந்து வருகின்ற உங்கள் குழந்தை நடு இரவில் எழுந்திருக்கும்போது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதாக இது அமையும்.

    • ஆடைகளை வைப்பதற்கான பெட்டி(Clothes storage):

    உங்கள் குழந்தைக்கு தேவையான அனைத்து ஆடைகளையும் நீங்கள் வாங்கிய பிறகு, அவற்றை வைப்பதற்கு உங்களுக்கு ஓர் இடம் தேவைப்படும். சில சமயம், டேபிள்களுடன் வரக் கூடிய டிராயர் அல்லது செல்ஃப்கள் போன்றவை ஆடைகளை வைப்பதற்கு போதுமானதாக இருக்கும். அப்படி இல்லை என்றால் பாஸ்கட் அல்லது டப் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

    • சாய்வு நாற்காலி(Rocking chair):

    தாய்ப்பால் ஊட்டும்போது குழந்தையை அமர வைப்பதற்கு சாய்வு நாற்காலி தான் சரியாக இருக்கும். குழந்தை இரவு தூங்கும் முன்பாக அல்லது இரவு நேரத்தில் தாலாட்டு பாடுவதை போல இது அமையும். இரவு நேரத்தில் உங்கள் குழந்தைக்கு தொந்தரவு இல்லாமல் பாலூட்டுவதற்கு இது உதவியாக இருக்கும். இது மட்டுமல்லாமல் நாற்காலி தாலாட்டு போல அசைந்து கொண்டே இருப்பதால் உங்கள் செல்லக் குழந்தை அமைதியாக இருக்கும்.

    • ரப்பர் நிப்பிள்(Pacifiers):

    தன்னை தானே தேற்றிக் கொள்ளும் வகையில் விரல் சூப்பும் பழக்கம் பச்சிளம் குழந்தைகளுக்கு இருக்கும். அதற்குப் பதிலாக ரப்பர் நிப்பிள் ஒன்றை வாங்கி குழந்தையின் வாயில் வைக்கலாம். அடிக்கடி இது தொலைந்து விடக் கூடும். ஆகவே, ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வாங்கி வைத்துக் கொள்ளவும். இது பல்வேறு அளவுகளில் வருகின்றன. ஆகவே, உங்கள் குழந்தையின் வாய்க்கு சரியான அளவில் ஒன்றைத் தேர்வு செய்ய, உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை படிக்கவும்.

    • பொம்மைகளுக்கான பெட்டி(Toy basket):

    பொம்மைகளை வைப்பதற்கான பெட்டி அத்தியாவசியப் பொருள் அல்ல என்றாலும், உங்கள் பச்சிளம் குழந்தைக்கு சில பொம்மைகள் தேவைப்படும் நிலையில், அவற்றை நீங்கள் கையில் வைத்துக் கொண்டு சுற்ற முடியாது. அவற்றை வைப்பதற்கு ஓரிடம் வேண்டும். பொம்மைகளை நீங்கள் செல்ஃப்களிலும் வைத்துக் கொள்ளலாம்.

    விளையாட்டு பொருள் பட்டியல்(Playtime Checklist In Tamil)

    • குழந்தைகளுக்கான ஊஞ்சல்(Baby swing):

    ஊஞ்சல் ஆடும்போது அல்லது வைப்ரேட் ஆகும்போது உங்கள் குழந்தையை அது அமைதிப்படுத்தும். பவுன்சரை போல அல்லாமல், ஊஞ்சலில் ஆடும்போது உங்கள் பச்சிளம் குழந்தையின் கால்களை அசைக்கத் தேவை இருக்காது. இதற்குப் பதிலாக நீங்கள் ஸ்வே அல்லது வைப்ரேசன் செட்டிங்களை முயற்சி செய்யலாம். பொதுவாக குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச உடல் எடை வரம்புகளை கொண்டிருக்கும் ஊஞ்சல் உங்கள் குழந்தைகளுக்கு பொருத்தமானதாக இருக்கும். பொதுவாக ஊஞ்சல்களில் தலைக்கு மேலே இசை அல்லது பாடல் ஒலிக்கக் கூடிய பொம்மைகளை தொங்கவிட்டிருப்பார்கள். அது உங்கள் குழந்தைக்கு குதூகலத்தை ஏற்படுத்தும்.

    • பேபி பவுன்சர்(Baby bouncer):

    பேபி பவுன்சர் என்பது ஊஞ்சல்களை போன்றதுதான். ஆனால், உங்கள் குழந்தையின் கால் அசைவுகளின் மூலமாகத்தான் இது பவுன்ஸ் ஆகும். உங்கள் குழந்தையை பாதுகாப்பாகவும், குதூகலமாகவும் வைத்துக் கொள்ளும் அதே சமயத்தில் அருகாமையில் வைத்துக் கொண்டு உங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள பேபி பவுன்சர் உதவிகரமாக இருக்கும். பவுன்சர்களில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச உடல் எடை வரம்புகள் உண்டு என்பதால், இதை வாங்கும் முன்பாக உற்பத்தியாளர்களின் வழிகாட்டு விதிமுறைகளை படிக்கவும்.

    • எடுத்துச் செல்லத்தக்க விளையாட்டு தளம்(Portable play yard):

    குழந்தைகள் விளையாடுகிறேன் என்ற பெயரில் அங்கும், இங்கும் நகர்ந்து சென்று விழுந்துவிடக் கூடும். ஆனால், எடுத்துச் செல்லத்தக்க விளையாட்டு தளம் என்பது உங்கள் குழந்தை விளையாடுவதற்கும், தூங்குவதற்குமான பாதுகாப்பான இடவசதியை தருகிறது. அருகாமையில் நீங்கள் வேலை செய்து கொண்டே குழந்தையை கவனித்துக் கொள்ளலாம். வீட்டின் எந்தப் பகுதியிலும் அறை வசதிக்கு ஏற்ப இதை நகர்த்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

    • பொம்மைகள்(Toys):

    சின்ன, சின்ன கலை பொருட்கள் மற்றும் வண்ணமயமான புத்தகங்களை தாண்டி பெரிய அளவிலான பொம்மைகளை பச்சிளம் குழந்தைகளும், வளரும் குழந்தைகளும் விரும்புவதில்லை. ஒலி எழுப்பக் கூடிய மென்மையான பொம்மைகள், அடுக்கு பொருள்கள், பின்னால் இழுத்து முன்னால் தள்ளக் கூடிய பொம்மைகள் மற்றும் பிஸி பாக்ஸ் போன்றவை உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும், பொழுதுபோக்கிற்கும் உதவிகரமாக இருக்கக் கூடிய பொம்மை வகைகள் ஆகும்.

    • பிளேமேட்(Playmat):

    ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் உங்கள் குழந்தை தவழ்ந்து விளையாடும். அந்த சமயத்தில் மெலிதான, மென்மையான பிளேமேட் ஒன்றை தரையில் விரித்து வைத்தால், அதில் உள்ள பொம்மைகள், வரைபடங்கள், அழகிய காட்சிகளை பார்த்து ஒவ்வொரு நாளும் குழந்தை சில மணி நேரங்கள் மகிழ்ச்சியாக விளையாடும்.

    இதையும் படிக்கலாமே! - பல்வேறு வகையான டயபர் ரேஷ்களை எவ்வாறு தெரிந்து கொள்வது மற்றும் சிகிச்சையளிப்பது.

    பாலூட்டுவதற்கான பொருட்கள்(Feeding Checklist)

    • ஏப்பத்திற்கான துணி(Burp clothes):

    உங்கள் செல்லக் குழந்தை ஏப்பம் விடும்போது அவர்கள் கக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது அது உங்கள் குழந்தையின் ஆடைகளில் ஒட்டாமல் இருப்பதற்கு இந்தத் துணி பயன்படும். இது அளவில் சிறியதாக இருப்பதால் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும்.

    • நர்சிங் கவர்(Nursing cover):

    உங்கள் செல்லக் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் ஊட்டும் சமயங்களில் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பு தருவதாக இது அமையும். உங்கள் கழுத்தை சுற்றியிலும் இதை சுற்றிக்கொண்டு ஒரு ஸ்டிராப் வைத்து மாட்டிக் கொள்ளலாம். நீங்கள் சிறிய போர்வை ஒன்றை நர்சிங் கவராக பயன்படுத்தலாம். ஆனால், இதில் ஸ்டிராப் இடம்பெற்றிருக்காது என்பதால் இது எளிதில் கீழே விழுந்து விடும்.

    • சிறிய போர்வைகள்(Receiving blankets):

    இந்த போர்வைகள் மெல்லியதாக இருக்கும் மற்றும் ஜோடியாக வரும். இதை நீங்கள் நர்சிங் கவர் மற்றும் ஏப்பத்திற்கான துணி ஆகிய இரண்டுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் குழந்தையை போர்த்தி வைப்பதற்கும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • நர்சிங் தலையணை(Nursing pillows):

    உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் கூடுதலான சௌகரியம் கிடைக்க வேண்டும் என்றால் யூ வடிவ தலையணைகளை பயன்படுத்தலாம். உங்கள் குழந்தைக்கு உங்கள் கைகள் தவிர்த்து வேறொரு இடத்தில் ஓய்வு கிடைக்க இந்த தலையணை உதவியாக இருக்கும்.

    • பிப்ஸ்(Bibs):

    உங்கள் பட்டியலில் இடம்பெற வேண்டிய அத்தியாவசியமான பொருள்களில் இதுவும் ஒன்றாகும். தாய்ப்பால், புட்டிப்பால், எச்சில் போன்றவை உங்கள் குழந்தையின் மீது விழாமல் இது தடுக்கும்.

    பச்சிளம் குழந்தைகளுக்கான பட்டியலில் தவறாமல் இடம்பெற வேண்டிய பொருள் பேபி பாட்டில்கள் ஆகும். நீங்கள் தாய்ப்பால் ஊட்டினாலும் அல்லது புட்டிப்பால் ஊட்டினாலும் இது தேவைப்படும். இது பல வகைகளில் வருகிறது. கிளாஸ் அல்லது பிளாஸ்டிக் தயாரிப்புகளை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். பாட்டில்களை வாங்குவதற்கு முன்பாக நிப்பிள்களின் அளவு மற்றும் வடிவம் போன்றவற்றை கவனத்தில் கொள்ளவும்.

    தேவைப்படும் பட்சத்தில் தாய்ப்பாலை எடுப்பதற்கு, நாமே இயக்கக் கூடிய பம்ப் அல்லது எலெக்ட்ரிக் பம்ப் ஒன்றை பயன்படுத்தலாம். இரண்டு மார்புகளிலும் ஒரே சமயத்தில் தாய்ப்பால் எடுக்கக் கூடிய வகையிலும் பம்புகள் இருக்கின்றன.

    • புட்டிப்பால்(Formula):

    சந்தையில் பல தரப்பட்ட புட்டிப்பால் வகைகள் மற்றும் பிராண்டுகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. உங்கள் குழந்தைக்கு பொருத்தமானதை தேர்வு செய்ய மருத்துவர் உதவி செய்வார்.

    • பால் சேமிப்பு பைகள்(Milk storage bags):

    தாய்ப்பாலை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு இது உதவியாக இருக்கும். இவை பெரும்பாலும் ஒற்றை பயன்பாட்டு பைகளாக வருகின்றன. தாய்ப்பாலை பாட்டிலில் சேமித்து வைப்பதற்குப் பதிலாக இந்தப் பையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • பாட்டில் பிரெஷ்(Bottlebrush):

    பாட்டிலின் உட்புற பகுதியை முழுமையாக சுத்தம் செய்வதற்கு இந்த பாட்டில் பிரெஷ் பயன்படும்.

    • பாட்டில் ஸ்டெர்லைசர்(Bottle steriliser):

    பாட்டில்கள் மற்றும் நிப்பிள்களை தூய்மையானதாக வைத்துக் கொள்ள நீங்கள் ஸ்டெர்லைசர் பயன்படுத்தலாம்.

    டயப்பரிங் பட்டியல்(Diapering Checklist)

    • சேஞ்சிங் டேபிள்(Changing table):

    உங்கள் குழந்தையின் டயப்பரை மாற்றுவதற்கு பாதுகாப்பான இடம் ஒன்று உங்களுக்கு தேவைப்படும். பொதுவாக டேபிள்களில் டிராயர் அல்லது ஷெல்ஃப் போன்றவை இருக்கும். அதில் டயப்பர்கள், வைப்ஸ் மற்றும் ஆடைகள் போன்றவற்றை வைத்துக் கொண்டால் உங்கள் குழந்தையை பிடித்துக் கொண்டே இவற்றையும் எடுத்துக் கொள்ள முடியும். சில டேபிள்கள் இயல்பாக பக்கிள் இணைப்புடன் வருகின்றன. ஆகவே, எதிர்பாராத விதமாக உங்கள் குழந்தை உருண்டு விழுந்து விடாதபடி நீங்கள் பாதுகாக்க முடியும்.

    • சேஞ்சிங் பேட்(Changing pad):

    உங்கள் செல்லக் குழந்தையை சௌகரியமாக வைத்துக் கொள்ளவும்,சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

    உங்களுக்கு ஏராளமான டயப்பர்கள் தேவைப்படும். புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைக்கு வாரம் ஒன்றுக்கு 59 டயப்பர்கள் தேவைப்படலாம். வெவ்வேறு அளவுகளை கொண்ட சில பேக்குகளை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் குழந்தைக்கு எப்போது எந்த அளவு தேவைப்படும் என்பது தெரியாத காரணத்தால் வெவ்வேறு அளவுகளை வைத்துக் கொள்ளலாம்.

    குழந்தைக்கு டயப்பர் மாட்டியிருந்த பகுதியை சுத்தம் செய்ய இது உதவியாக இருக்கும். நீங்கள் தேர்வு செய்வதற்கு ஏதுவாக நிறைய பிராண்டுகள் மற்றும் வெரைட்டிகள் உள்ளன.

    • துடைப்பதற்கான துணிகள்(Washcloths):

    உங்கள் குழந்தைக்கு டயப்பர் மாட்டியிருந்த பகுதியை சுத்தம் செய்ய இந்த துணிகள் உதவும். துணிகளை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து துடைக்கவும். அதேபோல உங்கள் குழந்தையை குளிப்பாட்டுவதற்கான துணியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • டயப்பர் தடிப்புக்கான க்ரீம்(Diaper rash cream):

    குழந்தைகளுக்கு டயப்பர்களால் தடிப்பு ஏற்படுவது இயல்பானதாகும். இது அடிக்கடி ஏற்படக் கூடும். இதுகுறித்து குழந்தை நல மருத்துவரை ஆலோசனை செய்து, உங்கள் குழந்தைக்கு தேவையான க்ரீம்களை வாங்கிக் கொள்ளலாம்.

    ஆடைகளுக்கான பட்டியல்(Clothing Checklist In Tamil)

    • சுற்றுவதற்கான போர்வை(Swaddle blanket):

    முதல் சில வாரங்களுக்கு உங்கள் குழந்தையை போர்த்தி வைக்க வேண்டியிருக்கும். பிரத்யேக போர்வை ஒன்று இதற்கு உதவிகரமாக இருக்கும். ஹூக் மற்றும் லூப் பாஸ்ட்னர் உள்ளிட்ட வசதிகளை கொண்ட பல்வேறு மாடல்களில் நமக்கானதை நாம் தேர்வு செய்யலாம்.

    • பைஜாமா அல்லது தூங்குவதற்கான சாக்ஸ்(Pyjamas or sleeping sacks):

    பச்சிளம் குழந்தை அதிக நேரம் தூங்கிக் கொண்டே இருக்கும் என்பதால், தூங்கும் நேரத்திற்கான ஆடைகளை வாங்குவது அவசியமாகும். தூங்குவதற்கான சாக்ஸ் மற்றும் பைஜாமா போன்ற ஆடைகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.

    • ஒன்பீஸ் ஒன்சியஸ்(One-piece onesies):

    சில ஆடைகளில் கால்களுக்கு நடுவே இடைவெளி இருக்கும். இது டயப்பரை மாற்றுவதற்கு உதவியாக அமையும். பருவ சூழ்நிலைக்கு ஏற்ப பெரிய அல்லது சிறிய ஸ்லீவ்ஸ் போன்றவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

    • லெக்கின்ஸ் அல்லது விசியும் பேண்ட்கள்(Leggings or stretchy pants):

    நீங்கள் புதிய தாய்மாராக இருந்தாலும் அல்லது ஏற்கனவே உங்களுக்கு அனுபவம் இருந்தாலும் குழந்தைகளுக்கான ஆடைகள் சௌகரியம் தரக் கூடியதாக இருந்தால் நீங்கள் பாராட்டு தெரிவிப்பீர்கள். அதற்கு விசியும் பேண்ட்கள் உதவியாக இருக்கும்.

    • ஸ்வெட்டர் அல்லது ஜாக்கெட்(Sweater or jacket):

    உங்கள் செல்லக் குழந்தையின் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்வதற்கு ஸ்வெட்டர் அல்லது ஜாக்கெட் தேவைப்படும். இழுத்து மாட்டக் கூடிய ஸ்வெட்டர்களைக் காட்டிலும் கார்டிகன்ஸ் மற்றும் ஜாக்கெட் போன்றவை உதவியாக இருக்கும்.

    • சாக்ஸ் அல்லது பூட்டீஸ்(Socks or booties):

    குழந்தையின் கால்களில் மாட்டுவதற்கு நிறைய சாக்ஸ் அல்லது பூட்டீஸ் தேவைப்படும்.

    • நாட் ஹேட் அல்லது கேப்(Knot hat or cap):

    உங்கள் குழந்தை பிறக்கும்போதே அதற்கு சளி பிடித்திருந்தால், இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொண்டு அவர்களை வெதுவெதுப்பான சூழலில் வைத்துக் கொள்ளலாம்.

    • பனி உடை (Snowsuit):

    குளிர்காலத்தில் தேவைப்படுகின்ற மற்றொரு அத்தியாவசிய பொருள் பனிக்கால ஆடையாகும். சிலவற்றில் மிட்டன்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

    • மிட்டன்கள்(Mittens):

    உங்கள் குழந்தையின் கைகளை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வதற்கு அழகிய, சிறிய கிட்டன்கள் தேவைப்படும்.

    முடிவுரை

    உங்கள் செல்லக் குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவது உங்களுக்கு குதூகலமாக இருக்கும். மேலும், இது தாய்மையின் மகத்துவத்தை உணர வைக்கும். ஆக, இந்த வேலையை மனநிறைவுடன் செய்வதோடு மட்டுமல்லாமல் பட்டியலில் பெரும்பாலான பொருட்களை வாங்கிவது அவசியம். பொருட்களை வாங்கும்போதும், அவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கும்போதும் அதில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் படிக்கவும். ஷாப்பிங் செய்ய முடிவெடுக்கும்போது உங்கள் குழந்தைக்கு மிக அவசியமாக என்னென்ன தேவை என்பதை பட்டியலிடவும். அது உங்கள் வேலையை எளிமையாக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டதாகும். அதே சமயம், உங்களுக்கு தேவையில்லாத அல்லது பிறரிடம் இருந்து இரவலாகப் பெறக் கூடிய பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

    Tags :

    Shopping for babies in tamil, important things for babies in tamil, how to buy useful products for babies, What are the essentials for babies In tamil?, babies important needs in tamil, newborn essential needs in tamil

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.