This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் அவகேடோ சாப்பிடுவதால் ஏற்படும் 12 முதன்மையான நன்மைகள்

Pregnancy
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 30, 2026
கர்ப்ப காலத்தில் அவகேடோ சாப்பிடுவதால் ஏற்படும் 12 முதன்மையான நன்மைகள்
Likes32 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • அவகேடோவில் நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன, இவை கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் முதிர்கருவின் ஊட்டச்சத்துத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகின்றன.
  • அவகேடோ உண்பது செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கலை தடுத்து, மசக்கையை தணித்து, கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தையும் சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
  • அவகேடோவில் உள்ள இரும்புச் சத்து இரத்த சோகையை குணப்படுத்துகிறது, பொட்டாசியம் கால் தசை பிடிப்புகளை தணிக்கிறது, மேலும் கோலின் முதிர்கருவின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கு எது உதவும்? Explore our Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each.
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.6

கர்ப்ப காலத்தில் அவகேடோ சாப்பிடுவதால் ஏற்படும் 12 முதன்மையான நன்மைகள் :

கர்ப்ப காலத்தில் அவகேடோ உண்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். எனினும், கர்ப்ப காலத்தில் தினசரி உணவுமுறையில் ஏன் ஒருவர் அவகேடோவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

அவகேடோவில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது

  • நன்கு பழுத்த அவகேடோ பழம், மென்மையாக வெண்ணெய் போன்ற அமைப்பினையும், கொட்டைப்பருப்பு போன்ற சுவையுடையதாகவும் இருக்கும். அவகேடோக்களில் கொழுப்புச் சத்து மிதமிஞ்சிய அளவில் இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமான ஒற்றை அபூரிதக் கொழுப்பும் நிறைந்துள்ளது.

  • அவற்றில் கரையாத நார்ச்சத்து அடங்கியுள்ளது. அவகேடோக்களை குடல் ஆரோக்கியத்திற்காக, போதுமான அளவு தண்ணீருடன் சாப்பிட வேண்டும். கரையாத நார்ச்சத்தானது, தண்ணீரில் கரைவதற்கு பதிலாக நீரோடு ஒட்டிக் கொண்டு விடுகிறது, இதனால் செரிமான நடைமுறை இலகுவாகி விடும்.

  • கர்ப்ப காலத்தின் போது பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் மலச்சிக்கலால் அவதியுறுவதால், கர்ப்ப காலத்தில் அவகேடோ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

அவகேடோ மூலமாக உங்களின் ஊட்டச்சத்துத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து விடலாம்

அவகேடோவில் ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளன. வயிற்றில் முதிர்கரு வளர்ந்து கொண்டிருப்பதால், அதன் ஊட்டச்சத்திற்கு ஃபோலேட் தேவைப்படுகிறது. தாய்க்கும், முதிர்கருவிற்கும் வேண்டிய ஃபோலேட்-ஐ பெறுவதற்கு வெறும் 100 கிராம் அவகேடோ மட்டுமே போதுமானது. பெரும்பாலான டயட் பிளான்களில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுச் சத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவகேடோக்கள் பொருந்திப் போகின்றன. ஒரு முழு அவகேடோவில் சுமார் 240 கலோரிகள், 13 கிராம் கார்போஹைட்ரேட்கள், 3 கிராம் புரோட்டீன்கள், 22 கிராம் கொழுப்பு, மற்றும் சுமார் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. அவகேடோக்களில் கொலஸ்ட்ரால் இல்லை, இதனால் எடை மேலாண்மைக்கும் இது சரியானதொரு தேர்வாக அமைகிறது.

அவகேடோ ஆரோக்கியமான கொழுப்பினைக் கொண்டுள்ளது

ஒற்றை அபூரிதக் கொழுப்பு அல்லது ஆரோக்கியமான கொழுப்பு முதிர்கருவிற்கும், தாய்க்கும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு முழு அவகேடோவில் சுமார் 15 கிராம் ஒற்றை அபூரிதக் கொழுப்பு, 4 கிராம் பல்நிறைவுறா கொழுப்பு மற்றும் 3 கிராம் பூரிதக் கொழுப்பு ஆகியவை இருப்பதால் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து கிடைக்கப்பெறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. வயிற்றில் உள்ள முதிர்கருவிற்கு வெதுவெதுப்பை அளிப்பதற்கும், உடல் உருப்பெறுவதற்கும் கொழுப்புச் சத்து தேவைப்படுகிறது.

அவகேடோ இரத்த அழுத்த அளவுகள் சரியாக இருப்பதற்கு உதவுகிறது

தாய் மற்றும் முதிர்கருவின் ஆரோக்கியமானது, குறிப்பாக 3-ஆவது மும்மாதங்களின் முடிவில் உயர் இரத்த அழுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அவகேடோக்களில் உயர் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும் ஓலிக் அமிலம் உள்ளது. கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு அவகேடோ உண்பது உதவியாய் இருக்கும்.

அவகேடோக்களில் ஆற்றல் வாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளன

செல் வளர்ச்சியானது, இரத்தத்தில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்ஸின் எண்ணிக்கையை பெரிதும் சார்ந்துள்ளது. ஆன்டிஆக்சிடன்ட்ஸ் செல் சேதமடைவதை தடுக்கிறது, செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது மற்றும் சேதமடைந்த செல்லை புதுப்பிப்பதற்கும் உதவுகிறது. அவகேடோவில் லுட்டீன் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்திற்கும், மூளைநலத்திற்கும் உதவும் ஆற்றல் வாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். லுட்டீனை தவிர்த்து, ஸியாக்சாந்தின், பீட்டா-கரோட்டின், மற்றும் வைட்டமின் சி போன்றவையும் உள்ளன.

அவகேடோக்கள் வயிற்றை முழுமையாக நிரப்பும் உணவாகும்

அவகேடோக்களில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ள காரணத்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் உணவுண்ணும் நாட்டத்தை கட்டுப்படுத்தி, முழு திருப்தியளிப்பதற்கு இந்த கொழுப்புச் சத்து உதவி செய்கிறது. அவகேடோ உண்பது நிறைவான உணர்வினை அளிப்பதால், துரித உணவுகளுக்கு பதிலாக இதனை உண்ணலாம்.

அவகேடோ செரிமானத்திற்கு உதவுகிறது

கர்ப்ப காலத்தில் அவகேடோக்களை உண்பதால் உண்டாகும் முக்கியமான நன்மைகளுள் ஒன்று, அவை செரிமானத்திற்கு உதவுகிறது என்பது தான். அவற்றில் இயற்கையான நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலம் கழிக்கும் செயல்பாடுகளும், செரிமானமும் மிக எளிதாகி விடுகிறது.

அவகேடோ உண்பது மசக்கையை தணிப்பதற்கு உதவும்

கர்ப்ப காலத்தில் மசக்கையும், குமட்டலும் தொல்லை தருவனவாக இருக்கும். சில சமயங்களில், இது முதல் மும்மாதம் முடிந்த பின்னரும் கூட தொடர்கிறது. அவகேடோ குமட்டலை கட்டுப்படுத்துகிறது, மேலும் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் உங்களை சுறுசுறுப்பாகவும், நீர்ச்சத்துடனும் இருக்க உதவுகின்றன. உங்களின் நாளை அவகேடோவுடன் தொடங்கவும், பின்னர் அதனை சிறிய அளவுகளில் பிரித்துக் கொண்டு அவ்வப்போது சாப்பிடவும், இவ்வாறு செய்வது குமட்டல் அறிகுறிகள் ஏற்படாமல் இருப்பதற்கு உதவும்.

இரத்த சோகையை குணப்படுத்தும் திறன் வாய்ந்தது

தாய்மையின் போது இரும்புச் சத்து மிக முக்கியமாக தேவைப்படும் நுண்ணூட்டச் சத்தாகும். வளரும் முதிர்கருவிற்கும், தாய்க்கும் இரும்புச் சத்து கிடைக்கப் பெற வேண்டும். அவகேடோக்களில் இரும்புச் சத்து அபரிமிதமாக உள்ளது, இது தாய் மற்றும் முதிர்கருவின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவில் உள்ளது. அவகேடோ பக்க விளைவுகள் எதுவுமின்றி, இயற்கையாகவே இரும்புச் சத்து கிடைக்கப்பெறும் பழமாகும்.

காலில் தசை பிடிப்புகளை ஆற்றுவதற்கு அவகேடோ உதவுகிறது

கர்ப்ப காலத்தின் போது காலில் தசை பிடிப்பு ஏற்படுவது இயல்பானது. பொட்டாசியம் மற்றும் கால்சியம் குறைவான அளவுகளில் இருப்பது, காலில் தசை பிடிப்புகள் ஏற்படும் காரணங்களில் ஒன்றாக இருக்கக் கூடும். அவகேடோக்களில் பொட்டாசியம் உள்ளதால் கால் தசை பிடிப்புகள் ஏற்படும் பட்சத்தில், அதனை மட்டுப்படுத்தி நிவாரணமளிப்பதற்கு உதவுகிறது.

அவகேடோ முதிர்கருவின் மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது

அவகேடோக்களில் இரும்புச் சத்து மற்றும் கோலின் இருப்பதால், கர்ப்ப காலத்தில் அவகேடோ உண்பதால் ஏற்படும் நன்மைகளை மேலும் அதிகரிக்கின்றது. இது முதிர்கருவின் மூளை வளர்ச்சிக்கு முற்றிலும் பயனுள்ளதாக விளங்குகிறது.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?

கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது

அவகேடோக்களில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்து, சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துகிறது, இதனால் கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.

உங்கள் கர்ப்ப கால டயட்டில் அவகேடோவை சேர்ப்பதற்கான எளிய முறைகள்

கர்ப்ப காலத்தில் அவகேடோ உண்பதால் ஏற்படும் நன்மைகள் எண்ணிலடங்காதவை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இதனை எவ்வாறு தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது என்பது தான். அவகேடோவை சாலட்களில், டோஸ்டில் அல்லது சிறிதளவு உப்பு, மிளகு சேர்த்து நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம். தங்களின் டயட்டில் வழக்கமான துணை உணவாக அவகேடோவை எடுத்துக் கொள்வதன் மூலம், கர்ப்ப காலத்தில் அவகேடோவின் நன்மைகளை பெற முடியும்.

கர்ப்பிணி தாய்மார்களால் விரும்பப்படும் ஊட்டச்சத்து துணை

அவகேடோ போன்ற ஆரோக்கியமான உணவுகளுடன், கர்ப்ப காலத்தின் ஊட்டச்சத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்கள் உங்களுக்கு துணையாக இருக்கும்.

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2016 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

4441 Moms bought
₹499₹64923% Off
Rating
4.6
(1000)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.