This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தின் போது சம்பா கோதுமை எடுத்துக் கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் (10 Benefits of Dalia During Pregnancy In Tamil)

Diet & Nutrition
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 29, 2026
கர்ப்ப காலத்தின் போது சம்பா கோதுமை எடுத்துக் கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் (10 Benefits of Dalia During Pregnancy In Tamil)
Likes1 Likes|
Read time9 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • டாலியா அல்லது சம்பா கோதுமை உடைத்த கோதுமை ரவையிலிருந்து தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும், இதில் நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன.
  • கர்ப்ப காலத்தில் டாலியா இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, மலச்சிக்கலைப் போக்க, ஹீமோகுளோபினை மேம்படுத்த மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க உதவுகிறது.
  • சம்பா கோதுமை இரும்புச் சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்களால் செறிவூட்டப்பட்டுள்ளது, இது தாய்க்கு சுறுசுறுப்பு தருவதோடு கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் உதவுகிறது.
  • கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கு என்ன தேர்வு செய்யலாம்? Explore our MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes).
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Rating4.9
Compression Stocking Socks - S
Compression Stocking Socks - S
Rating4.5

நீங்கள் ஒரு அம்மாவாக ஆகிவிட்டீர்கள் என்று தெரிந்தவுடன் நீங்களும் உங்கள் ஆரோக்கியமும் தான் பிராதனமானதாக இருக்கும்! ஆம், நிச்சயமாக, நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுக்கத் தான் வேண்டும். ஏனென்றால், உங்களுக்குள் ஒரு குட்டி உயிர் வளர்கிறது. ஆரோக்கியமான சுகப் பிரசவம் நிகழ நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை எல்லாம் கவனிப்பது அவசியமாகும்.

சரியான மற்றும் சீரான உணவுமுறையைக் கடைப்பிடிப்பது உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவதை உறுதி செய்யும். அவ்வாறு கர்ப்ப காலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் உங்களுக்கு உதவும் ஒரு பிரபலமான உணவு தான் டாலியா அல்லது சம்பா கோதுமை ஆகும். கர்ப்ப காலத்தில் உங்களுக்கு ஏற்படக் கூடிய பல உடல்நலம் தொடர்பான சவால்களை சமாளிக்க இந்த உணவு உங்களுக்கு கண்டிப்பாக உதவும்.

சம்பா கோதுமை என்பது என்ன? (What Is Dalia In Tamil)

டாலியா என்பது உடைத்த கோதுமை ரவையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். இது பல நூற்றாண்டுகளாகவே நம்மால் உண்ணப்பட்டு வருகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளதால், இது ஊட்டச்சத்து மிக்கதாகும். இதன் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ் ஆனது எடை குறைப்பு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றதாகும். ஏனெனில், இது இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை பராமரிக்க குளுக்கோஸை வெளியேற்ற ஊக்குவிக்கிறது. மேலும் இது பெருங்குடலை சுத்தப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆகையால், எடை குறைப்பு மற்றும் மலச்சிக்கல் குறித்து உங்களுக்கு எந்த கவலையும் இருக்காது. பாலில் இதனை சேர்த்து உண்டால் அது தசை வளர்ச்சியை அதிகரித்து கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்கும்.

இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நன்மைகள் தருகிறது. மொத்தத்தில், இது ஒரு சிறந்த உணவு என்பதால் அதை தினசரி உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றுவது அவசியமும் கூட.

சம்பா கோதுமையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrient Value In Dalia In Tamil)

நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க முயற்சிக்கும்போது, ​​நீங்கள் உட்கொள்ளும் உணவில் எத்தனை கலோரிகள் மற்றும் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பதைக் கண்காணிப்பது வழக்கம். டாலியாவில் எத்தனை கலோரிகள் மற்றும் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பதைக் அறிவோம்.

  • ஊட்டச்சத்து மதிப்பு/100கிராம்

  • எனர்ஜி - 152 கிலோ கலோரி

  • கொழுப்பு - 3.41கிராம்

  • நிறைவுற்ற கொழுப்புகள் - 1.615கிராம்

  • மாறுபக்க கொழுப்புகள் - 0கிராம்

  • ஒற்றை நிறைவுறா கொழுப்புகள் - 0.893கிராம்

  • பன்மை நிறைவுறா கொழுப்புகள் - 0.478கிராம்

  • கார்போஹைட்ரேட்டுகள் - 27.7கிராம்

  • சர்க்கரை - 0.97கிராம்

  • நார்ச்சத்து - 1.4கிராம்

  • புரதச்சத்து - 5.03கிராம்

  • சோடியம் - 143மில்லிகிராம்

  • கொலஸ்ட்ரால் - 6மில்லிகிராம்

  • பொட்டாசியம் - 193மில்லிகிராம்

கர்ப்ப காலத்தில் சம்பா கோதுமை உட்கொள்வதன் மூலம் கிடைக்கும் 10 நன்மைகள் (10 Benefits Of Dalia During Pregnancy In Tamil)

பொதுவாக நம் பெரியவர்கள் நம்மிடம் சம்பா கோதுமை எவ்வளவு நன்மை பயக்கும் என்பதைப் பற்றிசொன்னதைத் தவிர, கர்ப்ப காலத்தில் டாலியா எப்படி உதவியாக இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்:

  • கர்ப்ப காலத்தில் எடை அதிகரிக்க உதவுகிறது (Helps In Weight Gain During Pregnancy)

கர்ப்பமாக இருப்பது என்பது ஆரோக்கியமாக இருப்பதாகும். அதாவது உங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியும் கைகோர்த்து இருப்பதை உறுதி செய்வதாகும். ஆம், கர்ப்பமாக இருப்பது என்பது தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதோ அல்லது தேவையற்ற எடையை அதிகரிப்பதோ அல்ல. இருப்பினும், சில பெண்கள் கொஞ்சம் கூட எடையை அதிகரிக்காமல் அதை நினைத்து மிகவும் மனவேதனை அடைவார்கள். அவ்வாறு நடவாமல் இருக்க, கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் டாலியாவை தினசரி எடுத்துக் கொண்டால், அது அவளின் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக இருக்கும். இது ஸ்வீட் டாலியா, மிக்ஸ்ட் வெஜ் டாலியா என பல வகைகளில் உட்கொள்ளப்பட்டாலும், பாலுடன் வேகவைத்து சாப்பிடுவது ஆரோக்கியமானது மற்றும் இது உடல் எடையை அதிகரிக்க உதவும்!

  • கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் (Keeps Pregnancy Diabetes In Check)

நீரிழிவு நோயாளிகள் டாலியாவின் குணப்படுத்தும் பண்புகளால் பயனடைவார்கள். ஏனெனில், இதில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும் கிளைசெமிக் குறியீடு குறைவாகவும் இருக்கும். குறைவான கிளைசெமிக் குறியீடு காரணமாக உணவை ஜீரணிக்க நீண்ட நேரம் ஆவதால், இது இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை படிப்படியாக வெளியிட உதவுகிறது. எனவே, டாலியாவை உட்கொள்வது ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உங்களுக்கு உதவும். குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பமாகவுள்ள பெண் இதனை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிட்டும். கர்ப்ப காலத்தில் டாலியா உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே, சர்க்கரை நோய்க்காக நீங்கள் தேவையற்ற மருந்துகள் மற்றும் சிகிச்சை எடுக்கத் தேவையில்லை.

  • வைட்டமின்கள் நிறைந்தது (Packed With Vitamin)

கர்ப்ப காலத்தில் உங்கள் வாய்க்கு சில சமயம் சராசரி உணவு, துரித உணவு, நொறுக்குத்தீனி அல்லது பழங்கள் மற்றும் காய்கறிகள் என எந்த உணவையும் உங்களுக்கு சாப்பிட பிடிக்காது. இந்த நேரத்தில், டாலியா உங்களுக்கு கைக்கொடுக்கும். டாலியா கோதுமையால் ஆனது. கோதுமை தானியத்தின் ஒவ்வொரு பகுதியும் வைட்டமின்களால் நிரம்பியுள்ளது. இது உங்கள் உடலுக்கு தேவையான மற்றும் இல்லாத அனைத்து வைட்டமின்களையும் பெற உதவுகிறது.

  • உங்கள் ஹீமோகுளோபினை மேம்படுத்த உதவுகிறது (Helps In Improving Your Hemoglobin)

கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையானது வேகமாக குறைவதற்கும் அதிகரிப்பதற்கும் எல்லா வாய்ப்புகளும் உள்ளது. கர்ப்ப காலத்தில் டாலியா உணவை உட்கொள்வது உங்கள் ஹீமோகுளோபினை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதாவது கர்ப்ப காலத்தில் உங்கள் ஹீமோகுளோபின் 12 ஆக இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை அடைய டாலியா உங்களுக்கு உதவும்.!

  • மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது (Helps In Getting Rid Of Constipation)

சம்பா கோதுமை அல்லது டாலியா என்பது வெறும் கோதுமையும் உமியும் தான். இதில் உமி இருப்பதால், இந்த உணவில் இயற்கையாகவே நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, இது குடல்களை ஆரோக்கியமாக வைப்பதோடு மலச்சிக்கலின்றி இருக்கவும் உதவுகிறது. அதிகபட்ச நன்மைக்காக, பால் அல்லது காய்கறிகளுடன் தினசரி உங்கள் உணவில் சம்பா கோதுமை இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் மிகவும் சங்கடமான உணர்வை ஏற்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி கர்ப்ப காலத்தில் சம்பா கோதுமையை உட்கொள்வது தான். அதனை காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

  • சமைப்பதற்கும் எளிதானது (Easy To Cook)

இதன் சிறந்த அம்சம் என்னவென்றால், சமைப்பது மிகவும் எளிதானது. அதோடு இதனை சமைக்க மற்ற உணவுகளை விட மிகக் குறைவான நேரமே எடுக்கும். கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் மற்றும் சோம்பல் இன்றியமையாதது. அவ்வாறு நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பின்றி சோர்வாக இருப்பதால் சில சமயம் சத்தான மற்றும் எளிதான ஒன்றை சமைக்கலாம் என்று எண்ணலாம். டாலியா இது போன்ற நேரங்களில் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்!

  • கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது (Maintains Cholesterol Level)

எந்த ஒரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் தங்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள். கர்ப்ப காலத்தில் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருப்பது கண்டறியப்பட்டால், அதை நிர்வகிப்பது உங்களுக்கு சற்று சவாலானதாக இருக்கும். அதுவும் குறிப்பாக உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் இல்லை என்றால் மிகவும் சிரமம். டாலியாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் அசுத்தங்களை அகற்ற உதவுகிறது.

எல்டிஎல்-ஐ (கெட்ட கொழுப்பு) குறைத்து ஹெச்டிஎல்-ஐ (நல்ல கொழுப்பு) அதிகரிப்பதன் மூலம், இது கொலஸ்ட்ரால் அளவை (நல்ல கொழுப்பு அளவு) சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆதலால், கர்ப்ப காலத்தில் டாலியா இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாக அமைகிறது.

  • கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது (Helps In The Growth Of Your Child)

ஒரு பெண் கருத்தரித்த உடனேயே, அவள் மனதில் அனுதினமும் பிரதானமாகக் கருதுவது அவளுடைய பிறக்காத குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி தான். கர்ப்ப காலத்தில் டாலியாவை (சம்பா கோதுமையை) உட்கொள்வது தாய்க்கு மட்டுமல்ல, வயிற்றில் உள்ள குழந்தைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த உணவை உங்களின் சிறந்த தோழியாக்குவது, உங்கள் பிறக்காத குழந்தையின் எலும்பு ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பயனளிக்கும். உங்கள் குழந்தைக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் டாலியா மூலம் கிடைக்கும். உங்கள் வழக்கமான உணவில் டாலியாவை எடுத்துக் கொள்வதற்கு இதுவே போதுமான காரணம் ஆகும்.

  • கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது (Helps You In Staying Active During Pregnancy)

டாலியா இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியத்தால் செறிவூட்டப்பட்டுள்ளது - கர்ப்ப காலத்தில் உங்களுக்கு அதிகபட்சமாக தேவைப்படும் 2 விஷயங்கள் இவை இரண்டேயாகும். கருவுற்றிருக்கும் கடைசி மூன்று மாதங்களில் நீங்கள் சோம்பலாகவும் பலம் குறைந்தும் உணர வாய்ப்பு உள்ளது. நீங்கள் டாலியாவை உட்கொள்ளும்போது, ​​அதிகபட்ச மெக்னீசியம் கிடைக்கும். ஆதலால், உற்சாகம் பெருகி உங்களுக்கு சோர்வு இருக்காது. உண்மையில், கர்ப்ப காலத்தில் டாலியா ஒரு வரப் பிரசாதம் என்றும் சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே! - பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் இம்பேலன்ஸ் என்றால் என்ன? இதை எப்படி குணப்படுத்தலாம்?

  • தாய்பாலூட்டுவதில் உதவுகிறது (Helps In Lactation)

தாய்ப்பால் கொடுப்பது பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய ஒரு விஷயமாகும். அது உண்மையில் அவர்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு ஆசீர்வாதம். டாலியாவின் சிறந்த நன்மைகளில் ஒன்று, இது உங்கள் குழந்தைக்கு பால் சுரக்க உதவும். அதோடு இதனை உட்கொள்வதால் உருவாகும் பால் சிறந்த தரம் வாய்ந்தது மற்றும் இது உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மேலும், இந்த பால் உங்கள் குழந்தைக்கும் எளிதில் ஜீரணமாகும். இது உங்கள் குழந்தைக்கு பேதி அல்லது மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கும். எனவே, உங்கள் கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் நீங்கள் தவறாமல் சம்பா கோதுமை உணவை உட்கொண்டால், அது பால் உற்பத்தியை அதிகரிக்கும். மொத்தத்தில், இதன் மூலம் நீங்களும் உங்கள் குழந்தையும் இதன் மூலம் அதிகம் பயனடையலாம்.

TAGS :

dalia during pregnancy in tamil, uses of dalia during preganancy in tamil, side effects of dalia during pregnancy in tamil, 10 Benefits of Dalia in Pregnancy In English, 10 Benefits of Dalia in Pregnancy In Telugu, 10 Benefits of Dalia in Pregnancy In Bengali

எதிர்பார்ப்பில் இருக்கும் அன்னையரால் நம்பப்படும் ஊட்டச்சத்து தேர்வுகள்

உங்களுக்கும் வளரும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை நிரப்ப, கர்ப்ப காலத்திற்கு ஏற்ற பாதுகாப்பான மற்றும் சத்தான தயாரிப்புகள் உங்களுக்கு துணை நிற்கும்.

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

3780 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(89)
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2006 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress

531 Moms bought
₹917₹129829% Off
Rating
4.9
(50)
Compression Stocking Socks - S

Compression Stocking Socks - S

Compression Stockings for Varicose Veins | Reduces Swelling | Boosts Blood Circulation

460 Moms bought
₹364₹59939% Off
Rating
4.5
(31)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.