This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் ( Tomato During Pregnancy: Benefits & Risks In Tamil)

Pregnancy Journey
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
கர்ப்ப காலத்தில் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் ( Tomato During Pregnancy: Benefits & Risks In Tamil)
Read time7 min

கர்ப்ப காலத்தில் தக்காளி சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்குமா? (Is it safe to consume tomatoes during pregnancy In Tamil)

கர்ப்ப காலத்தில் தக்காளி சாப்பிடுவது பாதுகாப்பானது தான். ஆனால், மிதமான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் வைட்டமின்கள் ஏ, சி, ஃபோலேட், லைகோபீன் மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றினால் கர்ப்பிணிப் பெண் மட்டுமல்ல வயிற்றில் இருக்கும் குழந்தையும் பயனடையும். வைட்டமின் சி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான இரும்புச் சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. கர்ப்பமாக இருக்கும் போது இரும்புச் சத்துக்களை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர் பரிந்துரைத்தால், தக்காளி சிறந்ததாக இருக்கும், ஏனென்றால் இது இரும்புச் சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்தும்.

தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு (Tomato's nutritional value In Tamil)

தக்காளியின் ஊட்டச்சத்து மதிப்பு

ஒரு நடுத்தர அளவு தக்காளியில் 22 கலோரிகள் மற்றும் 5 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் (3 கிராம் சர்க்கரை மற்றும் 1.5 கிராம் நார்ச்சத்து) உள்ளது. இதில் குறைந்த அளவு கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் இருந்தபோதிலும், தக்காளி பல ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

100 கிராம் பச்சை தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் பட்டியல் பின்வருமாறு:

  • கலோரிகள்: 18.

  • நீர்: 95%.

  • புரதம்: 0.9 கிராம்.

  • கார்போஹைட்ரேட்டுகள்: 3.9 கிராம்.

  • சர்க்கரை: 2.6 கிராம்.

  • நார்ச்சத்து: 1.2 கிராம்.

  • கொழுப்பு: 0.2 கிராம்.

கர்ப்ப காலத்தில் தக்காளியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of tomatoes during pregnancy In Tamil)

கர்ப்ப காலத்தில் தக்காளியை சாப்பிடுவது பல நன்மைகளை அளிப்பதுடன் உணவுக்கு கூடுதலான சுவையைச் சேர்க்கிறது.

வைட்டமின் ஏ மற்றும் சி ( Vitamins A and C)

ஒரு நடுத்தர அளவிலான தக்காளியில் தினமும் நமக்கு தேவைப்படும் அளவில் வைட்டமின் சி சுமார் 40% மற்றும் வைட்டமின் ஏ 20% இருக்கும்.

கலோரிகள் (Calories)

கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் எடையைச் சுமக்க வேண்டியிருப்பதால் அடிக்கடி சோர்வடையந்து விடுவார்கள். இது கர்ப்பத்தின் போது இருக்கும் ஒரு பொதுவான அறிகுறியாகும். தக்காளியில் இருக்கும் கணிசமான கலோரி உள்ளடக்கமானது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் அத்தகைய சோர்வைப் போக்குவதற்கும் போதுமானதாக இருக்கும்.

நார்ச்சத்து (Fibre)

தக்காளியில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது செரிமான ஆரோக்கியத்திற்கு சிறந்தது. நார்ச்சத்தானது மலத்தின் அளவை அதிகரிக்கிறது, செரிமானத்தின் போது தசை சுருக்கங்களை மென்மையாக ஊக்குவிக்கிறது (பெரிஸ்டால்சிஸ்), மற்றும் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறது.

பொட்டாசியம் (Potassium)

ப்ரீக்ளாம்ப்சியா, அல்லது உயர் இரத்த அழுத்தம், கர்ப்ப காலத்தில் அடிக்கடி ஏற்படும்; இருந்தாலும், கர்ப்ப காலத்தில் தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவதால் இந்த ஆபத்து ஏற்படுவது குறைந்து காணப்படுகிறது. பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இருதய அழுத்தத்தை எளிதாக்குகிறது.

ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants)

தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படுகிறது.

ஃபோலிக் அமிலம் (Folic acid)

தினமும் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு ஃபோலிக் அமிலத்தை உட்கொள்வதற்கு தக்காளி ஒரு சிறந்த வழியாகும். நரம்புக் குழாய் மற்றும் பிற பிறப்பு அசாதாரணங்களைத் தடுப்பதற்கு ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியம்.

வைட்டமின் ஈ (Vitamin E)

தக்காளிச் சாற்றில் வைட்டமின் ஈ இருப்பதால், வெயிலினால் ஏற்படும் எரிச்சலில் இருந்து பாதுகாப்பதற்கு, தக்காளிச் சாற்றை மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் தக்காளியை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து (Risks of tomatoes in pregnancy In Tamil)

கர்ப்ப காலத்தில் அதிக அளவு தக்காளியை சாப்பிட்டால், மற்ற உணவுப் பொருட்களைப் போலவே இதுவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் தக்காளியை சாப்பிடுவதில் பல நன்மைகள் இருந்தாலும், அதிகமாக தக்காளியைச் சாப்பிடுவதால் அது பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தும்:

  • தக்காளி அமிலத்தன்மை கொண்டது, இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

  • முறையற்ற செரிமானம், வயிற்று வலி மற்றும் வாயு பிடிப்பு.

  • கர்ப்பிணிப் பெண் மற்றும் வளரும் குழந்தையில் நிற மாற்றங்கள் ஏற்படும்.

தக்காளியை நான் எப்படி தேர்ந்தெடுப்பது & ஸ்டோர் செய்வது? (How should I pick & store tomatoes In Tamil)

  • தக்காளியை எப்படி தேர்ந்தெடுப்பது

  • கறைகள் அல்லது கரும்புள்ளிகள் இருக்கும் தக்காளியைத் தவிர்க்கவும்.

  • தக்காளி அதன் அளவுக்கு ஏற்றவாறு கனமாக, நல்ல எடையுடன் இருக்க வேண்டும்.

  • தக்காளி உறுதியாக அதே சமயத்தில் சாஃப்ட் ஆக இருக்க வேண்டும்.

  • தண்டு இருந்த இடத்தில் முகர்ந்து பார்த்தால், ஃப்ரெஷ் ஆன வாசனை வர வேண்டும்.

தக்காளியை எப்படி ஸ்டோர் செய்வது (How to store a tomato In Tamil)

  • தக்காளியை குளிர்சாதன பெட்டியில் ஸ்டோர் செய்யக் கூடாது.

  • தக்காளியின் தண்டுப் பகுதி கீழே இருக்கும்படி தட்டையாக இருக்கும் மேற்பரப்பில் வைத்து இதனை ஸ்டோர் செய்யவும்.

கர்ப்ப காலத்தில் உங்களுடைய உணவில் தக்காளியைச் சேர்த்துக் கொள்ளுதல் (Including tomatoes in your diet during pregnancy In Tamil)

உணவில் தக்காளியைச் சேர்ப்பது, தனித்துவமான சுவையை வழங்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும். உங்கள் தினசரி உணவில் தக்காளியின் சுவை மற்றும் ஊட்டச்சத்தை எவ்வாறு சேர்ப்பது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • கர்ப்ப காலத்தில் தக்காளியை பச்சையாக சாப்பிடுவது நல்ல வழி, பச்சை தக்காளி சாலட்டிற்கு நல்ல சுவையைச் சேர்க்கிறது.

  • தக்காளி தான் பல குழம்புகளுக்கு முதுகெலும்பாக உள்ளது.

  • ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னுடைய எடையைச் சரியாக பராமரிக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு கர்ப்ப காலத்தில் தக்காளி சூப் சாப்பிடுவது ஒரு சிறந்த வழியாகும்.

  • தக்காளி ஜூஸ் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும், இதை சிற்றுண்டியாகவோ அல்லது காலை உணவாகவோ சாப்பிடலாம்.

  • சாண்ட்விச்சில் பொடியாக தக்காளியை நறுக்கிப் போட்டால் அதன் சுவை அசத்தலாக இருக்கும்.

  • பல பாரம்பரிய உணவு வகைகளில் வெயிலில் காய வைக்கப்பட்ட அல்லது வதங்கிய தக்காளி சேர்க்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் தக்காளி ஜூஸ் பாதுகாப்பானதாக இருக்குமா? (Is tomato juice safe during pregnancy In Tamil)

தக்காளி ஜூஸில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது; எனவே, குழந்தையை எதிர்பார்க்கும் தாய்மார்கள் இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது. இதைச் செய்வதன் மூலம் உயிர்ச்சக்தி அதிகரிக்கிறது. அதோடு, சோர்வு மற்றும் பலவீனம் குறைகிறது. கூடுதலாக, இது இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் இரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் பதப்படுத்தப்பட்ட (கேனில் ஸ்டோர் செய்யப்பட்ட) தக்காளியை சாப்பிடுவது சரியா? (Is it okay to consume canned tomatoes during pregnancy In Tamil)

பதப்படுத்தப்பட்ட தக்காளி பாக்டீரியா வளர்ச்சியினால் எளிதில் பாதிக்கப்படுவதால் இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இது போட்யூலிசம் மற்றும் பிற நோய்களுக்கு வழிவகுக்கும். தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நொதிகளானது பதப்படுத்துதல் செயல்பாட்டின் போது அழிக்கப்படுகின்றன. நுண்ணுயிரிகள் அதிக வெப்பநிலையில் கொல்லப்படுகிறது. பிசுபீனால் ஏ (பிபிஏ/BPA) என்ற இரசாயனமானது, ஸ்டோர் செய்ய பயன்படுத்தும் டின் லைனிங்கில் காணப்படும் அபாயகரமான இரசாயனமாகும், இது தாய் மற்றும் கரு இருவருக்கும் தீங்கு விளைவிக்கும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் பன்னீர் நல்லதா? இதன் நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கர்ப்பமாக இருக்கும் போது தக்காளி கெட்ச்அப் அல்லது சாஸ் சாப்பிடுவது சரியா? (Is it okay to consume tomato ketchup or sauce when pregnant In Tamil)

கர்ப்பமாக இருக்கும் போது சிறிய அளவில் தக்காளி கெட்ச்அப் மற்றும் சாஸ் சாப்பிடுவது நல்லது. தக்காளி கெட்ச்அப் மற்றும் சாஸில் மோனோசோடியம் குளுட்டமேட் (எம்எஸ்ஜி/MSG) அதிகமாக இருப்பதைப் பற்றிய கவலை இருந்தது. இருந்தாலும், சமீபத்தில், பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது (ஜிஆர்ஏஎஸ்/GRAS) என்பதன் காரணமாக, வணிக ரீதியாக பேக் செய்யப்பட்ட தக்காளி சாஸ் மற்றும் கெட்ச்அப் ஆகியவற்றை உட்கொள்வது சரியானது.

TAGS :

Tomato during pregnancy in tamil, uses of tomato during pregnancy in tamil, Tomato During Pregnancy: Benefits & Risks In English, Tomato During Pregnancy: Benefits & Risks In Hindi, Tomato During Pregnancy: Benefits & Risks In Telugu, Tomato During Pregnancy: Benefits & Risks In bengali

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.