This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் சோயாபீன்சின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் டிப்ஸ் | Soybean in Pregnancy: Benefits, Risks, and Tips in Bengali

Diet & Nutrition
Written by - Dhanalakshmi Pillaiகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 28, 2026
கர்ப்ப காலத்தில் சோயாபீன்சின்  நன்மைகள், அபாயங்கள் மற்றும் டிப்ஸ் | Soybean in Pregnancy: Benefits, Risks, and Tips in Bengali
Likes2 Likes|
Read time7 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • சோயாபீன்ஸ் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட முழுமையான புரத மூலமாகும். கர்ப்ப காலத்தில் மிதமான அளவில் சாப்பிடுவது தாய் மற்றும் குழந்தைக்கு பாதுகாப்பானது.
  • சோயாபீன்ஸில் உள்ள ஒமேகா-3, ஃபோலேட், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி, பிறப்பு குறைபாடுகளை தடுத்தல் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன.
  • அதிக அளவு சோயாபீன்ஸ் சாப்பிடுவது ஐசோஃபிளேவோன்கள், பைடிக் அமிலம் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
  • கர்ப்ப கால ஊட்டச்சத்துக்கு என்ன தேர்வு செய்யலாம்? Explore our MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes).
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7

சோயாபீன்ஸ் என்பது மேற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு உண்ணக்கூடிய பருப்பு வகையாகும். இதிலுள்ள அதிகப்படியான புரதச்சத்து காரணமாக, பெரும்பாலும் சைவ பிரியர்களால் இது இறைச்சிக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இருப்பதால், இது ஒரு முழுமையான புரதம். சோயாபீன்ஸ் பல அமைப்புகளில் கிடைக்கிறது மற்றும் இதில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்டுகள் உள்ளன. இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸ் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா?

கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பானதா? (Is it safe to eat soybeans in pregnancy in Tamil)

ஆம், அளவாக எடுத்துக்கொள்ளும்போது கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. சோயாபீன்ஸ் பல வடிவங்களில் கிடைக்கிறது. அவற்றில் சோயா சங்ஸ் உட்பட, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான நன்மைகள் மற்றும் தீமைகள் காணப்படுகின்றன. சோயா சங்ஸ் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லதா? கர்ப்ப காலத்தில் சோயா சங்ஸ் புரதத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது. ஆனால், இதில் அதிக அளவு ஐசோஃபிளேவோன்ஸ் உள்ளது. இது ஈஸ்ட்ரோஜன் அளவுகளை அதிகரிக்க உதவும். எனவே, கர்ப்ப காலத்தில் அதிக அளவில் சோயா சங்ஸ் சாப்பிடுவது நல்லதல்ல. டோஃபு சங்ஸை விட அதிக அளவு ஆன்டிஆக்சிடன்டுகளைக் கொண்டுள்ளது. ஆனால், அதிக அளவு டோஃபு சாப்பிடுவது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். சோய் மில்கில் டோஃபு விட குறைந்த கலோரிகள் உள்ளன. ஆனால், அதிக அளவில் சோயா பால் குடிப்பது செரிமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் நன்றாக சமைக்கப்பட்ட சோயாபீன்ஸை மிதமான அளவில் சாப்பிடுவது பாதுகாப்பானது.

சோயாபீன்ஸின் ஊட்டச்சத்து மதிப்பு (Soybeans nutritional value in Tamil)

சோயாபீன்ஸில் உள்ள முக்கிய கூறு புரதம் ஆகும். இதில் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம். 100 கிராம் வேக வைத்த சோயாபீன்ஸில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது:

  • இதன் முக்கிய கூறான புரதம் 18.2 கிராம் உள்ளது. உலர்ந்த எடையில் காணப்படும் புரத அளவு 36 முதல் 56% ஆகும்.

  • 8.4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே, சர்க்கரை அளவு கடுமையாக அதிகரித்து விடுமோ என்ற பயம் தேவையில்லை.

  • 9 கிராம் கொழுப்பு காணப்படுகிறது. இது 1.3 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 1.98 கிராம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் 5.06 கிராம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு என பிரிக்கலாம். லினோலிக் அமிலம் சோயாபீன்ஸ்களில் காணப்படும் முக்கிய கொழுப்பு ஆகும்.

  • 6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன.

  • 3 கிராம் சர்க்கரை உள்ளது.

  • இது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். அரை கப் சோயாபீன்ஸில் 510 மில்லிகிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது.

  • மேற்கூறிய ஊட்டச்சத்துக்களைத் தவிர, இதில் மாங்கனீஸ், தாமிரம், ஃபோலேட், தியாமின், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே1 போன்ற பல்வேறு வகையான கனிமங்களும் உள்ளன.
    100 கிராம் சோயாபீன்ஸில் 172 கலோரிகள் உள்ளன.

கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸ் சாப்பிடுவதன் நன்மைகள் (Benefits of soybean in pregnancy in Tamil)

கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸ் சாப்பிடுவது ஏராளமான நன்மைகளை வழங்கும்.

  • இது புரதத்தின் சிறந்த மூலம் என்பதால், மூளை உட்பட குழந்தையின் உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. அது மட்டும் இல்லாமல், இது குழந்தைக்கு தேவையான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்கிறது.

  • ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை மற்றும் விழித்திரையின் கட்டுமானத் தொகுதிகளாக செயல்படுவதால் அவை முக்கியமானதாக கருதப்படுகின்றன. மேலும் இது கருவுறுதல் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தையும் தடுக்க உதவுகிறது.

  • நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.

  • சோயாபீன்ஸ்களில் உள்ள தாதுக்கள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது மற்றும் கருவுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.

  • கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றல் அளவை அதிகரிக்கின்றன.

  • ஃபோலேட் மற்றும் துத்தநாகம் குழந்தையில் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் அபாயங்கள் (Risks of soybean during pregnancy in Tamil)

1. ஐசோஃபிளேவோன்கள் (Isoflavones)

சோயாபீன்ஸில் காணப்படும் ஐசோஃபிளேவோன்கள் பைட்டோஈஸ்ட்ரோஜன்களாக உள்ளன. இவை மனித ஈஸ்ட்ரோஜன்களைப் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன. கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸை அதிக அளவில் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

2. பைடிக் அமிலம் (Phytic acid)

இதில் பைடிக் அமிலமும் உள்ளது. இது ஆபத்தான உலோகங்களான காரீயம் மற்றும் பாதரசத்தின் உறிஞ்சுதலை தடுப்பதால் இது மிகவும் நல்லது. ஆனால், இது மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களின் உறிஞ்சுதலையும் தடுக்கிறது. இவை கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானவை .

3. பூச்சிக்கொல்லிகள் (Pesticides)

சோயாபீன்ஸில் காணப்படும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். இது கர்ப்ப காலத்திற்கு உகந்தது அல்ல. ஆகவே, சமைப்பதற்கு முன் அவற்றை நன்கு கழுவ வேண்டும்.

4. ஈஸ்ட்ரோஜன் (Estrogen)

சோயாபீன்ஸ் உங்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவுகளை அதிகரிக்கும் என்பதால், அது புற்றுநோய், குறிப்பாக மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

கர்ப்ப காலத்தில் அதிக அளவு சோயா சங்ஸ் சாப்பிடுவது ஆபத்தானதா? (Is it Harmful to Consume too many Soya Chunks During Pregnancy in Tamil)

  • கர்ப்ப காலத்தில் சோயா சங்ஸ் சாப்பிடுவது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் இன்னும் நிறைவடையவில்லை. ஒரு சில ஆய்வுகள் விலங்குகள் மற்றும் எலிகள் மீது நடத்தப்பட்டன. எனினும், அந்த ஆய்வுகளுக்கான அறிக்கைகள் இதோ உங்களுக்காக.

  • 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, சோயாவில் காணப்படும் பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் குழந்தையின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும் என்ற எச்சரிக்கையை விடுத்தது.

  • 2013 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சோயா பீன்ஸ் அதிக அளவில் உட்கொள்வது குழந்தைகளில் ஹைப்போஸ்பாடியாஸ் என்ற சிறுநீரக நோயை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு எலிகளில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், சோயா பீன்ஸை அதிகமாக சாப்பிடுவது குழந்தையின், குறிப்பாக பெண் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு அமைப்பினை பாதிக்கும் என்று கூறுகிறது. ஆகவே, கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸை அதிக அளவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் கீரையின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்

கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு சோயாபீன்ஸ் உட்கொள்ளலாம்? (How much soy should a pregnant woman consume in Tamil)

கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு சோயாபீன்ஸ் உட்கொள்ள வேண்டும் என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ வரம்புகளும் இல்லை. எனினும், கர்ப்ப காலத்தில் ஒரு கப் சோயா பால் அல்லது அரை கப் டோஃபு அல்லது அரை கப் சோயா சங்ஸ் அல்லது அரை கப் முழு சோயாபீன்ஸ் உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக சாப்பிடுவது, மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, கர்ப்ப காலத்தில் எவ்வளவு சோயாபீன்ஸ் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

References

1. Pang X, Cai C, Dong H, Lan X, Zhang Y, Bai D, Hao L, Sun H, Li F, Zeng G. (2022). Soy foods and nuts consumption during early pregnancy are associated with decreased risk of gestational diabetes mellitus: a prospective cohort study. J Matern Fetal Neonatal Med.

2. Miyake Y, Tanaka K, Okubo H, Sasaki S, Tokinobu A, Arakawa M. (2021). Maternal consumption of soy and isoflavones during pregnancy and risk of childhood behavioural problems: the Kyushu Okinawa Maternal and Child Health Study. Int J Food Sci Nutr.

Tags

What is soybean in Tamil, Soybean in pregnancy in Tamil, Is it safe to eat soybean in preganancy in Tamil, Benefits of eating soybean in pregnancy in Tamil, What are the risk of eating soybean in pregnancy in Tamil, Soybean in Pregnancy in English, Soybean in Pregnancy in Hindi, Soybean in Pregnancy in Telugu, ⁠Soybean in Pregnancy in Bengali

கர்ப்பிணி அன்னையரால் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்படுபவை

உங்கள் கர்ப்ப கால ஊட்டச்சத்து தேவைகளை சமநிலையாக பூர்த்தி செய்ய, பாதுகாப்பான மற்றும் சத்தான தேர்வுகள் உங்களுக்கு உதவும்.

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

4340 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(91)
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2016 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.