hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Illnesses & Infections arrow
  • கர்ப்ப காலத்தில் மலேரியாவுக்கான சிகிச்சை | Malaria in Pregnancy: Causes, Effects & Treatment in Tamil arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் மலேரியாவுக்கான சிகிச்சை |  Malaria in Pregnancy: Causes, Effects & Treatment in Tamil

    Illnesses & Infections

    கர்ப்ப காலத்தில் மலேரியாவுக்கான சிகிச்சை | Malaria in Pregnancy: Causes, Effects & Treatment in Tamil

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    மலேரியா என்பது கொசுக்கள் மூலமாக பரவக் கூடிய ஒட்டுண்ணி வகை நோயாகும். உலகெங்கிலும் மாபெரும் சுகாதார சீர்கேடாக இது பார்க்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இது அமையும். கர்ப்ப காலத்தில் கடுமையான விளைவுகளை மலேரியா ஏற்படுத்தும் மற்றும் இறப்பு கூட நேரிடலாம்.

    ஆண்டுதோறும் 125 மில்லியனுக்கும் அதிகமான கர்ப்பிணி பெண்களுக்கு மலேரியா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மலேரியா காரணமாக ரத்தச்சோகை, குறைப்பிரசவம், குறைவான எடையுடன் குழந்தை பிறப்பு மற்றும் சிசு இறப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக, தாய்மார்களுக்கு இது கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். சிலருக்கு வலிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.

    கர்ப்ப காலத்தில் மலேரியா பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம், அதன் விளைவுகள் மற்றும் சிகிச்சை முறை ஆகியவை குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலேரியா என்றால் என்ன? (What is malaria in pregnancy in Tamil)

    கர்ப்பகால மலேரியா என்பது கர்ப்ப காலத்தின்போது ஏற்படக் கூடிய மலேரியா தொற்று ஆகும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகப் பெரிய அளவிலான நோய்கள் ஏற்படுத்தும் அபாயத்தை மலேரியா உண்டாக்கும். சாதாரண நபர்களைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகமாகும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலேரியா காரணமாக ஆண்டுதோறும் 200,000 குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

    பெண் ஆனோபெலெஸ் கொசு மூலமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியை இந்த கொசு சுமந்து செல்கிறது. தாய்மார்களுக்கும், வயிற்றில் வளரக் கூடிய குழந்தைக்கு மிகக் கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதாக இது இருக்கிறது.

    கர்ப்ப காலத்தின்போது மலேரியாவை கண்டறிவது எப்படி? (How to diagnose malaria in pregnancy in Tamil)

    மலேரியாவை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

    தீவிரத்தன்மை கொண்டது மற்றும் ஆபத்தற்றது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலேரியாவை கண்டறிய ரத்தப் பரிசோதனை அவசியமாகும். தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக சிகிச்சையை தொடங்க வேண்டும்.

    ஆபத்தில்லா மலேரியாவை ரத்தப் பரிசோதனை மற்றும் நோயாளியை நேரடியாக பரிசோதிப்பதன் மூலமாக உறுதி செய்யலாம். ஒட்டுண்ணிகளின் இருப்பை ரத்த பரிசோதனை மூலமாக கண்டறியலாம். தாய்மார்களின் மருத்துவ பின்னணி மற்றும் உடல் பரிசோதனை ஆகியவற்றின் மூலமாக தொற்று பாதிப்புக்கான காரணத்தை கண்டறியலாம்.

    அதேபோல, தீவிரத்தன்மை கொண்ட மலேரியாவை உறுதி செய்யவும் ரத்தப் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை அவசியமானதாகும். தீவிரத்தன்மை கொண்ட மலேரியா ஏற்படுவதற்கான காரணம் பி ஃபால்சிபாரம் தொற்று ஆகும். இது உயிரிழப்பை ஏற்படுத்தலாம். காய்ச்சல், நடுக்கம், தலைவலி மற்றும் உடல் பலவீனம் ஆகியவை தீவிரத்தன்மை கொண்ட மலேரியாவின் அறிகுறிகள் ஆகும். ஆய்வக பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மூலமாக தீவிரத்தன்மை கொண்ட மலேரியாவை மருத்துவர்கள் கண்டறிவார்கள்.

    கர்ப்ப காலத்தில் மலேரியா பாதிப்பை கண்டறிவதற்கு இடையூறாக அமையும் வகையில் இதே அறிகுறிகளுடன் டைஃபாய்டு, டெங்கு மற்றும் லெப்டோசிப்ரோசிஸ் ஆகிய நோய்கள் உண்டாகக் கூடும். கர்ப்பிணி பெண்ணுக்கு எந்தவொரு அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவ சிகிச்சையை நாடுவது அவசியமாகும்.

    கர்ப்ப காலத்தில் மலேரியாவின் விளைவுகள் (Effects of malaria in pregnancy in Tamil)

    கர்ப்ப காலத்தில் மலேரியாவின் விளைவுகள் என்பது தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவருகும் தீவிரம் கொண்டதாக இருக்கலாம். கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்படும் சில பாதிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

    1. ரத்தசோகை (Anaemia)

    மலேரியா சார்ந்த ரத்தசோகை என்பது கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் மிக தீவிரமான பிரச்சினையாகும். இதனால், மிக கடுமையான உடல்நல பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

    2. குறைப்பிரசவம் (Preterm birth)

    மலேரியா தொற்று காரணமாக குறைப்பிரசவத்திற்கான அபாயம் அதிகரிக்கிறது. இதனால், பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ ரீதியாக கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம்.

    3. குழந்தையின் உடல் எடை குறைவு (Low birth weight)

    மலேரியா பாதித்த தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மிக குறைவான உடல் எடை கொண்டதாக இருக்கும். இதனால், அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கும் அபாயம் அதிகரிக்கிறது.

    4. கருச்சிதைவு (Miscarriage)

    கர்ப்பிணி பெண்களுக்கு மலேரியா தொற்று காரணமாக கருச்சிதைவு அல்லது சிசு இறப்பு ஏற்படலாம்.

    5. பிறவி மலேரியா (Congenital malaria)

    அரிதான நிகழ்வாக, தாயிடம் இருந்து குழந்தைக்கு தொற்று பரவக் கூடும். இதனை பிறவி மலேரியா என்று குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாக பச்சிளம் குழந்தைகளுக்கு தீவிரமான உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம்.

    கர்ப்ப காலத்தில் மலேரியா ஏற்படுவதற்கான காரணங்கள் (Causes of malaria in pregnancy in Tamil)

    சாதாரண நபர்களுக்கு மலேரியா ஏற்படுவதற்கான அதே காரணங்களால் தான் கர்ப்பிணி பெண்களுக்கும் மலேரியா பாதிப்பு ஏற்படுகிறது. அவை பின்வருமாறு

    1. கொசுக்கடி (Mosquito bites)

    மலேரியாவுக்கான ஒட்டுண்ணியை சுமந்து செல்லும் கொசு மனிதர்களை கடிப்பதன் காரணமாக மலேரியா ஏற்படலாம்.

    2. பயணம் (Travel)

    மலேரியா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்வதால் உங்களுக்கும் நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும்.

    3. ரத்த மாற்றம் (Blood transfusion)

    தொற்று பாதித்த ரத்தம் அல்லது ரத்த சார்ந்த பொருட்களை மாற்றம் செய்வதன் காரணமாகவும் மலேரியா ஏற்படலாம்.

    4. மருந்து செலுத்த கவனக்குறைவாக ஊசிகளை பரிமாறிக் கொள்வது (By carelessly sharing needles to administer drugs)

    மருந்து செலுத்துவதற்காக ஊசிகளை பரிமாறிக் கொள்வதன் காரணமாகவும் மலேரியாவுக்கான அபாயம் அதிகரிக்கிறது.

    கர்ப்ப காலத்தில் மலேரியாவுக்கான சிகிச்சை :

    கர்ப்ப காலத்தில் மலேரியா பாதிப்பு ஏற்பட்டால் முடிந்த வரையில் விரைவாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு மலேரியா ஏற்படாமல் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் மலேரியா எதிர்ப்பு மருந்துகளை உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரை செய்கிறது. மலேரியாவுக்கான சிகிச்சை வாய்ப்புகள் பின்வருமாறு

    1. குயினைன் மற்றும் கிளிண்டாமைசின் கலப்பு (Combination of quinine and clindamycin)

    கர்ப்ப காலத்தில் ஆபத்தில்லாத மலேரியாவால் பாதிக்கப்படும் பட்சத்தில் குயினைன் மற்றும் கிளிண்டாமைசின் மருந்துகளை எடுத்துக் கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்கிறது.

    2. இண்ட்ராவெனஸ் (IV) குயினைன் அல்லது ஆர்டெசுனேட் (Intravenous (IV) quinine or artesunate)

    கர்ப்பிணி பெண்களுக்கு தீவிரத்தன்மை கொண்ட மலேரியா பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் இண்ட்ராவெனஸ் (IV) குயினைன் அல்லது ஆர்டெசுனேட் மருந்துகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்கிறது.இது மட்டுமல்லாமல், கர்ப்பகால மலேரியா பாதிப்பின்போது, வேறுவிதமான தொற்றுகள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க சிகிச்சை அவசியமாகும். நோயை கண்டறிவது மற்றும் கர்ப்பகால மலேரியா சிகிச்சை அளிப்பது ஆகியவற்றின் மூலமாக கடுமையான பாதிப்பு மற்றும் விளைவுகளை தவிர்க்கலாம்.

    கர்ப்ப காலத்தில் மலேரியா தடுப்பு (Prevention of malaria during pregnancy in Tamil)

    தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மலேரியாவை தவிர்ப்பதற்கான சிறப்பான வழிமுறைகளில் ஒன்றாகும். அவை பின்வருமாறு

    1. பூச்சி விரட்டி பயன்பாடு (Using insect repellent)

    DEET அல்லது பிகாரிடின் கொண்ட பூச்சி விரட்டியை பயன்படுத்துவதன் மூலமாக கொசுக்களை விரட்டலாம்.

    2. மெத்தை வலைகள் (Bed nets)

    தூங்கும்போது கொசுக்கடிகளை தவிர்ப்பதற்கு மெத்தை வலைகளை பயன்படுத்தலாம்.

    3. சுற்றுப்புற சுகாதாரம் (Clean environment)

    வீட்டை சுற்றியிலும் தண்ணீர் தேங்கி நிற்பதை தவிர்த்தால் கொசு முட்டையிடுவதை தடுக்கலாம்.

    4. வாடிக்கையான பரிசோதனை (Regular check-ups)

    கர்ப்ப காலத்தில், மலேரியா தொடர்புடைய அறிகுறிகளை கண்டறிய அவ்வபோது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும்.

    தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக கர்ப்ப காலத்தில் மலேரியாவிற்கான அபாயத்தை குறைக்கலாம் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதி செய்யலாம். மலேரியா பாதிப்புக்கான அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் கர்ப்பிணி பெண்களுக்கு முதலாவது மற்றும் இரண்டாவது அத்தியாயத்தின்போது இடைப்பட்ட தடுப்பு சிகிச்சை (IPT) மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்கிறது.

    References

    1. Bauserman M, Conroy AL, North K, Patterson J, Bose C, Meshnick S. (2019). An overview of malaria in pregnancy. Semin Perinatol.

    2. Takem EN, D'Alessandro U. (2013). Malaria in pregnancy. Mediterr J Hematol Infect Dis.

    Tags

    Malaria in pregnancy in Tamil, What are the causes of Malaria in pregnancy in Tamil, Symptoms of Malaria in pregnancy in Tamil, Side effects of Malaria in Pregnancy in Tamil, Malaria in pregnancy in English, Malaria in pregnancy in Hindi, Malaria in pregnancy in Telugu, Malaria in pregnancy in Bengali

    Baby Mosquito Spray - 100 ml

    100% Natural Ingredients | Protects Against Dengue, Malaria, Chikungunya

    ₹ 199

    4.5

    (1294)

    4956 Users bought

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.