
உயிரணு கருமுட்டையுடன் சேரும்போது ஒரு பெண் கர்ப்பம் அடைகிறார். சில சமயம், இதில் குழப்பம் ஏற்பட்டு அசாதாரணமான கர்ப்பம் உண்டாகக் கூடும். முத்துப்பிள்ளை கர்ப்பம் அல்லது மோலார் கர்ப்பம் என்பது கர்ப்ப காலத்தில் நிகழும் அரிதான டிரோபோபிளாஸ்டிக் நோயாகும். ஒரு உயிரணுவும், கருமுட்டையும் கருத்தரித்தரிக்கும் போது முறையற்ற வகையில் சேருவதன் காரணமாக, ஆரோக்கியமான நஞ்சுக்கொடி உண்டாகுவதற்கு பதிலாக புற்றுநோய் அல்லாத வகையில் கட்டி உண்டாகும். வளரும் கருவுக்கு இந்த கட்டி உறுதுணையாக இருக்காது. இதனால் கர்ப்பம் கலைந்து விடும். இதனை ஹைடாடிடிஃபார்ம் கட்டி என்றும் குறிப்பிடலாம். பொதுவாக சொல்வதென்றால், கர்ப்பப்பை உள்ளே நீர் திரவம் நிரம்பிய கட்டிகள் உருவாகும்.
முதலாம் வகை முழுமையான மோலார் கர்ப்பம் ஆகும். இரண்டாம் வகை பார்ஷியல் (பகுதியளவு) மோலார் கர்ப்பம் ஆகும்.
முழுமையான மோலார் கர்ப்ப வகையில் நஞ்சுக்கொடி திசு என்பது நீர் திரவம் நிரம்பிய கட்டியாக இருக்கும். உள்ளே எந்த வித கருவும் இருக்காது.
பார்ஷியல் (பகுதியளவு) மோலார் கர்ப்பத்தில் சீரானது மற்றும் சீரற்றது என இரண்டு வகை திசுக்கள் உள்ளன. இந்த இரண்டுமே நஞ்சுக்கொடியில் காணப்படும். இந்த இரண்டாம் வகையில் கரு இருக்கலாம். ஆனால், நிலைக்காது.
மோலார் கர்ப்பம் காரணமாக அரிய வகை புற்றுநோய் உண்டாகலாம். ஆகவே, கூடிய விரைவில் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமானதாகும்.
பொதுவாக மோலார் கர்ப்பம் என்பது இயல்பான கர்ப்பம் போல முதலில் தோன்றும். ஆனால், இதில் பின்வரும் அறிகுறிகளும் இணைந்திருக்கும்:
கர்ப்பம் அடைந்த 3 முதல் 4 மாதங்களில் பெண்ணுறுப்பில் இருந்து அடர் பிரவுண் அல்லது வெளிர் சிவப்பு நிறம் கொண்ட இரத்த கசிவு ஏற்படலாம்.
கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி
உயர் இரத்த அழுத்தம் மற்றும் கர்ப்ப காலத்தின் 20 வாரங்களுக்கு முன்னதாகவே புரதச்சிறுநீர் வெளியறுவது. இந்த நிலைக்கு பெயர் ப்ரீக்ளாம்ப்சியா ஆகும்.
அதிகமான ஹெச்சிஜி அளவுகள் (மனித கோரியானிக் கோனோடோட்ரோபின்)
வயிற்றின் அளவு அசாதாரணமாக அதிகரிப்பது
வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்துடிப்பு நின்று இருத்தல் அல்லது சிசு அசைவின்றி இருத்தல்
கொத்தான செல்கள் அல்லது திராட்சை போன்ற கட்டிகள் பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறுவது
அதிகப்படியான தைராய்டு அல்லது ஹைப்பர்தைராய்டிஸம்
ஆரோக்கியமான மனித செல் ஒன்றில் பொதுவாக 23 ஜோடி குரோமோசோம் ஜோடிகள் இருக்கும். கருத்தரித்தல் இயல்பாக நடக்கும்பட்சத்தில் தந்தையிடம் இருந்து ஒரு குரோமோசோம் மற்றும் தாயிடம் இருந்து குரோமோசாம் இணைந்து ஒரு ஜோடி உருவாகும்.
முழுமையான மோலார் கர்ப்பத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரணுக்கள் மூலமாக கருமுட்டை கருத்தரிக்கும். தந்தையின் குரோமோசோம்கள் போலிகளாக மாறும். ஆக, இதன் விளைவாக தாயின் குரோமோசோம்கள் தவறிவிடும்.
அதேபோல, பகுதியளவு மோலார் கர்ப்பத்தில், இரண்டு உயிரணுக்கள் சேர்ந்து ஒரு கருமுட்டையுடன் இணையும். ஆக, இதன் விளைவாக கருவில் தாயிடம் இருந்து ஒரு குரோமோசோம் மற்றும் தந்தையிடம் இருந்து இரண்டு குரோமோசோம் இடம்பெற்றிருக்கும். இதனால், கருவில் 46 குரோமோசோம்களுக்குப் பதிலாக 69 குரோமோசோம் இடம்பெற்றிருக்கும்.
மோலார் கர்ப்பம் உருவாகுவதற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக அமையலாம்:
கருத்தரிக்கும் தாய்மார்களின் வயது 43க்கு மேல் அல்லது 15 வயதுக்கு குறைவாக இருந்தால் மோலார் கர்ப்பம் உண்டாகக் கூடும்.
ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே மோலார் கர்ப்பம் உண்டாகியிருந்தால், இரண்டாம் முறையாக அதே பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனினும், மீண்டும் உருவாகுவதற்கான சாத்தியக்கூறு விகிதம் 1:100 என்ற அளவில் உள்ளது.
மோலார் கர்ப்பம் உள்ளது என்று மருத்துவ நிபுணர் சந்தேகம் கொண்டால் அல்லது கண்டறிந்தால், இரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்ய அவர்கள் பரிந்துரை செய்வார்கள்.
8 முதல் 9 வார கர்ப்ப காலத்தின்போது, முழுமையான மோலார் கர்ப்பத்தை அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் படம்பிடிக்கும்போது பின்வரும் விஷயங்கள் தெரிய வரும்.
கரு இல்லாமை
அம்னியோடிக் திரவம் இல்லாமை
கட்டிகள் வடிவில் தடிமனான நஞ்சுக்கொடி
கர்ப்பப்பை கட்டிகள்
பகுதியளவு மோலார் கர்ப்பத்தை அல்ட்ராசவுண்ட் சோதனை மூலம் படம்பிடித்தால் பின்வரும் விஷயங்கள் தெரியவரும்.
எதிர்பாராத அளவுக்கு சிறிய அளவிலான கரு
குறைவான அம்னியோடிக் திரவ இருப்பு
அசாதாரணமான தோற்றத்தில் நஞ்சுக்கொடி
மோலார் கர்ப்பம் குறித்து மேலே குறிப்பிட்ட விஷயங்களை கண்டறிந்த பிறகு, இன்னும் கூடுதலான மருத்துவ ரீதியான பிரச்சனைகள் குறித்து நோயாளியிடம் மருத்துவ நிபுணர் விசாரணை செய்வார். அவை பின்வருமாறு:
ப்ரீகிளாம்ப்சியா
ஹைப்பர்தைராய்டிஸம் (இரத்தத்தில் அதிகளவு தைராய்டு ஹார்மோன்கள் இருப்பு)
ரத்தசோகை
பொதுவாக மோலார் கர்ப்பம் நிலைத்து நிற்காது. தாமாகவே கருக்கலைப்பு நடந்துவிடும்.
கருக்கலைப்பு தாமாக நடக்காவிட்டால், கர்ப்ப நீக்க சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
சிகிச்சையை மேற்கொள்ளும் முன்பாக, நோயாளியை தூங்க வைக்கும் நோக்கில் மயக்க மருந்து கொடுக்கப்படும்.
சில சமயம் மோலார் கர்ப்பத்தை கலைக்க மருந்துகள் கொடுக்கப்படும்.
உங்கள் ஹெச்சிஜி அளவுகள் இயல்பான நிலையில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். இதில் ஹார்மோன் அளவுக்கு இயல்பான நிலையில் இல்லை என்றால், அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மோலார் கர்ப்ப பிரச்சனையில் இருந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மீண்டு வருவதற்கு சில காலம் தேவைப்படும். கர்ப்பம் கலைவது ஒரு தாய்மாருக்கு சவால் நிறைந்த காலமாக இருக்கும். மோலார் கர்ப்பத்திற்கு பிறகு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குணமடைய நேரம் எடுக்கும். அதற்கான நேரம் ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டும். உங்கள் வேதனையில் இருந்து வெளிவர, உங்கள் உணர்வுகள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கவலைகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர்கொள்கிறீர்கள் என்றால் மருத்துவ நிபுணர் அல்லது மனநல ஆலோசகரை அணுகவும்.
இதையும் படிக்கலாமே! - நஞ்சுக்கொடி என்றால் என்ன மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது?
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் கடுமையான குமட்டல், வாந்தி, பெண்ணுறுப்பில் கசிவு மற்றும் பெண்ணுறுப்பில் இருந்து திராட்சை அளவிலான கட்டிகள் வெளியேறுவது போன்ற பிரச்சினையை எதிர்கொண்டீர்கள் என்றால் மருத்துவ நிபுணரை அணுகுவது தொடர்பாக எங்கள் உதவியை நாடவும். விரைவாக கண்டறிந்து, துரிதமாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதிக விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இது தொடர்பாக ஆலோசனைப் பெற நீங்கள் மைலோஃபேமிலி மூலமாக ஆன்லைனில் நேரம் கோரலாம் அல்லது நேரடியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Yes
No



















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |