This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

குழந்தை மலம், சிறுநீர் கழிப்பது மற்றும் வாந்தி எடுப்பது போன்றவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை Everything you need to know about baby poop, pee, and spit-up In Tamil)

Care for Baby
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 21, 2023
குழந்தை மலம், சிறுநீர் கழிப்பது மற்றும் வாந்தி எடுப்பது போன்றவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை Everything you need to know about baby poop, pee, and spit-up In Tamil)
Likes8 Likes|
Read time5 min

பெற்றோராக நாம் எப்படி எல்லாம் செயல்பட வேண்டும் என்பது குறித்து யாரும் நமக்கு பயிற்சி அளிக்கப்போவதில்லை. அதோடு ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமாக இருக்கும். எனவே, குழந்தை வளர்ப்பு குறித்தான சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்களை பயமுறுத்தக் கூடும். ஆரம்பத்தில், உங்கள் குழந்தையின் உடலினுள்ளே உருவாகும் , சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் நீர்மப் பொருட்கள் குறித்து நீங்கள் மிகவும் கவலைப்படக் கூடும். உங்கள் குழந்தை அடிக்கடி மலம் கழிப்பதும், சிறுநீர் கழிப்பதும், கக்குவதும் இயல்பானது தான், குறிப்பாக குழந்தையின் முதல் 6 முதல் 12 மாதங்களில் இவ்வாறு ஏற்படுவது, குழந்தையின் செரிமான அமைப்பிற்கு நல்லது. குழந்தை மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் போதும், வாந்தி எடுக்கும் போதும் என்ன நேரும் என்பது குறித்தும், அது எப்போது கவலையளிக்கக் கூடியதாக மாறும் என்பது குறித்தும் இங்கே நாங்கள் உங்களுக்காக விளக்கியுள்ளோம்.

குழந்தை மலம் கழிப்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை (All you need to know about baby poop In Tamil)

குழந்தைகள் மலம் கழிப்பது பொதுவான நிகழ்வு தான். ஒரு சில குழந்தைகள் மற்ற குழந்தைகளை விடவும் அதிகம் மலம் கழிப்பார்கள். தாய்ப்பாலூட்டப்படும் பல குழந்தைகள் பாலூட்டும் போதே அல்லது ஒவ்வொரு முறை பாலூட்டப்பட்ட பின்னரும் மலம் கழிப்பார்கள். இதற்கு மாறாக, சில குழந்தைகள் சில நாட்கள் இடைவெளி விட்டு மட்டுமே மலம் கழிப்பார்கள். சில சமயங்களில், குழந்தைகள் பல்வேறு இடைவெளிகளில் மலம் கழிப்பார்கள். குழந்தை சுறுசுறுப்பாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் இது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. ஒரு வேளை குழந்தை அசௌகரியமாக இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால், உடனே உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, உங்கள் குழந்தையின் நலன் குறித்து தெரிந்து கொள்ளவும்.

உங்கள் குழந்தை சிறுநீர் கழிப்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை (All you need to know about baby pee In Tamil)

குழந்தைகள் மலம் கழிப்பதை விடவும், மிக அதிகமாக சிறுநீர் கழிப்பார்கள். பொதுவாக இது மாறுவதற்கு சில நாட்கள் ஆகும், ஆனால் கண்டிப்பாக மாறி விடும். பிரசவம் முடிந்து 2 முதல் 5 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் குழந்தைக்கு 8 முதல் 10 டயப்பர்கள் மாற்ற வேண்டியிருக்கும். பெரும்பாலும் இவ்வாறு தான் நடக்கும் என்றாலும் கூட, சில விதிவிலக்குகளும் இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 முறை படுக்கையை நனைக்கவில்லையெனில், உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் குழந்தையின் நலன் குறித்து தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.

இன்று கிடைக்கப்பெறும் கூடுதலாக உறிஞ்சும் திறன் கொண்ட டயப்பர்கள் உபயோகிப்பதினால், உங்கள் குழந்தை சிறுநீர் கழித்திருப்பது உங்களுக்குத் தெரியாமல் போகக் கூடும். அதனால், சிறுநீர் பட்டவுடன் நிறம் மாறுகின்ற அப்சார்பென்ட் லைன் உடனான டயப்பர்களையே வாங்கவும்.

இதையும் படிக்கலாமே! - கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

குழந்தை வாந்தி எடுப்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை (All you need to know about spit ups In Tamil)

சில குழந்தைகள் ஒரு நாளில் 12 முறைக்கும் மேலாக பாலை கக்குவார்கள்! சில குழந்தைகள் சிறிதளவு கக்குவார்கள், மற்றவர்கள் மிக அதிகமாக கக்குவார்கள். உங்கள் குழந்தை உண்ணும் அனைத்தையும் கக்கி வெளியே தள்ளி விடுவதால், உங்கள் குழந்தைக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறதா என நீங்கள் கவலை கொள்ளலாம். ஆயினும், உடலில் உட்கொள்ளப்பட்ட உணவில் பெரும்பாலான பாகம் ஏற்கனவே செரித்திருப்பதால், உங்கள் குழந்தை தொடர்ச்சியாக மலம் கழிப்பது குறித்தும், சிறுநீர் கழிப்பது குறித்தும் கவலை கொள்ளாமல் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். ஏனெனில், வெளிவருவதில் பெரும்பாலும், உணவுடன் கலந்த பித்தநீர் தான் இருக்கும்.

ஒரு வேளை உங்கள் குழந்தை தொடர்ச்சியாக கக்கிக் கொண்டே இருந்தால், உணவின் அளவை குறைவாகவும், ஒழுங்கான முறையிலும் அமைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கவும். தாய்ப்பாலூட்டிய பிறகு, உங்கள் குழந்தையை நிமிர்த்தி உட்கார வைத்து அதன் முதுகில் தடவிக் கொடுப்பதும் கூட குழந்தையின் செரிமானத்திற்கு உதவும். குழந்தை கக்குவதை தடுப்பதற்கு, கூடுமான வரையில் குழந்தை ஒவ்வொரு முறையும் உணவு உண்ட பிறகு ஏப்பம் விடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வாந்தி எடுப்பது பொதுவாகவே பல குழந்தைகளுக்கு இயல்பான ஒன்றென்றாலும் கூட, உங்கள் குழந்தை எரிச்சலுடனோ அல்லது அசௌகரியத்துடனோ இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால், அது குழந்தைக்கு வயிற்று எரிச்சல் அல்லது பால் அலர்ஜியோ ஏற்பட்டிருப்பதன் காரணமாக இருக்கலாம். இது போன்ற சமயத்தில் அல்லது உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கிற வேறு ஏதேனும் இருப்பது போல நீங்கள் உணர்ந்தால், உங்கள் குழந்தைநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

முடிவுரை (Conclusion)

தாய்ப்பால் ஊட்டுவதில் சரியான உத்தி, தாய்ப்பால் கொடுக்கும் நேரம், மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் கால அளவு போன்றவையை பின்பற்றுவது குழந்தையின் செரிமான அமைப்பினை சீர்படுத்தி, செரிமானத்திற்கு உதவும்.

உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் போது, மருத்துவ நிபுணரின் ஆலோசனையை கேட்டுப் பெறவும்! கேட்டுத் தெரிந்து கொள்வது ஒன்றும் தவறல்ல!

TAGS :

Baby poop in Tamil, All you need to know about baby poop in Tamil, baby pee and baby spit-up information in Tamil, Everything you need to know about baby poop, pee, and spit-up in English, Everything you need to know about baby poop, pee, and spit-up in Hindi, Everything you need to know about baby poop, pee, and spit-up in Telugu, Everything you need to know about baby poop, pee, and spit-up in Bengali.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.