This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க உதவும் 8 சூப்பரான டிப்ஸ் (Eight tips for losing weight after pregnancy In Tamil)

Weight Loss
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 19, 2026
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க உதவும் 8 சூப்பரான டிப்ஸ் (Eight tips for losing weight after pregnancy In Tamil)
Likes26 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது இயல்பானது, ஆனால் கர்ப்ப காலத்தில் சுமார் 25-35 பவுண்ட்கள் கூடும் எடையை குறைப்பது தாய்க்கு மன அழுத்தத்தை தவிர்க்க உதவும்.
  • உணவு கட்டுப்பாடு தேவையில்லை, மாறாக சத்தான சூப்பர் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், தாய்ப்பால் கொடுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள், கார்போஹைட்ரேட் குறைவாக சாப்பிடுங்கள்.
  • எளிதான கார்டியோ அல்லது ஏரோபிக் பயிற்சிகள், 8 மணி நேர தூக்கம், மன அழுத்தத்தை தவிர்த்தல் மற்றும் டயட்டீஷியன் ஆலோசனை பெறுவது எடை குறைப்புக்கு உதவும்.
  • பிரசவத்திற்கு பிந்தைய மீட்சிக்கு என்ன உதவும்? Explore our MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes).
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Rating4.8
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7

பொதுவாக பிரசவத்திற்கு பிறகு பெண்களின் எடை அதிகரிக்கும், இது இயல்பானது தான் என்றாலும் பிரசவத்திற்கு பின் குழந்தையை கவனித்துக் கொள்ளும் பொறுப்புகள் என தாயின் சுமை கூடிக் கொண்டே இருப்பதால், அதிகரித்த உங்கள் உடல் எடையும் அதனுடன் சேர்ந்து அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். வழக்கமாக, கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் எடை சுமார் 25-35 பவுண்ட்கள் அதிகரிக்கும்.

இத்தகைய சமயத்தில் உங்கள் எடையை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் உடற்பயிற்சி செய்வதையும், நீங்கள் உண்ணும் உணவில் சில கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதையும் பரிந்துரைப்பார்கள். இதன் மூலம் உங்கள் எடையானது, படிப்படியாக சில மாதங்களில் குறைந்து விடும். எனினும், உங்கள் எடை மிகவும் அதிகமாக இருந்தாலோ அல்லது நீங்கள் உங்கள் எடையை விரைவாக குறைக்க விரும்பினாலோ, நீங்கள் கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றி பயனடையலாம்.

உணவு கட்டுப்பாடு தேவையில்லை (Don't Diet)

ஆம், இது உங்களுக்கு விசித்திரமாக தோன்றினாலும், குழந்தை பிறந்த பிறகு உணவு கட்டுப்பாட்டினை கடைபிடிப்பது என்பது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். பிரசவத்திற்கு பிறகு, நீங்கள் இயல்பான நிலைக்கு திரும்புவதற்கு சிறிது காலம் ஆகும். இவ்வாறு உணவு கட்டுப்பாட்டினை மேற்கொள்வதனால், நீங்கள் மீண்டெழுவதற்கான காலம் அதிகமாகி விடும். அது மட்டுமல்லாது, இவ்வாறு உங்களுக்கு பிடித்தமான உணவுகளை உண்ண முடியாமல் போவதும், உங்கள் ஆசைகளை அடக்கி வைத்துக் கொள்வதும் கூட மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். எனவே, தொடர்ச்சியாக ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளவும் (Eat Super Foods)

பிரசவத்திற்கு பிறகு, ஒரு பெண்ணின் உடலில் 9 மாதங்களாக ஏற்பட்ட நலிவினை போக்குவதற்கு நிறைய ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதனால் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்வு செய்து உண்பது உங்கள் உடலை வலிமையாக்குகிறது. மேலும், இது பகல் முழுவதையும் சமாளிக்கத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இவ்வாறு செய்தால் நீங்கள் வயிறு நிறைய உண்பதாக உணர்வீர்கள், உங்கள் பசியும் அடங்கி விடும். அதோடு, மாமிசம், சிக்கன், பால் சார்ந்த உணவுகள், மீன் போன்றவற்றையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் கொடுக்கவும் (Breastfeed)

சில ஆய்வுகள், நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், நீங்கள் பிரசவத்திற்கு முன்பு இருந்த பழைய நிலைக்கு விரைவாக திரும்ப முடியும் என்று தெரிவிக்கின்றன. தாய்ப்பால் கொடுக்க விரும்பும் பெண்கள், தாய்ப்பால் கொடுக்க விரும்பாத பெண்கள் ஆகிய இரு சாராருக்கும் எடைக் குறைப்பு அவசியம். எனவே, நீங்கள் இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.

தண்ணீர் குடிக்கவும் (Drink Water)

உங்கள் உடலை சுத்தப்படுத்துவதற்கும் மற்றும் செரிமான சக்தியையும் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் மேம்படுத்துவதற்கும் தண்ணீர் குடிப்பது தான் சிறந்த வழியாகும். பகலில் நிறைய தண்ணீர் குடித்தால் சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறி, உங்கள் எடை குறைவதற்கு வழிவகுக்கும்.

எப்போதும் நடமாடிக் கொண்டே இருக்கவும் (Keep Moving)

புதிதாக பிறந்திருக்கும் உங்களுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதிலேயே நீங்கள் உங்களுடைய நேரத்தை கழிப்பீர்கள், அதன் மூலமாகவே நீங்கள் நாள் முழுவதும் நடமாடிக் கொண்டும், ஏதேனும் சுறுசுறுப்பாக செய்து கொண்டும் இருப்பீர்கள் என நம்புகிறோம். எனினும், கலோரிகளை எரிப்பதற்கும், எடைக் குறைப்பதற்கும் ஏதுவாக சில எளிதான கார்டியோ அல்லது ஏரோபிக் பயிற்சிகளை செய்வது மிகவும் முக்கியமாகும்.

மன அழுத்தம் வேண்டாம் (Don't Stress)

மன அழுத்தம் காரணமாக, மன அழுத்த ஹார்மோன் வெளியிடப்படுகிறது, இதனால் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு உங்களை பருமனாக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். பிறந்த குழந்தையை குறித்து நீங்கள் பரபரப்படைவதை தவிர்ப்பது சாத்தியமில்லையென்றாலும் கூட, நீங்கள் சரியான முறையில் ஓய்வெடுப்பதும், மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சிப்பதும் கூட அவசியம் தான்.

இதையும் படிக்கலாமே! - தாய்ப்பால் கொடுக்கும்போது எடை இழப்பு

உறக்கம் (Sleep)

போதுமான அளவு தூக்கம் இல்லாமல் இருப்பதும் கூட, உங்கள் உடலில் கொழுப்பினை அதிகரித்து விடக் கூடும். தினந்தோறும் 8 மணி நேரம் தூங்குவது முக்கியமாகும். பிறந்த குழந்தை அருகில் இருக்கும் போது நாள் முழுக்க வேலையிருக்கும் என்பதை நாங்கள் உணர்கிறோம், இருப்பினும் 8 மணி நேர தூக்கத்தை பெறுவதற்கு, உங்கள் குழந்தை தூங்கும் நேரத்தில் நீங்கள் தூங்கி ஓய்வு பெறுவது அவசியமாகும்.

ஆலோசனை பெறவும் (Ask for Help)

மேற்சொன்ன அனைத்தையும் நீங்கள் பின்பற்றியும் கூட, உங்கள் உடல் எடை குறையவில்லையெனில் நீங்கள் இது குறித்து வேறு ஏதேனும் உதவி பெற விரும்பலாம். டயட்டீஷியனை சந்தித்து, அவரின் ஆலோசனை பெறுவது, உங்கள் உடலினை புரிந்து கொள்ளவும், உங்கள் அதிக எடையை குறைப்பதற்கு செய்ய வேண்டியவை பற்றியும் அறிந்து கொள்வதற்கு உதவும்.

புதிதாக தாய் ஆகி இருப்பதும், அதனை சார்ந்துள்ள பொறுப்புகளை சமாளிப்பதும் கடினமானது தான். ஆயினும் வலிமையோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்வதற்கு வேண்டி உங்கள் குழந்தையோடு சேர்த்து உங்களையும் நீங்கள் கவனித்துக் கொள்வது அவசியமாகும்.

TAGS :

Eight tips for losing weight after pregnancy in Tamil, Eight tips for losing weight after pregnancy in English, Eight tips for losing weight after pregnancy in Hindi, Eight tips for losing weight after pregnancy in Telugu, Eight tips for losing weight after pregnancy in Bengali.

புதிய தாய்மார்களால் நம்பப்படும் பிரசவத்திற்கு பிந்தைய துணை

உங்கள் உடல் மீள்வதற்கும் ஆரோக்கியமாக எடை குறைப்பதற்கும் உதவும் சத்தான மற்றும் ஆதரவான தயாரிப்புகள் உங்களுக்காக.

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

4345 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(91)
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

BPA Free | Breast-Like Nipple | Food Grade Material | Wide Base for Better Latch | Can be Sterilized | Microwave Safe | Fits Most Standard Bottles

5823 Moms bought
₹59₹7925% Off
Rating
4.8
(118)
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2016 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.