hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • உடலுறவுக்குப் பிறகு, நீங்கள் எப்போது கர்ப்பமாக முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் arrow

In this Article

    உடலுறவுக்குப் பிறகு, நீங்கள் எப்போது கர்ப்பமாக முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

    உடலுறவுக்குப் பிறகு, நீங்கள் எப்போது கர்ப்பமாக முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

    Updated on 3 November 2023

    • கர்ப்பம் என்பது ஒரு தாயாக உங்களை ஒரு புதிய வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் ஒரு அழகான பயணம். உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கப் போகும் உங்களின் சிறிய வெர்ஷனை நீங்கள் பெற்றெடுக்க போகிறீர்கள். கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் பலனளிக்கும் மற்றும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும். இது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். தாயாக நேரம் எடுக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

    • உடலுறவுக்குப் பிறகு எவ்வளவு நேரம் கழித்து கர்ப்பம் தரிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வோம். ஆரம்பத்திலிருந்தே நாம் தொடங்குவோம்.உடலுறவு. பாதுகாப்பற்ற உடலுறவு செயல்முறையில்தான் இது தொடங்குகிறது என்றாலும், அது எப்போதும் கருத்தரிப்புக்கு வழிவகுத்துவிடாது. கருத்தரிப்பு எனும் கடைசி கட்டத்திற்குள் நுழைவதற்கு உங்கள் உடல் பல செக் பாயிண்ட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும். உடலுறவுக்குப் பிறகு, விந்தணு முட்டையுடன் (கருமுட்டை) இணைந்திருக்க வேண்டும்; இது பல்வேறு விஷயங்களுடன் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    கருத்தரித்தல் பற்றிய அறிவியலை இப்போது புரிந்து கொள்வோம்

    • நீங்கள் 30 நிமிடங்களில் உடலுறவு கொண்டால் விரைவில் கருத்தரிக்க வாய்ப்புள்ளது!

    • உடலுறவுக்குப் பிறகு, பெண்ணின் பிறப்புறுப்பில் விந்தணுக்கள் சென்றவுடன் சாதாரண சூழ்நிலையில் 30 நிமிடங்களில் கருமுட்டையுடன் விந்தணு சேர்ந்துவிடும். ஒரு முட்டை (கருமுட்டை) ஒவ்வொரு மாதமும் கருமுட்டை குழாயில் வெளியிடப்படுகிறது. இது பொதுவாக உங்கள் கடைசி மாதவிடாயின் 14-ஆவது நாளில் நடக்கும். முட்டை வெளியே வந்தவுடன், உங்கள் கருமுட்டை விந்தணுவுடன் இணைவதற்கு 12 முதல் 24 மணி நேரம் வரை ஆகும்.

    • விந்தணுக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன மற்றும் அவை கருமுட்டை குழாயை நோக்கி ஒரு விநாடிக்கு 25 மைக்ரோமீட்டர்கள் தூரம் நீந்தக்கூடிய திறன் கொண்டவை. உடலுறவின் போது, ​​விந்தணுக்கள் கருமுட்டையை நோக்கிப் பயணித்து, கருமுட்டை குழாயில் கருவுறுதல் செயல்முறைக்கு உட்படுகின்றன [கருமுட்டையானது 12-24 மணி நேரம் விந்தணுவுடன் இணைவதற்கு தயாராக இருக்கும்). பொதுவாக, விந்தணுக்கள் உடலுறவுக்குப் பின் 5 நாட்களுக்கு உங்கள் உடலில் உயிருடன் இருக்கும்.

    • கருவுற்ற முட்டையானது கர்ப்பப்பையில் பொருந்தும்போது கர்ப்பத்தின் ஆரம்பம் பொதுவாக வகைப்படுத்தப்படுகிறது. நீங்கள் கர்ப்பம் தரிக்காமல் இருந்தாலும், உங்களுக்கு மாதவிடாய் காலத்திற்கு பிறகு கருமுட்டையானது விந்தணுவை நோக்கி தயார் நிலையில் இருக்கும். விந்தணுவுடன் இணைந்த பிறகு, இந்த கருவுற்ற முட்டை வளர்ந்து கருவாகவும் இறுதியாக குழந்தையாகவும் உருவாகிறது. இந்த முழு செயல்முறையிலும், ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன; எந்தவொரு ஹார்மோன் சமநிலையின்மையும் கர்ப்பத்தின் போக்கை பாதிக்கக் கூடும்.

    உடலுறவுக்குப் பிறகு எவ்வளவு நேரத்தில் கருத்தரிப்பு நிகழ்கிறது?

    • உங்கள் மாதவிடாய் சுழற்சிகள் சீராக இருந்தால், கருமுட்டை வெளியிடப்பட்ட 7 நாட்களில் உடலுறவு கொண்டால் நீங்கள் கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. கருத்தரிக்க ஏற்ற நாட்களாக இந்த நாட்கள் கருதப்படுகிறது. கருமுட்டை வெளியாகும் 5 நாட்களுக்கு முன்பே நீங்கள் உடலுறவு கொண்டால், அதன் பிறகு இரண்டு நாட்கள் வரை செல்லும். (9 முதல் 16 நாள் வரை அதாவது கடைசி மாதவிடாய் ஆனதிலிருந்து முதல் நாள்) நீங்கள் 30 மணி நேர உடலுறவுக்குப் பிறகு கருத்தரிக்க (விந்தணு-கருமுட்டை இணைவு) முடியும்.

    • எனவே, ஒரு வாரத்திற்கும் மேலாக மாதவிடாய் தவறிவிட்டால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த கருத்தரிப்பை உறுதி செய்வதற்கான பரிசோதனையை நீங்கள் மேற்கொள்ளலாம்.

    • நீங்கள் கர்ப்பமாக திட்டமிட்டால், உங்கள் மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் கருமுட்டை வெளியீடு ஆகியவற்றை கண்காணித்து அதற்கேற்ப திட்டமிடுதல் வேண்டும் என்று இதற்கு அர்த்தம்.

    நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை எப்படி அறிவது?

    நாளமில்லா சுரப்பிகள் கருத்தரிப்பில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இது பல்வேறு அறிகுறிகளை உங்களுக்கு காண்பிக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், நீங்கள் இதையெல்லாம் உணரலாம்:

    1) மாதவிடாயைத் தவறவிடுதல்

    சீரான மாதவிடாய் இருந்து கருமுட்டை வெளியான நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபட்டிருந்தால், அடுத்த முறை உங்கள் மாதவிடாய் ஒரு வாரம் அல்லது அதற்கும் மேல் தள்ளிப் போயிருந்தால் நீங்கள் கருத்தரித்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், உடலியல் ரீதியாக உங்கள் மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற தன்மை இருந்தால், தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.

    2) மென்மையான/பெரிதான மார்பகங்கள்

    கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் நாளமில்லா சுரப்பிகள் பெருமளவில் ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. இது உங்கள் மார்பகங்களில் அசௌகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும். உங்கள் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்களுக்கு அதன் எதிர்வினை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்; இந்த அசௌகரியம் சில வாரங்களுக்குப் பிறகு குறைய வேண்டும்.

    3) வாந்தியுடன் அல்லது இல்லாமல் வெறும் குமட்டல்

    காலை நேர உடல்சோர்வு பொதுவாக கர்ப்பமாகி ஒன்று முதல் இரண்டு மாதங்களில் சரியாகிவிடும். பகல் அல்லது இரவின் எந்த நேரத்திலும் கர்ப்பிணிக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுவதற்கான காரணத்தை புரிந்துகொள்வது கடினம் என்றாலும், ஹார்மோன்கள் பெரும்பாலும் முக்கிய காரணமாக திகழ்கின்றது.

    4) சோர்வு

    சோர்வு என்பது கர்ப்பத்தின் மிகவும் பொதுவான ஆரம்பகால அறிகுறியாகும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உடல் சோர்வுக்கான காரணத்தைக் கண்டறிவது கடினம். ஏனெனில், உடல் மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு மாறுகிறது.

    5) அடிக்கடி சிறுநீர் கழித்தல்

    • இயல்பை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். கர்ப்ப காலத்தில், உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. ஒரு கருவின் சிறுநீரக அமைப்பு முன்கூட்டியே வளர்ந்து இருப்பதால், வெளியேற்றம் உங்கள் சிறுநீரகங்கள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது, உங்கள் சிறுநீர்ப்பையில் சேகரிக்கும் அதிகப்படியான திரவத்தை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால், அடிக்கடி நீங்கள் சிறுநீர் கழிப்பீர்கள்.

    • இந்த அறிகுறிகள் கர்ப்பத்தைக் குறிக்கும். அதே வேளையில், கர்ப்ப பரிசோதனைக் கருவி கிட்டத்தட்ட 99 சதவீதம் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை தெரிவித்துவிடும். ஒரு கர்ப்பிணியின் சிறுநீரில் ஹியூமன் கோனாடோட்ரோபின் ஹார்மோன் (எஸ்சிஜி) வெளியேறும். இதன்மூலம் வீட்டிலேயே கர்ப்பப் பரிசோதனை கருவிகள் மூலம் கருத்தரிப்பு நிகழ்ந்திருக்கிறதா என்பதை நீங்கள் கண்டறிய முடியும். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ள மிகவும் நம்பகமான முறைகளில் இதுவும் ஒன்றாகும். அருகிலுள்ள மருந்தகங்களில் வீட்டிலேயே கருத்தரிப்புப் பரிசோதனை மேற்கொள்ளக் கூடிய கருவியைப் பெறலாம்.

    இதையும் படிக்கலாமே! - இரத்த பீட்டா ஹெச்சிஜி பரிசோதனை என்றால் என்ன? அதன் அளவுகள் மற்றும் அதை எப்படி தெரிந்து கொள்வது?

    எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

    • உங்கள் கர்ப்ப காலத்தில், மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின்களை நீங்கள் குறைந்தபட்சமாவது எடுத்துக் கொள்ள வேண்டும். 400 எம்சிஜி ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார். கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தையின் நரம்புக் குழாயின் ஹெல்த்தியான வளர்ச்சிக்கு இந்த வைட்டமின்கள் அவசியம். மூளை மற்றும் முதுகெலும்பு நரம்புக் குழாயிலிருந்து வெளிப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    • கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன் உங்கள் மருத்துவருடன் சந்தித்து கலந்தாலோசிப்பது கர்ப்பத்தை நோக்கிய பயணத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில், இது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். நீங்கள் ஒரு நாள்பட்ட நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டால் அல்லது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது தோல் அழற்சி போன்ற கூடுதல் மருத்துவப் பிரச்சனைகள் இருந்தால், மருத்துவருடன் முன்கூட்டியே ஆலோசனையைத் திட்டமிடுவது மிகவும் முக்கியம்.

    • அப்படி நீங்கள் உங்கள் மருத்துவரை சந்திக்கும்போது கர்ப்பத்திற்கு முன் ஏதேனும் மருத்துவப் பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கிறதா என்றும் உங்கள் ஒட்டுமொத்த ஹெல்த்தையும் அவர் ரிவ்யூ செய்வார். இதனால், கர்ப்ப காலத்தை சிறப்பாக தொடங்க மருத்துவருடனான ஆலோசனை முக்கியமானதாகிறது.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.