Diet & Nutrition
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒரு குழந்தைக்காக நாம் திட்டமிட்டுவிட்டால், அன்றைய தினத்தில் இருந்தே ஆரோக்கியமான உணவை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். ஆம், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, கருவுக்கு எல்லா வழிகளிலும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண் தனது உணவில் மிகவும் கவனமாக இருந்தால், தாயும் குழந்தையும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பயனடைவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து தான் வயிற்றில் இருக்கும் கருவுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.
குழந்தை பிறந்த பின்பு, நீங்கள் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். இவ்வாறு பிரசவத்திற்குப் பின்னும், நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைக்கு செல்லும் ஊட்டச்சத்துக்கள் உங்களையே சார்ந்திருக்கும். குழந்தைகள் மிக வேகமாக வளர்ச்சியடைவார்கள். தாய் சத்தான உணவு எடுத்துக் கொண்டால், அது குழந்தையின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் மேம்படுத்தும். நீண்ட காலத்திற்கு, வளர்ந்து கொண்டே வரும் குழந்தைக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். மேலும், சத்தான உணவு தாயின் உடலை வலுப்படுத்தவும், இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்கவும் உதவும்.
உங்கள் பிரசவத்திற்குப் பிறகு, 45 நாட்களுக்கு போஸ்ட்பார்டம் டயட்டை எடுத்துக் கொள்வது உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் மிகவும் அவசியம். பின்வரும் காரணங்கள் இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்துகிறது:
விரைவாக குணமடைய ஒரு சீரான மற்றும் சத்தான உணவு வழக்கம் தேவை. குறிப்பாக சிசேரியன் அறுவை சிகிச்சை எனில், நீங்கள் விரைவாக குணமடைய உங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான தாய்ப்பாலை அதிகரிக்க சில சத்தான உணவுகள் தேவைப்படுகின்றன.
ஒரு புதிய தாய் தனது குழந்தையை கவனிப்பது என 24*7 வேலையே செய்கிறார், அதற்கு கூடுதல் சகிப்புத்தன்மை மற்றும் வலிமை தேவை, இதனால் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம்.
பிரசவத்திற்குப் பிறகான உணவுகளுக்கும் வழக்கமான ஆரோக்கியமான சமச்சீர் உணவுக்கும் இடையில் பெருமளவில் வித்தியாசம் இல்லை. உங்கள் தினசரி உணவில் சேர்க்கப்பட வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் என்ன என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்-
கீரை, கேரட், பூசணி, சுரைக்காய், ப்ரோக்கோலி, அவகேடோ, முட்டைக்கோஸ் போன்ற பச்சை மற்றும் இலை காய்கறிகள்.
மாம்பழம், வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற சீசனல் பழங்கள். ஆப்பிள்கள் மற்றும் மாதுளைகள் மிகவும் அவசியம். இவற்றை நீங்கள் தினமும் சாப்பிட வேண்டும்.
முழு தானியங்களான முழு கோதுமை, குயினோவா, ஓட்ஸ், பழுப்பு அரிசி போன்றவை.
தயிர் மற்றும் பால் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகள். தாய்ப்பாலை அதிகரிக்கவும் பால் அவசியம் தேவை.
நீங்கள் அசைவ உணவுகளைஉட்கொள்வீர்கள் என்றால், குறைந்த கொழுப்புள்ள ஆட்டிறைச்சி மற்றும் முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மேலும், ஒமேகா 3, அயோடின், கொழுப்பு அமிலங்கள் மற்றும் குளோரின் போன்ற தேவையான பொருட்களை உள்ளடக்கிய சில மருந்துகளை உங்கள் மகப்பேறு மருத்துவர் பரிந்துரைப்பார். அவற்றையும் மறவாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் உணவு அட்டவணையைத் (சார்ட்) தயாரிக்கும் போது, உங்கள் உணவு அட்டவணையில் என்ன சேர்க்கப்பட வேண்டும் மற்றும் எதைத் தவிர்க்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள் .
தனது குழந்தையைப் பெற்ற பிறகும் பணியைத் தொடர விரும்பும் பெண்ணுக்கு, வீட்டில் இருக்கும் வாழ்க்கை முறையுடன் ஒப்பிடும்போது, உணவு அட்டவணை அதிக சத்தானதாக இருக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்காத அல்லது ஓரளவு தாய்ப்பால் கொடுக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து வேறுபட்டு இருக்கும்.
சைவ உணவு உண்பவர்கள், அசைவம் உண்பவர்கள், முட்டை சாப்பிடுபவர்கள் என ஒவ்வொருவருக்கும் உணவு அட்டவணைகள் வேறுபடும், ஏனெனில் சைவம் அசைவம் என ஒவ்வொன்றின் ஊட்டச்சத்து மூலம் வேறுபட்டு இருக்கும்.
நீங்கள் ஓட்ஸ் மற்றும் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்களை சாப்பிடலாம். மேலும், நீங்கள் ஒரு கிளாஸ் பால் அல்லது ஒரு கப் தயிர் போன்றவற்றை குடிக்கலாம்.
நீங்கள் காய்கறிகள், பருப்பு, சப்பாத்தி மற்றும் சாலட் சாப்பிடலாம் அல்லது அடை (பெசன் சில்லா), தயிர் மற்றும் முளை கட்டிய தானியங்களையும் சாப்பிடலாம் அல்லது ரவா இட்லி, சாம்பார் & சாலட் எடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் மிதமாக வறுத்த கோழியை சாப்பிடலாம், மேலும் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் பெல் பெப்பர் போன்ற காய்கறிகளை வதக்கி சாப்பிடலாம். நீங்கள் பருப்பு, சாதம், சப்பாத்தி மற்றும் சாலட் சாப்பிடலாம் அல்லது ஒரு கப் சீசனல் காய்கறிகளுடன் பருப்பு கிச்சடி சாப்பிடலாம்.
கிரேக்க யோகர்ட் அல்லது ஸ்மூத்தி, வறுத்த சன்னா, கோதுமை/மல்டி மில்லட் காக்ரா, பாப்கார்ன், நட்ஸ்.
இதையும் படிக்கலாமே! - உங்களுடைய 7 வார கர்ப்பகால உணவு முறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டிய டாப் 5 உணவுகள்
மேலும், பிரசவத்திற்குப் பிறகு புதிய தாய்மார்கள் தங்கள் உடலை வலுப்படுத்துவதற்கு மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படும் சில இந்திய உணவுகள் உள்ளன. இதில் ஓமம், முளை கட்டிய தானியங்கள், உண்ணக்கூடிய கீரைகள் (முருங்கை இலைகள்), உலர் பழங்கள், வெந்தயம், சீரகம் மற்றும் இஞ்சி, பூண்டு, எள், மஞ்சள் போன்றவை அடங்கும். இவை பொதுவாகவே நாம் அன்றாட உணவில் சேர்க்கப்படுபவை என்பதால், மேலே உள்ள அனைத்தையும் நீங்கள் எந்த சிரமும் இல்லாமல் சேர்த்து சமைத்து பயன் பெறலாம். மது, காஃபின், எண்ணெய் மற்றும் காரமான உணவுகள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய உணவுகள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளாகும்.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |