hamburgerIcon
login

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Breastfeeding & Lactation arrow
  • உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத குற்ற உணர்வில் உள்ளீர்களா? தேவையில்லை! (Are you feeling guilty for not being able to breastfeed your little one? Don't be In Tamil) arrow

In this Article

    Breastfeeding & Lactation

    உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத குற்ற உணர்வில் உள்ளீர்களா? தேவையில்லை! (Are you feeling guilty for not being able to breastfeed your little one? Don't be In Tamil)

    30 August 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    தாய்மை என்பது மிக அழகான உணர்வு. ஒரு தாய் எப்போதும் தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க விரும்புகிறா​​ர். ஆனால் அது பல காரணங்களுக்காக தடை படலாம்.பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக உங்களுக்கு நேரம் கிடைக்காமல் போகலாம். மேலும் உங்களுக்கு பலவீனமாக பால் சுரக்கலாம். நீங்கள் உடல்நலப் பிரச்சினைகள் அல்லது மன அழுத்தத்தையும் அனுபவிக்கலாம்.இவை எதுவும் வேலை செய்யவில்லையெனில், நீங்கள் குற்ற உணர்வு கொள்ளலாம்.ஆனால் நீங்கள் ஏன் அப்படி நினைக்கக்கூடாது என்பதற்கான காரணங்களை இங்கே காணலாம்.

    • குற்ற உணர்வு மன அழுத்தத்தை அதிகரிக்கிறது (Feeling guilty adds to the stress)

    ஒரு இளம் குழந்தையின் வாழ்க்கைக்கு முக்கியமாக இருப்பது தாய்ப் பால் . அப்படிப்பட்ட ஒரு பெரிய பொறுப்பு நம்மிடம் இல்லாமள் போனதே என்பது ஒரு பெரிய மன அழுத்தமாகும். குற்ற உணர்வு உங்கள் மன அழுத்தத்தை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும்.

    நீங்கள் எல்லாவற்றையும் முயற்சித்திருந்தால் அல்லது இந்த பிரச்சினைக்கு உங்களால் எதுவும் செய்ய முடியாவிட்டால், உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றைப் பற்றி கவலைப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும், உங்கள் மனநிலை மற்றும் ஆரோக்கியம் உங்கள் குழந்தையின் நிலையை நேரடியாக பாதிக்கிறது.

    தாய்ப்பால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவை மேம்படுத்துகிறது என்பது உண்மைதான். இருப்பினும், அவ்வாறு செய்யாதது உறவைத் பிரிக்காது.

    தாய்ப்பால் கொடுப்பது உங்கள் விருப்பம், தேவை அல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். மேலும் நீங்கள் எதாவது காரணத்திற்காக தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் குற்ற உணர்வு கொள்ளக்கூடாது.

    • நீங்கள் சமூக விதிமுறைகளுக்கு இணங்க வேண்டியதில்லை (You don't have to conform to the social norms)

    ஒரு சிறந்த தாயின் பொருத்தமற்ற உருவத்தை சமூகம் நம் தலையில் உருவாக்கியுள்ளது. தாய்ப்பால் கொடுக்க முடியாவிட்டாலும், நீங்கள் ஒரு சிறந்த தாய். அது உங்கள் குழந்தை, தாய்ப்பால் கொடுக்க முடியாதது, அதன் வளர்ச்சியைத் தடுக்காது.

    • நீங்கள் முயற்சி செய்வது முக்கியம் (It's vital that you try)

    நீங்கள் உங்களால் முடிந்தவரை முயற்சி செய்து அது பலனளிக்கவில்லை என்றால், உங்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், அதைவிட முக்கியமானது முயற்சி செய்தது தான். உங்கள் குற்ற உணர்வை விட நடைமுறையில் இருப்பதை உங்களால் மாற்ற முடியாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வது அவசியம்.

    • இது பொதுவானது (You're not alone)

    தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய் நீங்கள் மட்டுமல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இன்னும் பல தாய்மார்கள் இதேபோன்ற பிரச்சினையைச் சந்திக்கிறார்கள். சிலர் அதை சரி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடிந்தாலும், பலர் அதைச் செய்யவில்லை. எனவே, நீங்கள் தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால் பரவாயில்லை. நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் மிக முக்கியமான விஷயம்.

    இதையும் படிக்கலாமே! - குழந்தைக்கு பசும்பால் எப்போது கொடுக்கலாம்?

    முடிவுரை (Conclusion)

    தேவையில்லாத குற்ற உணர்வில் ஈடுபடுவதை விட குழந்தையுடன் கொஞ்சி உறவாடுவது மிகவும் முக்கியமானது. குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க தாய்மார்கள் செய்யக்கூடியது தாய்ப்பால் கொடுப்பது மட்டும் அல்ல. தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போனது உங்களை மற்ற தாய்மார்களை விட எந்த விதத்திலும் குறைவாக ஆக்காது. அன்பும் பாசமும் தான் முக்கியம். மேலும், அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது தாய்மையின் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான திறவுகோலாகும். உங்கள் குழந்தையுடனான நினைவுகளை உருவாக்க வேண்டிய நேரத்தில் நீங்கள் ஏன் குற்ற உணர்ச்சி வீணாக கடத்த விரும்புகிறீர்கள்?

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Breastfeeding & Lactation

    Breastfeeding & Lactation

    பாலூட்டும் தாய்மார்கள் ஆரோக்கியமான டயட் பிளானை பின்பற்றுவதற்கான அத்தியாவசிய டிப்ஸ் என்ன? (What Are The Essential Tips For Breastfeeding Mothers To Have A Healthy Diet Plan In Tamil)

    Image related to Baby Weaning

    Baby Weaning

    குழந்தைக்கு பசும்பால் எப்போது கொடுக்கலாம்? (When can you give cow's milk to your baby In Tamil)

    Image related to Sleep

    Sleep

    குழந்தை உங்களின் வயிற்றின் மீது தூங்குவது சரியா? (Is it Ok for a baby to sleep on his/her stomach In Tamil)

    Image related to Postnatal Care

    Postnatal Care

    Postpartum Sterilization: Procedure & Complications in Tamil | பிரசவத்திற்குப் பிறகான கருத்தடை: செயல்முறை மற்றும் சிக்கல்கள்

    Image related to Care for Baby

    Care for Baby

    உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டும் 8 எளிய அறிகுறிகள் (8 Simple Signs to show that your baby is healthy In Tamil)

    Image related to Care for Baby

    Care for Baby

    குழந்தை மலம், சிறுநீர் கழிப்பது மற்றும் வாந்தி எடுப்பது போன்றவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை Everything you need to know about baby poop, pee, and spit-up In Tamil)

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.