
அடடா, உங்கள் குழந்தை பிறந்து பாதி வருடம் ஆகிவிட்டது. இதனை உங்களால் நம்ப முடிகிறதா? உங்கள் குழந்தை பிறந்து 6 மாதமாகும் போது, அவர்கள் முன்னும் பின்னும் உருள ஆரம்பிக்கலாம், ஆ, ஊ என்று உயிரெழுத்துகளை கூட உச்சரிக்கத் தொடங்கலாம். அதே போல், மகிழ்ச்சியான மற்றும் சோகமான உணர்ச்சிகளுக்கு குறிப்பிட்ட ஒலிகளை எழுப்பலாம். அதுமட்டுமல்ல, இப்பொழுது கீழே உங்களால் ஒரு பொருளையும் வைக்க முடியாது. அவர்கள் எட்டிப் பிடித்து விடுவார்கள். அவர்களை சுற்றியுள்ள சுவாரசியமான உலகத்தைப் பற்றி அதிக விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் குழந்தைக்கு ஆறு மாத ஆகும் போது, அந்த வயதுக்கு பொருத்தமான பொம்மைகளுடன் அவர்கள் விளையாடும் போது, அதன் மூலம் அவர்கள் எதையாவது கற்றுக் கொள்ள நீங்கள் அவர்களுக்கு உதவுவதற்கு சரியான நேரம் இதுவாகும்.
இந்த வயதில் நீங்கள் அவர்களுக்கு வாங்கக்கூடிய சில பொம்மைகளைப் பற்றி பார்ப்போம்
ஸ்டேக் அப் கப் பொம்மைகள் ஆறு முதல் எட்டு கப்கள் கொண்ட தொகுப்பில் வருகின்றன, இது மொத்த தசை இயக்கு திறன்கள் மற்றும் கை-கண் ஒருங்கிணைப்பு வளர்ச்சிக்கு உதவும். கப்களுடன் விளையாடுவது, உங்கள் பிள்ளைக்கு இடஞ்சார்ந்த உறவுகளைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கும், காரணம் & விளைவு பற்றி அவர்களுக்குக் கற்பிப்பதற்கும் உதவுகிறது.
இது குமிழ் கழுத்து மற்றும் லேசான தலை கொண்ட அடிப்பகுதியைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற விளைவுகள் இருப்பதை உங்கள் குழந்தைக்கு இது கற்றுக்கொடுக்கிறது. சமூகத் தொடர்புகளை ஊக்குவிக்கும் பிற அம்சங்களில் சிரித்த முகம் அடங்கும். காரணம் மற்றும் விளைவைக் கற்றுக்கொள்வது எஸ்டிஇஎம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) சார்ந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
உங்கள் குழந்தைக்கு முக உணர்ச்சிகளைப் படிப்பது போன்ற சமூகத் திறன்களைக் கற்பிப்பதற்கு இது சிறந்தது, மேலும் எட்டிப் பிடிப்பது போன்ற தசை இயக்கு திறன்களைப் பயிற்சி செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது.
இதில் பல்வேறு வடிவங்களிலான 8 முதல் 12 பிரகாசமான வண்ண மணிகள் (பீட்ஸ்) இருக்கும். இது சாப்பிடுவதற்கும், வெட்டுவதற்கும், எழுதுவதற்கும் மற்றும் விசைப்பலகைகளைப் பயன்படுத்துவதற்கும் தேவையான தசை இயக்கு திறன்களை ஊக்குவிக்கும் ஒரு அற்புதமான கருவியாகும். மணிகளை வைத்து சங்கிலி போல கோர்ப்பது கண்-கை ஒருங்கிணைப்பு மற்றும் சிறிய தசைகளை வளர்க்க உதவும்.
வெவ்வேறு வகையான பந்துகளைக் கொண்ட இந்த பால் செட், உணர்வு திறனை ஊக்குவிக்கவும், உடல் மற்றும் அறிவாற்றல் திறன்களை வளர்க்கவும் உதவுகிறது. பந்துகள் ஐந்து புலன்களைத் தூண்ட உதவுகிறது. அதோடு, உருண்டு செல்வது மற்றும் ஊர்ந்து செல்வது போன்ற இயக்கங்களை ஊக்குவிக்கிறது.
இதையும் படிக்கலாமே! - உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் 20 மிகவும் பிரபலமான விளையாட்டுகள்
Toys for babies in tamil, types of toys for babies in tamil, what kind of toys can be given to child in tamil, Baby Toys from 6 months onwards In English, Baby Toys from 6 months onwards In Hindi, Baby Toys from 6 months onwards In Telugu, Baby Toys from 6 months onwards In Bengali
Yes
No















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |