
மார்பக வலி என்பது, குறிப்பாக மாதவிடாய் காலத்தில், ஹார்மோன் மாற்றங்களினால் ஏற்படக் கூடிய பொதுவான ஒரு பிரச்சனையாகும். சில சமயங்களில், கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் கூட மார்பகங்களில் மாற்றங்களையும், வலியினையும் ஏற்படுத்தக் கூடும். அது மட்டுமின்றி, மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக அதிக வலியும், அசௌகரியமும் ஏற்படலாம்.
மார்பக பிரச்சனைகள் தொடர்பான வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, நீங்கள் உங்கள் மார்பகங்களை தாங்கிப் பிடிக்கும் வகையிலான நல்ல தரமான பிராவை, குறிப்பாக தூங்கும் வேளையில், அணிந்து கொள்ளலாம் அல்லது நீங்கள் பிரா அணிவதையே கூட தவிர்க்கலாம். நீங்கள் காபி மற்றும் பிற காஃபின் உள்ள பானங்களை பருகுவதை குறைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் புகை பிடிப்பது அல்லது மது அருந்துவதை கூட நிறுத்திக் கொள்வது நல்லது. மார்பக வலி ஏற்படும் போது, பெண்கள் ஐஸ் பேக்-ஐ உபயோகப்படுத்தி ஒத்தடம் கொடுப்பது கூட நிவாரணம் அளிக்கும்.
மேற்குறிப்பிட்ட ஆலோசனைகள் எதுவும் பயன்படவில்லையென்றால், ஒரு வேளை நீங்கள் ஏதோ ஒரு வகையான மார்பக நோயினால் அவதிப்பட வாய்ப்பிருக்கிறது. உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்தித்து உங்கள் மார்பக நிலைமை குறித்து தெரிந்து கொண்டு, அதை எப்படி குணப்படுத்துவது என்று கலந்தாலோசிக்க வேண்டும். உங்களுக்கு பொதுவாக மாதவிடாயின் போது இவ்வாறு வலி ஏற்படாது என்னும் பட்சத்தில், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
சில சமயங்களில், உங்கள் மார்பக திசுக்களில் திரவம் நிறைந்துள்ள ஒரு பை உருவாகி விடும். இது வயதான பெண்களின் மார்பகங்களில் பொதுவாக காணப்படும் ஒன்றாகும். எனினும், டீனேஜ் பெண்களின் மார்பகங்களிலும் கூட நீர்க்கட்டிகள் உருவாகக் கூடும். நீர்க்கட்டிகள் பற்றிய மற்றொரு முரண்பாடான உண்மை என்னவென்றால், ஒரே இரவில் நீர்க்கட்டிகள் உருவாகி, குறிப்பாக மாதவிடாய் காலத்தில் அவை மிகுந்த வேதனை நிறைந்ததாய் இருக்கும். கவனிக்காமல் விட்டு விடும் பட்சத்தில், அவை அளவில் பெரியதாக ஆகி, அதிக வலியை ஏற்படுத்தும்.
உங்கள் மார்பகத்தின் மேற்பரப்பின் அருகில் நீர்க்கட்டி உருவாகி இருந்தால், அது தொடுவதற்கு மென்மையாகவும், கொப்புளம் போன்று தான் தோன்றும். எனினும், மார்பக திசுக்களின் ஆழத்தில் அது உருவாகியிருந்தால், மார்பக திசுக்களின் அடுக்குகளால் மூடப்பட்டிருப்பதால், அவை திரவம் நிறைந்துள்ள கடினமான கட்டி போன்று தோன்றும். எப்படியிருந்தாலும், அவை மார்பக வலி மற்றும் பிற கடுமையான பிரச்சனைகளை உருவாக்கி விடும். நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்சனை குறித்து தெரிந்து கொள்வது நல்லது.
இவை தீங்கற்ற கட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன, இவை இன்று பொதுவாகவே பெண்களில் காணப்படும் ஒன்றாகும். உண்மையில் சொல்ல போனால், எல்லா வயது பெண்களுக்கும் ஃபைப்ரோஅடினோமாஸ் காணப்படும். இந்த கட்டிகள் வலியில்லாததாக இருக்கும், மேலும் இவை மார்பக திசுக்களில் சாதாரணமாக அங்குமிங்கும் நகர முடியும். அவற்றின் அளவுகள் பெரிய அளவில் வேறுபடும், மேலும் அவை உங்கள் மார்பக திசுக்களில் எங்கு வேண்டுமானாலும் வளரும் வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனையின் போது, வலியில்லாத ஆயினும் உறுதியான கட்டியை ஒருவர் உணரலாம். சேதமடைந்த கொழுப்பு நிறைந்த மார்பக திசுக்களின் காரணமாக இந்த கட்டி உருவாகிறது. ஒரு பெண்ணுக்கு பெரிய மார்பகங்கள் இருப்பது அல்லது கன்றிப் போன காயங்கள் ஏற்பட்டிருப்பது அல்லது மார்பகங்களில் அடிபட்டிருந்தாலோ, ஃபேட் நெக்ரோசிஸ் ஏற்படும் அதிக வாய்ப்புள்ளது.
ஆயினும், நீங்கள் புற்று நோய் வரக் கூடிய அபாயம் குறித்து கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், இந்த கட்டிகள் கேடு விளைவிப்பவை அல்ல. இருந்தாலும், உங்களுக்கு முன்னர் புற்று நோய் பாதிப்பு இருந்து, அந்த புற்று நோய் கட்டிக்கான கதிரியக்க சிகிச்சை எடுத்த பின்னர், ஃபேட் நெக்ரோசிஸ் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த கட்டியை அகற்ற வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து பரிசோதனை செய்த பின்னர் உங்கள் மருத்துவர் முடிவு செய்வார்.
சில சமயங்களில், மார்பக திசுக்களின் அதிகப்படியான வளர்ச்சியின் காரணமாக எதிர்பாராத வலி ஏற்படும். இது ஸ்கிளீரோசிங் அடினோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சியானது மிக நுண்ணியதாக இருப்பினும், மேமோகிராமில் பார்க்கும் போது குறிப்பிடத்தக்க அளவில் இதன் தோற்றம் இருக்கும். மேலும், இந்த பிரச்சனையின் காரணமாக சிலருக்கு கட்டிகள் உருவாகலாம் அல்லது வலி ஏற்படலாம்.
இந்த பிரச்சனை ஃபைப்ரோசிஸ்டிக் நோய் என்று அழைக்கப்படுகிறது, மார்பகங்களில் ஏற்படும் கட்டித்தன்மையே இந்த நோயின் பண்புகளாக அறியப்படுகிறது. மேலும், இந்த கட்டித்தன்மையின் காரணமாக, முடியுடன் கூடிய கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனை கண்டறிவது மிகவும் கடினமாகும், அதாவது அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லாததால் மிதமான அல்லது லேசான வலியிருந்தும் கூட அதை கண்டு கொள்ளாமல் நோயாளி வீட்டுக்குச் சென்று விடுவார். இத்தகைய அறிகுறிகளை கண்டுபிடிப்பதற்கு, உங்கள் மார்பகங்களை நீங்கள் வாடிக்கையாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே! - ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படும் மார்பக மாற்றங்கள் மற்றும் வலி: காரணங்கள் மற்றும் தீர்வுகள்
மார்பக புற்று நோய் அடிப்படையிலேயே கடினமான, வலி நிறைந்த கட்டியாகும், இது எல்லா வயதுப் பெண்களிலும் பொதுவாக காணப்படுகிறது. மார்பக ஆய்வின் போது, நீங்கள் கடினமான, நகராத, மற்றும் பாரமாக தோன்றுகிற கட்டியினை கண்டுபிடித்தால், நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். இந்த பிரச்சனை குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்கு, உங்கள் மருத்துவர் உடனடியாக மேமோகிராம் செய்வதற்கு பரிந்துரை செய்வார். மேலும், உங்கள் மார்பகத்தில் பள்ளம் விழுந்தது போல் தோன்றுவது கூட கடினமான கட்டி இருப்பதன் அடையாளமாகும்.
நீங்கள் சமீப காலமாக உங்கள் மார்பக காம்புகளில் அசாதாரணமான நீர்க்கசிவு அல்லது மார்பக வலியை நீங்கள் கவனித்தீர்களானால், நீங்கள் மார்பக நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அதிக வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி, பல பெண்கள் தங்கள் மார்பகங்களின் அளவு, வடிவம் மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை கூட கவனித்திருப்பார்கள். மேலும், மடிப்புகள் மற்றும் சுருக்கங்கள் நிறைந்த மார்பகங்கள் மட்டுமின்றி, மார்பக கோளாறு ஏற்படும் போது மடிப்புள்ள அல்லது செதில் செதிலான மார்பக காம்புகளும் கூட தென்படும்.
மார்பக பிரச்சனைகளின் இந்த எல்லா அறிகுறிகளும் அசௌகரியத்தையும், வலியையும் ஏற்படுத்தும். எனவே, நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, நோய் கண்டறியும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். எந்த மாதிரியான மார்பக வலி ஏற்பட்டாலும், ஆரம்ப நிலையிலேயே ஆய்வு செய்வது தான் சிறந்த வழிமுறையாகும்.
மேமோகிராம் பரிசோதனையின் மூலம் உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகங்களை ஆய்வு செய்வார். மேமோகிராம் என்பது அடிப்படையில் ஒரு எக்ஸ்-ரே ஆகும். ஏதேனும் இயல்பற்ற அமைப்புகள் காணப்பட்டால் அதனை உங்கள் மருத்துவர் மேமோகிராம் உதவியுடன் கண்டுபிடிக்க முடியும், அதாவது கட்டிகள் ஏதேனும் இருந்தால் மேமோகிராமில் தெளிவாக தெரியும். மேமோகிராம் மட்டுமின்றி, எண்ணற்ற பிற சோதனை முறைகளும் கூட செய்யப்படுகின்றன. மார்பக அல்ட்ராசவுண்ட், கேலெக்டோகிராஃபி மற்றும் நீடில் பயாப்சி போன்றவை பொதுவாக செய்யப்படும் பிற நோய் கண்டறியும் பரிசோதனை முறைகளாகும்.
ஆரம்ப நிலையிலேயே மார்பக பரிசோதனையை மேற்கொள்வது, கடுமையான மார்பக பிரச்சனைகள் மற்றும் நோய்களை தவிர்ப்பதற்கு உதவும். உங்கள் மார்பக திசுக்களில் கட்டிகள் அல்லது பிற இயல்பற்ற அமைப்புகளை கண்டறிவதற்கு, உங்கள் மருத்துவர் மார்பக பயாப்சியை கூட எடுப்பார்.
Breast problems in tamil, breast disease in tamil, types of breast problems in tamil, how to treat breast disease in tamil, Breast Diseases: Types, Symptoms & Diagnosis in Telugu, Breast Diseases: Types, Symptoms & Diagnosis In Bengali, Breast Diseases: Types, Symptoms & Diagnosis In Hindi, Breast Diseases: Types, Symptoms & Diagnosis In English



This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |