This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்

Pregnancy
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 11, 2026
பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்
Read time5 min

தைராய்டு சுரப்பிகளில் காணப்படும் உயிரணுக்களின் வளர்ச்சி தைராய்டு புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. தைராய்டு சுரப்பியானது ஒரு நபரின் தொண்டைக் குழியின் கீழே கழுத்து அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இது பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் உள்ளது. தைராய்டு சுரப்பியானது இதய துடிப்பு கட்டுப்பாடு, இரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதில் தொடர்பு கொண்டுள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் ஆரம்ப கட்டங்களில் வெளியில் தெரியாது. ஆனால், பிற்கால கட்டங்களில், இந்த அறிகுறிகள் கழுத்தில் வீக்கம் முதல் குரலில் மாற்றங்கள் வரை இருக்கலாம். சிலருக்கு உணவு மற்றும் திரவங்களை விழுங்குவதில் கூட சிரமம் உள்ளது. பெரும்பாலான வகை தைராய்டு புற்றுநோய்கள் மெதுவான வளர்ச்சியைக் கொண்டுள்ளன மற்றும் பரவுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், மிகவும் அபரிதமான மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சில வகைகள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக, தைராய்டு புற்றுநோய் வகைகளில் பெரும்பாலானவை ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் அவற்றுக்கு சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

தைராய்டு புற்றுநோய் என்றால் என்ன?

தைராய்டு புற்றுநோயானது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. இது முதன்மையாக ஆண் மற்றும் பெண் உடலில் மாறுபடும் ஹார்மோன்களின் காரணமாக இருக்கலாம். தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் வளர்ச்சியானது முடிச்சுகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை 80% வரை பெண்களை பாதிக்கும். அதிர்ஷ்டவசமாக, பெண்களில் பெரும்பாலான தைராய்டு அறிகுறிகள் சிகிச்சையளிக்கக்கூடியவை மற்றும் இந்த வளர்ச்சிகளில் 5 முதல் 15% மட்டுமே வீரியம் மிக்கவை. புற்றுநோய் ஏற்பட்டால், முடிச்சுகள் அல்லது புற்றுநோய் செல்கள் பொதுவாக அருகிலுள்ள நிணநீர் முனைகளுக்கு பரவுகின்றன. தைராய்டு புற்றுநோயில் மிகவும் பொதுவான வகை பாப்பில்லரி கார்சினோமா தைராய்டு ஆகும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, சிறந்த மற்றும் துல்லியமான சோதனையானது பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிறந்த நோய் மேலாண்மைக்கு உதவுகிறது. இதன் விளைவாக அதிக கேஸ்களில் இது நல்ல பலனை அளித்துள்ளது, மறுபுறம், தைராய்டு புற்றுநோயானது மூன்றாவது மிகவும் பொதுவான புற்றுநோய் வகையாக மாறும் என்று கூறப்படுகிறது. ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், முன்கூட்டிய சிகிச்சை மேம்பட்டு வருகிறது மற்றும் பெரும்பாலான தைராய்டு புற்றுநோய் நோயாளிகளுக்கு 20 ஆண்டுகள் உயிர்வாழும் விகிதத்துடன் குணமடைய 98% வாய்ப்பு உள்ளது. சில மருத்துவர்கள் இதை ஒரு நோய் என்பதை காட்டிலும் நாள்பட்ட கண்டிஷன் என்று அழைக்கிறார்கள், இது மருந்துகள், வழக்கமான சுகாதார பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் சரி செய்யப்படலாம்.

பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்

பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோய் அறிகுறிகளானது அவை புற்றுநோயாக மாறும் வரையில் கூட வெளிப்படாது. புற்றுநோயாக வளரும்போது, இது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்,

  • கழுத்து பகுதியில் ஒரு முடிச்சு அல்லது கட்டியை வெறும் கைகளால் தொட்டு உணர முடியும்.

  • கழுத்தைச் சுற்றி இறுக்குவது போன்ற உணர்வு.

  • குரல் மிகவும் கரகரப்பாக மாறுவது.

  • விழுங்குவதில் சிரமம்.

  • கழுத்தில் விரிவாக்கப்பட்ட நிணநீர் கணுக்கள்.

  • கழுத்து வலி.

  • தொண்டை வலி.

தைராய்டு புற்றுநோயைக் கண்டறிதல்

ஒரு நபர் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்திருந்தால், அவராகவே தைராய்டு புற்றுநோயை கண்டறிய முடியும். எடுத்துக்காட்டாக, கழுத்து அடிப்பகுதியில் ஒரு கட்டி அல்லது புண் உருவாவதை ஒரு பெண் கவனித்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. கட்டியின் சரியான தன்மையை அறிய மருத்துவர் சிடி (CT) ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலம் சோதனை செய்வார். வழக்கமாக கழுத்தில் ஏற்படும் இதன் வளர்ச்சி பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் முறை பின்பற்றப்படுகிறது.

சில நேரங்களில், கழுத்தில் சிறிய முடிச்சுகளும் உருவாகலாம். சோதனைகளை நடத்துவதற்கு முன்பு அவற்றை உன்னிப்பாக கண்காணிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தலாம். அவை பெரியதாக வளர்ந்தால், அவற்றை நுண்ணிய ஊசி மூலம் உறிஞ்சி எடுத்து சோதிக்கலாம். இந்த செயல்முறையில் ஒரு ஊசியின் உதவியுடன் முடிச்சு அல்லது கட்டியிலிருந்து உயிரணு மாதிரிகளை சேகரித்து ஒரு ஆய்வகத்தில் நுண்ணோக்கின் கீழ் பரிசோதிப்பதும் அடங்கும். முடிச்சு பயாப்ஸிகளில் 70% அவை தீங்கற்றவை என்பதை வெளிப்படுத்துகின்றன. சில நேரங்களில் இந்த பயாப்ஸிகளும் தெளிவற்ற முடிவுகளை வழங்கலாம். ஆனால் அவ்வாறு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படும் கேஸ்கள் 5% மட்டுமே ஆகும்.

இதையும் படிக்கலாமே! - பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் இம்பேலன்ஸ் என்றால் என்ன? இதை எப்படி குணப்படுத்தலாம்?

தைராய்டு புற்றுநோயிற்கான சிகிச்சை

  • பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகளுக்கான மிகவும் பொதுவான மற்றும் விருப்பமான சிகிச்சை முறை என்பது அறுவை சிகிச்சை முறையாகும். பாதிக்கப்பட்ட நிணநீர் கணுக்கள் பொதுவாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகின்றன, இதனால் உடலிலிருந்து புற்றுநோய் செல்களை அகற்றப்படுகிறது. அறுவைசி கிச்சைக்குப் பிறகு, சுரப்பியின் இழப்பை ஈடுசெய்ய நோயாளி தைராய்டு ஹார்மோன்களுக்கான மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கும். சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் செல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த நோயாளிகள் ரேடியோஆக்டிவ் அயோடின் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

  • தைராய்டு புற்றுநோய் விஷயத்தில் தைராய்டு சுரப்பியை அகற்றும் பாரம்பரிய அறுவை சிகிச்சை முறை தைராய்டெக்டோமி என்று அழைக்கப்படுகிறது. மற்ற அறுவை சிகிச்சையில் நடப்பது போலவே, இது கழுத்து பகுதியில் ஒரு வடுவை ஏற்படுத்துகிறது. எனவே, நிறைய நோயாளிகள் அறுவை சிகிச்சை முறையை விரும்புவதில்லை. மாற்றாக, வடு இல்லாத தைராய்டெக்டோமியைத் தேர்வு செய்யலாம், இதில் தைராய்டு சுரப்பி வாய் வழியாக அகற்றப்படுகிறது. இந்த சிகிச்சையில் கழுத்தில் எந்த கீறலும் ஏற்படுவதில்லை.

  • அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து மீள்வதற்கு வாரங்கள் அல்லது சில நேரங்களில் மாதங்கள் கூட ஆகலாம். சிகிச்சைக்கு பின்னர் எந்தவொரு தொற்றுநோயும் ஏற்படுவதைத் தவிர்க்க பெண்களுக்கு நிறைய ஓய்வு அறிவுறுத்தப்படுகிறது. சுரப்பி இழப்பிலிருந்து மீட்க உதவும் புதிய தைராய்டு மருந்துகளுக்கு அவர்கள் தங்கள் உடலை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பு (Reference)

1. Nguyen QT, Lee EJ, Huang MG, Park YI, Khullar A, Plodkowski RA. (2015) Feb Diagnosis and treatment of patients with thyroid cancer.

2. Bogović Crnčić T, Ilić Tomaš M, Girotto N, Grbac Ivanković S.(2020) Risk Factors for Thyroid Cancer: What Do We Know So Far? Acta Clin Croat.

Tags

Thyroid Cancer in English, Thyroid Cancer in Bengali, Thyroid Cancer in Telgu Thyroid Cancer in Hindi

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.