This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் இம்பேலன்ஸ் என்றால் என்ன? இதை எப்படி குணப்படுத்தலாம்?

Hormones
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் இம்பேலன்ஸ் என்றால் என்ன? இதை எப்படி குணப்படுத்தலாம்?
Read time6 min

முன்னுரை

பொதுவாக ஹார்மோன்கள் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றன. இதன் விளைவாக பல அறிகுறிகள் ஹார்மோன் சமநிலையின்மையை குறிக்கலாம். ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்வதற்கு இதனால் ஏற்படக்கூடிய நிலைகளை சரியாக கையாள்வது அவசியமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை

உடலானது ஹார்மோன்களை இரசாயனத் தூதுவர்களாகப் பயன்படுத்துகிறது. இந்த சக்திவாய்ந்த இரசாயனங்கள், நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு வழிகாட்டுவதற்கு இது இரத்த ஓட்டம் வழியாகப் பாய்கிறது. இனப்பெருக்கம் மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற பல முக்கியமான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதை இவை ஆதரிக்கின்றன.

நீங்கள் ஹார்மோன் சமநிலையின்மையை அனுபவிக்கும் போது உடலில் ஒரு குறிப்பிட்ட ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும் அல்லது போதுமானதாக இல்லாமலும் இருக்கும். மிகச் சிறிய மாற்றங்கள் கூட உங்களுடைய முழு உடல் நிலையும் கணிசமாக பாதிக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மைக்கான அறிகுறிகள்

ஹார்மோன்கள் ஒரு பெண்ணின் பொதுவான ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. இதன் விளைவாக, பல்வேறு அறிகுறிகள் மற்றும் குறிப்புகள் ஹார்மோன் சமநிலையின்மையை சுட்டிக்காட்டலாம். ஹார்மோன்கள் சரியாக செயல்படுகிறதா என்பதைப் பொறுத்து இந்த அறிகுறிகள் அல்லது குறிப்புகள் மாறுபடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மைக்கான அறிகுறிகள் பின்வருமாறு:

  • பொதுவான சோர்வு மற்றும் தசை பலவீனம்

  • எடை அதிகரிப்பு

  • உயர்ந்த அல்லது குறைந்த இதயத்துடிப்பு

  • மார்பகத்தில் ஏற்படும் வலி

  • முடி கொட்டி, அதன் அடர்த்தி குறைதல்

  • சுலபமாய் முறியத்தக்க எலும்புகள்

  • தோல் அழற்சிகள்

  • இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம்

  • கிளிட்டோரிஸ் பெரிதாகுதல்

  • தாகம்

  • பார்வைக் குறைபாடு

  • பெண்களுக்கு இருக்கும் ஹார்மோன் பிரச்சனைகள்

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் :

பெண்களுக்கு இருக்கும் மிகவும் பொதுவான ஹார்மோன் சமநிலையின்மை பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்று அழைக்கப்படுகிறது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் மாதவிடாய் இன்மை போன்றவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

மலட்டுத்தன்மை :

பிசிஓஎஸ் போன்ற ஹார்மோன் தொடர்பான நிலைமைகள் மலட்டுத்தன்மையை கொண்டு வரக்கூடும். கருவுறாமைக்கு முக்கிய காரணம் ஹார்மோன் சமநிலையின்மை தான்.

கர்ப்ப காலத்தில் ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்கள் :

ஹ்யூமன் கோரியானிக் கொனடோட்ரோபின் (மனிதனுக்கான கருக்கோளகப் பாலினச் சுரப்பூக்கி) ஹார்மோன் (ஹெச்சிஜி) :

தாயின் இரத்தம் மற்றும் சிறுநீரில், சில ஹார்மோன்களின் அளவுகள் முதல் டிரைமெஸ்டர் முழுவதும் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஹெச்சிஜி அதிக அளவில் இருப்பது ஒருவரை கவலையடையச் செய்து, நோய்வாய்ப்பட வைக்கிறது.

ஈஸ்ட்ரோஜன் (பெண்மையூக்கி) :

மீதமுள்ள காலத்தை ஒப்பிடும்போது, கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறார்கள். முதல் டிரைமெஸ்டரில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால் இது சில பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தலாம். இரண்டாவது டிரைமெஸ்டரில் பால் குழாயின் வளர்ச்சிக்கும் மார்பக விரிவாக்கத்திற்கும், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் அதிகமாவது முக்கியமான காரணமாகும்.

புரோஜெஸ்ட்டிரோன் (கருப்பை இயக்குநீர்) :

கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்டிரோனின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். பேரிக்காய் அளவில் இருக்கும் கருப்பையை விரிவுபடுத்தி குழந்தையை அதனுள்ளே வைத்துக் கொள்ளும் அளவிற்கு அதனை பெரிதாக்க இந்த ஹார்மோன் உதவுகிறது.

திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் :

உடல் ரீதியிலான தொடர்பு காரணமாகவும் கூட ஹார்மோன்கள் சமநிலையில்லாமல் இருக்கலாம், இது உடலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்த மாற்றங்களில் பின்வருபவை அடங்கும்:

  • ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள்

  • உங்களுடைய மார்பங்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள்

  • சருமம் சிவந்து போதல்

மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

  • மாதவிடாயின் முதல் நாளில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் மிகக் குறைவாக இருக்கும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறையும் போது (எஃப்எஸ்எச்) சுரப்புப்பையை-தூண்டும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. எஃப்எஸ்எச் சுரப்புப்பைகளின் முதிர்ச்சியை எளிதாக்குகிறது.

  • ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பானது கருக்கட்டி ஊக்க இயக்குநீர் (லூடினைசிங் ஹார்மோனின்/எல்எச்) அதிகரிப்பைத் தூண்டுகிறது, இது 12 மற்றும் 14 நாட்களுக்குள் சுரப்புப்பைகளில் இருந்து முட்டைகளை வெளியிடுகிறது.

  • சுரப்புப்பைகள் கர்ப்பத்திற்குத் தயாராகும் போது புரோஜெஸ்ட்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் சுரக்கின்றன.

  • 28 ஆம் நாளுக்குள் முட்டைகள் கருவுறவில்லை என்றால், ஈஸ்ட்ரோஜனின் அளவு தொடர்ந்து குறைகிறது, மேலும் பின்வரும் சுழற்சி தொடங்குகிறது.

மார்பகங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

பருவமடையும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, கருப்பைகள் ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன, இது மார்பக திசுக்களில் கொழுப்பைக் குவிக்கிறது. அதிகரித்த கொழுப்பு காரணமாக மார்பகங்கள் பெரிதாகின்றன, இது பால் குழாயின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

இருந்தாலும், மாதவிடாய் நின்ற பிறகு, ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியானது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும், இதன் விளைவாக மார்பகத்தில் தொய்வு ஏற்படுவதோடு மார்பக அளவும் குறைகிறது.

உடலுறவுக்குப் பிறகு எற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

ஆக்ஸிடாஸின், செரோடோனின் மற்றும் எண்டோர்பின் போன்ற இரசாயனங்கள் பாலியல் செயல்பாடுகளுக்குப் பிறகு வெளியிடப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. உச்சக்கட்டத்தின் போது, ஆக்ஸிடாஸின் அதிக அளவில் வெளியாகும்.

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மைக்கான தீர்வுகள்:

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் அல்லது ஹார்மோன் சிகிச்சை :

ஹார்மோன்களை- ஒழுங்குபடுத்தும் இந்த மருந்துகளில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உள்ளது, இது மாதவிடாய் சுழற்சிகளை (மற்றும் இதற்குத் தொடர்புடைய அறிகுறிகளை) கட்டுப்படுத்த உதவுகிறது. வளையங்கள், மாத்திரைகள், ஷாட்கள் அல்லது கருப்பைக்கான சாதனங்கள் பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளாக (ஐயூடி-க்கள்) பயன்படுத்தப்படுகின்றன.

ஆண்ட்ரோஜன் எதிர்ப்பு மருந்துகள் -

ஆண்ட்ரோஜன் ஹார்மோனின் வெளியீட்டைத் தடுப்பதன் மூலமாக இந்த மருந்துகள் முகப்பரு பிரச்சனைகளை குறைக்கும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்ககும் மற்றும் முடி உதிர்வை குறைக்கும்.

ஹார்மோன்களுக்கான மாற்று சிகிச்சை -

ஹாட் ஃப்ளேசஸ் (உடலைச் சுற்றி ஓரு நெருப்பு வளையம் இருப்பது போல தோன்றுதல்) போன்ற மெனோபாஸின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க இது உதவுகிறது.

க்ளோமிபீனுடன் லெட்ரோஸோல் -

சிறந்த கருமுட்டை உற்பத்திக்கு, இந்த மருந்துகள் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) அல்லது மலட்டுத்தன்மையுடன் இருக்கும் பெண்களால் எடுக்கப்படுகின்றன.

பிறப்புறுப்பு ஈஸ்ட்ரோஜன் –

பிறப்புறுப்பு வறட்சியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, ஈஸ்ட்ரோஜன் இருக்கும் க்ரீமை பெண்கள் நேரடியாக பிறப்புறுப்பு திசுக்களில் தடவலாம். பிறப்புறுப்பு வறட்சியைக் குறைப்பதற்காக ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகளும் உள்ளன.

நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பம் -

செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற இனப்பெருக்க தொழில்நுட்பமானது பிசிஓஎஸ் சிகிச்சைக்கும் மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் தாய்ப்பால் எப்போது சுரக்க ஆரம்பிக்கிறது?

முடிவுரை

ஹார்மோன்கள் பல முக்கியமான உடல் செயல்பாடுகளை நிர்வகிக்கின்றன. மேலும், ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் அறிகுறிகள் மிகவும் மாறுபட்டதாக இருக்கும்.

ஹார்மோன் சமநிலையின்மைக்கு விரைவில் சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஹார்மோன் சமநிலையின்மைக்கு சிகிச்சையளிப்பதில் முக்கியமான முதல் படி, உங்களுடைய உடல் அல்லது ஆற்றல் நிலைகளில் ஏதேனும் மாற்றங்களைக் கண்டறிந்தவுடன் நீங்கள் உங்களுடைய மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.