This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your ovulation on mylo app

பெண்களுக்கான 25 எடை இழப்பு குறிப்புகள்

Weight Loss
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 24, 2026
பெண்களுக்கான 25 எடை இழப்பு குறிப்புகள்
Likes8 Likes|
Read time6 min

பெண்களுக்கான எடை குறைப்பு பற்றி இணையத்தில் ஏராளமான தகவல்கள் இருந்தாலும், அதிலிருந்து எளிமையான, பயனுள்ள முறைகளைத் தேர்ந்தெடுப்பதென்பது மிகவும் சவாலானது. எனவே, எடை இழப்பதற்காக அறிவியல்பூர்வமாகவும் மற்றும் நிலையான வழியிலும் இருக்கும் பின்வரும் வழிமுறைகளைப் பெண்கள் பின்பற்றினால் மிகவும் உதவியாக இருக்கும்:

1.தண்ணீர் குடிக்கவும்

உணவுக்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் அதிக கலோரிகளைக் கொண்ட உணவைச் சாப்பிடுவதைத் தடுக்கலாம். மேலும், இது அதிக கலோரிகளை எரிப்பதற்கும் உதவுகிறது. உணவுக்கு முன்பு தண்ணீர் குடிப்பவர்களின் உடல் எடையானது 44% வேகமாகக் குறைகிறது.

2.பிளாக் காபி (பாலில்லாத காபி)

பிளாக் காபியில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது, இது எடையைக் குறைக்க உதவுகிறது. இந்த அமிலம் உடலில் குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு செல்கள் உருவாவதைத் தாமதப்படுத்துகிறது. காபியானது பசியை நன்கு கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது.

3.இடைப்பட்ட உண்ணாவிரதத்தைத் தேர்ந்தெடுக்கவும்

இடைப்பட்ட உண்ணாவிரதமானது 12 மணி நேரத்திற்குப் பிறகு உடலின் கொழுப்பு செல்களை ஆற்றலுக்காக எரிக்க உதவுகிறது. சாப்பிடும் நேரத்தின் போது, அதிகமாக சாப்பிடாமல் இருக்கும்படி கவனமாக இருக்க வேண்டும். உண்ணாவிரதம் இருக்கும்போது ஒருவர் தண்ணீர் மற்றும் கலோரி இல்லாத பானங்களை குடிக்கலாம்.

4.சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை குறைத்துக் கொள்ளவும்

பாஸ்தா, பீட்சா, வெள்ளை ரொட்டி, சிப்ஸ் மற்றும் ஃப்ரைஸ் போன்ற உணவுகளுக்குப் பதிலாக, முழு தானிய உணவுகளான ஓட்ஸ், கினோவா, பழுப்பு அரிசி போன்றவற்றை சாப்பிடுவது பெண்களின் எடையைக் குறைக்க பெரிதும் உதவும்.

5.எதிர்ப்புக்கான பயிற்சி

குறைந்த காயங்களுடனான தசைகளைப் பெறுவதற்கு இது சிறந்த வழியாகும். எரிந்த பிறகு அதிகரிப்பதன் மூலமாகவும் எடை இழப்புக்கு உதவுகிறது. தொடர்ந்து உடல் எடையை குறைப்பதற்கு தினமும் குறைந்தபட்சம் 30 நிமிட பயிற்சி போதுமானது.

6.குளூட் புரதங்கள்

கடல் உணவு, இறைச்சி, முட்டை மற்றும் பால் ஆகியவை புரதத்திற்கான நல்ல ஆதாரங்களாகும். அதிக புரோட்டீன் நிறைந்த உணவானது ஒரு நபருக்கு வயிறு நிறைந்துவிட்ட உணர்வைத் தந்து பசியைக் குறைக்கும். புரோட்டீன்கள் மெதுவாக எடை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன மற்றும் பெண்களின் எடை இழப்பிற்க்கும் உதவுகிறது.

7.ஆழ்ந்த உறக்கம்/நல்ல தூக்கம்

குறைந்த பட்சம் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரைக்கும் போதுமான தூக்கம் தூங்குவதும் கூட எடை இழப்புக்கு உதவுகிறது. போதுமான தூக்கத்திற்கு ஒரு அட்டவணையை அமைத்துக் கொள்ளவும். தூக்கமின்மையானது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் மற்றும் நீர் தேக்கத்தை ஏற்படுத்தும்.

8.காலை உணவுக்கு முட்டை

முட்டையில் நல்ல உயர்தரமான புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்பு, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை அடங்கியுள்ளன. ஒரு பெரிய முட்டையில் சுமார் 74 கலோரிகள் உள்ளன. இது உங்களுடைய கலோரிகளைக் குறைக்கும் மற்றும் இதில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும். எடை இழப்புக்கு பெண்கள் இரண்டு முழு முட்டைகளைச் சாப்பிடுவதும் மிகவும் பாதுகாப்பானது.

9.நார்ச்சத்தினைச் சேர்த்துக் கொள்ளுங்கள்

30 கிராம் நார்ச்சத்தினை பெண்கள் உட்கொண்டால் இது அவர்களின் எடையைக் குறைக்க உதவும். நார்ச்சத்து, ஒருவரை நீண்ட நேரத்திற்கு பசியில்லாமல் நிறைவாக உணரவைக்கிறது மேலும் இது குடல் பாக்டீரியாக்களுக்கு ஆரோக்கியமானது. இது புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிள்கள், பீன்ஸ், இனிப்பு உருளைக்கிழங்கு, கீரை, இலை காய்கறிகள் போன்றவை நார்ச்சத்துமிக்க சிறந்த ஆதாரங்களாகும்.

10.ஜர்னலிங்

சாப்பிடும் உணவைக் கண்காணிக்கும் போது, சுயநினைவுடன் இருப்பதற்கு இது எளிதான வழியாகும்.

11.உணர்வுப்பூர்வமாக சாப்பிடுதல்

பெண்கள் சாப்பிடும்போது ஏற்படும் கவனச் சிதறல்களைத் தவிர்க்க வேண்டும், குறிப்பாக தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றை. சாப்பிடும் போது உணவில் கவனம் செலுத்தி சாப்பிடுவதால் அளவுக்கதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.

12.க்ரீன் டீக்கு மாறுங்கள்

இது ஆன்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்த மூலப்பொருளாகும். ஒவ்வொரு நாளும் மூன்று முதல் ஐந்து கப் வரை க்ரீன் டீ குடிப்பது அதிகபட்ச நன்மைகளைத் தருவதற்கு உதவும்.

13.குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இருக்கும் உணவில் கவனம் செலுத்துங்கள்

குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இருக்கும் உணவைச் சாப்பிடுவதால், பெண்கள் அதிகமாக கார்போஹட்ரேட் சேர்த்துக் கொள்வது தடுக்கப்படுகிறது. இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் தடுப்பதும் நீண்ட கால நன்மையாக இருக்கும். முழு தானியங்கள், பழங்கள், பருப்பு வகைகள், பால், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்றவை கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுப்பொருட்களாகும்.

14.மன அழுத்தத்தைக் குறைக்கவும்

மன அழுத்தமானது கார்டிசோல் எனப்படும் பசிக்கான ஹார்மோனை அதிகரிக்கச் செய்கிறது. மன அழுத்தத்தைக் குறைப்பது பெண்களின் எடையைக் குறைக்க உதவும்.

15.உணவுக்கு அடிமையாவதில் இருந்து விடுபடுவதற்கு சிறிது சிறிதாகச் சாப்பிடுங்கள்

பெண்கள் உணவை சிறிது சிறிதாக பிரித்துச் சாப்பிடுவதால், நொறுக்குத் தீனிகளை தின்பதைத் தவிர்க்கிறது. இப்படிச் சாப்பிடுவதால் அவர்களை பசி இல்லாமல் நிறைவாக வைத்திருக்கும்.

16.சிறிய தட்டுக்களைப் பயன்படுத்தவும்

சிறிய அளவில் இருக்கும் தட்டுகளில் உணவைச் சாப்பிடுவதால், நாம் வழக்கமாக உண்ணும் உணவின் அளவை குறைத்துச் சாப்பிடுவதற்கு உதவும் உணர்வைத் தரும்.

17.புரோபயாடிக் (நுண்ம உயிர்க்கலவை) துணைப்பொருட்களை சாப்பிட ஆரம்பிக்கவும்

இவை ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை அதிகரிப்பதற்கு உதவுகின்றன. இது ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதைக் குறைக்கிறது.

18.காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடுதல்

காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தாதுக்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இவை ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. கூடுதலாக, இவை ஆன்டிஆக்ஸிடண்டுகளால் நிரப்பப்படுகின்றன, இது நாள்பட்ட நோய்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.

19.யோகா பயிற்சி செய்தல்

யோகா உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. இது மனதையும் உடலையும் கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது.

20.ஏரோபிக்ஸ் செய்யத் தொடங்குங்கள்

பெண்கள் ஏரோபிக்ஸ் செய்வதன் மூலமாக கலோரிகளை எரிக்க உதவுவதோடு, அவர்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும். இது தொப்பை கொழுப்பை எரிப்பதற்கு பெரிதும் உதவுகிறது.

21.மெதுவாக மென்று சாப்பிடவும்

ஒவ்வொரு சாப்பாட்டையும் மெதுவாக மென்று சாப்பிடுவது உணவின் போதுமான சிதைவை அதிகரிக்கிறது மற்றும் எளிதாக செரிமானம் ஆகிறது.

22.சிறிதளவு பளுதூக்குதல் நல்லது

தசையின் நிறையை அதிகரிப்பது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மேலும் இது நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும். பெண் எடை தூக்கும் பயிற்சியில் ஈடுபடும்போது, அவர்களுடைய கொழுப்பு அதிகரிப்பின் சதவீதம் குறைகிறது.

23.பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துங்கள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக, பெண்களுக்கு தேவையற்ற கலோரிகள் சேர்வது தடுக்கப்படுகிறது, இதனால், அவர்கள் தங்களுடைய எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க முடியும்.

24.உணவுக்கு அடிமையாவதில் இருந்து மீண்டு வாருங்கள்

உணவின் மீது அதிக ஆசை கொண்டிருக்கும் பெண்களுக்கு, அந்த உணவினால்தான் அவர்களின் எடையும் அதிகரிக்கிறது. பல்வேறு சுவையான உணவுகள் அல்லது தின்பண்டங்களை சாப்பிடுவதில் இருந்து அவர்கள் வெளியே வந்துவிட்டால், அவர்களால் சரியான எடையைப் பராமரிக்க முடியும்.

இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க உதவும் 8 சூப்பரான டிப்ஸ்

25.கூடுதலாக சர்க்கரை சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளவும்

இது பெண்களின் உடல் எடையைக் குறைப்பதற்கான முக்கியமான குறிப்புகளில் ஒன்றாகும். சர்க்கரை சாப்பிடுவதை குறைத்துக் கொண்டால் பத்து வாரங்களில் 2 பவுண்டுகள் எடை இழக்கலாம்.

பெண்களின் எடை இழப்பில் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. எடை குறைப்பதற்கு முயற்சிக்கும் முன்பு அவர்களுடைய ஹார்மோன் அளவுகள் சரிபார்க்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பல்வேறு ஹார்மோன் பிரச்சனைகளாலும் கூட உடல் எடை கூடும். மருத்துவரின் உதவி இல்லாமல், நீங்கள் எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்தாலும் கூட, அது உங்களுக்கு உதவாது.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.