This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

8 வார கர்ப்பத்தின் போது ஒரு குழந்தையின் நார்மலான அளவு

Pregnancy Bump
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 28, 2026
8 வார கர்ப்பத்தின் போது ஒரு குழந்தையின் நார்மலான அளவு
Likes24 Likes|
Read time7 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • 8 வார கர்ப்பத்தில் உங்கள் குழந்தை கிட்னி பீன்ஸ் அளவில், 11-14 மில்லிமீட்டர் நீளமும் 0.4 அவுன்ஸ் எடையும் கொண்டிருக்கும், ஒவ்வொரு நாளும் ஒரு மில்லிமீட்டர் வளரும்.
  • மார்னிங் சிக்னஸ், சோர்வு, தூங்குவதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் உடல் அளவில் மாற்றங்கள் போன்ற கர்ப்ப கால அறிகுறிகளை இந்த வாரத்தில் நீங்கள் அனுபவிக்கலாம்.
  • சமச்சீரான உணவுமுறை, லேசான உணவுகள், போதுமான ஓய்வு, லேசான உடல் செயல்பாடு மற்றும் மது, புகைப்பிடித்தலை தவிர்த்தல் இந்த வாரத்தின் முக்கியமான பராமரிப்பு வழிகாட்டுதல்கள்.
  • கர்ப்ப காலத்தில் எந்த தயாரிப்புகள் உங்களுக்கு உதவும்? Explore our Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns.
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating4.0
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7

இந்த வாரத்தில் உங்கள் குழந்தை விரைவாக வளர்ந்து வருவதால், உங்களின் கர்ப்ப கால சுழற்சியை பல கட்டங்களாக பிரிக்க வேண்டியது அவசியம். கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், இந்த வாரத்தில் நீங்கள் கூடுதலாக கர்ப்ப கால அறிகுறிகளை உணரலாம். பார்ப்பதற்கு தெரியாமல் போனாலும், உங்கள் ஆடைகள் இறுக்கமாவதையும், 75 சதவீத பெண்கள் அனுபவிக்கும் மார்னிங் சிக்னஸ் உங்களுக்கும் வரும் போது, கர்ப்பமாக இருப்பதை நீங்கள் உணரலாம். எட்டு வார கர்ப்பத்தில் உங்கள் குழந்தை ஒவ்வொரு நாளும் ஒரு மில்லி மீட்டர் அளவு வளர்கிறது. குழந்தையின் உதடு, மூக்கு மற்றும் கண் இமைகள் வளர ஆரம்பிக்கும்.

8-வார குழந்தையின் அளவு

இந்த சமயத்தில், உங்கள் குழந்தை ஏற்கனவே அரை அங்குலம் அல்லது 11-ல் இருந்து 14 மில்லிமீட்டர் வரை நீளம் கொண்டும் மற்றும் 0.4 அவுன்ஸ் எடையுடனும் இருக்கும். உங்கள் குழந்தையின் அளவு மற்றும் எடையானது கிட்டத்தட்ட ஒரு கிட்னி பீன்ஸ் அளவில் இருக்கும். உங்கள் குழந்தை இப்படி வளர்வது ஆச்சரியமாக உள்ளது அல்லவா. உள்ளுறுப்புகள் மற்றும் இரத்த நாளங்கள் வளர ஆரம்பிக்கும். மேலும், சுற்றோட்ட அமைப்பானது தன் வேலையைத் துவங்கும் நேரம் இது.

உங்கள் குழந்தை பின்வரும் மாற்றங்களுக்கு உட்படும்:

  • தலையில் இருந்து கால் வரை கருவானது 1.2 செமீ இருக்கும்.

  • தோலின் அடுக்கிற்கு அடியில் கண்கள் உருவாகும். மூக்கு வளர ஆரம்பிப்பதைக் காணலாம்.

  • மேல் தாடை மற்றும் வாயின் மேற்பகுதி ஒன்றாக வளரும்.

  • நாக்கு மற்றும் உள் காது வளர ஆரம்பிக்கும்.

  • விரல்கள் வளர ஆரம்பிக்கும்.

  • குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ந்து வருகிறது. இருப்பினும் இந்த நேரத்தில் அக்குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கூற முடியாது.

  • காலப்போக்கில், கருவின் வாலானது மறைந்துவிடும்.

8 வார கர்ப்பத்தின் அறிகுறிகள்

நீங்கள் 8 வாரம் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால், கர்ப்ப கால அறிகுறிகள் உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இருப்பினும், நீங்கள் அனுபவித்து வரும் அறிகுறிகள் இந்த வாரமும் தொடரலாம் மற்றும் கூடுதலாக சில அறிகுறிகள் சேரலாம். உதாரணமாக, 8 வார கர்ப்பத்தில் நீங்கள் பின்வரும் அறிகுறிகளை உணரலாம்:

மார்னிங் சிக்னஸ் (காலை சுகவீனம்)

உள்ளபடி இது காலை சுகவீனம் என்று அழைக்கப்பட்டாலும், பெரும்பாலான பெண்கள் தங்கள் கர்ப்பத்தில் நாள் முழுவதும் குமட்டலை அனுபவிப்பார்கள். காலை சுகவீனமானது அதிகரித்து வரும் இரசாயனங்கள் காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக இந்த அளவானது பத்தாவது வாரத்தில் அதன் உச்சத்தில் இருக்கலாம். உங்களுக்கு அசாதாரணமான குமட்டல் ஏற்பட்டால், நீங்கள் உங்களின் மருத்துவரை அணுக வேண்டும்.

சோர்வு

முன்னரில் இருந்தே சோர்வாக உணர ஆரம்பித்து இருக்கலாம். அதிக புரோஜஸ்டரான் அளவு மற்றும் உங்கள் குழந்தைக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் சப்ளிமெண்ட்ஸ் காரணமாக இந்த வாரமும் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். எனவே, போதிய ஓய்வு எடுப்பது அவசியம். லேசான உடல் அசைவுகள் மற்றும் சீரான உணவு எடுத்துக்கொள்வது இதனை சமாளிக்க உதவும்.

தூங்குவதில் சிரமம்

நீங்கள் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், மாலை நேரத்தில் அது மறையத் தொடங்கும். இரசாயனங்கள் அதிகரிப்பு, சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை, செரிமான கோளாறு, மயக்கம் அல்லது பிற கர்ப்ப கால அறிகுறியால் ஏற்படும் அசௌகரியங்கள் ஆகியவை கர்ப்பத்தின் போது ஓய்வு எடுப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், இதனை சமாளித்து நீங்கள் ஓய்வெடுக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி நேரத்தை போக்கக்கூடாது. இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க பிரக்னன்ஸி தலையணைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

பெண்ணுறுப்பில் இருந்து வெளியேற்றம்

கர்ப்ப காலத்தின் இந்த சமயத்தில் உங்களின் பிறப்புறுப்பில் இருந்து வெளியேற்றங்கள் வருவது சாதாரணம் தான். இருப்பினும் நீங்கள் இப்போது செரிமான பிரச்சனை மற்றும் வீக்கத்தை அனுபவிக்கலாம். செரிமான அமைப்பு மூடிக்கொள்வதால் செரிமானத்தில் பிரச்சனை ஏற்படலாம். இது சுற்றோட்ட அமைப்பானது ஊட்டச்சத்துக்களை தக்க வைத்து குழந்தைக்கு அனுப்புவதை எளிதாக்குகிறது.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அதிகரித்த கர்ப்ப கால இரசாயனங்கள் சிறுநீரகத்தை சென்றடைவதால், அதிகப்படியான சிறுநீர் உருவாக்கப்படுகிறது. நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அன்றாடம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் காஃபின் அளவுகளை கண்காணிக்க வேண்டும். மேலும், தூங்குவதற்கு முன் சிறுநீர் கழித்துவிட்டு படுக்கைக்கு வருவதன் மூலமும், அடுத்து நீங்கள் எப்போது சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டும் என்பதை ஓரளவு கணித்து வைப்பதும் அவசியம்.

உடலின் அளவில் ஏற்படும் மாற்றம்

ஏற்கனவே அணிந்திருந்த பிரா தற்போது உங்களுக்கு சரியாக இல்லாமல் போவதை நீங்கள் கவனிக்கலாம். அது மட்டும் இல்லாமல் சௌகரியமான ஆடைகளை அணிவதும் முக்கியமானது. உதாரணமாக, நீங்கள் ஏற்கனவே அணிந்து வந்த டைட் ஜீன்ஸ் உங்களுக்கு பொருந்தவில்லை என்றால், தளர்வான ஆடைகளுக்கு மாறுவதற்கான நேரம் இது. மகப்பேறு ஆடைகளுக்கென்று ஸ்பெஷலாக இருக்ககூடிய கடைகளுக்கு சென்று ஆடைகளை வாங்குவது உங்களுக்கு உதவும். ஏனெனில், பெரும்பாலான ஆடைகள் கர்ப்பத்தின் இடைப்பட்ட காலம் மற்றும் இறுதியில், சில சமயங்களில் குழந்தை பிறந்த பிறகும் உங்களுக்கு தோதாக இல்லாமல் போகலாம்.

அறிகுறிகளானது ஒரு பெண்ணுக்கு பெண் மற்றும் கர்ப்பத்திற்கு கர்ப்பம் மாறுபடலாம். இருப்பினும், நீங்கள் எதையாவது அசாதாரணமாக கண்டால் உடனடியாக அது குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசி விடுங்கள்.

8வது வார கர்ப்பத்திற்கான உணவுமுறை குறித்த வழிகாட்டுதல்

உங்கள் இரண்டாவது மாத கர்ப்பத்திற்கான சில உணவுமுறை பரிந்துரைகள் இதோ.

  • உங்கள் உணவை நீங்கள் சரியான நேரத்திலும், சரியான அளவுகளிலும் சாப்பிடும்போது அதிலிருந்து போதுமான ஊட்டச்சத்து உங்களுக்கு கிடைக்கும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால், பால் சார்ந்த பொருட்கள் போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளவும். காலை உணவை செரிக்க உங்களுக்கு நீண்ட நேரம் கிடைப்பதால் காலை உணவை ரிச்சாக சாப்பிடலாம்.

  • சாலட்கள், முட்டைகள் மற்றும் பிற லேசான உணவுகள் மதியத்திற்கு பொருந்தும். வேக வைத்த முட்டையை மதிய உணவோடு சாப்பிடலாம். சப்பாத்தி, வேக வைத்த காய்கறிகள், சாதம், சாம்பார் போன்ற உணவுகள் இந்த கட்டத்திற்கு உங்களுக்கு ஏற்றது.

  • உங்கள் கர்ப்பத்தின் முக்கியமான பகுதியாக இதில் காலை சுகவீனத்தை நீங்கள் அனுபவிக்கலாம் என்பதால் லேசான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். லேசான உணவுகளை சாப்பிடுடவது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு, உங்களை ஆக்டிவாக வைத்து, செரிமானத்தையும் எளிதாக்கும். உங்களுக்கு எதையாவது சாப்பிட வேண்டும் போல தோன்றும் போது, குறைவான மசாலா பொருட்களுடன் வேக வைத்த காய்கறிகளை சாப்பிடுங்கள்.

சப்பாத்தி, வேக வைத்த காய்கறிகள், சாதம் மற்றும் சாம்பார் இந்த கட்டத்திற்கு ஏற்றது. உங்கள் கர்ப்பத்தின் முக்கியமான பகுதியாக இதில் காலை நோயை நீங்கள் அனுபவிக்கலாம் என்பதால் லேசான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். எனவே, லேசான உணவுகளை சாப்பிடவும். இது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு, உங்களை புத்துணர்ச்சியாக வைத்து, நெஞ்செரிச்சல் ஏற்படுவதையும் தடுக்கும். இரவு நேரத்தில் உங்களுக்கு எதையாவது சாப்பிட வேண்டும் போல தோன்றும் போது, குறைவான மசாலா பொருட்களுடன் வேக வைத்த காய்கறிகளை சாப்பிடுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவுகளைப் பொறுத்தே உங்களின் ஊட்டச்சத்துக்கள் அமையும். சர்க்கரை, பொரித்த மற்றும் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளைத் தவிர்க்கவும். ஏனெனில் இது உங்கள் குழந்தைக்கு எந்த ஒரு ஊட்டச்சத்தையும் அளிக்காது. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கொழுப்பில்லா புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள் கொண்ட சமச்சீரான உணவுகளில் இருந்தே உங்கள் குழந்தை போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறும். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க செய்யும் நிறைய வழிகள் உள்ளன. நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பது குறித்து உங்கள் மகப்பேறு மருத்துவருக்கு தெரிவிக்கவும். அப்போது தான் அவரால் உங்களுக்கு ஏதேனும் சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படுமா என்பதை கூற முடியும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்

8வது வார கர்ப்பதின் போது செய்ய வேண்டிய செயல்பாடுகள்

நீங்கள் உங்களின் எட்டாவது வார கர்ப்பத்தில் அடியெடுத்து வைப்பதால் உங்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ:

  • உங்களின் முதல் கர்ப்பகால மருத்துவர் சந்திப்பு

  • ஆரோக்கியமாக உண்ணுதல் (உங்கள் மருத்துவர் தவிர்க்க சொன்ன உணவுகள் உட்பட)

  • வழக்கமான உடல் செயல்பாடு

  • மது பானங்கள் மற்றும் புகைப்பிடித்தலை தவிர்த்தல்

Tags

8 Weeks Pregnant Baby Size in English, 8 Weeks Pregnant Baby Size in Bengali, 8 Weeks Pregnant Baby Size in Telugu

எதிர்பார்ப்பில் இருக்கும் அம்மாக்களால் நம்பப்படும் தேர்வுகள்

உங்கள் கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களில் ஏற்படும் அசௌகரியங்களை சமாளிக்க, மென்மையான பராமரிப்பு தயாரிப்புகள் உங்களுக்கு ஆறுதலையும் ஆதரவையும் தரும்.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

434 Moms bought
₹999₹154535% Off
Rating
4.0
()
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2011 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.