This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்

Pregnancy
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 30, 2026
கர்ப்ப காலத்தில் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்
Likes61 Likes|
Read time6 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • அத்திப் பழங்கள் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, கே, ஈ, டி, பி நிறைந்த ஊட்டச்சத்து மிக்க பழங்கள், கர்ப்ப காலத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை தரக்கூடியவை.
  • கர்ப்ப காலத்தில் அத்திப் பழம் சாப்பிடுவது இரத்த சோகையை எதிர்கொள்ள, மலச்சிக்கலை தீர்க்க, குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்த, மசக்கையை போக்க மற்றும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • அளவுக்கு மீறி அத்திப் பழம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, இரத்த சர்க்கரை குறைவு, இரத்த அழுத்த குறைவு மற்றும் ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம், எனவே மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தை பேண என்ன தேவை? Explore our Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns.
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating4.0
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4

கர்ப்ப காலத்தில் அத்திப் பழத்தின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்

அத்திப் பழங்கள் மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றாகும். அத்திப் பழங்களின் அருமையான சுவையின் பொருட்டு மட்டுமே அவை பயிரிடப்படுவதில்லை, அவற்றில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகளுக்காகவும் தான் விளைவிக்கப்படுகின்றன. அத்திப் பழம் என்பது ஒரு பூ ஆகும், இது உண்மையில் பழமல்ல. பழுத்த அத்திப் பழம் என்பது முழுமையாக மலர்ந்த மலராகும், நன்கு பழுத்த பழத்தின் அடையாளமாக இதனை எடுத்துக் கொள்ளலாம். அத்திப் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது உலர வைத்தும் சாப்பிடலாம். உலர்ந்த அத்திப் பழங்களை பல வருடங்களுக்கு பதப்படுத்தி வைக்கலாம். அத்திப் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அவை மலச்சிக்கலை தீர்ப்பதற்கும், உடல் எடை குறைப்பதற்கும், கண் நலனை பேணுவதற்கும், இரவில் நல்ல தூக்கம் வருவதற்கும், மூல வியாதியை குணப்படுத்துவதற்கும், கல்லீரலின் செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. மேலும், இது சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகவும் விளங்குகிறது. தவிர, இரத்த சோகை உள்ளவர்களுக்கு பயனளிப்பதாகவும், உங்களுக்கு மிருதுவான சருமத்தை நல்குவதாகவும், சிறுநீரக செயல்பாட்டினை மேம்படுத்துவதாகவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதாகவும் விளங்குகிறது. அது மட்டுமின்றி, இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலுவானதாகவும் ஆக்குகிறது.

கர்ப்ப காலத்தில் அளவுக்கு மீறி அத்திப் பழங்களை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் கூட ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் அத்திப் பழங்கள் எவ்வாறு பயனளிக்கின்றன என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு தொடர்ந்து வாசிக்கவும்.

கர்ப்ப காலத்தில் அத்திப் பழம் சாப்பிடுவது பாதுகாப்பானது தானா?

கர்ப்ப காலத்தில் அத்திப் பழம் சாப்பிடுவது பாதுகாப்பானது தான் என்றாலும் கூட, அளவுக்கு மீறி சாப்பிடும் எது ஒன்றும் கெடுதல் செய்ய வாய்ப்புள்ளது என்பதால், சரியான அளவில் மட்டுமே பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை கர்ப்ப காலத்தின் போது, நீங்கள் அத்திப் பழம் சாப்பிடுவதற்கு மிகுந்த நாட்டம் கொண்டிருந்தால், தேவைக்கு விஞ்சிய அளவு எடுத்துக் கொள்வதற்கு முன்னர் நீங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

அத்திப் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகளின் விவரம்

அத்திப் பழங்களில் கால்சியம், காப்பர் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. அவை அபரிமிதமான அளவு இயற்கையான இரும்புச் சத்தினை கொண்டுள்ளன. இந்த நுண்ணூட்டச் சத்துகள் தலைமுடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கும், அறிவுத் திறத்தை அதிகரிப்பதற்கும் உதவுகின்றன. குறிப்பாக கர்ப்ப காலத்தில், அத்திப் பழங்களை உண்பதால் ஆரோக்கியமான, அறிவுக் கூர்மையுடைய குழந்தைகள் பிறக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அத்திப் பழங்களில் ஏ, கே, ஈ, டி மற்றும் பி போன்ற அத்தியாவசியமான வைட்டமின்கள் இருப்பதால், கர்ப்ப காலத்தில் அத்திப் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். அத்திப் பழங்கள் முதிர்கருவினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும், எலும்பு நலன், இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் மூளை நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. பச்சையான அத்திப் பழமோ அல்லது உலர்ந்த பழமோ, ஒரே அளவிலான ஊட்டச் சத்தினை அத்திப் பழம் அளிக்கிறது. ஆகவே, உலர்ந்த அத்திப் பழங்களையும் கூட தயங்காமல் சாப்பிடவும்.

கர்ப்ப காலத்தின் போது அத்திப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் உடல் நல நன்மைகள்

கர்ப்ப காலத்தின் போது தாயையும், முதிர்கருவினையும் பாதிக்கக் கூடிய இரத்த சோகையை அத்திப் பழங்களை உண்பதன் மூலம் எதிர்கொள்ள முடியும்.

அத்திப் பழங்கள் மலச்சிக்கலை சரி செய்யக் கூடிய இயற்கையான நார்ச்சத்தினை கொண்டுள்ளது, எனவே தொல்லையின்றி மலம் கழிப்பதற்கு உதவியாய் இருக்கிறது. அத்திப் பழங்களில் இயற்கையான சர்க்கரை இருப்பதால், கர்ப்ப காலத்தின் போது உயரக் கூடிய வாய்ப்புள்ள குளூக்கோஸ் அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். கர்ப்ப காலத்தில் அத்தி பழம் உண்பது சர்க்கரை உண்ணும் அளவுக்கதிகமான நாட்டத்தையும் கூட கட்டுப்படுத்த உதவும். கர்ப்ப காலத்தில் அத்திப் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம், எனவே எப்போதெல்லாம் சாப்பிட வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் உண்ணலாம். கர்ப்ப காலத்தில் அத்திப் பழங்களை உண்பது மசக்கையையும் கூட போக்குவதாக கூறப்படுகிறது.

தேன் போன்று தித்திக்கும் சுவையுடைய அத்திப் பழங்கள் மனதிற்கும், நாவிற்கும் சுவையூட்டி, ஆசுவாசப்படுத்தும்.

கர்ப்ப காலத்தின் போது அத்திப் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

அத்திப் பழங்களில் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால், சிலர் தவறுதலாக அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடக் கூடும். இதனால் பக்க விளைவுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சாப்பிட வேண்டிய சரியான அளவு என்ன என்பதை தெரிந்து கொள்வதும், உடல் எந்த அளவிற்கு தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியமானது.

அத்திப் பழத்தை சாப்பிடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள் பின்வருமாறு:

  • வயிற்றுப் போக்கு

  • மிகக் குறைவான இரத்த சர்க்கரை அளவு

  • இரத்த அழுத்தம் குறைவது

  • சிலருக்கு மகரந்த ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில், இதனை சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தி விடலாம்

நான் எவ்வாறு அத்தி பழத்தை தேர்வு செய்து ஸ்டோர் செய்ய வேண்டும்?

  • புதிதாக விளைந்த அத்திப் பழங்கள் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கிடைக்கப் பெறுகின்றன. புதிதாக விளைந்த அத்திப் பழங்களை அதன் மிருதுவான, வெற்று தோலை பார்த்து கண்டு பிடிக்கலாம். சிறிது புளிப்பான அல்லது கெட்டுப் போன அத்திப் பழங்கள் விரைவில் அழுகிப் போய் விடும். முழுமையாக பழுத்த அத்திப் பழம் முழுதாக பூத்தது போல் இருக்கும். அத்திப் பழங்களின் வாய்ப்பகுதி பச்சை நிறத்தில் தொடங்கி, பழத்தின் நிறம் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் முடிவடைகிறது.

  • பழங்களின் புத்துணர்ச்சியை தக்க வைப்பதற்கு, அவற்றை குளிர்சாதன பெட்டியில் குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும்.

  • குளிர்பான பெட்டியில் வைக்கும் போது, அதனை டப்பாவில் மூடி வைப்பதை தவிர்க்கவும், அதற்கு பதிலாக டப்பாவில் திறந்தவாறு வைக்க வேண்டும்.

  • குளிர்பான பெட்டியில் ஸ்டோர் செய்து வைக்கப்பட்டிருக்கும் அத்தி பழங்கள், 6 முதல் 7 நாட்களுக்கு மட்டும் தான் புத்துணர்ச்சியுடன் இருக்கும், எனவே அதற்கேற்றவாறு அதனை பயன்படுத்தவும்.

  • நீங்கள் வீட்டிலேயே பழங்களை உலர வைக்கலாம் அல்லது கடையிலிருந்து நேரடியாக உலர்ந்த அத்திப் பழங்களை வாங்கி வரலாம். உலர்ந்த அத்திப் பழங்களை ஒரு காற்று புகாத டப்பாவில் வைத்து விட்டால், அழுகிப் போகாமல் வருடம் முழுவதும் புதிதாக, சாப்பிடத் தகுந்ததாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அபாயங்கள்

உங்கள் கர்ப்ப கால டயட்டில் எவ்வாறு அத்திப் பழத்தை சேர்த்துக் கொள்வது

  • மாதுளை மற்றும் ஆரஞ்சு பழங்களுடன் சேர்த்து கலந்து சாப்பிடும் போது அத்திப் பழங்கள் இன்னும் சுவையாக இருக்கும். அத்திப் பழங்களை சாலட்களில் ஆலிவ் எண்ணெய், தேன், எலுமிச்சை மற்றும் உப்புடன் கலந்து உண்ணலாம்.

  • காலை உணவிற்கான தானிய வகைகளுடன் அத்திப் பழங்களை பச்சையாகவோ அல்லது உலர் அத்திப் பழங்களையோ சேர்த்து சாப்பிடலாம்.

  • மிதமான சூட்டில் உள்ள பாலில் உலர்ந்த அத்திப் பழங்களை கலந்து, கூடுதல் சுவையூட்டுவதற்கு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து பருகலாம்.

கர்ப்பிணி அம்மாக்களால் நம்பப்படும் ஆரோக்கிய துணை

சத்தான உணவுடன் சேர்ந்து, உங்கள் கர்ப்ப கால ஆரோக்கியத்தை பேண உதவும் பராமரிப்பு தயாரிப்புகள் உங்களுக்கு துணையாக இருக்கும்.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

438 Moms bought
₹999₹154535% Off
Rating
4.0
()
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2016 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

4294 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(91)
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4169 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.