This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

போலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் கர்ப்ப காலத்தில் எவ்வளவு முக்கியம் ? (Do All Women Require Folic Acid & Progesterone Tablets After A Positive Pregnancy Test Result In Tamil)

Folic Acid
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
போலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ்  கர்ப்ப காலத்தில் எவ்வளவு முக்கியம் ? (Do All Women Require Folic Acid & Progesterone Tablets After A Positive Pregnancy Test Result In Tamil)
Likes2 Likes|
Read time7 min

புரோஜெஸ்ட்டிரோன் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டுமா? (Should progestrone pills be taken In Tamil)

சமீபத்தில் நீங்கள் கர்ப்ப பரிசோதனை செய்து அது பாசிட்டிவாக இருப்பதை கண்டுபிடித்தீர்களா? கர்ப்ப காலத்தில் என்னென்ன சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று எண்ணி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் இனி கவலைக் கொள்ளத் தேவையில்லை. கர்ப்பம் தரித்ததில் தாய் ஆகப் போகும் பெண்ணுக்கு சந்தோஷமானது மிகுதியாக இருப்பது பொதுவானது தான். ஆனால் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கூடுதல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது மேலோங்கி நிற்கும்.

கர்ப்ப காலத்தில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதைப் புரிந்துகொள்வது (Understanding The Nutritional Requirements During Pregnancy In Tamil)

  • இன்றைய முக்கிய கேள்வி என்னவென்றால் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் கர்ப்பிணிகளுக்கு அவசியமானதா இல்லையா? கர்ப்ப காலத்தில் நல்ல ஊட்டச்சத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதுவும் குறிப்பாக ஒன்பதாவது மாதத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது கண்டிப்பாக உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். சில நேரங்களில், உணவில் இருந்து மட்டும் போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கர்ப்பிணியால் பெற முடியாது; எனவே தான், கூடுதல் உணவுகளை உட்கொள்வது முக்கியமானதாகும்.

  • பொதுவாக, அனைத்து பெண்களும் ஃபோலிக் அமிலம் அல்லது புரோஜெஸ்ட்டிரோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதில்லை, இருப்பினும் இந்த சப்ளிமெண்ட்டுகளை தினசரி சேர்த்துக்கொள்வது அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, கர்ப்பிணி பெண்கள் கீரை மற்றும் பச்சை காய்கறிகள் அல்லது பாதாம் முந்திரி போன்றவை மூலம் ஃபோலேட்டை உட்கொள்ளலாம்.

  • இந்நேரத்தில் புரோஜெஸ்ட்டிரோன் கட்டாயமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், உங்கள் கரு வளர்ச்சியடைய அடைய உங்கள் நஞ்சுக்கொடி இந்த ஹார்மோனை உற்பத்தி செய்யத் தொடங்கும். இருப்பினும், புரோஜெஸ்ட்டிரோன் கருச்சிதைவு ஏற்படுவதன் அபாயத்தைக் குறைக்கும் என்ற பொதுவான நம்பிக்கையின் காரணமாக, பல பெண்கள் இன்னும் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

  • பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு, ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவர் கர்ப்பம் தரிக்க திட்டமிட்டிருந்தால் இந்த சப்ளிமெண்ட்ஸை உட்கொள்வது நன்மை பயக்கும். இருப்பினும், புரோஜெஸ்ட்டிரோனைப் பொறுத்தவரை, பல பெண்கள் பொதுவாக இந்த மாத்திரைகளை தங்கள் கர்ப்ப காலத்தின் முதல் சில வாரங்களில் எடுத்துக் கொள்வார்கள். நஞ்சுக்கொடி போதுமான அளவு புரோஜெஸ்ட்டிரோனை உருவாக்க இது பொதுவாக அவசியம்.

  • ஒரு கர்ப்பிணி இதனை தவிர்ப்பதால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், கர்ப்பம் தரித்து ஏழு வாரங்களுக்குப் பின்னர், நஞ்சுக்கொடியே புரோஜெஸ்ட்டிரோனை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இருப்பினும், உங்கள் பாசிடிவ் டெஸ்டில் தோன்றிய இரு கோடுகள் மிகவும் லேசாக தோன்றினால், நீங்கள் உங்கள் உணவியல் நிபுணரைத் தொடர்பு கொண்டு அவரின் பரிந்துரைப் படி செயல்படலாம்.

ஃபோலிக் அமிலம் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் மாத்திரைகளின் நன்மைகள் (Benefits of Folic Acid Supplements And Progesterone Tablets In Tamil)

  • கர்ப்பம் தரித்த முதல் சில வாரங்களில் ஃபோலிக் அமில சப்ளிமெண்ட்கள் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் மாத்திரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், கர்ப்பம் தரித்த முதல் மாதத்தில் புரோஜெஸ்ட்டிரோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

  • ஃபோலிக் அமிலம் என்பது செயற்கையாக தயாரிக்கப்படும் வைட்டமின் பி ஃபோலேட் ஆகும். இது பொதுவாக ஒரு சில உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் அல்லது சப்ளிமெண்ட்களாகக் கிடைக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது கர்ப்பமாக இருக்க விரும்பினால், பரிந்துரைக்கப்பட்ட அளவில் தினமும் ஃபோலிக் அமிலவும் எடுத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

  • கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் பாதாம் போன்றவயை உட்கொள்வதன் மூலம் கர்ப்பிணிகள் தங்கள் ஃபோலேட் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். இது தவிர, இந்த வைட்டமின் தண்ணீரில் கரையக்கூடியது மற்றும் இது சமைக்கும் போது குறையும். எனவே, உங்களுக்கு சிறுநீர் கர்ப்ப பரிசோதனை முடிவு பாசிட்டாவாக இருந்தால், ஃபோலிக் அமிலம் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் தவிர கூடுதல் கூடுதல் சப்ளிமெண்ட்களை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும்!

ஃபோலிக் அமிலம் உட்கொள்ளப்பட வேண்டிய சரியான அளவு (Permissible Amount Of Folic Acid In Tamil)

  • அனுமதிக்கப்பட்ட அளவில் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்வது தான் பாதுகாப்பானதாகும். இருப்பினும், நீங்கள் அதனை சற்று அதிகமாக உட்கொண்டதாக உணர்ந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அவ்வாறு அதிகம் உட்கொண்டவை சிறுநீர் மூலம் வெளியேறிவிடும். சில பெண்களுக்கு நீண்ட கால பயன்பாடு காரணமாக சில பக்க விளைவுகள் ஏற்படலாம். உதாரணமாக, , ஒன்றை விரும்பாமை, குமட்டல் அல்லது குழப்பம் போன்றவற்றை அனுபவிக்கலாம். இதனால் நீங்கள் சாப்பிடும் அளவு குறையலாம். அது மட்டுமல்லாமல், இதனால் வழக்கமாக நீங்கள் தூங்கும் முறையிலும் இடையூறு ஏற்படும்.

  • அதே போல், ஃபோலிக் அமிலத்தை உட்கொள்வதால் உங்களுக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவ்வாறு நிகழக் கூடிய சில ஒவ்வாமை எதிர்விளைவுகளில் சின்ன கட்டி, சருமம் சிவப்பாகுதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை அடங்கும். அதே போல். சில நேரங்களில் கர்ப்ப பரிசோதனையில் பாசிட்டிவாக இருந்தாலும், மாதவிடாய் போன்ற இரத்தப்போக்கு இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் தவறான கர்ப்ப பரிசோதனை முடிவைப் பெற்றிருக்கலாம். இருப்பினும், உங்களுக்கு இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றால், உங்கள் மகளிர் மருத்துவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

  • கர்ப்ப காலத்தில் 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்வது சிறந்ததாகும். இதனை உட்கொள்ள நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கு குறைந்தது பன்னிரண்டு வாரங்களுக்கு முன்பே ஆரம்பிக்கலாம். பின்னர், உங்கள் கர்ப்பத்தின் அடுத்த மூன்று மாதங்கள் வரை சப்ளிமெண்ட்களைத் தொடர்ந்து எடுக்கவும். நீங்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் சப்ளிமெண்ட் ஓடிசி-ஐ உங்கள் பகுதியில் உள்ள ஏதேனும் மருந்தகங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

உங்கள் சிசுவின் வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியமானது? (Why Folic Acid Is Extremely Important For Your Baby’s Growth In Tamil)

  • ஃபோலிக் அமிலம் உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானதாகும். குழந்தைக்காக முயற்சிக்காத பெண்களில், ஃபோலிக் அமிலம் டிஎன்ஏவை உருவாக்க உதவுகிறது. இது தவிர, ஃபோலிக் அமிலம் நரம்பு மண்டலம் மற்றும் நரம்புக் குழாயின் வளர்ச்சிக்கு உதவும், குறிப்பாக கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் உறுதுணையாக அமையும்.

  • கருவில் குழந்தைக்கு பொதுவாக முதலில் வளர்வது நரம்பு குழாய் தான் . உங்கள் கர்ப்ப காலத்தின் ஆறு வாரங்களுக்குள் இது வளரக்கூடும். நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கு, ஃபோலேட் ஒரு முக்கியமான துணைப் பொருளாக அமையும். எனவே, கர்ப்பத்தின் முதல் வாரங்களில் இருந்தே கீரைகள் மற்றும் சிட்ரஸ் பழங்களை அதிகம் உட்கொள்ள கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஃபோலேட் சப்ளிமெண்ட்களை உட்கொள்வது ஸ்பைனா பிஃபிடா அல்லது இது போன்ற பிற பிறவி குறைப்பாடுகள் ஏற்படுவதன் அபாயத்தை சுமார் 70% குறைக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது.

  • அதுமட்டுமல்லாமல், உங்கள் உணவு முறையிலும் நீங்கள் தேவையான மாற்றங்களைச் செய்வதும் உங்களுக்கு முக்கியமானதாகும். உதாரணமாக, பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள், ஆரஞ்சு, வெண்ணெய் மற்றும் தானியங்களை நிறைய உட்கொள்ள வேண்டும். உங்கள் கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், உங்கள் உணவியல் நிபுணரை நீங்கள் தொடர்புகொள்ளலாம். இருப்பினும், எந்தவொரு சப்ளிமெண்ட்டையும் எடுத்துக் கொள்வதற்கு முன், உங்கள் உணவியல் நிபுணரிடம் பேசுங்கள்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலத்தை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்?

முடிவுரை (conclusion)

ஆம், உங்கள் கர்ப்ப காலம் உங்கள் வாழ்க்கையில் மிகவும் பொக்கிஷமான தருணங்களில் ஒன்றாகவே இருக்கும். எனவே, அதனை இனிதாக அனுபவியுங்கள். அதோடு உங்கள் முதல் கர்ப்ப பரிசோதனையின் பாசிட்டிவான முடிவுகளின் படங்களைக் கிளிக் செய்யுங்கள் அல்லது நீங்கள் இந்த நற்செய்தியை கூறும்போது உங்கள் குடும்பத்தினர் எவ்வளவு சந்தோஷம் கொண்டார்கள் என்பதை எல்லாம் பதிவுசெய்து பொக்கிஷமாகவே கொண்டாடுங்கள்.

TAGS :

folic acid during pregnancy in tamil, importance of folic acid during pregnancy in tamil, benefits of folic acid in tamil, Do All Women Require Folic Acid & Progesterone Tablets After A Positive Pregnancy Test Result In English, Do All Women Require Folic Acid & Progesterone Tablets After A Positive Pregnancy Test Result In Hindi, Do All Women Require Folic Acid & Progesterone Tablets After A Positive Pregnancy Test Result In Telugu, Do All Women Require Folic Acid & Progesterone Tablets After A Positive Pregnancy Test Result In Bengali

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.