
தற்போது ஆரோக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில், பேஷன் பழம் பிரபலம் ஆகி வருகிறது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அதனால் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆனால், இந்த பழத்தை அனைவரும் சாப்பிடுவது உகந்தது இல்லை. குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் தங்கள் உணவு பழக்க வழக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தங்கள் உணவு முறையில் பேஷன் பழத்தை சேர்த்துக் கொள்வதற்கு முன், மருத்துவரை ஆலோசிப்பது அவசியம் ஆகும்.
பேஷன் பழம் அல்லது தாட்பூட் பழம் அல்லது பாசிப்பழம் என்பது ஒரு வெப்பமண்டல பழம் ஆகும். இவை பாசிஃப்ளோரா என்ற பூக்கும் வெப்ப மண்டல கொடியில் வளர்கின்றன. அதாவது இந்தப் பழங்கள் வெப்பமான காலநிலை உள்ள பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன. தென் ஆப்ரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளை பேஷன் பழம் பூர்வீகமாகக் கொண்டுள்ளது. ஆனால், இப்போது விவசாயத்தில் இருக்கும் தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் அதிகரித்து வரும் தேவை காரணமாக, இவை உலகம் முழுக்க இப்பொழுது எல்லாம் பயிர் செய்யப்படுகின்றன.
பேஷன் பழங்களின் வெளிப்புறத் தோல் கடினமாக இருக்கும். உள்ளுக்குள் இருக்கும் கூல் போன்ற பகுதி தான் நாம் உண்ணக் கூடிய பகுதியாகும். அதில் விதைகள் இருக்கும். பேஷன் பழங்கள் பல வகைப்படும். ஆனால், தங்க மஞ்சள் நிறம் மற்றும் வெளிர் நீல நிறம் கொண்ட பேஷன் பழங்கள் தான் பொதுவாக கிடைக்கக் கூடிய வகைகள் ஆகும். இதில் உள்ள விதைகளை நம்மால் சாப்பிட முடியும். இந்த பழத்தை ஜுஸ் போடவே மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இதில் குறைந்த அளவிலான கேலரி உள்ளது மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அது மட்டுமல்ல, இதில் தாவர கலவைகள் நிறைந்துள்ளன. வாழைப்பழம் மற்றும் அன்னாசிப்பழம் போன்ற மற்ற வெப்பமண்டல பழங்களைக் காட்டிலும், இவை பல நன்மைகள் பயக்கின்றன.
பேஷன் பழங்களின் ஊட்டச்சத்து குறித்து நன்கு அறிந்த கர்ப்பிணிப் பெண்கள், பொதுவாக தங்கள் மருத்துவரிடம் கேட்கும் கேள்வி: கர்ப்ப காலத்தில் பேஷன் பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா? என்பது தான். இது ஒரு நியாயமான கேள்வி. ஏனெனில், கர்ப்ப காலத்தில் தாய் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவு முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஆனால், பேஷன் பழம் சாப்பிடுவதால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்கள் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. அதோடு, இதனை சாப்பிட்ட பிறகு ஆரோக்கியத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் பேஷன் பழங்கள் சாப்பிடுவதனால் பெறக் கூடிய உடல்நல நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்கள் செரிமான சார்ந்த சிக்கல் மற்றும் மலச்சிக்கலால் அவதிப் படக் கூடும். அதனால் கர்ப்ப காலத்தில் பேஷன் பழங்கள் சாப்பிட்டால் அத்தகைய செரிமான கோளாறுகள் சரியாகிவிடும். ஏனெனில், இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
பேஷன் பழங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டுள்ளன. அதாவது இதில் குறைந்த அளவிலேயே சர்க்கரை உள்ளது. அதனால் இரத்த சர்க்கரையின் அளவு ஏறும் என்ற பயம் இல்லாமல் இந்த பழங்களை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளலாம்.
பேஷன் பழங்களில் உள்ள இரும்புச் சத்து, ஹீமோகுளோபின் உற்பத்தியை ஆதரிக்கிறது. இது அம்மாவின் உடலில் இருந்து குழந்தைக்கும் நிலையான ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த ஓட்டம் இருப்பதை உறுதி செய்கிறது. மேம்பட்ட இரத்த ஓட்டம் குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். ஏனெனில், கருவின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து தாயின் இரத்த ஓட்டத்தில் இருந்து குழந்தைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
பல கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனை தூக்கமின்மை ஆகும். இதனால் அவர்கள் மிகவும் சோர்வடைவார்கள். அதோடு சக்தி இல்லாதது போல உணர்வார்கள். பேஷன் பழங்களில் இயற்கையான மயக்க மருந்துகளாக செயல்படும் மருத்துவ ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்து கர்ப்பிணிகளின் சோர்வைப் போக்குகிறது.
கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தை நிலையாக வைத்துக் கொள்வதை வைத்துக் கொள்வது அவசியம். பேஷன் பழங்களில் உள்ள பொட்டாசியம் கர்ப்பிணிகளின் இரத்த அழுத்தத்தை சீராக்கி இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
பல பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் போன் டென்சிட்டியை இழந்து விடுவார்கள். போன் டென்சிட்டியை தக்க வைத்துக் கொள்ளவே கர்ப்பிணிப் பெண்களுக்கு கால்சியம் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பேஷன் பழங்களில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான மினரல்கள் மற்றும் கால்சியம் அடங்கி உள்ளது. அதனால் ரெகுலராக பேஷன் பழங்களை எடுத்துக் கொண்டால், கர்ப்பிணிப் பெண்கள் போன் டென்சிட்டியை இழப்பதில் இருந்து அது தடுத்துவிடும்.
பேஷன் பழங்களில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்ல வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. இவை கர்ப்பிணிப் பெண்களில் தொற்றுகள் மற்றும் நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
ஆம். பொதுவாக பேஷன் பழங்கள் ஜுஸ் போடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழத்தின் ஊட்டச்சத்துக்களை அனுபவிக்க கர்ப்பிணிப் பெண்கள் வெவ்வேறு ஜுஸ் ரெசிப்பீக்களை முயற்சி செய்து பார்க்கலாம்.
பேஷன் பழங்களை சாப்பிடுவதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்கள் அதனை தங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் முன், தங்கள் மருத்துவரை ஆலோசித்துக் கொள்வது நல்லது. ஏதேனும் மருத்துவ சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க, இதனை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் எந்த ஒரு பழுக்காத பழத்தையும் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், இவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். பழுக்காத பேஷன் பழத்தின் தோல் பச்சை நிறத்தில் இருக்கும். அது பழுத்த பழத்தின் தோலை விட லேசாக இருக்கும். இதில் வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும் அதிக அளவு சயனோஜெனிக் கிளைகோசைடுகள் இருக்கும். இது பசியின்மை, நீரிழப்பு மற்றும் குறைந்த ஆற்றல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
இத்தகைய பிரச்சனைகளைத் தடுக்க, கர்ப்பிணிப் பெண்கள் பழுக்காத பழங்களை தவிர்த்து விடுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் சற்று சுருங்கிய தோல் உடைய பழங்களை தேர்வு செய்ய வேண்டும். அந்தப் பழங்கள் தான் பழுத்து இருக்கும்.
Yes
No


















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |