This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்பக்காலத்தில் எப்சம் உப்பு  சேர்த்து குளிப்பதன் மூலம் கிடைக்கும் 5 நன்மைகள் (5 benefits of having an Epsom salt bath during your pregnancy In Tamil)

Bathing
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 13, 2025
கர்ப்பக்காலத்தில் எப்சம் உப்பு  சேர்த்து குளிப்பதன் மூலம் கிடைக்கும் 5 நன்மைகள் (5 benefits of having an Epsom salt bath during your pregnancy In Tamil)
Read time4 min

கர்ப்பக்காலத்தில், பெண்கள் நாம் கற்பனை செய்யமுடியாத அசௌகரியத்திற்கும், வலிக்கும் உள்ளாகின்றனர். சிலருக்கு, அதிகமான வலியும் வேதனையும் ஏற்படலாம். கர்ப்பக்காலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மூன்று மாத காலத்தில், இந்த வலிகள் குறிப்பாக முதுகு, கால்கள் மற்றும் பாதத்தில் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தூக்கமின்மை, வேலை செய்வதில் சிரமம் ஏற்படுத்துவது மட்டுமின்றி அதிக எரிச்சலையும் ஏற்படுத்தும். இனி மருந்துக்கடைகளில் கிடைக்கும் மருந்துகளை உபயோகித்தால் அது குழந்தையை பாதிக்குமோ என அஞ்சி இந்த வலிகளை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அதற்கான வரப்பிரசாதமாகவே எப்சம் உப்பு திகழ்கிறது.

மெக்னீசியம் சல்பேட்டின் படிகமயமாக்கப்பட்ட வடிவமான எப்சம் உப்பு, பல்வேறு நோய்களின் வலிகள் மற்றும் உடல் வலியிலிருந்து நிவாரணம் பெற பயன்படுகிறது. குறிப்பாக இதை கர்ப்பிணிகள் எந்த வித பயமுமின்றி உபயோகிக்கலாம். இது குளியல் தொட்டியில் பயன்படுத்தக்கூடிய தூய்மையான கனிமமாக இருப்பது மட்டுமின்றி இதில் பல நன்மைகள் இருக்கிறது.

1. மெக்னீசியத்தை அதிகரித்தல் ( Magnesium Boosts)

எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட்டின் படிகமயமாக்கப்பட்ட வடிவமானதால், இது உடல் திசுக்களை சீரமைத்து உங்கள் உடல் சர்க்கரை அளவுகளை ஒழுங்கப்படுத்துகிறது. மெக்னீசியம் எரிச்சல் தரும் கர்ப்பப்பையை குணப்படுத்தவும் உதவுகிறது. மெக்னீஷியத்தை திண்மமாகவும், மற்ற மருந்துகளுடன் சேர்த்து கொள்வதைவிடவும், நேரடியாக சருமம் அதை உறிஞ்சுவதால் அதிக பயன் கிடைக்கிறது.

மருத்துவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை 2 கப் எப்சம் உப்பை வழக்கமாக குளிக்கும் பாத்டப்பில் 12 நிமிடங்கள் ஊற வைத்தப்பின் குளிக்குமாறு பரிந்துரை செய்கின்றனர்.

2. அழற்சியை குறைக்கிறது (Reduces Inflammation)

மெக்னீசியத்திடம் நமது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும் பண்புகள் இருக்கின்றன. கர்ப்பக்காலத்தில், குழந்தையின் வளர்ச்சிற்கு ஏற்ப உங்கள் எலும்புகள், சருமம் மற்றும் தசைகள் நீட்சியடைவதினால் உங்களுக்கு உடலில் வலியும், வீக்கமும் ஏற்படலாம். எப்சம் உப்பை உட்கொள்தல் உங்கள் தசைகள் தளர்வடைந்து, உங்கள் உடலின் எல்லா பகுதியில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் குறைக்க உதவும்.

3. மனஅழுத்த நிவாரணம் (Stress Relief)

மனஅழுத்தம் நிறைந்த நாளின் இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே போதுமான ஓய்வை தரும், இதில் எப்சம் உப்பை சேர்த்தல் அது கூடுதல் பயனை தரும். மெக்னீசியம் செரோடோனின் என்ற ஹார்மோனை அதிகம் சுரக்க வைக்கிறது, இது நம் உடலில் ஏற்படும் எரிச்சல் அல்லது வலி உணர்வை குறைக்கிறது. செரோடோனின் குறைவதினாலேயே மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுகிறது. உங்கள் உடலில் செரோடோனின் அளவைக் கட்டுப்படுத்துவதினால் எப்சம் உப்பு உங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்கிறது.

4. சருமத்தை மென்மையாக்குகிறது ( Soothes Skin)

உங்கள் சருமம் நீட்சியடைய ஆரம்பிக்கும் போது, அது அரிக்கக்கூடியதாகவும், உலர்ந்ததாகவும் இருக்கும். எப்சம் உப்பு உங்கள் சருமதிற்கு ஓய்வு தருவதுடன் அதை மென்மையாக்குகிறது. இது உங்கள் சருமத்திலிருக்கும் இறந்த செல்களையும் நீக்குகிறது. இது பல பாடி ஸ்க்ரப்பிகளிலும் இருக்கிறது.

5. மலச்சிக்கலுக்கு தீர்வு (Constipation relief)

கர்ப்பக்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம். கருப்பையிலிருக்கும் குழந்தையின் அழுத்தமும் சேர்ந்துக்கொள்வதால் மூல நோய ஏற்படலாம். மூல நோயின் விளைவால் ஆசனவாயைச் சுற்றியுள்ள நரம்புகள் வீங்கி, காயமடையலாம். எப்சம் உப்பு அழற்சி குறைப்பு பண்புகளைக் கொண்டிருப்பதினால், அதில் குளிப்பதன் மூலம் மூல நோயை கட்டுப்படுத்தலாம். அத்துடன் வெதுவெதுப்பான குளியல் நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது.

இதையும் படிக்கலாமே! - கர்ப்பக்காலத்தின் போது உங்கள் முதுகு வலியை போக்கும் 13 வழிகள்

முடிவுரை (Conclusion)

எப்சம் உப்பு குளியல் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவை உங்கள் உடலில் வலி, வீக்கம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்கும். வாரத்திற்கு இரண்டு முறை 12-15 நிமிடங்களுக்கு எப்சம் குளியல் எடுத்துக்கொள்வதன் மூலம், உங்கள் குழந்தை மற்றும் உடலை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ளலாம்.

TAGS :

Epsom salt during pregnancy in tamil, uses of epsom salt during pregnancy in tamil, how to use epsom salt during pregnancy in tamil, 5 benefits of having an Epsom salt bath during your pregnancy In English, 5 benefits of having an Epsom salt bath during your pregnancy In Hindi, 5 benefits of having an Epsom salt bath during your pregnancy In Telugu, 5 benefits of having an Epsom salt bath during your pregnancy In Bengali

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

4286 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(91)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.