This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் பெருங்காயம்: தொடர்புடைய அபாயங்கள், நன்மைகள் மற்றும் பிற சிகிச்சைகள் | மைலோ ஃபேமிலி | Hing During Pregnancy | Risks, Benefits & Other Treatments in Tamil

Diet & Nutrition
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
கர்ப்ப காலத்தில் பெருங்காயம்: தொடர்புடைய அபாயங்கள், நன்மைகள் மற்றும் பிற சிகிச்சைகள் | மைலோ ஃபேமிலி | Hing During Pregnancy | Risks, Benefits & Other Treatments in Tamil
Likes3 Likes|
Read time7 min

இந்தியர்களின் சமையலில் பெருங்காயம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருளாகும். இது ஃபெருலா என்று அழைக்கப்படும் செடியின் வேர்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது தனித்துவமான சுவையையும், ருசியையும் அளிக்கவல்லது, இது சைவ சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. சட்னி, சூடான ஸ்டூ (ஒரு உணவு வகை), ஊறுகாய், மற்றும் சாஸ் ஆகிய எல்லாவற்றிலுமே பெருங்காயம் சேர்க்கப்படுகிறது.

மருத்துவ மூலிகைகள் வகையை சார்ந்ததாக இருப்பதால், பெருங்காயம் எண்ணற்ற உடல்நலப் பயன்களை அளிக்கும் திறன் பெற்றது. மேலும், இது சுவாசப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது கர்ப்பப்பையை வலுப்படுத்துவதால், பெண்கள் தாங்கள் சந்திக்கக் கூடிய எல்லா மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் கூட இதனை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.

கூடுதலாக, இது அநேக பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள் மற்றும் பால்வினை நோய்களுக்கும் கூட சிகிச்சையளிப்பதற்கு உதவுகிறது.

கர்ப்ப காலத்தின் போது உணவில் பெருங்காயம் சேர்த்துக் கொள்வது பொதுவாக உடல்நலத்திற்கு எந்த கேடும் விளைவிக்காது. ஆயினும், இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், இதனை சாப்பிடும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தின் போது பெருங்காயமும், சீரகமும் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? (Is it safe to use hing and Jeera during pregnancy in Tamil)

எளிமையாக சொல்வதென்றால், கர்ப்பமாக இருக்கும் போது பெருங்காயம் சாப்பிடுவது உண்மையாக பாதுகாப்பானதல்ல. பெருங்காயத்தில் கருக்கலைப்பு தொடர்பான பண்புகள் உள்ளன, இது முதிர்கருவை அழித்து, அது கருப்பை சுவரில் ஒட்டியிருப்பதைத் தடுக்கிறது. இந்த பண்பானது மாதவிடாயினை தூண்டுவதற்கு ஏதுவாகிறது. ஆகவே, அதிக அளவில் பெருங்காயத்தை சாப்பிடுவது கருச்சிதைவை உண்டாக்கி விடலாம்.

கூடுதலாக, சில கர்ப்பிணிப் பெண்கள் பெருங்காயத்திற்கு மிகை உணர்வுள்ளவர்களாக இருப்பார்கள் அல்லது அதன் திடமான மணத்தினை வெறுத்து ஒதுக்குவார்கள். சிலருக்கு உணவில் பெருங்காயத்தை சேர்ப்பதால் வாந்தி ஏற்படலாம். கர்ப்பமாக இருக்கும் போது பெருங்காயத்தை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

கர்ப்பிணிப் பெண்ணுக்கும், முதிர்கருவிற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருப்பதால், கர்ப்ப காலத்தின் போது சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கப்படும் நறுமண வகைகளில் பெருங்காயமும், சீரகமும் இடம் பெறவில்லை.

கர்ப்ப காலத்தின் போது பெருங்காயத்தினால் கிடைக்கப் பெறும் நன்மைகள் (Benefits of hing (Asafoetida) during pregnancy in Tamil)

பெருங்காயம் ஒரு மருத்துவ மூலிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது சுவாசப் பிரச்சனைகளை மட்டுப்படுத்துகிறது, இரிட்டபிள் பவல் சிண்ட்ரோமிற்கு சிகிச்சை அளிக்கிறது, மற்றும் இரத்த கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைக்கிறது. பெண்கள் தங்களுடைய மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்துவதற்கான தூண்டு பொருளாக பெருங்காயம் விளங்குகிறது. இது பிறப்புறுப்பு நோய்த் தொற்றுகள் அல்லது பால்வினை நோய்களின் சிகிச்சைக்கு உதவுகிறது. கூடுதலாக, இதன் ஆற்றல் வாய்ந்த நரம்பு-எழுச்சியூட்டுத் திறன் காரணமாக, சிலர் இது மனச்சோர்விற்கு சிகிச்சை அளிக்க உதவுவதாக எண்ணுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, சிலர் கர்ப்ப காலத்தின் போது பெருங்காயம் சாப்பிடுவது பாதுகாப்பானது தானா என்று சிந்திக்கக் கூடும். பெருங்காயத்தை, கர்ப்பிணிப் பெண்கள் மிதமான அளவில் எடுத்துக் கொள்வதால் பிரச்சனையில்லை. ஆனால், கர்ப்பிணிப் பெண்கள் வயிறு வலி, வயிற்றில் கோளாறு மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது அடிக்கடி பெருங்காயத்தை எடுத்துக் கொள்கின்றனர். மேலும், சில கர்ப்பிணிப் பெண்களின் இரத்தத்தை மெலிதாக்கக் கூடிய பொருட்களான, குமாரின்ஸ் போன்றவை பெருங்காயத்தில் இருப்பதால், தலைவலி ஏற்படும் போது நிவாரணம் பெறுவதற்கு பெருங்காயத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

கர்ப்ப காலத்தின் போது எப்படி பெருங்காயத்தை எடுத்துக் கொள்வது? (How to consume hing during pregnancy in Tamil)

உணவுப் பொருட்களில் ஒரு சிட்டிகை அளவு மட்டுமே பெருங்காயம் சேர்க்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது. சுவாசக் கோளாறுகளை இதன் மூலம் குணப்படுத்தலாம். இதில் மிக முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால், தினமும் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தை கர்ப்ப காலத்தின் போது சேர்க்கும் பட்சத்தில், பெரிய உடல்நலப் பின்விளைவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்குமென பரிந்துரை செய்யப்படுகிறது.

கர்ப்ப காலத்தின் போது பெருங்காயத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் (Side effects of Asafoetida during pregnancy in Tamil)

கர்ப்பிணிப் பெண்கள் பெருங்காயத்தை சாப்பிட்டதன் காரணமாக தோன்றும் பல்வேறு எதிர் விளைவுகள் பின்வருமாறு

  1. பெருங்காய வாசனையை வெறுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு குமட்டலும், வாந்தியும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

  1. பெருங்காயத்திற்கு கருக்கலைப்பினை தோற்றுவிக்கும் பண்புகள் உள்ளன. இது முளைக்கரு கருப்பை சுவற்றில் வளர்ச்சியடைவதை தடுப்பதால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

  1. தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு இது தீங்கு விளைவிக்கும். இது தாய்ப்பாலை மாசுபடுத்தக் கூடும், மேலும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கும் கூட தீங்கு விளைவிக்கக் கூடும். இதில் உள்ள வேதிப்பொருட்கள் சில குறிப்பிட்ட நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு வழிவகுத்து விடக் கூடும்.

  1. உயர் இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் பெருங்காயத்தை தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால், இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் மருந்துகளின் செயல்பாட்டில் தலையிட வாய்ப்புள்ளது.

  1. அதிகப்படியாக பெருங்காயத்தை எடுத்துக் கொள்வது தொண்டையில் நோய்த்தொற்றுகள், வாயு, வயிற்றுப் போக்கு, ஏப்பம் மற்றும் உதடுகளில் வீக்கம் போன்றவற்றை உண்டாக்கக் கூடும்.

  1. கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்களில் பெருங்காயத்தை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும்.

கர்ப்ப கால உணவுமுறையில் பெருங்காயத்தை எப்படி சேர்ப்பது? (How to add hing to the pregnancy diet in Tamil)

முதல் மும்மாதங்கள் முடிந்த உடனேயே, மிதமான அளவுகளில் பெருங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்கலாம். பருப்பு, ராஜ்மா அல்லது சோலே போன்ற உணவுகளில் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயம் மட்டும் சேர்த்து சாப்பிடுவது தான் இதனை எடுத்துக் கொள்ளத்தக்க பாதுகாப்பான வழிமுறையாகும். எந்தவொரு சைவ உணவுடனும் பெருங்காயத்தை சேர்த்து சமைக்கலாம். எந்தவொரு சூழ்நிலையிலும், பெருங்காயத்தை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது, ஏனென்றால் இது மிகவும் நஞ்சானதும், ஆபத்தானதுமாகும். சமைக்கும் உணவுகளில் சேர்க்கப்படும் போது பெருங்காயம் நன்கு கலக்கப்படுகிறது. இரண்டாம், மூன்றாம் மும்மாதங்களில், பெருங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகளை தினமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தின் போது பெருங்காயத்தை வயிற்றில் தடவுவது (Applying Hing on the Stomach During Pregnancy in Tamil)

தாய்மார்கள் தங்களின் அசௌகரியத்தையும், உப்பிசத்தையும் போக்குவதற்கு பெருங்காயம் உதவுவுதால், கர்ப்ப காலம் முழுவதும் இதனால் பயனடைகிறார்கள். இது சுவாசப் பிரச்சனைகளுக்கு உதவி புரிவதால், ஆஸ்துமா நோயாளிகள் இதனால் பயன் பெறுகிறார்கள். கக்குவான் இருமல் மற்றும் பிரான்கைட்டிஸ் (மூச்சுக் குழாய் அழற்சி) போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோரும் கூட இதனால் பலனடைகிறார்கள்.

பெருங்காயத்தினால் கருச்சிதைவு உண்டாகுமா? (Can hing lead to a miscarriage in Tamil)

கர்ப்ப காலத்தின் போது பெருங்காயத்தை சாப்பிடுவதற்கு முன்னால், பல பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இது சந்தேகத்துக்கிடமின்றி வயிற்றுப் பொருமல் மற்றும் கோலிக் அசௌகரியம் (வயிற்றிலும், குடல் பகுதியிலும் ஏற்படும் கடுமையான வலி) போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்றாலும் கூட, அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் போது, இது கருச்சிதைவினை கூட உண்டாக்கி விடக் கூடும். ஆகவே, அளவுக்கதிகமாக பெருங்காயத்தை எடுத்துக் கொள்வதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரிய பிரச்சனைகள் தோன்றும் வாய்ப்புள்ளது.

கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்களில் பெருங்காயத்தை முழுமையாக தவிர்த்து விட வேண்டும். கர்ப்ப காலத்தின் இரண்டாவது, மூன்றாம் மும்மாதங்களில், மிகக் குறைவான அளவுகளில் பெருங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு, இது குறித்து மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் அவசியமாகும்.

References

1. Chen L, Zhu Y, Hu Z, Wu S, Jin C.(2021). Beetroot as a functional food with huge health benefits: Antioxidant, antitumor, physical function, and chronic metabolomics activity. Food Sci Nutr.

2. Amalraj A, Gopi S. (2012). Biological activities and medicinal properties of Asafoetida: A review. J Tradit Complement Med.

Tags

Hing during pregnancy in Tamil, Is it safe to eat hing during pregnancy in Tamil, How to consume hing during pregnancy in Tamil, Side effects of hing during pregnancy in Tamil, How to apply hing during pregnancy in Tamil, Hing during pregnancy in English, Hing during pregnancy in Hindi, Hing during pregnancy in Telugu, ⁠Hing during pregnancy in Bengali

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Avira Paraiyar
Avira Paraiyar

Related Articles

Questions about this article

  • Asked when 24 weeks pregnant

    Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?

  • 31 weeks pregnant

    Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum

  • trying to conceive

    மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்

  • 29 weeks pregnant

    3 மந்த் பேபி எப்படி இருக்கும்

  • Asked by 8 weeks pregnant

    அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.