
குழந்தை வளர்ப்பு என்பது குடும்ப மரத்தின் நீட்சியாகும். இதில் இரண்டு பேர் இந்த உலகில் ஒரு உயிரைக் கொண்டுவரவும், அதை தங்கள் திறனுக்கு ஏற்றவாறு வளர்க்கவும் தானே மனமுவந்து அதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்கள். இது பிரக்னன்ஸியை அறிவிப்பதில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான கற்றல் பயணம் ஆகும். குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பது கல்வியறிவு இல்லாமையாலோ அல்லது வலி பயம் காரணமாகவோ பெற்றோர்கள் அதில் முடிவெடுப்பதில் தடுமாறுகிறார்கள். குழந்தை தடுப்பூசி என்பது குழந்தைகளை விட பெற்றோரை பயமுறுத்தும் ஒரு வாழ்க்கை நிகழ்வாகும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு குழந்தைகள் அழுவதைப் பற்றிய சிந்தனை பெற்றோருக்கு ஒரு பெருங்கவலையாகும். ஆனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது நோய்கள் மற்றும் வெளிப்புற நோய்த்தொற்றுகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும்.
இருப்பினும், தடுப்பூசியில் உள்ள ஆன்டிஜென் நோய்களுக்கு எதிராக போராட ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய உடலுக்கு உதவுவதால், தடுப்பூசி போட்டுக்கொள்வது குழந்தைகளுக்கு மிகவும் அவசியமாகும். இதனால், குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி நோய்களுக்கு எதிராக உடலை போராட தயாராக்குகிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகளை செலுத்துவதும், அதைப் பதிவு செய்வதும் முக்கியம் ஆகும். பெரும்பாலும், தடுப்பூசிகளானது தடுப்பூசி போடப்பட்ட பகுதியில் காய்ச்சல், உடல் வலி அல்லது வீக்கம் போன்ற சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்; இருப்பினும், இந்த தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்புக்கு முன் இவையெல்லாம் லேசான பக்க விளைவுகளாகும்.
ஒரு குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதன் ஏற்படக்கூடிய நன்மைகளை சுருக்கமாகக் கூறலாம்-
உடலில் வெளிப்புற கிருமிகளின் தாக்குதல்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
உங்கள் குழந்தையின் உடல்நலனை உறுதிப்படுத்துவதற்கான பாதுகாப்பான வழி.
தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போடுவதன் மூலம் உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம், மேலும் குழந்தைகள் கொடிய நோய்களால் பாதிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
எதிர்கால சந்ததியினரை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
http://www.nrhmhp.gov.in/content/immunisation, இல் இருந்து கிடைக்கும் குழந்தை தடுப்பூசிகளின் முழுமையான பட்டியலை நீங்கள் டவுன்லோடு செய்யலாம், அல்லது எந்தவொரு அரசு மருத்துவமனையிலிருந்தும் அரசு இலவசமாக வழங்கும் குழந்தைகளுக்கான தடுப்பூசி விளக்கப்படத்தை நீங்கள் கேட்டு பெறலாம். இந்த விளக்கப்படத்தில் வெவ்வேறு வயதில் குழந்தைகளுக்கு செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசிகளின் விவரங்கள் மற்றும் அந்த தடுப்பூசிக்கான விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு மிகவும் பொதுவாக போடப்படும் தடுப்பூசிகள் மற்றும் அவை தடுக்கக்கூடிய நோய்கள் பற்றிய விவரங்கள் சில இங்கே உள்ளன.
பி.சி.ஜி தடுப்பூசி காசநோயிலிருந்து (காசநோய்) குழந்தைகளைப் பாதுகாக்க போடப்படுகிறது. இந்த நோய்த்தொற்று பெரும்பாலும் நுரையீரல் மற்றும் மூளையில் தோன்றும். காசநோய் முற்றினால், நோயாளியின் மரணத்திற்கும் காரணமாகின்றது.
ஹெபடைடிஸ் பி தடுப்பூசி குழந்தைகளை கொடிய கல்லீரல் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஹெபடைடிஸ் பி எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. மேலும், அது கண்டறியப்படும் போது, பாதிக்கு மேல் சேதம் விளைவித்திருக்கும். இந்த தடுப்பூசி கொடிய வைரஸுக்கு எதிரான ஒரு கேடயமாக செயல்படுகிறது.
போலியோ என்பது குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய வைரஸ்களில் ஒன்றாகும். முந்தைய ஆய்வுகளின்படி, ஒவ்வொரு 200 பேரில் 1 குழந்தை இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வழி, 5 வயது வரை தடுப்பூசி போடுவதாகும். வைரஸ் நுழைந்தவுடன், அதை சரிசெய்ய இதுவரை எந்தவொரு சிகிச்சையும் இல்லை.
தொண்டை அழற்சி நோயானது தொண்டை மற்றும் டான்சில் சுரப்பிகளைத் தாக்குகிறது, மேலும் டான்சில்லிடிஸ் குழந்தைகளிடையே மிகவும் பொதுவான குழந்தை பருவ பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகள் உணவை உண்பதற்கும் முழுங்குவதற்கும் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி (ஹெச்.ஐ.பி ) என்பது நிமோனியா, மூளை காய்ச்சல் மற்றும் குழந்தைகளிடையே பிற கொடிய நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியா ஆகும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ரோட்டா வைரஸ் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது மற்றும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது.
தட்டம்மை என்பது அதிக தொற்றும் நோயாக அறியப்படுகிறது. காய்ச்சல், மூச்சுத்திணறல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தடிப்புகள் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். அரிதான சந்தர்ப்பங்களில், இது மூளை காய்ச்சல் மற்றும் மரணத்தையும் ஏற்படுத்தும். மம்ப்ஸ் என்பது ஒரு வைரஸ் ஆகும், இது சுரப்பிகளைத் தாக்கி தலைவலி, உடல் நலக்குறைவு மற்றும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, உங்கள் குழந்தைக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமாகும்
இந்திய குழந்தைகளுக்கான விரைவான மற்றும் எளிதான தடுப்பூசி விளக்கப்படம் பெற்றோர்கள் முன்கூட்டியே தயாராவதற்கு உதவுகிறது, எனவே அவர்கள் குழந்தை தடுப்பூசி அட்டவணையில் எந்த ஒரு ஊசியிலிருந்தும் தவறமாட்டார்கள்.
|
வயது |
தடுப்பூசிகள் |
ஆப்ஷனல் தடுப்பூசிகள் |
|
பிறக்கும் போது |
பி.சி.ஜி டோஸ் 1 (டியூபர்குளோஸிஸ் தடுப்பூசி); ஓ.பி.வி (ஓரல் போலியோ தடுப்பூசி) டோஸ் 0; ஹெபடைடிஸ் பி (ஹெபடைடிஸ் தடுப்பூசி) டோஸ் 1
|
|
|
6-8 வாரங்கள் |
டி.டி.ஏ.பி / டி.டி.டபிள்யூ.பி (டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ்) டோஸ் 1; ஹெச்.ஐ.பி (ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி தடுப்பூசி) டோஸ் 1; ரோட்டா வைரஸ் டோஸ் 1. இந்த தடுப்பூசி வயிற்றுப்போக்குக்கு முக்கிய காரணமான கொடிய ரோட்டா வைரஸிலிருந்து பாதுகாக்கிறது.
ஐ.பி.வி (ஊசி வழியாக போடக்கூடிய போலியோ தடுப்பூசி) டோஸ் 1; ஹெபடைடிஸ் பி (ஹெபடைடிஸ் தடுப்பூசி) டோஸ் 2
|
பி.சி.வி (நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி) டோஸ் 1 |
|
10-16 வாரங்கள் |
டி.டி.ஏ.பி / டி.டி.டபிள்யூ.பி (டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ்) டோஸ் 2; ஹெச்.ஐ.பி (ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி தடுப்பூசி) டோஸ் 2; ரோட்டா வைரஸ் டோஸ் 2; ஐ.பி.வி டோஸ் 2
|
பி.சி.வி (நியூமோகாக்கல் இணை தடுப்பூசி) டோஸ் 2
|
|
14-24 வாரங்கள் |
டி.டி.ஏ.பி / டி.டி.டபிள்யூ.பி (டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ்) டோஸ் 3; ஹெச்.ஐ.பி டோஸ் 3; ரோட்டா வைரஸ் டோஸ் 3; ஐ.பி.வி டோஸ் 3
|
பி.சி.வி டோஸ் 2 |
|
6 மாதங்கள் |
ஓ.பி.வி (ஓரல் போலியோ தடுப்பூசி) டோஸ் 2; ஹெபடைடிஸ் பி (ஹெபடைடிஸ் தடுப்பூசி) டோஸ் 3
|
|
|
9 மாதங்கள் |
ஓ.பி.வி டோஸ் 2; தட்டம்மை டோஸ் 1; எம்.எம்.ஆர் (தட்டம்மை, மம்ப்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி) டோஸ் 1 |
|
|
9-12 மாதங்கள் |
டைபாய்டு சி.வி (டைபாய்டு இணை தடுப்பூசி) டோஸ் 1
|
|
|
12 மாதங்கள் |
ஹெபடைடிஸ் ஏ (ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி) டோஸ் 1
|
|
|
15 மாதங்கள் |
பி.சி.வி பூஸ்டர்; எம்.எம்.ஆர் டோஸ் 2
|
சின்னம்மை டோஸ் 1
|
|
16-18 மாதங்கள் |
ஐ.பி.வி பூஸ்டர்; ஹெச்.ஐ.பி பூஸ்டர்; டி.டி.ஏ.பி / டி.டி.டபிள்யூ.பி பூஸ்டர்
|
|
|
18 மாதங்கள் |
ஹெபடைடிஸ் ஏ டோஸ் 2 |
|
|
2 வயதில் |
டைஃபாய்டு பூஸ்டர்
|
|
|
4-6 வயதில் |
ஓ.பி.வி டோஸ் 3; டைஃபாய்டு பூஸ்டர்; டி.டி.ஏ.பி / டி.டி.டபிள்யூ.பி பூஸ்டர்
|
சின்னம்மை டோஸ் 2 |
பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசி விளக்கப்படம் பிறந்த பிறகு குழந்தைக்கு போடவேண்டிய கட்டாயமான தடுப்பூசிகளை பட்டியலிடுகிறது. குறிப்பிட்ட வயதில் வழங்கப்படும் தடுப்பூசிகளின் தொகுப்புக்கு தடுப்பூசிகளின் விலை 230-12, 000 ரூபாய் வரை இருக்கும். போட வேண்டிய தடுப்பூசிகளுக்கான அட்டவணையையும் அதன் முழு விலைப்பட்டியலையும் எந்த அரசு வலைத்தளத்திலிருந்தும் அல்லது அரசு மருத்துவமனை வலைத்தளத்திலிருந்தும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே! - தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகள் அழுவது இயல்பானதா? அவர்களை அமைதிப்படுத்த சில வழிகள் என்ன?
உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டமானது 1978 ஆம் ஆண்டில் குழந்தைகளை உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்கவும், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், இது போலியோ மற்றும் பெரியம்மை போன்ற நோய்களை வெற்றிகரமாக அழித்துள்ளது. ஒரு குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதுதான் அவர்களை கொடிய நோய்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழியாகும்
Yes
No















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |