hamburgerIcon
login
STORE

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Vaccinations arrow
  • தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகள் அழுவது இயல்பானதா? அவர்களை அமைதிப்படுத்த சில வழிகள் என்ன? arrow

In this Article

    தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகள் அழுவது இயல்பானதா? அவர்களை அமைதிப்படுத்த சில வழிகள் என்ன?

    Vaccinations

    தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகள் அழுவது இயல்பானதா? அவர்களை அமைதிப்படுத்த சில வழிகள் என்ன?

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    உங்களுக்கு புதிதாக பிறந்த குழந்தைக்கான இந்திய தடுப்பூசி சார்ட் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. தடுப்பூசி செலுத்திய பிறகு உங்கள் குழந்தை எப்படி அதற்கு ரியாக்ட் செய்யும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். சரிதானே? எல்லாவற்றிற்கும் மேலாக, ஊசிக்கு யார்தான் பயப்படாமல் இருப்பார்கள்? நீங்கள் இப்போது ஒரு பெற்றோர். ஆனால் உங்களுக்கு ஊசி போட வேண்டும் என்றால் அதைத் தவிர்ப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க நீங்கள் இன்னும் முயற்சி செய்கிறீர்கள், இல்லையா? உங்கள் குழந்தைக்கு ஆணோ/பெண்ணோ கண்டிப்பாக குழந்தைக்கான தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

    ஊசி போட்ட பிறகு குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் அல்லது ஊசி போட்ட இடத்தில் வலி ஏற்படும். அல்லது தடுப்பூசி போட்ட பிறகு பொதுவாக குழந்தை வீண் வம்பு செய்யும் என்பதால், உங்கள் குழந்தையை அமைதிப்படுத்துவதற்கு சில வழிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் பொதுவாக தடுப்பூசி அதன் வேலையைச் சரியாகச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது.

    எனவே, மற்ற பெற்றோர்களைப் போலவே, உங்கள் குழந்தை தடுப்பூசி செலுத்திய பிறகு அழுவது இயல்பானதா? என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், பதில் ஆம்! என்பதாகவே இருக்கும். எனவே, தயவுசெய்து குழந்தை தடுப்பூசி சார்ட்டை பின்பற்றுங்கள். உங்கள் குழந்தைக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்துவதை குழந்தை தடுப்பூசி அட்டவணையில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சார்ட்டை பாருங்கள். புதிதாகப் பிறந்த குழந்தைக்கான தடுப்பூசி சார்ட்டையும் இது கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சார்ட்

    வயது

    தடுப்பூசிகள்

    வியாதிகள்

    புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி

    பிசிஜி - டோஸ் 1

    காசநோய்

    ஓபிவிடி - டோஸ் 0

    போலியோ

    ஹெப் பி - டோஸ் 1

    ஹெபடைடிஸ் பி

    6-8 வாரங்கள்

    டிடிஏபி/டிடிடபிள்யூபி - டோஸ் 1

    டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ்

    ஹிப் டோஸ் 1

    ஹீமோபைலஸ் இன்ஃப்ளூயன்ஸா

    ரோட்டாவைரஸ் டோஸ் 1

    ரோட்டாவைரஸ் தொற்று

    ஐபிவி (இன்ஜெக்டபிள் போலியோ தடுப்பூசி) டோஸ் 1

    போலியோ

    ஹெப் பி டோஸ் 2

    ஹெபடைடிஸ் பி

    10-16 வாரங்கள்

    டிடிஏபி/டிடிடபிள்யூபி டோஸ் 2

    டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ்

    ஹிப் டோஸ் 2

    ஹீமோபைலஸ் இன்ஃப்ளூயன்ஸா

    ரோட்டாவைரஸ் டோஸ் 2

    ரோட்டாவைரஸ் தொற்று

    ஐபிவி டோஸ் 1

    போலியோ

    14-24 வாரங்கள்

    டிடிஏபி/டிடிடபிள்யூபி டோஸ் 3

    டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ்

    ஹிப் டோஸ் 3

    ஹீமோபைலஸ் இன்ஃப்ளூயன்ஸா

    ரோட்டாவைரஸ் டோஸ் 3

    ரோட்டாவைரஸ் தொற்று

    ஐபிவி டோஸ் 3

    போலியோ

    6 மாதங்கள்

    ஓபிவி டோஸ் 2

    போலியோ

    ஹெப் பி டோஸ் 3

    ஹெபடைடிஸ் பி

    9 மாதங்கள்

    ஓபிவி டோஸ் 2

    போலியோ

    சின்னம்மை டோஸ் 1

    சின்னம்மை

    எம்எம்ஆர் டோஸ் 1

    சின்னம்மை, கழுத்தில் ஏற்படும் வீக்க வியாதி, மற்றும் ரூபெல்லா

    9-12 மாதங்கள்

    டைபாய்டு சிவி டோஸ் 1

    டைபாய்டு

    12 மாதங்கள்

    ஹெப் ஏ தடுப்பூசி) டோஸ் 1

    ஹெபடைடிஸ் ஏ

    15 மாதங்கள்

    பிவிசி பூஸ்டர்

    நிமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி

    எம்எம்ஆர் டோஸ் 2

    சின்னம்மை, கழுத்தில் ஏற்படும் வீக்க வியாதி, மற்றும் ரூபெல்லா

    16-18 மாதங்கள்

    ஐபிவி பூஸ்டர்

    போலியோ

    ஹிப் வகை பி தடுப்பூசி பூஸ்டர்

    ஹீமோபைலஸ் இன்ஃப்ளூயன்ஸா

    டிடிஏபி/டிடிடபிள்யூபி பூஸ்டர்

    டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ்

    18 மாதங்கள்

    ஹெப் ஏ டோஸ் 2

    ஹெபடைடிஸ் ஏ

    2 வயது

    டைபாய்டு பூஸ்டர்

    டைபாய்டு

    4-6 வயது

    ஓபிவி டோஸ் 3

    போலியோ

    டைபாய்டு பூஸ்டர்

    டைபாய்டு

    டிடிஏபி/டிடிடபிள்யூபி பூஸ்டர்

    டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ்

    உங்கள் சுகாதார நிபுணர் இந்த லிஸ்டில் உள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை வழங்குவார்கள். உங்கள் குழந்தை இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசியில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி சரியான நேரத்தில் சரியான அளவு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளின் பட்டியல் உங்கள் குழந்தையின் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள திட்டமிட உங்களுக்கு உதவும்.

    6 வார குழந்தைக்கான தடுப்பூசி பற்றிய தகவல்கள் உங்களுக்குத் தேவைப்பட்டாலோ, வேறு எந்த வயது குழந்தைக்கான தடுப்பூசி பற்றிய தகவல் மற்றும் அதற்கான கட்டண விவரங்கள் தேவைப்பட்டாலோ நீங்கள் இந்தியாவில் குழந்தைகளுக்கான கட்டணங்களுடன் கூடிய தடுப்பூசி சார்ட்டில் பார்க்கலாம். நீங்கள் இந்தியாவில் மாற்றப்பட்ட கட்டணங்களை அரசு குழந்தை தடுப்பூசி சார்ட்டிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி பிறகு ஏற்படக் கூடிய வலியை சமாளிக்க பயன்படும் 5-எஸ் அணுகுமுறை

    உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தடுப்பூசிகள் முக்கியம். இருப்பினும், உங்கள் குழந்தை வலியில் இருப்பதைப் பார்ப்பது உங்களுக்கு வேதனையைத் தரலாம். பலருக்கு பயத்தை ஏற்படுத்த சிரஞ்சி மட்டுமே போதுமானதாக இருக்கிறது. எனினும், உங்கள் குழந்தை தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய நீங்கள் ரிலாக்சாக இருக்க வேண்டும். பயங்கரமான நோய்களை எதிர்த்து போராட உங்கள் குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி மண்டலத்தை உருவாக்கும் பணியை தடுப்பூசிகள் செய்கிறது.

    உங்கள் குழந்தை தடுப்பூசி செலுத்திய பிறகும் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக்கிறதா? அது 6-மாதக் குழந்தைக்கான தடுப்பூசியோ அல்லது 9-மாதக் குழந்தைக்கான தடுப்பூசியோ இந்தியவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு அட்டவணை வந்த பிறகும் குழந்தை அழுவது பொதுவான நிகழ்வாகும். தடுப்பூசி செலுத்திய பிறகு உங்கள் குழந்தையின் அசௌகரியத்தை குறைக்கவும், உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தவும் பயனுள்ள, நிரூபிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தவும். இந்த அணுகுமுறை 5-எஸ் அணுகுமுறை என்று அழைக்கப்படுகிறது.

    எஸ்#1 ஸ்வாட்லிங்

    குழந்தைகள், குறிப்பாக ஐந்து மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் இறுக்கமாக துணியைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும். இதுதான் ஸ்வாட்லிங் என்று அழைக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, இதுபோன்று குழந்தைக்கு நீங்கள் ஸ்வாடில் செய்தால் அமைதிப்படுத்த முடியும். தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைத்துச் செல்வதற்கு முன்பு உங்கள் குழந்தையை மென்மையான போர்வையைப் பயன்படுத்திக்கூட இறுக்கமாக கட்டலாம். இருப்பினும், எந்த இடத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டுமோ அங்கு இறுக்கமாக துணியை சுற்றக் (Swaddling) கூடாது.

    எஸ்#2 சைடு பொசிஷனிங்

    குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு குழந்தையின் வயிற்றை ஒரு பக்கமாக சாய்ந்திருக்குமாறு வைத்து படுக்க வைக்கலாம். இது குழந்தைகளை நன்றாக உணர வைக்கும். உண்மையில், நர்ஸுகள் குழந்தைகளை தடுப்பூசி போட்ட பிறகு இப்படிதான் எடுத்துச் சென்று பெற்றோரிடம் கொடுப்பார்கள்.

    எஸ்#3 குழந்தைகளை கைகளால் அசைந்தாடச் செய்தல்

    தடுப்பூசி போட்ட குழந்தையோ அல்லது போடாத குழந்தையோ, குறிப்பாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு அசைவது மிகவும் பிடிக்கும். குழந்தைகள் தங்கள் ஆரம்ப கால வாழ்க்கையில் வழக்கமாக அனுபவிக்கும் பல பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். நீங்கள் அவர்களை தூங்க வைக்கும்போது அல்லது அவர்கள் விளையாடும்போது கூட அவர்கள் அசைந்தாடுவதை விரும்புகிறார்கள். எனவே, குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு, அவர்களை ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு கைகளில் வைத்து அசைந்தாடச் செய்யுங்கள். அவர்கள் அழுதாலும் இதைச் செய்யுங்கள்.

    எஸ்#4 உறிஞ்சுதல்

    குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது தடுப்பூசி போட்டிருக்கும்போது, அவர்களை அமைதிப்படுத்த வேண்டுமென்றாலோ அவர்களின் வலியை மறக்கச் செய்ய வேண்டும் என்றாலோ அவர்களுக்கு வழக்கமாக நாம் செய்வதைதான் செய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு பாட்டிலை குழந்தை உறிஞ்சினால் அல்லது நிப்பிளை உறிஞ்ச விரும்பினால், அதைச் செய்ய அவர்களை அனுமதியுங்கள். அல்லது அவர்களை அமைதிப்படுத்த தாய்ப்பால் கொடுங்கள். இது அவர்களின் துயரத்தை குறைக்க உதவும்.

    எஸ்# 5 'ஷ்' என்ற ஒலி எழுப்புதல்

    உங்கள் குழந்தை தடுப்பூசி செலுத்தியதால் வலி ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தால் அடம் பிடித்தாலோ அமைதியாக இரு என குறிப்பிடும் வகையில் ‘ஷ்’ என்று நீங்கள் ஒலி எழுப்பினால் அவர்கள் உடனடியாக அமைதியாகி விடுவார்கள். எனவே, அடுத்த முறை உங்கள் குழந்தை வலியாலோ அல்லது முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலோ ‘ஷ்’ என்று கூறி அமைதிப்படுத்துங்கள்.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகள்: கர்ப்ப காலத்தில் டிடி ஊசியை எப்போது போட்டுக் கொள்ள வேண்டும்

    முடிவுரை

    தடுப்பூசி செலுத்திய பிறகு உங்கள் குழந்தை அசெளகரியமாக உணர்ந்தால், நீங்கள் இந்த ஐந்து டெக்னிக்குகளில் குறைந்தது நான்கையாவது பயன்படுத்துங்கள். இவை பல ஆய்வுகளுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்தவையாகும். மேலும், உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் நன்றாக தேய்த்து விடுங்கள். அதுவும், அவர்களின் வலியைக் குறைக்க உதவும்.

    தடுப்பூசி போடுவது உங்கள் குழந்தையின் ஹெல்த்திற்கு நல்லது. ஆம், சில பக்க விளைவுகள் ஏற்படக் கூடும்தான். எனினும், பக்க விளைவுகள் தற்காலிகமானவைதான். மேலும், பக்க விளைவுகள் தடுப்பூசி நன்றாக வேலை செய்கிறது என்பதை காட்டுகிறது. எனவே, இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சார்ட்டை கேளுங்கள் மற்றும் உங்கள் சுகாதார நிபுணருடன் உரிய கால இடைவெளியில் உங்கள் குழந்தை தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பாக ஆலோசியுங்கள்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.