This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

நுரையீரல் அழற்சி vs மூச்சு நுண்குழல் அழற்சி

Breathlessness
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 6, 2026
நுரையீரல் அழற்சி vs மூச்சு நுண்குழல் அழற்சி
Read time7 min

நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சி ஆகிய இரண்டும் மருத்துவ ரீதியாக வெவ்வேறானவை. எனினும், இரண்டும் அவற்றின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளில் கூட இயற்கை மீறிய ஒற்றுமைகளை கொண்டுள்ளன. உதாரணத்திற்கு, இந்த இரண்டு நிலைகளும் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பது இவை இரண்டிற்கும் இடையே உள்ள ஒரு ஒற்றுமை ஆகும். இருப்பினும் அவை நுரையீரலின் வெவ்வேறு பகுதிகளை பாதிக்கும். நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சி ஆகியவற்றிற்கு இடையே உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், நுரையீரல் அழற்சியில் மூச்சுகுழலை சென்றடையும் காற்றுப்பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். எனினும், மூச்சு நுண்குழல் அழற்சி மூச்சுக்குழலில் இருந்து பிரிந்து செல்லும் மூச்சுச்சிறு குழல் எனப்படும் சிறய காற்றுப்பாதைகளின் வீக்கத்தை உள்ளடக்கியது. இது எந்த வயது நபரையும் பாதிக்கும் ஒரு பொதுவான தொற்றாகும்.

நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சி இடையே உள்ள வித்தியாசங்கள்

  • நுரையீரல் அழற்சி பற்றி பொதுவாக கவலைப்படத் தேவையில்லை. ஆனால், இது நிமோனியா போன்ற தீவிரமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். நுரையீரல் அழற்சியை அலட்சியப்படுத்துவது நல்ல யோசனையல்ல, குறிப்பாக ஒருவர் அடிக்கடி அறிகுறிகளை அனுபவித்து வருகிறார் என்றால் தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசியம். நுரையீரல் அழற்சி என்பது அடிக்கடி ஏற்படுமாயின் அது நாட்பட்ட நுரையீரல் தடுப்புநோய்க்கு (chronic obstructive pulmonary disease) வழிவகுக்கும். இதற்கு உடனடி சிகிச்சை அவசியம்.

  • மறுபுறம், மூச்சு நுண்குழல் அழற்சி என்பது வீரியம் குறைவானது மற்றும் எளிதில் சிகிச்சை அளித்து விடலாம். இது சாதாரண சளிடை விட மோசமானது அல்ல. இருப்பினும், தீவிரமான மூச்சு நுண்குழல் அழற்சி ஏற்பட்டால் அது மீண்டும் மீண்டும் நிகழும் மூச்சுத்திணறலுக்கு வழிவகுத்து, வாழ்க்கையின் தரத்தை குறைத்து விடும். இந்த சிக்கல் பருமடைதல் வரை தொடரலாம். தீவிரமான நிலைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது மோசமான நிலைக்கு வழிவகுக்கும்.

  • பெரும்பாலான குழந்தைகள் 3 அல்லது 5 நாட்களுக்குள் குணமடைவார்கள் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 நாட்களுக்குள்ளாக டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். ஒரு சிலர் குணமடைய ஒரு வாரம் வரை ஆகலாம்.

நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சிக்கான அறிகுறிகள் இடையே உள்ள வித்தியாசம்

மூச்சு நுண்குழல் அழற்சி மற்றும் நுரையீரல் அழற்சிக்கான அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால், இரண்டையும் வேறுபடுத்திப் பார்ப்பது சற்று கடினம். இருப்பினும், இவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வெவ்வேறானவை. இதுவே நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சி ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள முக்கியமான வித்தியாசம் ஆகும். இரண்டு நிலைகளின் அறிகுறிகளும் லேசானது முதல் தீவிரமானது வரை மாறுபடும்.

நுரையீரல் அழற்சிக்கான அறிகுறிகள்

நுரையீரல் அழற்சியின் அறிகுறிகள் பின்வருமாறு

  • இருமலின்போது சளியுடன் ஏற்படும் மூச்சுத்திணறல்

  • லேசான காய்ச்சல்

  • குளிர்

  • சோர்வு

  • நெஞ்சு பகுதியில் வலி அல்லது இறுக்கமான உணர்வு

மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தாலோ அல்லது இரவு முழுவதும் நேரங்களில் பாதிக்கப்பட்ட நபர் விழித்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ அவர் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். நுரையீரல் அழற்சியின் தீவிரமான அறிகுறிகள்

  • இருமல்

  • விசில் சத்தம் அல்லது பச்சை நிற சளி

  • இரத்தம் கலந்த இருமல் நோய்ச் சளி

மூச்சு நுண்குழல் அழற்சிக்கான அறிகுறிகள்

மூச்சு நுண்குழல் அழற்சியின் அறிகுறிகள் பின்வருமாறு

  • முரட்டுத்தனமான மற்றும் வறட்டு இருமல்

  • மூச்சுத்திணறல்

  • மிதமான காய்ச்சல்

  • மூக்கடைப்பு

  • மூக்கு ஒழுகுதல்

குழந்தைகளில் மூச்சு நுண்குழல் அழற்சிக்கான அறிகுறிகள் தீவிரமானதாக இருக்கலாம். அவை பின்வருமாறு:

  • மூச்சு விடுவதில் சிரமம்

  • 50 முதல் 60 வரை உள்ள நாடித்துடிப்பு

  • 101 டிகிரி வரை இருக்கும் கடுங்காய்ச்சல்

  • எரிச்சலுறுமை

  • சோர்வு

  • பசியின்மை

  • முகத்தில் நீல நிற சாயம்

நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சிக்கான காரணங்கள்

நுரையீரல் அழற்சி மற்றும்/அல்லது மூச்சு நுண்குழல் அழற்சிக்கு வழிவகுக்கும் காரணிகளின் தொகுப்பு.

மூச்சு நுண்குழல் அழற்சி

அமெரிக்கன் நுரையீரல் அமைப்பின்படி, மூச்சு நுண்குழல் அழற்சியானது பெரும்பாலும் குழந்தைகளில் ஏற்படுகிறது. இதற்கான காரணம் பொதுவாக வைரஸ் மற்றும் சுவாசக் குழாய் வைரஸானது மூச்சு நுண்குழல் அழற்சியில் மிகவும் பொதுவான தொற்று முகவர் ஆகும். இது ஆண்டின் எந்த நேரத்திலும் நிகழலாம், ஆனால் குளிர் காலத்தில் அடிக்கடி ஏற்படுகிறது.

கடிய நுரையீரல் அழற்சி

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சிடிசி) படி, கடிய நுரையீரல் அழற்சிக்கு வைரஸ்கள் மிகவும் பொதுவான காரணமாகும். சில சந்தர்ப்பங்களில், ஜலதோஷம் போன்ற வைரஸ் தொற்றுகள் கூட நுரையீரல் அழற்சியாக உருவாகலாம். பொதுவாக, இது நுரையீரல் அழற்சிக்கு வழிவகுக்கும் பாக்டீரியா தொற்றாக இருக்கலாம்.

நாட்பட்ட நுரையீரல் அழற்சி

நாள்பட்ட நுரையீரல் அழற்சி, மறுபுறம், புகைபிடித்தல், உயிரி எரிபொருள் புகை அல்லது காற்று மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் தூண்டுதலின் வெளிப்பாட்டின் காரணமாக காலப்போக்கில் உருவாகிறது. இதுவும் ஒரு நெடுங் கால மருத்துவ நிலையாகும்.

நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சிகளின் கண்டறியும் முறை என்ன?

நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சி உள்ளிட்ட சுவாச நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டுள்ளன. இதுவே இவற்றிற்கான நோயறிதலை சிக்கலாக்கும். இதன் காரணமாக, இவற்றின் நோயறிதல் சில நேரங்களில் நிமோனியா மற்றும் ஆஸ்துமா போன்ற பிற நுரையீரல் பிரச்சினைகளை நிராகரிக்கிறது. நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சிக்கான நோயறிதலின்போது மருத்துவர் பொதுவாக ஒரு நபரின் மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகள் குறித்து பகுப்பாய்வு செய்வார். ஆக்ஸிஜனின் அளவு மற்றும் மார்பு ஒலிகளைக் கேட்டல் போன்ற உடல் சார்ந்த பரிசோதனையும் மருத்துவர் செய்கிறார். சில நேரங்களில், அவர்கள் இரத்த பரிசோதனைகள் மற்றும் நோய்த்தொற்றின் அறிகுறிகளை தெரிந்து கொள்ள மார்பு எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைக்கலாம்.

மூச்சு நுண்குழல் அழற்சியை கண்டறிய சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் மூக்குத்தொண்டை நீர்மத்தின் மாதிரியை எடுத்து அதன் மூலம் சுவாசக்குழாய் வைரஸ் இருப்பது சோதிக்கப்படும். இந்த வைரஸ் மூச்சு நுண்குழல் அழற்சி தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும். இதுவே நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சிக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு ஆகும்.

நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சிக்கான சிகிச்சை

மூச்சு நுண்குழல் அழற்சி மற்றும் நுரையீரல் அழற்சி ஆகிய இரண்டிற்கும் ஆதரவளிக்கும் பராமரிப்பு தேவை. ஆதரவளிக்கும் பராமரிப்பு என்பது அறிகுறிகளை சமாளிக்கவும், குறைக்கவும் உதவுகின்றது. வீட்டில் செய்யப்படும் சிகிச்சை பெரும்பாலும் போதுமானது மற்றும் இரண்டு நிலைகளும் எந்தவித சிக்கலும் இல்லாமல் குணமாகிவிடும்.

மூச்சு நுண்குழல் அழற்சிக்கான சிகிச்சை

நுரையீரல் அழற்சியின் அறிகுறிகளை பின்வரும் வழிகள் மூலம் சிகிச்சையளிக்கலாம்.

  • சலைன் நேசல் ஸ்ப்ரே பயன்படுத்துதல்

  • தலையை சற்று உயர்த்தியவாறு படுப்பது சுவாசிப்பதை எளிதாக்கும்

  • குறைவான ஆக்சிஜன் அளவு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் தெரபி உதவியாக இருக்கும்.

  • அதிக ஓட்டம் கொண்ட நாசி கன்னூல் காற்றுப்பாதை எதிர்ப்பைக் குறைக்கிறது மற்றும் காற்றழுத்தத்தைக் குறைக்கிறது. இது சுவாசிப்பதை எளிதாக்குகிறது.

இதையும் படிக்கலாமே! - மூச்சுக்குழாய் தளர்ச்சி: அர்த்தம், வகைகள், காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை முறை

நுரையீரல் அழற்சிக்கான சிகிச்சை

நுரையீரல் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்க ஒரு நபர் பின்வருவனவற்றை முயற்சி செய்யலாம்:

  • அதிகப்படியான திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்

  • போதுமான அளவு ஓய்வு எடுத்தல்

  • சலைன் நேசல் டிராப்ஸ் பயன்படுத்துதல்

  • சுலபமாக சுவாசிக்க ஹியுமிடிஃபையர் பயன்படுத்தி காற்றில் ஈரப்பதம் சேர்த்தல்

  • இருமல் மருந்து எடுத்தல்

  • ஆல்புடெரால் போன்ற பிரான்கோடைலேட்டர்களை பயன்படுத்துதல்

நுரையீரல் அழற்சி என்பது ஆண்டுவாரியான காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் மூலம் தடுக்கப்படலாம்.

எனவே, நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சி ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை தான். ஆகையால், இவற்றிற்கின நோயறிதல் மிகவும் கடினமானது. இரண்டும் வெவ்வேறான மருத்துவ நிலைகள் ஆகும். நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சு நுண்குழல் அழற்சிகள் வெவ்வேறானவை என்பதால், இவற்றிற்கான சிகிச்சை முறைகளும் மாறுபடும்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.