This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

குழந்தையின் நாக்கை சுத்தம் செய்வது எப்படி?

Care for Baby
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
குழந்தையின் நாக்கை சுத்தம் செய்வது எப்படி?
Read time6 min

குழந்தை திட உணவுகளை சாப்பிடாத நிலையிலும், அவர்களுக்கு பற்கள் முளைக்காத நிலையிலும், அவர்களது நாக்கை சுத்தம் செய்யத் தேவையில்லை என்று தோன்றக் கூடும். ஆனால், குழந்தைகளுக்கும் கூட அவர்களது வாயை சுத்தம் செய்ய வேண்டும். எவ்வளவு சீக்கிரம் நீங்கள் இந்த நடவடிக்கையை தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்கு நல்லது. வாய் சுகாதாரம் என்பது பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மட்டுமானதல்ல என்பதை மீண்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பச்சிளங் குழந்தையின் நாக்கை சுத்தம் செய்வது எப்படி என்பது குறித்த அனைத்து வழிகாட்டுதல்களும் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன மற்றும் உங்களுடைய குழந்தைகள் எப்படி வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைகளும் இருக்கின்றன.

முன்கூட்டியே தொடங்குவதால் என்ன பலன் கிடைக்கும்?

உங்கள் வாயில் இருப்பதைப் போன்ற அதே பாக்டீரியா உங்கள் குழந்தையின் வாயிலும் இருக்கும். குழந்தையின் வாயில் உங்களைக் காட்டிலும் குறைவான எச்சில் தான் ஊறும் என்பதால் பாலை விழுங்க முடியாமல் போராடும். இது மட்டுமல்லாமல், பால் அவர்களது நாவில் உறைந்து ஒரு வெண்மை நிற படலம் உருவாகும். இந்த நிலையில் குழந்தைகளின் நாக்கை சுத்தம் செய்வது தான் இந்தப் படலத்தை அகற்றுவதற்கு உதவும்.

ஆனால், குழந்தையின் நக்கை சுத்தம் செய்வது எப்படி? ஈரமான துணி கொண்டு உங்கள் குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யலாம். ஆக, வாய் சுகாதாரம் குறித்த நடவடிக்கைக்கு வெகு முன்னதாகவே உங்கள் குழந்தை தயாராகிவிடும். இதனால் பின்னாளில் குழந்தைக்கு பல் துலக்குவதற்கு நீங்கள் டூத் பிரெஷ் பயன்படுத்தும் போது, அது அவர்களுக்கு பெரிய அளவில் ஆச்சரியத்தைக் கொடுக்காது.

பச்சிளம் குழந்தையின் வாய் மற்றும் நாக்கு ஆகியவற்றை சுத்தம் செய்வது எப்படி?

பச்சிளம் குழந்தையின் நாக்கை சுத்தம் செய்வதற்கு கீழ்காணும் நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்றலாம்.

  • முதலாவதாக உங்கள் கைகளை சோப் மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.

  • குழந்தையை உங்கள் மடியில் படுக்க வையுங்கள். குழந்தையின் தலையை உங்கள் கை மீது சாய்த்து வைக்கவும்.

  • உங்கள் விரல் மீது காட்டன் அல்லது துணியை சுற்றி சூடான நீரில் நனைக்கவும்.

  • குழந்தையின் வாயை மெதுவாக திறந்து, அவர்களுடைய நாக்கில் இந்த துணியை கொண்டு மெதுவாக தேய்க்கவும்.

  • உங்கள் குழந்தையின் தாடை மற்றும் ஈறு ஆகிய பகுதிகளில் விரல்களை கொண்டு மெதுவாக மசாஜ் செய்து விடவும்.

  • பச்சிளம் குழந்தையின் நாக்கை எப்படி சுத்தம் செய்வது என்பது தான் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். குழந்தையின் நாக்கு மற்றும் ஈறுகளில் படிந்துள்ள பால் படலத்தை நீக்குவதற்காக பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் விரல் வடிவ பிரெஷ் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் குழந்தையின் நாக்கை குறைந்தபட்சம் நாளொன்றுக்கு இரண்டு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

  • உங்கள் குழந்தைக்கு கிருமித் தொற்று இருப்பின் நாக்கை சுத்தம் செய்வது மிக, மிக அவசியமாகும்

  • குழந்தையின் நாக்கில் உள்ள பூஞ்சை கிருமிகளை நாம் சுத்தம் செய்ய தொடங்குவதற்கு முன்னால், உங்கள் குழந்தையின் நாக்கில் ஏற்படும் வெள்ளைப் படலத்திற்கு பால் மட்டுமே காரணம் அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பூஞ்சை கிருமிகளும் கூட பார்ப்பதற்கு பால் படலம் போலவே இருக்கும். இதை எப்படி வேறுபடுத்தி தெரிந்து கொள்வது என்றால், பால் படலமானது ஒருமுறை துடைத்தால் போய்விடும். ஆனால், பூஞ்சை படலம் என்பது ஒருமுறை துடைத்தால் போகாது.

  • வாய் கிருமி என்று சொல்லக் கூடிய பூஞ்சை தொற்று வாயில் தோன்றக் கூடும். நாக்கு, ஈறுகள், உள்தாடை மற்றும் வாயின் உட்புற மேல்பகுதி போன்ற அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்யவும். இல்லை என்றால், வெள்ளை நிற திட்டுக்கள் வளரக் கூடும்.

  • குழந்தையின் நாக்கில் பரவும் பூஞ்சையை எப்படி சுத்தம் செய்வது என்று இப்போது பார்க்கலாம். தொற்று பரவாமல் தடுக்க பூஞ்சைக்கு எதிரான மருந்தை பயன்படுத்தலாம். நீங்கள் ஒன்றிரண்டு முறை சுத்தம் செய்த பிறகும் கூட குழந்தையின் நாக்கில் வெள்ளை படலம் நீங்கவில்லை என்றால் குழந்தை நல மருத்துவரிடம் இது குறித்து ஆலோசிக்கவும்.

6 மாத குழந்தைக்கு நாக்கை சுத்தம் செய்வது எப்படி?

  • குழந்தையின் நாக்கை சுத்தம் செய்ய, குழந்தைகளுக்கு ஏதுவாக உள்ள டூத்பேஸ்ட் மற்றும் மென்மையான டூத் பிரெஷ் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். குழந்தைக்கு 6 மாதம் கடந்த பிறகு அல்லது முதல் பல் முளைத்த பிறகு இதை மேற்கொள்ளலாம்.

  • அதே போல, உங்கள் குழந்தை கொஞ்சம் வளரும் வரையிலும் நீங்கள் விரல் வடிவ பிரெஷ், காட்டன் அல்லது துணி போன்றவற்றை பயன்படுத்தலாம். குழந்தையின் நாக்கு மற்றும் ஈறு போன்ற பகுதிகளிலும் டூத்பிரெஷ் கொண்டு மென்மையாக தேய்த்து விடலாம்.

  • 6 மாத குழந்தைக்கு நீங்கள் மிகச் சிறிய அளவில் டூத் பேஸ்ட் எடுத்துக் கொண்டால் போதுமானது. தோராயமாக ஒரு அரிசி அளவுக்கு பேஸ்ட் எடுத்தாலே போதுமானது. குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போது டூத்பேஸ்ட் அளவை ஒரு பட்டாணி அளவுக்கு அதிகரிக்கலாம்.

இதையும் படிக்கலாமே! - குழந்தைகளின் நாக்கில் காணப்படும் வாய்வெண்புண் காரணங்கள்

பிரெஷ் செய்வது மற்றும் நாக்கை சுத்தம் செய்வது குறித்து குழந்தைக்கு கற்பிப்பது எப்படி?

நாக்கை சுத்தம் செய்வது எப்படி என்பது குறித்து கீழ்காணும் அறிவுறுத்தல்களை உங்கள் குழந்தைக்கு தெரிவிக்கலாம்:

  • ஈரத்தில் நனைத்த டூத்பிரெஷ் மீது சிறிதளவு பேஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • முதலில் உங்கள் பற்களை துலக்கி, அதன் மூலமாக குழந்தைக்கு விவரிக்கலாம். (உங்கள் பிரெஷ் பயன்படுத்தவும்)

  • அடுத்ததாக, குழந்தையின் பிரெஷ் பயன்படுத்தி அவர்களுக்கு பல் துலக்கவும். எப்படி பல் துலக்குவது என்பது குறித்து அவர்களுக்கு விவரிக்கவும்.

  • குழந்தையின் கையைப் பிடித்து எப்படி பிரெஷ் செய்வது என்று வழிகாட்டுங்கள். இதைக் கற்றுக் கொண்ட பிறகு உங்கள் செல்லக் குழந்தை எப்படி பல் துலக்குகிறது என்று கண்காணிக்கலாம்.

எப்போது பல் மருத்துவரை பார்க்க வேண்டும்?

  • குழந்தைக்கு தினசரி பிரெஷ் செய்ய வேண்டும் மற்றும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். இது மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு அவ்வபோது குழந்தைக்கான பல் மருத்துவரை அணுகி பரிசோதனைகளை செய்ய வேண்டும்.

  • பொதுவாக, 6 மாத காலத்திற்குப் பிறகு முதல்முறை உங்கள் குழந்தைக்கு பல் தொடங்குகின்ற சமயத்தில் அல்லது ஒரு வயதில் குழந்தைக்கான பல் மருத்துவரை அணுகலாம். குழந்தையின் பல், தாடை, ஈறுகள் ஆகியவற்றை மருத்துவர் பரிசோதிப்பார். இது மட்டுமல்லாமல் பற்சிதைவு மற்றும் இதர பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். ஏதேனும் பிரச்சனைகள் கண்டறியப்பட்டால் குழந்தைகளுக்கான வீட்டு முறை தீர்வுகளை மருத்துவர் பரிந்துரை செய்வார்.

முடிவுரை

வாய் பராமரிப்பு என்பது இளம் வயதிலேயே தொடங்கி விடும். சின்ன குழந்தையாக இருக்கும்போது தங்கள் நாக்கு மற்றும் ஈறுகள் போன்றவை சுத்தம் செய்யப்படுவது குறித்து குழந்தைகளுக்கு நினைவில் இருக்காது என்றாலும், பொதுவாக வாய் சுகாதாரத்தை இது மேம்படுத்தும். மற்றும் இளம் வயதிலேயே நல்ல பழக்கங்களை பின்பற்ற குழந்தைகளுக்கு ஊக்கமாக அமையும். உங்கள் பச்சிளம் குழந்தையின் நாக்கை சுத்தம் செய்வது குறித்து அனைத்து சந்தேகங்களுக்கும் இந்தக் கட்டுரையில் உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும். குழந்தை வளர்ப்பு, குழந்தை பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு போன்றவை குறித்து மேலும் தெரிந்து கொள்ள மைலோ ஃபேமிலி இணையதளத்தை பார்வையிடவும்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.