This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்பத்தின் போது பிஸ்தா எடுத்துக் கொள்ளுதல்: நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்(PISTA DURING PREGNANCY: BENEFITS AND SIDE EFFECTS In Tamil)

Pregnancy Journey
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 29, 2026
கர்ப்பத்தின் போது பிஸ்தா எடுத்துக் கொள்ளுதல்: நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்(PISTA DURING PREGNANCY: BENEFITS AND SIDE EFFECTS In Tamil)
Likes2 Likes|
Read time6 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • கர்ப்பகாலத்தில் பிஸ்தா உண்பது புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் B-12 ஆகியவற்றை வழங்கி தாய் மற்றும் வளரும் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்கிறது.
  • பிஸ்தாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் எல்-அர்ஜினைன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கர்ப்பகால நீரிழிவு, பிறவி குறைபாடுகள், உப்புசம் மற்றும் வீக்கம் ஆகியவற்றைத் தடுக்க உதவுகிறது.
  • அதிகமாக பிஸ்தா உண்பதால் அஃப்லாடாக்சின் காரணமாக கருச்சிதைவு அபாயம், அஜீரணம், வாயு மற்றும் ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்; நாளொன்றுக்கு 24-க்கு மேல் சாப்பிடக்கூடாது.
  • கர்ப்பகாலத்தில் சரியான ஊட்டச்சத்து எப்படிப் பெறுவது? Explore our MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes).
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Rating4.9
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4

அறிமுகம் (Introduction)

கர்ப்பத்தின் போது சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத பொருட்களின் நீண்ட பட்டியல் உண்டு. கர்ப்பத்தின் போது சில உணவுகளுக்குச் சுவையரும்புகள் மொட்டுக்கள் கூருணர்வு கொள்கின்றன, அதோடு கர்பிணிப் பெண் மற்றும் வளரும் குழந்தை இருவருக்கும் ஊட்டச்சத்து அளிப்பது முக்கித்துவம் பெறுகிறது. கர்ப்பத்தின் போது மற்றும் அதற்குப் பிறகு சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் உங்களிடம் இருந்தால், அதில் நிச்சயம் ‘பிஸ்தா’ என்ற பெயர் இருக்கும்.

பிஸ்தாவில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கரு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான அனைத்தும் இதில் உள்ளன.

பிஸ்தா மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுவது ஏன்? (What makes pistachios so effective In Tamil)

பிஸ்தாவில் அந்தோசயினின்கள், கரோட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், லுடீன், புரோந்தோசயனிடின்கள், ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் வைட்டமின்கள் B6 மற்றும் B 1 ஆகியவையும் உள்ளன. அதோடு, இதில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, கர்ப்பத்தின் போது பிஸ்தா சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உதாரணமாக, அவை உடல் எடையைக் குறைக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

பிஸ்தாவில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் அவை அதிக ஆற்றலைத் தருகிறது. 30 கிராம் பருப்பில் 6 கிராம் புரதம், 2.8 கிராம் நார்ச்சத்து மற்றும் 12.7 கிராம் மொத்த கொழுப்பு உள்ளது என்பது அவை எவ்வளவு ஆரோக்கியமானவை என்பதைக் காட்டுகிறது.

கர்ப்பத்தின் போது பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of consuming pistachios (pista) during pregnancy In Tamil)

இது ஊட்டச்சத்து நிறைந்து இருப்பதால், கர்ப்பத்தின் போது, குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதை உண்பது நல்லது. பிஸ்தாவின் எட்டு பலன்கள்:

  • ஊட்டச் சத்துக்கள் நிறைந்தது (Rich in Nutrients)

பிஸ்தாவில் புரதம், நார்ச்சத்து மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பயனுள்ள ஃபோலேட் ஆரோக்கியமான அளவு உள்ளது.

  • இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது மற்றும் மேம்படுத்துகிறது (Maintains and Enhances Heart Health)

பிஸ்தா சாப்பிடுவதால் இதயத்துக்கு நன்மைகள் விளைவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதிலுள்ள அமினோ அமிலம் எல்-அர்ஜினைன், நெகிழ்வான, ஆரோக்கியமான இரத்த நாளங்களை ஊக்குவிக்கிறது. பிஸ்தாவில் வீக்கத்தைக் குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

  • கர்ப்பகால நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்கிறது (Prevents gestational diabetes)

பிஸ்தாவிலுள்ள மெக்னீசியம், இரத்த சர்க்கரை அsளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, இதை உட்கொள்வது கர்ப்பகால நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.

  • பிறவி குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது (Helps Prevent Congenital Malformations)

பிஸ்தாவில் முறையான ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியமான வைட்டமின் B-12 உள்ளது, குறைபாடுள்ள குழந்தை பிறக்கும் அபாயத்தைக் குறைக்கிறது என்பதால் கர்ப்பிணிப் பெண்கள் இந்த வைட்டமினை உட்கொள்ள வேண்டும்.

  • கர்ப்பகால உப்புசம் மற்றும் வீக்கத்தைத் தணிக்கும் (Alleviate Pregnancy Bloating and Swelling)

பிஸ்தாவில் உள்ள பொட்டாசியம் உடலின் திரவ அளவை சீராக வைத்திருக்க உதவும். உப்புசம் மற்றும் வீக்கம் இரண்டு பொதுவான கர்ப்பிணி புகார்கள், பிஸ்தா இவ்விரண்டையும் குறைக்க உதவும்.

பிஸ்தாவை டயட்டில் எப்படிச் சேர்க்கலாம்? (How can pista be added to your diet In Tamil)

பிஸ்தா கர்ப்பத்திற்கு நல்லது. இது டிரை ப்ரூட் வகை என்பதால் பிஸ்தாவை டயட்டில் எளிதாகச் சேர்க்கலாம். அதற்கான சில வழிகள்:

  • பிஸ்தாவை நேரடியாகவே சாப்பிடலாம் அல்லது காலை உணவாக சீரியல், மியூஸ்லி அல்லது தயிரில் சேர்க்கலாம்.

  • மஃபின்கள், குக்கீகள் மற்றும் கேக்குகள் போன்ற பேக்கிங் ஐட்டங்களிலும் பிஸ்தாவை சேர்க்கலாம்

  • கறி மற்றும் அரிசி உணவுகள் போன்ற உணவுகளிலும் பயன்படுத்தலாம்

கர்ப்ப காலத்தில் பிஸ்தாவின் பக்க விளைவுகள் (Pistachio side effects during pregnancy In Tamil)

  • கருச்சிதைவு ஏற்படும் அபாயம் (Risk of Miscarriage)

பிஸ்தாவில் அஃப்லாடாக்சின் என்ற வேதிப்பொருள் உள்ளது. அஃப்லாடாக்சின் பிறப்பு குறைபாடுகள் மற்றும் கருக்கலைப்புகளை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் போது பிஸ்தா சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.

  • அஜீரணம் ( Indigestion)

பிஸ்தாவால் அஜீரணம் ஏற்படலாம். இது வாயுவைத் தரக்கூடியது என்பதால் வயிற்றை நிரப்பி வயிற்றுக்குச் சிக்கல் தரும். இந்த அறிகுறிகள் இருந்தால் பிஸ்தா சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

  • ஒவ்வாமை (Allergies)

பிஸ்தாவுடன் ஒவ்வாமை இருந்தால் இதயம் உண்பது சிக்கல் ஏற்படுத்தும். ஒவ்வாமை காரணமாக நமைச்சல், வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பத்தின் போது பிஸ்தா உண்பது பாதுகாப்பானதா? (Is pista safe during pregnancy In Tamil)

பிஸ்தா கர்ப்பத்திற்கு நல்லது. கர்ப்பமாக இருக்கும் போது பிஸ்தா சிறிய அளவில் சாப்பிடுவது பாதுகாப்பானது. அதிகம் உண்பது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றித் தெரிந்துகொள்வது நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது அவற்றைச் சரியான முறையில் சாப்பிட உதவும்.

எத்தனை பிஸ்தா சாப்பிடலாம்? (How many pista can eat during pregnancy In Tamil)

நாளொன்றுக்கு 24 பிஸ்தாக்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது. பிஸ்தா கர்ப்பிணிகளுக்கு நல்லது என்றாலும், அதில் சில பிரச்சனைகளும் உள்ளன. சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். சோடியம் பூசப்பட்ட பிஸ்தா இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதே நேரத்தில் பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இருப்பினும், அதிகமாகச் சாப்பிட்டால், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வீக்கம் அல்லது வயிற்றில் வலியை ஏற்படலாம்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் சோயாபீன்சின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் டிப்ஸ்

முடிவுரை (conclusion)

முடிவில், அதிக அளவு புரதம் மற்றும் கொழுப்புகள், குறிப்பாக பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பிஸ்தாவை உட்கொள்ளலாம். இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக ஆகும்!

TAGS :

Pista during pregnancy in tamil, benefits of pista during pregnancy in tamil, side effects of pista during pregnancy in Tamil, Pista During Pregnancy: Benefits and Side Effects in English, Pista During Pregnancy: Benefits and Side Effects In Hindi, Pista During Pregnancy: Benefits and Side Effects In Telugu, Pista During Pregnancy: Benefits and Side Effects In Bengali

கர்ப்பிணித் தாய்மார்களால் நம்பப்படும் ஊட்டச்சத்து துணை

உங்கள் தினசரி உணவில் சரியான ஊட்டச்சத்துக்களைச் சேர்த்து, நீங்களும் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக வளர உதவும் தயாரிப்புகள்.

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

3701 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(88)
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2005 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress

531 Moms bought
₹917₹129829% Off
Rating
4.9
(50)
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4133 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.