This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

Diet & Nutrition
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 8, 2025
கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது பாதுகாப்பானதா?
Likes5 Likes|
Read time5 min

ஒரு கர்ப்பிணி பெண் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம், தங்கள் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பிரக்னன்சி டையட்டில் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு கர்ப்பிணி பெண் என்ன சாப்பிட வேண்டும் மற்றும் என்னென்ன சாப்பிடக்கூடாது போன்றவை அடங்கும். இந்த இடத்தில் தான் பப்பாளி குறித்த கட்டுக்கதைகள் வருகின்றன. கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என பலர் நம்புகின்றனர். எனினும், இது முழுமையாக உண்மையல்ல.

கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

  • ஆம், நன்கு பழுத்த பப்பாளி பழத்தை சாப்பிடும் வரை கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது தான். இருப்பினும், கர்ப்பமாக இருக்கும் போது பழுக்காத பப்பாளி பழம் சாப்பிடுவதை ஒருவர் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிலுள்ள லேட்டக்ஸ் தீவிரமான கர்ப்ப கால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பழுக்காத பப்பாளி பச்சை நிறத்தில் இருக்கும் என்பதால் அதனை எளிதாக கண்டுபிடித்து விடலாம். கூடுதலாக, ஒருவர் பாதியளவு பழுத்த பப்பாளி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

  • பப்பாளி உடல் சூட்டை அதிகரிக்க அறியப்படுவதால், இதனை கர்ப்ப காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இருப்பினும், பப்பாளி மூலம் தூண்டப்படும் உடல் சூடு கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவ வலிக்கு வழிவகுக்கும் என்பதை நிரூபிக்கும் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. தாமதமான மாதவிடாய் பிரச்சினையினால் அவதிப்பட்டு வரும் ஒரு பெண் பப்பாளி சாப்பிட்டால் உடனடியாக மாதவிடாயை பெறலாம் என்றும் ஒரு கட்டுக்கதை உலாவி வருகிறது.

  • பப்பாளி பழம் என்பது ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் பல ஆரோக்கிய நலன்களை வழங்குகிறது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, ஒரு பெண்ணுக்கு பப்பாளி சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தால், கொஞ்சம் கூட தாமதிக்காமல் நன்றாக பழுத்த பப்பாளி பழத்தை சாப்பிட ஆரம்பிக்கலாம். இருப்பினும், பப்பாளி சாப்பிடுவதால் ஏதேனும் செரிமான அசௌகரியம் ஏற்பட்டாலோ அல்லது பிறப்புறுப்பில் இருந்து எதிர்ப்பாராத இரத்தப்போக்கு ஏற்பட்டாலோ உடனடியாக பப்பாளி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மேலும் கர்ப்ப காலத்தில் பப்பாளி பழம் சாப்பிடும் போது கூடுதல் கவனம் தேவை மற்றும் அதிகப்படியாக சாப்பிட கூடாது. ஏனெனில், அது அதிகரித்த குடல் இயக்கத்திற்கு வழிவகுக்கும்.

பழுத்த பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன?

கர்ப்ப காலத்தில் பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும். பின்வரும் பலன்கள் அனைத்தும் நன்றாக பழுத்த பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளே அன்றி, பழுக்காத பச்சை பப்பாளி சாப்பிடுவதால் கிடைப்பன அல்ல என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

  • பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் தாக்கும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

  • கர்ப்ப காலத்தில் பப்பாளி பழம் சாப்பிடுவதன் மூலம் காலை சுகவீனம் மற்றும் குமட்டலில் இருந்து ஒருவர் தங்களை காத்துக்கொள்ளலாம்.

  • பப்பாளி பழத்தில் காணப்படும் வைட்டமின்கள் அல்சர்களை தடுக்கவும், சருமம் தொடர்பான பிரச்சினைகளை போக்கவும் உதவுகிறது.

  • பழுத்த பப்பாளி பழத்தில் காணப்படும் நார்ச்சத்துக்கள் கர்ப்பிணி பெண்களில் செரிமான பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, கர்ப்பமாக இருக்கும் போது ஒரு பெண் லேசான மலச்சிக்கல் பிரச்சினையை அனுபவித்தால், அதனை பழுத்த பப்பாளி பழம் சாப்பிடுவதன் மூலமாகவே எளிதில் கையாளலாம். எனினும், மலச்சிக்கல் தீவிரமானதாக இருந்தால், சுகாதார பராமரிப்பு நிபுணரை அணுகுவது அவசியம்.

  • கருவில் வளர்ந்து வரும் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு அவசியமான ஃபோலிக் அமிலம் பப்பாளி பழத்தில் உள்ளது.

  • கர்ப்பத்தின் காரணமாக ஏற்பட்ட நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்லக்ஸிற்கு பப்பாளி பழம் சிறந்த வீட்டு வைத்தியமாக அமைகிறது.

  • கர்ப்பமாக இருக்கும் போது ஒரு பெண் வைரஸ் காரணமாக உடல்நலக் குறைவை அனுபவித்தால், அப்பெண் பப்பாளி பழம் சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வைரஸ் நோயை எளிதில் விரட்டலாம். எனினும், இந்த கூற்றை ஆதரிக்க எந்த ஒரு அறிவியல் சார்ந்த ஆதாரமும் கிடையாது.

பப்பாளியில் உள்ள லேட்டக்ஸை ஏன் உண்ணக்கூடாது?

கர்ப்பிணி பெண்கள் பப்பாளியில் உள்ள லேட்டக்ஸை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் லேட்டக்ஸை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான சில பின்வருமாறு-

  • பப்பாளியில் காணப்படும் லேட்டக்ஸ் கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. மேலும் அது அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கை ஏற்படுத்தி, கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.

  • பழுக்காத பப்பாளியில் பப்பைன் உள்ளது. இதனை கர்ப்பிணி பெண்களின் உடலானது பிரசவ வலி தூண்டும் ஒரு ஹார்மோனான ப்ரோஸ்டாக்லாண்டின்ஸ் என தவறாக புரிந்து கொள்கிறது. மேலும், பழுக்காத பப்பாளியில் பப்பைனுடன் காணப்படும் பெப்சின் கருவின் வளர்ச்சியை தடை செய்கிறது. இந்த கெமிக்கல்கள் கருவிற்கு உதவியாக கருப்பையில் இருக்கக்கூடிய முக்கியமான உறுப்புகளையும் பாதிப்பதால், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த பக்க விளைவுகளுடன், பப்பைன் கரு பதிதலை பாதிக்கிறது. அது மட்டும் இல்லாமல் கருவிற்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.

  • பழுக்காத பப்பாளியில் உள்ள கெமிக்கல்கள் வாஸ்குல அழுத்தம் காரணமாக உட்புற இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கும். இது நஞ்சுக்கொடியிலும் இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். இதனால் வளரும் குழந்தைக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

  • பழுக்காத பப்பாளி குறைப்பிரசவத்தை ஏற்படுத்தக்கூடும். அது மட்டுமல்ல, குழந்தைக்கு பிரசவத்திற்கு பின்னான சிக்கல்களும் இதனால் வரக்கூடும்.

  • பழுக்காத பப்பாளியில் காணப்படும் லேட்டக்ஸ் பொதுவான ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருள். இது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்

சுருக்கமாகச் சொன்னால், கர்ப்ப காலத்தில் முழுமையாக பழுத்த பப்பாளி பழத்தை சாப்பிடும்போது ஏராளமான பலன்கள் கிடைக்கும். மஞ்சள் நிற தோல் கொண்ட மற்றும் தொடும்போது மென்மையாக இருக்கும் பப்பாளி பழத்தை ஒருவர் எப்போதும் தேர்வு செய்ய வேண்டும். மேலும், பப்பாளி இலைகள் மற்றும் விதைகளை எந்த வடிவிலும் சாப்பிடக்கூடாது. பப்பாளியின் தோல் மீது வெட்டுகள் அல்லது கருப்பு புள்ளிகள் கொண்ட பப்பாளி பழத்தை சாப்பிட வேண்டாம். ஏனெனில், அது ஒரு சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.