
சாலையோர உணவுகளில் சில பாதகங்கள் உள்ளன. எனினும், கர்ப்ப காலத்தில் முழுமையாக அவற்றை தவிர்த்து விட வேண்டும் என்று அர்த்தமில்லை. அதற்கு மாறாக, சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை அனுசரித்துக் கொண்டு, கர்ப்ப காலத்தில் உணவுண்ணும் நாட்டத்தினை, உங்களுக்கு பிடித்தமான சாலையோர உணவுகளிலிருந்தே தொடங்கலாம்.
சாலையோர உணவுகளில் உள்ள மிகவும் தீங்கு விளைவிக்கும் அம்சங்களில் ஒன்று, சுகாதார குறைபாடு தான். அந்த உணவே தீங்கு விளைவிக்கக் கூடியது அல்ல. ஆயினும் அவை தயாரிக்கப்படும் விதம் மற்றும் அவை தயாரிக்கப்படக் கூடிய இடம் மற்றும் சூழ்நிலை போன்றவை தான் அந்த உணவுகளின் தரத்தை தீர்மானிக்கின்றன.
கர்ப்ப கால உணவுண்ணும் நாட்டத்தின் காரணமாக, சாலையோர உணவுகளை உண்ணும் போது, அவற்றில் பயன்படுத்தும் காய்கறிகளும், பிற பொருட்களும் சுத்தமாக இருக்கும் பட்சத்தில், அந்த உணவுகள் நல்ல உணவுகள் தான். எண்ணெய் (குறிப்பாக வறுப்பதற்கான எண்ணெய்) தூய்மையாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும் (மறு உபயோகம் செய்ததாக இருக்கக் கூடாது). சமைப்பதற்கு பயன்படுத்தும் நீர் குடிநீர்/தெளிந்த நீராக (அதாவது சுத்தமாகவும், தூய்மையாகவும் இருப்பது) இருக்க வேண்டும். உபயோகப்படுத்தும் பாத்திரங்கள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
கர்ப்ப காலத்தின் போது குற்ற உணர்வின்றி சாலையோர உணவினை உண்பதற்கான 3 வழிமுறைகள் பின்வருமாறு:
கர்ப்பகாலத்தின் ஆரம்பகால உணவுண்ணும் நாட்டங்களை பூர்த்தி செய்வதற்கு வேண்டி, தூய்மைக்கும், தரமான உணவிற்கும் பேர் போன உணவகத்தை தேர்வு செய்யவும். சில சாலையோர உணவு விற்பனைக் கூடங்கள், பெரிய உணவகங்களை விடவும் மிகவும் சுத்தமான, தரமான உணவு வகைகளை வழங்குகின்றன. உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலமாக நீங்கள் சில நல்ல உணவகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சாலையில் செல்லும் போது, சாலையோர உணவுகளை சார்ந்திருக்க வேண்டாம். சாலையோர உணவுகள் என்று வரும் போது, நன்கு அறியப்பட்ட கடைகளுக்கு சென்றால் பிரச்சினைகள் வராது.
இதையும் படிக்கலாமே! - தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் பிரபலமான உணவகங்களில் உணவு உண்ண வேண்டும். சாலையோர கடைகளை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில், ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளது. பிரபலமான உணவங்களில் தரம், சுத்தம் மற்றும் சேவை போன்றவை நன்கு பேணப்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் கொசுக்கள், ஈக்கள் மற்றும் பிற பறக்கும் பூச்சிகள் போன்றவை புழங்கும் இடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விடவும்.
கர்ப்ப காலத்தில் காரமான உணவுண்ணும் ஆவல் மிகுதியால், சாலையோர கடைகளில், கிருமிகள் சேர்வதற்கு வாய்ப்பாக இருக்குமாறு நாள் முழுக்க திறந்த நிலையில் வைத்து விற்கப்படும், புதினா, மிளகாய் அல்லது புளி சட்னிகளை சாப்பிடக் கூடாது. பேக்கிங் செய்து அடைக்கப்பட்ட டொமேட்டோ கெச்சப் அல்லது சாஸ் போன்றவையை எடுத்துக் கொள்ளக் கூடாது.. ஏனென்றால், இந்த சட்னிகள் சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்காது. இதனால் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படக் கூடும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியே வருமா?(Do Pregnant Women Ovulate?In Tamil)
மேலும், நீங்கள் உணவினை மேற்கொண்டு அலங்கரிப்பதற்கு வேண்டி, கொத்துமல்லி, புதினா இலைகள், இஞ்சி, வெங்காயம், அல்லது நறுக்கப்பட்ட எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்த விரும்பலாம். ஆயினும் நீங்கள் இவற்றை எல்லாம் தவிர்ப்பது தான் நல்லது. ஏனென்றால், சரியாக சுத்தம் செய்திருக்காத பட்சத்தில், அவற்றில் கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கும்.
சமைக்கப்பட்ட உணவுகளை உண்பதே நல்லது. நீங்கள் ஆர்டர் செய்து காத்திருப்பதற்குள் தயார் செய்ய முடியாத உணவுகளை ஆர்டர் செய்வதை தவிர்க்கவும். மேலும், பச்சையான பொருட்களினால் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்க்கவும். குறிப்பாக, வெட்டப்பட்டு சேர்த்திருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்த்து விடவும்.
காய்கறிகளும், பழங்களையும் பச்சையாக சேர்த்திருக்கும் பட்சத்தில், அவற்றை உண்ணக் கூடாது. சாலையோரத்தில் கிடைக்கும் பர்கர்கள் மற்றும் சாண்ட்விச்-களில் பச்சை காய்கறிகளும், முட்டைகளும் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் அபாயம் உள்ளதால் உடல்நலக் கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, கர்ப்ப காலத்தில் உணவுண்ணும் விபரீத நாட்டங்களின் காரணமாக உண்ணும் உணவுகளில், அவை சரியாக சுத்தம் செய்யப்படாத அல்லது தோல் நீக்கப்படாத பட்சத்தில் அவற்றில் பூச்சிக்கொல்லி மிச்சங்கள் மற்றும் டாக்சோபிளாஸ்மோசிஸ் (ஒரு வகையான நோய்த்தொற்று) போன்றவை இருக்கக் கூடும்.
டைஃபாய்டு மற்றும் ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மாசுபட்ட உணவுகளின் மூலமாக தான் பெரும்பாலும் பரவுகின்றன. எனவே தான், பச்சையான அல்லது சரியாக சமைக்கப்படாத முட்டைகளை கொண்ட உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. ஏனெனில், இவை கர்ப்பிணிப் பெண்களுக்கு சால்மோனெல்லா பாதிப்பினை ஏற்படுத்தக் கூடும்.
Food cravings during pregnancy in Tamil, is street food safe to eat during pregnancy in tamil, street foods during pregnancy in tamil, tips for food cravings during pregnancy in tamil
YOU MAY ALSO READ :
Ways in which you can handle street food cravings during the pregnancy period In English
Ways in which you can handle street food cravings during the pregnancy period In Bengali
Ways in which you can handle street food cravings during the pregnancy period In Telugu
This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |