This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

இயற்கையான முறையில் கருத்தரிப்பதைத் தவிர்க்க உடனடியாக மாதவிடாய் ஏற்பட வைப்பது எப்படி?  

Contraceptive
Written by - Mylo Editorகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
இயற்கையான முறையில் கருத்தரிப்பதைத் தவிர்க்க உடனடியாக மாதவிடாய் ஏற்பட வைப்பது எப்படி?   
Read time5 min

கர்ப்பம் என்பது பொதுவாக பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு அனுபவமாகும். ஆனால், சில நேரங்களில் அதற்காக நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள். அவ்வாறு நீங்கள் கர்ப்பத்தை திட்டமிடவில்லை என்றால், அது தேவையற்ற ஒன்றாகிவிடும். ஆம் தற்செயலாக அல்ல, விருப்பத்தின் பேரில் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று மருத்துவ உலகம் வலியுறுத்துகிறது. உங்கள் மாதவிடாய் காலம் தள்ளிப் போயிருக்கிறது. ஆனால், நீங்கள் கர்ப்பமாக விரும்பவில்லை. இது போன்ற நிலை மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் எவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் மாதவிடாய் காலம் வருவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு சீரற்ற மாதவிடாய் வரும் என்றால், உங்கள் கவலைகள் ஒவ்வொரு முறையும் அதில் பிரதிபலிக்கும். கர்ப்பத்தைத் தவிர்க்க உடனடியாக மாதவிடாயை ஏற்படுத்துவது எப்படி என்பதற்கான டிப்ஸ்கள். உங்கள் கவலைகளைத் தணிக்கவும், நிலைமையை சரிசெய்ய சில இயற்கை வழிகளையும் இந்த கட்டுரை பரிந்துரைக்கிறது.

இயற்கையான முறையில் கர்ப்பத்தைத் தவிர்க்க, உடனடியாக மாதவிடாய் வருவதற்கான 7 டாப் டிப்ஸ்

கர்ப்பத்தைத் தவிர்க்க ப ல இயற்கை வைத்தியங்கள் உள்ளன. ஆனால், எச்சரிக்கையுடன் அதை அணுக வேண்டும். நீங்கள் கர்ப்பமாக இல்லை என்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே அனைத்து டிப்ஸ்களையும் பயன்படுத்த முடியும். இல்லையெனில், கருச்சிதைவு மற்றும் அதிகபடியான இரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும், அடுத்த நாளே உங்களுக்கு மாதவிடாய் வரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இந்த டிப்ஸ்கள் உங்கள் மாதவிடாய் வரவை விரைவாக்க உதவும் என்று கூறப்படுகிறது. அதனால், இந்த டிப்ஸ்களை பின்பற்றவும். மாதவிடாயை உடனடியாக வரவைக்க ஒரு போதும் கர்ப்ப கால மாத்திரைகளைத் தவிர்க்கவும்.

ரிலாக்ஸ் செய்யுங்கள்

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தாமதமான மாதவிடாய்களுக்கு மன அழுத்தம் குறிப்பிடத்தக்க காரணமாக இருக்கலாம். இயற்கையாகவே, குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இல்லாதபோது மன அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், இது நிலைமையை மேலும் மோசமாக்கும். நீங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து முழுமையாக ரிலாக்ஸ் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தியானம், யோகா மற்றும் பிற செயல்பாடுகள் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும். இது இயற்கையாகவே மாதவிடாய்களைத் தூண்ட உதவும். மாதவிடாய் தாமதமாவதிலிருந்து உங்களைத் திசைதிருப்புவதே முக்கிய விஷயம். அது கர்ப்பமாக இருக்காது, ஆனால் உங்கள் கவலைகள் நிலைமையை மோசமாக்கக் கூடும்.

கருப்பு எள் அல்லது வெள்ளை எள் சாப்பிடுங்கள்

எள் விதைகள் மாதவிடாயைத் தூண்டுவதில் ஓரளவு சாதகமாக இருக்கும். அவை உடலில் வெப்பத்தை உருவாக்குகின்றன மற்றும் மருந்துகள் இல்லாமல் மாதவிடாய் ஏற்படுவதற்கான சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. உங்கள் மாதவிடாய் தொடங்கும் முதல் நாளில் இருந்து சுமார் 15 நாட்களுக்கு முன் நீங்கள் இந்த விதைகளை பச்சையாகவோ அல்லது வெல்லத்துடன் சேர்த்தோ சாப்பிடலாம். அவற்றை தினமும் குறைந்த அளவே சாப்பிடுங்கள். அவற்றில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது கர்ப்பத்தைத் தவிர்க்க உடனடியாக உதவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இத்தகைய உணவுகள் உங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவைத் தூண்டி, மாதவிடாயைத் தூண்டும். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும்போது, ​​கர்ப்பப்பையில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. மேலும் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உங்கள் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகளையும் குறைக்க வாய்ப்புள்ளது. இது கர்ப்பப்பை சுவர்களை உடைத்து மாதவிடாய்க்கு வழி ஏற்படுத்தித் தரும். வைட்டமின் சி நிறைந்த மேலும் சில உணவுகள் கிவி, எலுமிச்சை, ஆரஞ்சு, ப்ரோக்கோலி, ஸ்டிராபெர்ரி மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஸ்பிரெளட்கள்.

கொஞ்சம் உடற்பயிற்சி செய்யுங்கள்

இந்த சூழ்நிலையில் உடற்பயிற்சியும் உங்களுக்கு உதவும். மாதவிடாய் ஏற்படுவதற்கு மிதமான உடற்பயிற்சி செய்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது உங்கள் தசைகளை தளர்த்தி இரத்தப்போக்கைத் தூண்ட உதவும். அதி தீவிர பயிற்சிகள் உங்கள் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் வேலையைச் செய்ய முடியாது. கர்ப்பம் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், கடுமையாக உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல. நீங்கள் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தால் கடுமையான இரத்தப்போக்கு கருக்கலைப்புக்கு வழிவகுக்கும்.

இதையும் படிக்கலாமே! - உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தடுப்பது எப்படி?

இஞ்சி மற்றும் கொத்தமல்லி

இவை இரண்டையும் தனித் தனியாகவோ அல்லது இஞ்சி-கொத்தமல்லி டீயாகவோ சாப்பிடலாம். கர்ப்பப்பையைச் சுற்றி வெப்பத்தை அதிகரிக்கவும், சுருக்கத்தை ஊக்குவிக்கவும் இஞ்சி ஒரு சிறந்த உணவாக இருக்கும். கொத்தமல்லிக்கு அதே குணம் உள்ளது. கர்ப்பப்பையில் சுருக்கங்களைத் தூண்டுவதற்கு கொத்தமல்லி டீயை எடுத்துக் கொள்ளலாம். இந்த இரண்டும் எம்மெனாகோக் என்று கருதப்படுகிறது. அதாவது, மாதவிடாய் இரத்த ஓட்டத்தைத் தூண்டக்கூடிய உணவுகள்.

மஞ்சள்

மஞ்சள் பல விதங்களில் உதவக் கூடிய மூலப்பொருள் ஆகும், இது மாதவிடாயைத் தூண்டுவதில் பங்கு வகிக்கிறது. இயற்கையான முறையில் மாதவிடாயைத் தொடங்க நீங்கள் தேனுடன் மஞ்சள் கலந்த சூடான பாலை அருந்தலாம்.

பப்பாளி

பப்பாளிப் பழம், கர்ப்பப்பை சுருக்கங்களைத் தூண்டுவதற்கு உட்கொள்ள வேண்டிய சிறந்த உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கர்ப்பத்தைத் தவிர்க்கவும் உடனடியாக மாதவிடாய் வர வைக்கவும் உதவும் சிறந்த வீட்டு வைத்தியம் இதுவாகும். பப்பாளி சாப்பிடும் போது ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து இரத்தப்போக்கு தொடங்க உதவுகிறது. நீங்கள் விரும்பினால் பழத்தை முழுவதுமாக சாப்பிடுங்கள் அல்லது சாறாக பிழிந்து குடிங்கள்.

முடிவுரை

மாதவிடாய் உடனடியாக வருவதற்கு மேற்கூறியவை நல்ல இயற்கை வைத்தியம் என்றாலும், நீங்கள் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தால் அவை பொருத்தமானவையாக இருக்காது. மேலும், உங்கள் மாதவிடாய் சுழற்சியை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தில் கர்ப்பமாக இருக்க முயற்சித்தால் அது சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்கள் சாதாரண மாதவிடாய் சுழற்சி மற்றும் இரத்தப்போக்கு கூட தொந்தரவு செய்யப்படும். மேலே பட்டியலிடப்பட்ட முறைகள் இயற்கையாகவே மாதவிடாய் வருவதற்கு பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், எந்தவொரு அபாயத்தையும் தவிர்க்க உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.