This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

ஒரு வருடம் ஆன குழந்தைக்கு நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 12 விஷயங்கள் (12 things that you must do with your baby in the first 12 months In Tamil)

Care for Baby
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
 ஒரு வருடம் ஆன குழந்தைக்கு நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 12 விஷயங்கள் (12 things that you must do with your baby in the first 12 months In Tamil)
Likes1 Likes|
Read time4 min

புதிதாக தாய்மையடையும் போது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆனாலும் சில சமயங்களில் தாய், குழந்தை ஆகிய இருவருக்குமே அது சலிப்பூட்டுவதாக அமைந்து விடும். நீங்கள் புதிதாக தாயாகி இருக்கும் போது, பல விதங்களில் சங்கடங்களை உணர்வீர்கள். சில மணி நேரங்களுக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுப்பது, டயப்பர்களை மாற்றிக் கொண்டே இருப்பது, மற்றும் தூங்குவதற்கு போதுமான நேரம் கிடைக்காதது போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சிறு குழந்தை இருப்பதனால், அதனை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் போது, சில சமயங்களில் நீங்கள் வெளி உலகத்தோடு எந்தவொரு தொடர்புமில்லாமல் போனது போல உணர்வீர்கள். ஆயினும், இது வாழ்நாள் முழுதும் நீங்கள் நினைத்து மகிழக் கூடிய ஒரு அனுபவமாகும். வருடம் முழுவதும், புதிதாக பிறந்திருக்கும் குழந்தையோடு நீங்கள் செய்யக் கூடிய சில அருமையான விஷயங்களை இங்கு வழங்கியுள்ளோம்.

குழந்தைக்கு சரியாக தலை நிற்கும் வரைக்கும், ஒரு பெட்ஷீட்டை பாதியாக மடித்து, அதை தரை மீது விரித்து வைத்து, குழந்தையை அதன் நடுவில் படுக்க வைக்கலாம். தாய் தந்தை இருவரும் பெட்ஷீட்டின் முனைகளை ஆளுக்கொரு பக்கமாக பிடித்துக் கொண்டு, அதில் குழந்தையை போட்டு தொட்டில் போல ஆட்டி விடலாம். இதை செய்வதற்கு முன்பு குழந்தை பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  • சிறு குழந்தைகள் மாறுபட்ட நிறங்களால் கவரப்படுகிறார்கள். எனவே, வெள்ளைத் தாளில் சில எளிமையான வடிவங்களை கருப்பு மார்க்கரால் வரைந்து வைத்துக் கொள்ளவும். அதனை குழந்தையின் தொட்டிலின் மேலே தொங்க விடவும் அல்லது குழந்தையின் பார்வை படுமாறு உள்ள சுவரின் மேலே ஒட்டி விடவும்.

  • குழந்தைகளின் பின்புறம், கழுத்து, மற்றும் அடிவயிற்றைச் சார்ந்த தசைகளை வலுப்படுத்துவதற்கு குழந்தைகளுக்கு பயிற்சி தேவைப்படும். குழந்தைக்கு அருகில் பொம்மைகளை வைப்பது, அவற்றை எட்டி எடுப்பதற்கு குழந்தை முயற்சி செய்வதை ஊக்குவிக்கும் அல்லது ஒரு குழந்தைகளுக்கான கண்ணாடியை அருகில் வைப்பது, குழந்தை தன்னைத் தானே பார்க்கச் செய்வதற்கு உதவும்.

  • குழந்தை எழுப்பும் ஒலிகளை அப்படியே நீங்களும் காப்பி அடித்துச் செய்வதற்கு பழகிக் கொள்ளவும். இது குழந்தையை மேலும் ஒலி எழுப்புவதற்கு ஊக்குவிக்கிறது. மேலும் நீங்கள் பேசுவதை குழந்தை கேட்கும் போது, வேறு சில ஒலிகளையும் குழந்தை உங்களிடமிருந்து பழகிக் கொள்ளும்.

  • குழந்தையின் கைகளை பிடித்துக் கொண்டு, நடக்க வைப்பதற்கு முயற்சி செய்யவும். தவறாமல் குழந்தைகளின் கால்களை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். இதன் மூலம் தசைகளும், எலும்புகளும் வலுப்பெறுகிறது.

  • ஆச்சி, தாத்தா போன்ற சில வார்த்தைகளை அவர்களை காட்டி, குழந்தையிடம் பேசுவதற்கு முயற்சி செய்யவும். இது குழந்தை தன் குடும்ப நபர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள உதவும்.

இதையும் படிக்கலாமே! - 8 மாத குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்கள் தேவையான குறிப்புகள்

  • சுமார் 6 முதல் 8 மாதங்களில், உங்கள் குழந்தை கை தட்டுவதற்கு பழகிக் கொள்ளும். எனவே, அருகில் இருந்து கை தட்டிக் காட்டுவதன் மூலம் குழந்தை கை தட்ட பழகிக் கொள்வதை ஊக்குவிக்கவும்.

  • உங்கள் குழந்தை எட்டு மாதங்களிலேயே முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் அல்லது தாமதமாக ஆகும் பட்சத்தில், 1 வயதுக்கு மேல் நிகழ வேண்டும். வாக்கர்களின் உதவியில்லாமல் குழந்தை நடை பழகுவதற்கு உதவவும்.

  • உங்கள் குழந்தைக்கு 10 மாதம் ஆகும் போது, சிறிய குளம் போல் தண்ணீர் நிரப்பி, உங்கள் குழந்தையை தண்ணீரில் விளையாடச் செய்து அவர்களை மகிழ்விக்கவும்.

  • தவறாமல் உங்கள் குழந்தைக்கு புத்தங்களை, அவற்றில் உள்ள படங்களை காட்டி வாசித்துக் காட்டவும். வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு உங்கள் குரலை மாற்றி குழந்தை இரசித்து கேட்கும்படி பார்த்துக் கொள்ளவும். உங்கள் குழந்தையையும் உங்களோடு சேர்ந்து சிரிப்பதற்கோ அல்லது கதையில் வருவது போல் நடித்துக் காட்டுவதற்கோ ஊக்குவிக்கவும்.

  • உங்கள் குழந்தைக்கு பொம்மைகளையும், ஒலிகளையும் கொண்டு விளையாட்டு காட்டுவது, அவர்களின் மன வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.

  • தன் முதல் பிறந்தநாளின் போது, உங்கள் குழந்தை பெரிய மரத்தாலான புதிர் விளையாட்டிற்கு தயாராகி விடும். வண்ணமயமான வடிவங்களையோ அல்லது படங்களையோ எடுத்துக் கொள்ளுங்கள். "முதலில் அது எப்படி செயல்படுகிறது என்பதை குழந்தைக்கு காண்பிக்கவும். அவர்களின் கைகளை பிடித்து சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும், "அவர்கள் சரியாக செய்து விடும் பட்சத்தில் கைகளை தட்டி அவர்களை உற்சாகப்படுத்தவும்."

TAGS :

12 things that you must do with your baby in the first 12 months In English, 12 things that you must do with your baby in the first 12 months In Hindi, 12 things that you must do with your baby in the first 12 months In Telugu, 12 things that you must do with your baby in the first 12 months In Bengali

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.