
பிறக்கும் போது குழந்தையின் மூளையில் 100 பில்லியன் நியூட்ரான்கள் இருக்கும். அது நமது விண்மீன் மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு சமம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அது உண்மைதான்.
குழந்தையின் தொடக்க வயதில், மூளை செல் இணைப்புகள் வளரும். ஆனால், இந்த இணைப்புகளுக்கு சில வகையான சிமுலேஷன் தேவைப்படுகிறது. இங்கு தான் நீங்கள் தேவைப்படுகிறீர்கள்!
ஒரு குழந்தையின் மூளை புதிய திறன்களையும் மொழிகளையும் கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் திறன் கொண்டது. உங்கள் குழந்தை புதிய திறன்களை கற்றுக்கொள்வதற்கு எளிதான மற்றும் வேடிக்கையான ஆக்டிவிட்டிகளை நீங்கள் செய்யலாம்.
உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க நீங்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் குழந்தை எழுப்பும் சத்தங்களுக்குப் பதிலளித்து, வேடிக்கையான முகபாவனைகளை உருவாக்கி, குழந்தை கவனிக்கும்படி உங்கள் வாயால் எழுத்துக்களின் ஒலிகளை உருவாக்குங்கள். இந்த வழியில், உங்கள் குழந்தைக்கு நீங்கள் பேசும் மொழியின் துணுக்குகளை உள்வாங்கிக்கொள்வதற்கு நீங்கள் உதவலாம். இதன் மூலம் குழந்தை நீங்கள் பேசியதை புரிந்து கொள்ளவும், உங்கள் உள்ளீடுகளை மொழியாக செயலாக்கவும் உதவும்.
கை தட்டுதல் அல்லது விரல்களை கொண்டு சைகளை செய்தல்/விசில் அடிப்பது போன்ற செயல்பாடுகள் உங்கள் குழந்தையின் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் வேடிக்கையான செயலை செய்யும்போது உங்கள் குழந்தை அதற்கு எப்படி உடல் ரீதியாக பதில் சொல்லவேண்டும் என்பதைக் காட்ட நீங்கள் அவர்களின் கைகளைப் பயன்படுத்தலாம்.
விலங்குகள், பறவைகள் மற்றும் கலர்ஃபுல் படங்களைக் கொண்ட புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து குழந்தைகள் முன் படிக்கவும். விலங்கு, பறவை அல்லது நீங்கள் காண்பிக்கும் படத்திற்கு ஏற்ற ஒலிகளை உருவாக்கவும். உதாரணமாக, நீங்கள் ஒரு நாயின் படத்தைக் காண்பிக்கும்போது ‘வவ் வவ்’ என்ற ஒலியை எழுப்பலாம். உங்கள் குரலின் தொனி அல்லது கதைக்களத்தின் காட்சிப்படுத்தல், உங்கள் குழந்தைக்கு புத்தக வாசிப்பின் மீது ஆர்வத்தை வளர்க்க உதவும்.
பில்டிங் பிளாக்ஸ் போன்ற டாய்கள் உங்கள் குழந்தைக்கு யோசிக்கும் திறனையும் பொருளை கட்டியெழுப்ப/சரியாக அடுக்க கற்றுக்கொள்ளவும் உதவும். உதாரணமாக, ஒரு குழந்தை பல பொருட்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால், அவை விழக்கூடும். இதே அவர்கள் பில்டிங் பிளாக்குகளை பயன்படுத்தினால் அந்த திறன் மற்ற பொருட்களிடமும் பயன்படும் இவை அனைத்தும் குழந்தைகளின் பகுத்தறியும் திறனை வளர்க்க உதவுகிறது.
இதையும் படிக்கலாமே! - குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான முக்கிய உணவுகள்
நீங்கள் உங்கள் குழந்தைக்குப் பாடல் பாடும்போது உங்கள் உடல் அசைவுகளுடன் விளையாடுங்கள்/துள்ளி குதியுங்கள். ரைம்கள், தாளங்கள் மற்றும் பல்வேறு வகையான நான்-வெர்பல் கம்மியூனிகேஷனுடன் குழந்தையை மகிழ்விப்பதால், உங்கள் குழந்தையின் கற்றலை மேம்படுத்த இவையாவும் உதவும்.
உங்கள் குழந்தையுடன் விளையாடும்போது மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துங்கள். அவர்களின் கவனத்தை ஈர்க்கவும் வேடிக்கையான செயல்பாடுகளை உருவாக்கவும் உடல் மொழி, ஒலிகள் மற்றும் குரல்களின் கலவையைப் பயன்படுத்துவது அவர்களின் கற்றல் திறனை வளர்க்கும்.
Yes
No


















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |