hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • பகல்நேர பராமரிப்பு மையங்களிலிருந்து மழலையர் பள்ளிகள் எவ்வாறு வேறுபடுகின்றன(How Preschools Differ from Day Care Centres in Tamil)  arrow

In this Article

    பகல்நேர பராமரிப்பு மையங்களிலிருந்து மழலையர் பள்ளிகள் எவ்வாறு வேறுபடுகின்றன(How Preschools Differ from Day Care Centres in Tamil) 

    பகல்நேர பராமரிப்பு மையங்களிலிருந்து மழலையர் பள்ளிகள் எவ்வாறு வேறுபடுகின்றன(How Preschools Differ from Day Care Centres in Tamil) 

    28 June 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    மழலையர் பள்ளிக்கும் பகல்நேர பராமரிப்பு மையத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் நீங்கள் குழப்பமடைகிறீர்களா? ஒருவேளை உங்கள் குழந்தை பகல்நேர பராமரிப்பில் சமத்தாக இருந்தாலும் கூட நீங்கள் அவரை மழலையர் பள்ளிக்கு மாற்றுவது குறித்து யோசித்துக்கொண்டிருக்கலாம்.

    உங்கள் குறுநடை போடும் குழந்தையை எதில் சேர்ப்பது சரி என்று நீங்கள் முடிவு செய்ய உதவும் வகையில் இதோ உங்களுக்காக நாங்கள் மெனக்கெட்டு சில தகவல்களை சேகரித்து வழங்கியுள்ளோம்.

    பாலர் பருவ (மழலையர்) பள்ளி என்றால் என்ன?(What is a preschool?In Tamil)

    இது பொதுவாக மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், குழந்தைப் பருவத்தில் இருந்து மாறிய மழலையர் பள்ளிக்குச் செல்லும் வயதை அடையாதவர்களுக்கும் ஏற்ற பள்ளியாகும். மழலையர் பள்ளியானது குழந்தைகளின் அடுத்த கட்டத்திற்கான அடித்தளத்தை அமைப்பதில் கவனம் செலுத்துகிறது. அதோடு, இது முழுமையான கற்பித்தல் தத்துவத்தை பின்பற்றுகிறது. பொதுவாக மழலையர் பள்ளிகள் தினசரி நாள் முழுவதும் அல்லாமல் சிறிது நேரத்திற்கு மட்டுமே செயல்படுகின்றன. மேலும், நீங்கள் இத்தகைய பள்ளிகளுக்கு உங்கள் குழந்தையை அனுப்புவதற்கு முன் அவர்களுக்கு மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சியை கொடுத்திருப்பது அவசியாயமாகும்.

    மழலையர் பள்ளி பகல்நேர பராமரிப்பு மையத்தில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?(How is a preschool different from day-care? In Tamil)

    • மழலையர் பள்ளி குறுகிய நேரங்களுக்கு மட்டுமே இயங்கும். அதோடு, தேசிய விடுமுறை மற்றும் கோடை விடுமுறையின் போது மூடி இருக்கும்.

    • மறுபுறம், பகல்நேர பராமரிப்பு மையங்கள் மழலையர் பள்ளியைப் போல் அல்லாமல் அதிக நேரத்திற்கு இயங்கும். அதோடு, பொதுவாக விடுமுறை அல்லது மற்ற நாட்களின் போதும் கூட முழு நேரப் பராமரிப்பை வழங்குகின்றன. இது வேலை செய்யும் பெற்றோருக்கு மிகவும் வசதியான தேர்வாக இருக்கும்.

    இதையும் படிக்கலாமே! - பல ஆண்டுகளுக்குப் பிறகு சி-செக்ஷன் தழும்பு ஏன் வலிக்கிறது?

    மழலையர் பள்ளி ஒரு பகல்நேர பராமரிப்பு மையத்துடன் எவ்வாறு ஒத்திருக்கிறது?(How is preschool similar to a day-care centre?In Tamil)

    • ஒரு நல்ல மழலையர் பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு மையம் என இவ்விரண்டுக்கும் பெரிதாக வேறுபாடு இருக்காது.

    • கல்வி சார்ந்த வேறுபாடுகளைப் பொறுத்தவரையில், மழலையர் பள்ளிகள் கற்றலில் அதிக கவனம் செலுத்துகின்றன, அதே நேரத்தில் பகல்நேர பராமரிப்பு மையங்கள் பொதுவாக பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகளின் அறிவாற்றல், சமூக மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பகல்நேரப் பராமரிப்பு மையத்தின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    பகல்நேர பராமரிப்பாளர்கள் vs. மழலையர் பள்ளி ஆசிரியர்கள்(Day care caregivers vs. Preschool teachers In Tamil)

    • மழலையர் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதோடு, கற்பித்தலுக்கு ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பவர்கள்.

    • பகல்நேரப் பராமரிப்பு பணியாளர்களுடன் ஒப்பிடும்போது மழலையர் பள்ளி ஆசிரியர்கள் முறையான பயிற்சியைப் பெற்றிருப்பார்கள்.

    • உங்கள் குழந்தைக்கு சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்ய, இரண்டிலும் உள்ள நன்மை தீமைகளின் பட்டியலை நீங்களே தயார் செய்யலாம். ஆம், உங்கள் குழந்தை எங்கு நிறைய கற்றுக் கொள்வார்கள், எங்கு ஈடுபாட்டுடன் இருப்பார்கள், எங்கு நன்றாக விளையாடுவார்கள் போன்ற பல கேள்விகளை நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். மேலும், ஆன்-சைட் (நேரில் சென்று) ஆராய்ச்சி செய்து, உங்கள் குழந்தைக்கு சரியான பொருத்தத்தைக் கண்டறியவும்.

    Tags :

    preschool or daycare in tamil, which one is best preschool or daycare in tamil, is preschool best for my kids in tamil, is daycare best for my kids in tamil

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.