This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

பெண்களில் மலட்டுத்தன்மையை குணப்படுத்தும் 4 வகையான சிகிச்சைகள்(Top 4 kinds of infertility treatments to cure female Infertility In Tamil)

Pregnancy
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 30, 2026
பெண்களில் மலட்டுத்தன்மையை குணப்படுத்தும் 4 வகையான சிகிச்சைகள்(Top 4 kinds of infertility treatments to cure female Infertility In Tamil)
Read time5 min

அறிமுகம்

தன்னுடைய ஆண் துணையுடன் கருத்தடை எதுவும் பயன்படுத்தாமல், 12 மாதங்களுக்கு மேலாக உடலுறவு கொண்ட பின்னும் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்க முடியவில்லை என்றால், அது மலட்டுத்தன்மையைக் குறிக்கலாம். இந்த மலட்டுத்தன்மைக்கு ஆண்களும் காரணமாக இருக்கலாம். இது போன்ற சமயத்தில், பிரச்சினையை சரி செய்ய ஒரு மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.

பெண்களில் மலட்டுத்தன்மை ஏற்படக் காரணங்கள்(Causes of women's infertility In Tamil):

மலட்டுத்தன்மை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் தாமாக மறைந்து விடும் என்ற கட்டுக்கதையை ஒருவர் நம்பக்கூடாது. இது ஒரு தீவிரமான பிரச்சினை மற்றும் இதனை சரிசெய்ய உங்களுக்கு மருத்துவரின் உதவி தேவை. மலட்டுத்தன்மைக்கான காரணத்தைக் கண்டறியவும், அதற்கான சிகிச்சைகளும் பல உள்ளன. காலத் தாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக சிகிச்சையைப் பெறுவது அவசியம்.

பெண்களில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தக்கூடிய சில பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

1. சேதமடைந்த ஃபாலோப்பியன் குழாய்கள்(Damaged fallopian tubes) :

ஒரு சேதமடைந்த ஃபலோப்பியன் குழாயானது விந்தணுவை முட்டையை சந்திக்க விடாது. எனவே, கருத்தடைகள் இல்லாமல் உடலுறவு கொண்டால் கூட அப்பெண்ணால் கர்ப்பமாக முடியாது. கூடுதலாக, விபத்துகள் அல்லது இடுப்பு பகுதியைச் சுற்றி செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளின்போது ஃபலோப்பியன் குழாய் சேதமடைந்து மலட்டுத்தன்மையை உண்டாக்கலாம்.

2.ஹார்மோன்களின் விளைவுகள்(Hormonal effects) :

ஹைப்பர்தைராய்டிசம் அல்லது ஹைப்போதைராய்டிசம் போன்ற ஹார்மோன் குறைபாடுகள் ஒரு பெண்ணின் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம். கூடுதலாக, அதிக அளவு புரோலாக்டின் கூட ஓவுலேஷனை பாதிக்கலாம். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் ஹார்மோன் குறைபாடு கூட மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.

3.புற்றுநோய்(cancer) :

புற்றுநோய்க்கான சிகிச்சையில் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு அடங்கும். கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு ஆகிய இரண்டும் ஒரு பெண்ணில் கருவுறாமையை ஏற்படுத்தக்கூடியது.

4.முன்கூட்டிய மெனோபாஸ்(Premature menopause) :

நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சிக்கல்கள் கொண்ட ஒரு பெண் தனது 40 வயதை அடையும் முன்பாகவே மெனோபாஸை அனுபவிக்கலாம். இது ஒரு பெண்ணின் மலட்டுத்தன்மைக்கு நிச்சயமான காரணமாகும். ஏனெனில், மெனோபாஸ் கட்டத்தில் ஒரு பெண்ணின் சூலகம் வேலை செய்யாது.

5.கருப்பைவாய் சார்ந்த சிக்கல்கள்(Cervical complications):

கருப்பை அல்லது கருப்பைவாய் கட்டிகள் போன்ற புற்றல்லாத கட்டிகள் கூட மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம். இது போன்ற சூழ்நிலைகளில், கருவானது கருப்பையை அடைய முடியாது மற்றும் ஓவுலேஷன் நடைபெறாது.

6.எண்டோமெட்ரியோசிஸ்(Endometriosis) :

சில சமயங்களில், கருப்பைக்கு வெளியே கருப்பை திசுக்கள் வளரலாம். இதனால் கருப்பை மற்றும் ஃபலோப்பியன் குழாய்கள் சரியாக வேலை செய்யாது. இது பெண்ணின் கருவுறாமைக்கு காரணமாகிறது.

கருத்தரித்தல் டயட் பிளான்(Fertility diet plan In Tamil) :

மலட்டுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டால், மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையைத் தொடர்ந்து ஒரு சில சோதனைகள் செய்து கொள்வது அவசியம். இருப்பினும், கருவுறுதலை மேம்படுத்த, முட்டையின் தரத்தை மேம்படுத்துவதற்கான டயட் பிளான் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும். ஏனெனில் அது ஒரு சப்ளிமெண்டாகச் செயல்படுகிறது.

நீங்கள் கருவுறாமைக்கான சிகிச்சையை மேற்கொள்கிறீர்கள் என்றால், ஆரோக்கியமான உணவு உட்கொள்ளும் முறை உங்கள் கருத்தரித்தலுக்கான டயட் பிளானில் இடம் பெற வேண்டும். அதிக நார்ச்சத்துள்ள உணவு, பச்சை இலை காய்கறிகள் மற்றும் மீன் இந்த சூழ்நிலைகளில் உதவியாக இருக்கும். பழங்களில், சிட்ரஸ் பழங்கள் மற்றும் ராஸ்பெர்ரி அல்லது ப்ளாக்பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

வஞ்சிரம், மீன்கள், சீஸ், வெண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றில் காணப்படும் ஆன்டியாக்ஸிடண்டுகள், வைட்டமின் D மற்றும் ஃபோலேட்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உங்களின் கருத்தரித்தல் டயட் பிளானின் சிறந்த கூடுதல்கள் ஆகும். கால்சியம் மற்றும் இரும்புச்சத்து கொண்ட பச்சை இலை காய்கறிகளை எடுப்பதும் பரிந்துரை செய்யப்படுகிறது. கூடுதலாக, ஆரோக்கியமான உணவை உண்பது உங்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தும். இறுதியாக, நீங்கள் மலட்டுத்தன்மைக்கான சிகிச்சைக்கு செல்லும்போது ஆரோக்கியமாக உடல் சிகிச்சையைத் தாங்கிக் கொள்ள தேவையான பலத்தை உங்களுக்கு தரும்.

பெண்களில் மலட்டுத்தன்மையை குணப்படுத்தும் 4 சிறந்த சிகிச்சைகள்(Top 4 kinds of infertility treatments to cure female Infertility In Tamil) :

கீழே, நான்கு பொதுவான மலட்டுத்தன்மையை குணப்படுத்தும் சிகிச்சைகளின் பட்டியலைக் கண்டறியவும்:

1. செயற்கை விந்தூட்டல்(Artificial insemination) :

செயற்கை விந்தூட்டல் முறையில், உங்கள் இனப்பெருக்க அமைப்பில் உங்கள் கணவரது விந்தணு வைக்கப்படுகிறது. உங்களை கர்ப்பமாக்க இது ஓவுலேஷன் நேரத்தில் வைக்கப்படும். கருப்பையுள் விந்தேற்றம் என்ற இதே போன்ற மற்றொரு முறையும் உள்ளது. இந்த விஷயத்தில், விந்தணுவானது ஒரு சிறுநீர் வடிகுழல் ஒன்றில் வைக்கப்பட்டு அது முட்டையை சந்திப்பதற்கான வாய்ப்பு உண்டாக்கப்படுகிறது.

2.இன் விட்ரோ கருத்தரித்தல்(In vitro fertilization) :

இன் விட்ரோ கருத்தரித்தல்(IVF) முறையில், உங்கள் கணவரின் விந்தணுவும், உங்களின் முட்டையும் ஒரு ஆய்வகத்தில் கருவாக்கப்படுகிறது. இதன் பிறகு உங்களை கர்ப்பமாக்கும் நோக்கத்துடன் அது உங்கள் கருப்பையில் வைக்கப்படுகிறது.

3.டோனர் முட்டைகள்(Donor eggs) :

இந்த சிகிச்சையில், நீங்கள் குழந்தையின் உண்மையான தாயாக இருக்க மாட்டீர்கள். ஏனெனில், உங்கள் கணவரின் விந்தணுவை மற்றொரு பெண்ணின் முட்டையோடு இணைத்து கருவாக்கப்பட்டு பின்னர் உங்கள் கருப்பையில் வைக்கப்படும்.

4.வாடகைத்தாய்(Surrogate motherhood) :

வாடகைத்தாய் முறையில், குழந்தையானது உயிரியல் ரீதியாக தொடர்பில்லாத மற்றொரு பெண்ணின் கருப்பையில் வளர்கிறது. விந்தணு மற்றும் முட்டை கருவாக்கப்பட்டு IVF மூலமாக மற்றொரு பெண்ணின் கருப்பையில் வைக்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே! - ஆண்களில் மலட்டுத்தன்மை போக்கும் கருத்தரித்தல் டயட் பிளான்கள்

முடிவுரை :

குழந்தை இல்லாமல் இருத்தல் என்பது ஒரு முக்கியமான பிரச்சினை ஆகும். இது பல குடும்பங்களை சிதைத்து வருகிறது. ஆகவே, மலட்டுத்தன்மை குறித்த அறிகுறிகளை ஒருவர் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். நவீன மருத்துவ சிகிச்சைகள் உங்களுக்கு உதவக்கூடும் மற்றும் அதன் விளைவாக நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த சந்தோஷம் உங்களுக்கு கிடைக்கலாம்.

Tags :

Infertility in tamil, female infertility meaning in tamil, treatments for infertility in tamil, reasons for infertility in tamil, how to cure infertility in tamil

Mylo Ovaluna Female Fertility Tablets - 60 Capsules

Mylo Ovaluna Female Fertility Tablets - 60 Capsules

Improves Egg Health & Folate Levels |Improves Reproductive Health & Hormonal Balance

6367 Moms bought
₹1799₹249928% Off
Rating
4.9
(646)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.