This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

ஆண்களில் மலட்டுத்தன்மை போக்கும் கருத்தரித்தல் டயட் பிளான்கள் (Can A Diet Plan Help Deal With Infertility In Men And Boost The Chances Of Conception In Tamil)

Pregnancy
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
ஆண்களில் மலட்டுத்தன்மை போக்கும் கருத்தரித்தல் டயட் பிளான்கள் (Can A Diet Plan Help Deal With Infertility In Men And Boost The Chances Of Conception In Tamil)
Likes1 Likes|
Read time7 min

அறிமுகம் (Introduction)

ஒரு குழந்தைக்கு பெற்றோராகும் பயணத்தில் பல தம்பதியினர் இன்று பல சிக்கல்களை அனுபவித்து வருகின்றனர் என்பது அறிந்ததே. பெரும்பாலும் சிக்கலானது ஆண்களில் காணப்படுகிறது. மலட்டுத்தன்மையை அனுபவிக்கும் மூன்றில் ஒரு பங்கு தம்பதிகளில் ஆண்களின் விந்தணுவில் சிக்கல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. வாழ்க்கை முறை, சுகாதார பிரச்சினைகள் மற்றும் மரபியல் போன்ற பல விஷயங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். கருத்தரிப்பதற்கான உறுதியை அளிக்காவிட்டாலும் கூட கருத்தரித்தல் டயட் பிளான் என்பது அந்த வாய்ப்பை அதிகரிக்க உதவுகிறது.

ஆண்களில் மலட்டுத்தன்மை ஏற்படக் காரணங்கள் (Causes of infertility in men In Tamil)

குறைவான விந்தணுக்களின் எண்ணிக்கை, மோசமான விந்தணு தரம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் அடைப்பு போன்ற பல காரணங்கள் ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு பங்களிக்கலாம். இதில் உள்ள ஒரு சிலவற்றை சரிசெய்வது நம் கையில் இல்லாவிட்டாலும், வாழ்க்கை முறை மற்றும் உணவு மாற்றங்கள் செய்வது கருத்தரித்தலை மேம்படுத்த உதவும். ஆண் மற்றும் பெண்ணின் கருத்தரித்தல் தன்மையை அதிகரிக்க ஆன்டியாக்ஸிடண்டுகள் நிறைந்த கருத்தரித்தல் டயட் பிளானை பின்பற்றுவது அவசியம்.

ஆன்டியாக்ஸிடண்டுகள் செல்களை சேதத்தில் இருந்து காப்பாற்றி, விந்தணுவின் தரத்தை மேம்படுத்த உதவும். அடர் பச்சை இலை காய்கறிகள், பெர்ரி பழங்கள் மற்றும் தக்காளி பழங்கள் போன்றவற்றில் அதிக அளவு ஆன்டியாக்ஸிடண்டுகள் காணப்படுகிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கருத்தரித்தல் டயட் பிளானை பின்பற்றுவது தவிர, உங்களை ஆக்டிவாக வைத்துக்கொள்வதும், மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்வதும் உங்களின் கருத்தரிக்கும் தன்மையை மேம்படுத்த உதவும். உடற்பயிற்சி செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, கருத்தரிக்கும் தன்மையை பாதிக்கும் மன அழுத்த ஹார்மோன்களை குறைக்க உதவுகிறது. மேலும், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை முடிந்த வரை நிறுத்துங்கள். ஏனெனில், இது போன்ற பழக்கங்கள் உங்கள் விந்தணுவின் தரத்தை பாதிக்கலாம்.

கருத்தரித்தலில் டயட் பின்பற்றுவதன் பங்கு (The role of diet in fertility In Tamil) :

கருத்தரிக்க முயற்சிப்பது என்பது ஒருவரை மன ரீதியாகவும், உடலளவிலும் சோர்வாகவும் மாற்றும் என்பதை பெரும்பாலான தம்பதிகள் அறிவார்கள். கருத்தரிக்க முயற்சிக்கும் போது, தாம் செய்யும் அனைத்தும் தவறு போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படும். இது போன்ற நேரங்களில் தங்கள் உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும். கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் (அல்லது தவிர்க்க வேண்டும்) என்பதை ஒருவர் தெரிந்து கொள்வது அவசியம்.

கர்ப்பம் தரிப்பதை ஊர்ஜிதம் செய்யும் உணவு என்ற ஒன்று இல்லாமல் போனாலும், கருத்தரித்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உணவு சார்ந்த மாற்றங்கள் உள்ளதை சில சான்றுகள் காட்டுகின்றன. உதாரணமாக, அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்ணும் ஆண்கள் ஃபிரஷான கோழிக்கறி மற்றும் மீன்கள் சாப்பிடும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே கொண்டுள்ளனர் என்பதை ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும் சில ஆய்வுகள், முழு கொழுப்பு நிறைந்த பால் சார்ந்த பொருட்களை உண்ணும் பெண்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவதாக் கூறுகிறது.

கருத்தரித்தலை மேம்படுத்த உதவும் உணவுகள் (Foods to eat for fertility In Tamil)

உங்களின் கருத்தரித்தல் வெயிட் லாஸ் டயட் பிளானில் சேர்த்து கொள்ள வேண்டிய பல உணவுகள் உள்ளன. அவற்றில் கருத்தரிப்பதை மேம்படுத்த உதவும் சிறந்த உணவுகள் பற்றி இப்போது பார்க்கலாம்:

1. முட்டைகள்(Eggs) :

முட்டையானது புரதத்தின் சிறந்த ஆதாரமாக இருப்பதோடு, இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது.

2. வஞ்சிரம்(salmon) :

வஞ்சிரம் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஹார்மோன் உற்பத்தியை ஊக்குவிக்கும்.

3. கீரை வகைகள்(Spinach) :

ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் உட்பட இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கீரைகளில் பெருமளவில் உள்ளது.

4. நட்ஸ் வகைகள் மற்றும் விதைகள்(Nuts and seeds) :

இனப்பெருக்க ஆரோக்கியத்தை ஆதரிக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களான சின்க், செலீனியம் மற்றும் வைட்டமின் E நட்ஸ் வகைகள் மற்றும் விதைகளில் காணப்படுகிறது.

5.ஓட்ஸ்(oats) :

ஹார்மோன் அளவுகளை சீரமைக்க உதவும் நார்ச்சத்து ஓட்ஸில் ஏராளமாக உள்ளது. ஆற்றல் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் பி-வைட்டமின்களும் இதில் உள்ளது.

கருத்தரித்தலுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் (Foods to avoid for fertility In Tamil)

சோயா(soya) :

சோயா என்பது கருத்தரிப்பதை பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான உணவுப்பொருள். சோயா பீன்ஸ் மற்றும் சோயா சார்ந்த உணவுகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போல நடித்து கருத்தரிப்பதற்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் சமநிலையை சீர்குலைக்கும்.

காஃபின் (coffine) :

கருத்தரித்தலை மோசமாக பாதிக்கும் மற்றொன்று காஃபின் ஆகும். காஃபின் என்பது உடலில் மன அழுத்தம் மற்றும் கார்டிசோல் அளவுகளை அதிகரிக்கும். இது கருத்தரிப்பதை பாதிக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்(processed foods) :

ஆரோக்கியமற்ற கொழுப்புகள், இரசாயனங்கள மற்றும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட சர்க்கரை போன்றவற்றை அதிக அளவில் கொண்டுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் பொதுவாக கருத்தரிப்பதற்கு (மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம்) ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது.

மது பானங்கள் அருந்துவது விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை எதிர்மறையாக பாதிக்கிறது. மேலும் இது சூலகத்தின் செயல்திறனையும் பாதிக்கும். நீங்கள் கருத்தரிக்க முயற்சி செய்து வருகிறீர்கள் என்றால் மது அருந்துவதை கட்டுப்படுத்துவது அல்லது முடிந்த வரை அதனை தவிர்ப்பது நல்லது.

கருத்தரித்தலை மேம்படுத்தும் சப்ளிமெண்ட்ஸ் (Supplements for fertility In Tamil)

ஆண்களில் கருத்தரிக்கும் தன்மையை மேம்படுத்த கருத்தரித்தல் டயட் பிளானுடன் சேர்த்து கொள்ள வேண்டிய சில சப்ளிமெண்ட்ஸ் உள்ளன. இதில் பிரபலமான சிலவற்றை பற்றி பார்ப்போம்:

செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கும் முக்கியமான ஆன்டியாக்ஸிடண்டுகளில் CoQ10- யும் ஒன்று. இது விந்தணுக்களின் தரம் மற்றும் நகர்திறன்னை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.

L-கார்னிட்டைன் (L-carnitine) :

L-கார்னிட்டைன் என்பது ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு அமினோ அமிலம் ஆகும். இது விந்தணுக்களின் நகர்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.

சின்க் (Zinc) :

உடலின் பல செயல்முறைகளில் பங்குபெறும் ஒரு முக்கியமான தாது ஆகும். இது விந்தணுக்களின் தரம் மற்றும் டெஸ்டாஸ்டெரான் அளவுகளையும் அதிகரிக்க உதவுகிறது.

வைட்டமின் C (Vitamin C) :

செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கும் முக்கியமான ஆன்டியாக்ஸிடண்டுகளில் வைட்டமின் C ஒன்று. மேலும், இது விந்தணுக்களின் தரம் மற்றும் டெஸ்டாஸ்டெரான் அளவுகளை மேம்படுத்தவும் உதவும்.

கருத்தரித்தலுக்கு உடற்பயிற்சி மற்றும் ஓய்வு (Exercise and relaxation for fertility In Tamil)

கருத்தரிப்பதை உறுதி செய்ய உதவும் “மேஜிக்“ உடற்பயிற்சி இல்லாவிட்டாலும் கூட, தொடங்குவதற்கு மிதமான ஏரோபிக் பயிற்சிகள் சிறந்தவை ஆகும். ஒவ்வொரு வாரமும் ஒரு சில 30 நிமிட பயிற்சிகள் செய்வது நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆண்களில் ரிலாக்ஸேஷனானது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நகர்திறனை மேம்படுத்த உதவும். அதுவே பெண்களில் ரிலாக்ஸேஷனானது ஹார்மோன் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, ஓவுலேஷன் நடைபெறுவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே! - தாமதமாக கருத்தரித்தல் காரணங்கள் மற்றும் தெரிந்து கொள்ள வேண்டியவை

முடிவுரை (Conclusion)

சமச்சீரான உணவானது ஆண்களில் கருத்தரிக்கும் வீதத்தை அதிகரிக்கும் என்பதைக் காட்டும் ஏராளமான தரவுகள் உள்ளன. மலட்டுத்தன்மையை எதிர்கொள்ளும் ஆண்கள் கருத்தரிக்கும் தன்மையை ஊக்குவிக்கும் டயட் பிளான்கள் குறித்து தங்களின் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.

TAGS :

Male infertility in tamil, foods for male fertility in tamil, foods to avoid for fertility in tamil, Can A Diet Plan Help Deal With Infertility In Men And Boost The Chances Of Conception In English, Can A Diet Plan Help Deal With Infertility In Men And Boost The Chances Of Conception In hindi, Can A Diet Plan Help Deal With Infertility In Men And Boost The Chances Of Conception In Telugu, Can A Diet Plan Help Deal With Infertility In Men And Boost The Chances Of Conception In Bengali

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.