
உங்கள் சின்னஞ்சிறு குழந்தை தன் கட்டிலில் தான் நிறைய நேரத்தை செலவிடப்போகிறது. நீங்கள் ஒரு பாதுகாப்பான, மரத்தாலான குழந்தைக் கட்டிலை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள இந்த சரிபார்ப்புப் பட்டியல் உங்களுக்கு உதவும்.
குழந்தையின் மரக்கட்டிலில் விரிசல் இருப்பதோ அல்லது தடுப்புக்கம்பிகள் இல்லாமல் இருப்பதோ கூடாது. மெத்தையிலிருந்து குழந்தைப் படுக்கைத் தடுப்பின் உயரம் குறைந்தது 2 அடி இருக்க வேண்டும்.
கார்னர் போஸ்ட்-களில் பகட்டான பலவடிவக் கைப்பிடிகள் இருக்கக்கூடாது. இருந்தால், குழந்தைக்கு தற்செயலான காயம் ஏற்படாமல் தடுக்க, நீங்கள் அவற்றை அகற்றிவிட்டு விளிம்புகள் ஏதேனும் கரடுமுரடாக இருந்தால், அதனை நன்றாகத் தேய்த்து ஸ்மூத் ஆக வைக்க வேண்டும்.
குழந்தைக்கட்டிலின் பாகங்களை இணைக்கும் மரைகள், திருகுகள் போன்றவை கூர்மையான விளிம்புகளோ கரடுமுரடான பகுதிகளோ அல்லது உங்கள் சின்னஞ்சிறிய குழந்தையைக் காயப்படுத்தக்கூடிய வேறு எதுவுமோ இல்லாமல் உறுதியாகப் பொருத்தப்படவேண்டும். கட்டிலின் மரம் விரிசல்களோ பிளவுகளோ இல்லாமல் இருக்கவேண்டும். அசல் பாகங்களை மாற்ற நேர்ந்தால் அதற்குப் பதிலாக மலிவான மாற்றுப்பாகங்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக அசல் மாற்றுப்பாகங்களை வாங்குங்கள்.
குழந்தையின் மரக்கட்டில் என்று வரும்போது வண்ணத்தை மட்டுமின்றி மற்ற விஷயங்களையும் நன்கு கவனியுங்கள். முற்காலத்தில் தயாரிக்கப்பட்ட குழந்தைக்கட்டில்களின் மேல்பூச்சில் ஈயம் இருந்தது. அது குழந்தைகளுக்கு கடுமையான உடல்நல அபாயத்தை ஏற்படுத்தியது. வண்ணப்பூச்சு ஈயத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், வண்ணப்பூச்சின் தரத்தைப் பற்றி மேலும் அறிய வண்ணப்பூச்சில் என்னென்ன பொருள்கள் உள்ளன என்று அதன் லேபிளைச் சோதிக்கவும்.
குழந்தைக்கட்டிலுக்குள் மெத்தை நன்றாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தையின் மரக்கட்டிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இருவிரல் சோதனை செய்யலாம். அதாவது, கட்டிலுக்கும் மெத்தைக்கும் இடையில் உங்களால் இரண்டு விரல்களுக்கு மேல் விடமுடிந்தால், மெத்தை பொருந்தவில்லை என்று அர்த்தம். குழந்தைக்கட்டிலில் மெத்தையைப் போடுவது உங்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அது உங்கள் குழந்தைக்கு நல்லது.
மேலும், மெத்தை புதியதாக இருந்தால், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதைச் சுற்றியிருக்கும் பிளாஸ்டிக்கைக் கண்டிப்பாக எடுத்துவிடுங்கள். மெத்தை உறுதியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மெத்தை மிக மென்மையானதாக இருந்தால் குழந்தை திடீர் இறப்பு நோயறிகுறி (எஸ்ஐடிஎஸ்) ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. மெத்தை உறுதியாக இருக்கிறதா என்று நீங்களே சோதிக்கலாம்.
குழந்தை படுத்துறங்கும் கட்டிலில் சாஃப்ட் டாய்ஸ் அல்லது மென்மையான தலையணை அல்லது விரிப்புகளையோ ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் குழந்தைக்கட்டிலுடன் சிலசமயம் வரக்கூடிய மெத்துமெத்தென்ற இருக்கும் தலையணையும் அடங்கும். இப்படிப்பட்ட மென்மையான பொருட்கள் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயத்தை உண்டாக்கலாம்.
இதையும் படிக்கலாமே! - குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 4 முக்கியமான ஊட்டச்சத்துகள்
சாய்ந்த நிலையில் உள்ள பேபி ஸ்லீப்பர் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அது சில நேரங்களில் குழந்தையை கீழே விழச் செய்து விடலாம். மெத்தையின் மேற்பரப்பு உறுதியாகவும் தட்டையாகவும் இருப்பதே சிறந்தது.
உங்கள் குழந்தைக்கு ஏற்ற குழந்தைக்கட்டிலைத் தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் முயற்சியும் பரிசீலனையும் செய்வீர்கள் என்பது நிச்சயம். அப்படிச் செய்யும்போது கட்டிலின் வண்ணங்கள், துணிகள், ஒட்டுமொத்தத் தோற்றம் ஆகியவற்றை நீங்கள் கருதும்போது, கட்டிலின் பாதுகாப்பு அம்சத்தைப் பற்றியும் சிந்திக்க மறக்காதீர்கள்.

Baby Wooden Cot with Rocker & Wheel




Baby Wooden Cot cum Desk with Wheel



This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |