This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்பகாலத்தில் பேதியானால் நிறுத்துவது எப்படி?

Illnesses & Infections
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
கர்ப்பகாலத்தில் பேதியானால் நிறுத்துவது எப்படி?
Likes3 Likes|
Read time5 min

கர்ப்பகாலத்தில் பேதியானால் நிறுத்துவது எப்படி?

நீங்கள் கர்ப்பமாக இருப்பதை இப்போதுதான் அறிந்துகொண்டீர்கள் எனில், ஒன்பது மாதங்களில் ஏற்படும் பல கர்ப்பகால அறிகுறிகளைப் பற்றி நீங்கள் இன்னும் அறியாமலிருக்க வாய்ப்புள்ளது. வயிற்றுப்போக்கு என்பது அத்தகைய ஒரு பிரச்சினையாகும். இது கர்ப்பகாலத்தில் பிற அறிகுறிகளுடன் கூட இணைந்திருக்கலாம். முக்கியமான இந்தக் காலத்தில் இது உங்களை எப்படி பாதிக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படலாம். உங்கள் வயிற்றை பாதிக்கும் பிரச்சினை என்ன, கர்ப்பகாலத்தில் பேதியானால் எப்படி நிறுத்தலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

கர்ப்பகால ஆரம்பத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு

கர்ப்பகாலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது சகஜம்தான். இக்காலத்தின் முதல் மற்றும் இரண்டாவது மும்மாதங்களில் (trimester) பெரும்பாலான பெண்களுக்கு லேசான அல்லது மிதமான வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதேநேரத்தில் மூன்றாவது மும்மாதங்களில் பெரும்பாலான பெண்களுக்கு செரிமானம் ஆகாததால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கின் அறிகுறிகள் பின்வருமாறு:

  • ஒவ்வொரு நாளும் 3-5 முறை நீர்த்த மலம் போவது

  • அவசரமாகவும் அடிக்கடியும் சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பது

  • வயிற்று வலி அல்லது பிடிப்புகள்

  • உப்புசம் மற்றும் குமட்டல்

அன்றாட வாழ்க்கையில், வயிற்றுப்போக்குக்கான காரணங்களில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் வரும் நோய்கள் முதல் உணவு விஷமாதல் மற்றும் மருந்துகள் வரை அனைத்தும் அடங்கும். இருப்பினும், உணவு மாற்றங்கள், மனஅழுத்தம் (stress), குடல் எரிச்சல் நோய் (irritable bowel syndrome) போன்ற உள்ளார்ந்த நோய்கள், அத்துடன் கர்ப்ப காலத்தில் நீர்த்த மலம் போவது, கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவையே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன.

இரண்டாவது மும்மாதங்களில் ஏற்படும் வயிற்றுப்போக்கு

  • நீங்கள் இப்போது உட்கொள்ளும் அனைத்து ஆரோக்கியமான உணவுகளாலோ நீங்கள் குடிக்கும் கூடுதல் தண்ணீரினாலோ நீங்கள் செய்யத்தொடங்கியுள்ள உடற்பயிற்சியாலோ வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். உங்கள் தசைகள் தளர்வாகி பிரசவத்திற்குத் தயாராவதால், இது பிரசவத்திற்குச் சற்று முன்பும் ஏற்படலாம்.

  • கர்ப்பத்தின் இரண்டாவது மும்மாதங்களில் உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய முதல் விஷயம் வீட்டு வைத்தியம்.

  • அது ஏற்பட்டால் தாயாகப் போகும் பெண்கள் காரம் குறைந்த உணவைச் சாப்பிடத் தொடங்குவது நல்லது. அவர்கள் அதிகத் தண்ணீர் குடிக்கவும் வேண்டும். இரண்டாவது மும்மாதங்களில் வயிற்றுப்போக்கு அடிக்கடி ஏற்படுவதில்லையென்றாலும் எப்போதாவது ஏற்படலாம்.

கர்ப்பத்தின் மூன்றாவது மும்மாதங்களில் நீர்த்த மலம் போதல்

உங்களுக்கு மலம் நீர்த்துப் போவது உங்கள் உடல் பிரசவத்திற்குத் தயாராவதனால் இருக்கலாம். கர்ப்பகாலத்தின் கடைசியில் உங்கள் உடல் ப்ரோஸ்டாக்லாண்டின்கள் என்னும் ஹார்மோன்களை உருவாக்குகிறது. இது கருப்பையின் வாயை மென்மையாக்க உதவுகிறது. இந்த ஹார்மோன்கள் மலங்கழிப்பதை எளிதாக்கக்கூடும். இது அருவருப்பானதாகத் தோன்றினாலும், முற்காலத்தில் பெண்களுக்குப் பிரசவவலி எடுக்கத்தொடங்கியபோது எனிமா கொடுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயற்கையாகவே, உடலிலிருந்து கழிவுப்பொருட்கள் அகற்றப்பட வேண்டியபோதெல்லாம் மலம் நீர்த்துப் போகிறது.

கர்ப்பகாலத்தில் நீர்த்த மலம் போவதற்கான காரணங்கள்

கர்ப்பகாலத்தில் மாறும் ஹார்மோன் அளவுகளால் வரக்கூடிய மலச்சிக்கலுக்கு மாறாக, வயிற்றுப்போக்கு வருவது பெரும்பாலும் ஏதேனும் ஒரு வெளிப்புறக் காரணத்தினால்தான். இது எப்போதும் ஆபத்தானது அல்ல. கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் நீர்த்த மலம் போவதோ கர்ப்பத்தின் இரண்டாவது மும்மாதங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படுவதோ நீங்கள் அப்போது உட்கொள்ளும் அனைத்து ஆரோக்கியமான உணவுகள், குடிக்கும் கூடுதல் தண்ணீர், நீங்கள் தொடங்கிய உடற்பயிற்சி ஆகியவற்றால் இருக்கக்கூடும். உங்கள் தசைகள் பிரசவத்திற்குத் தயாராகத் தளர்வதனால், இது பிரசவத்திற்குச் சற்று முன்பும் ஏற்படலாம்.

இருப்பினும், கர்ப்பகாலத்தில் வயிற்றுப்போக்கைத் தூண்டும் ஹார்மோன்கள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஆகியவற்றுடன் தொடர்பில்லாத பல காரணிகளும் உள்ளன. கர்ப்பகாலத்தில் உணவு விஷமாதல், குடல் ஒட்டுண்ணிகள், வழக்கமான இரைப்பை அழற்சி ஆகியவற்றின் காரணமாகவும் மோசமான வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளில் ஏதேனும் இருக்கக்கூடும் என்று நீங்கள் நினைத்தால் விரைவில் உங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.

கர்ப்பகால பேதிக்கான வீட்டு வைத்தியம்

  • தண்ணீர் நிறையக் குடிக்கவும்

வயிற்றுப்போக்கால் உடல் இழந்த திரவங்களை நிரப்ப, தண்ணீர் அருந்துவது அவசியம். உங்கள் உடல் இழந்த திரவங்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றை நிரப்ப நீங்கள் சாறு, சூப் போன்றவற்றைக் குடிக்கலாம்.

  • காரமான உணவுகளைத் தவிர்க்கவும்

மிகவும் எண்ணெய், கொழுப்பு அல்லது காரம் சேர்ந்த உணவுகள் எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பாலையும் பால் பொருட்களையும் குறைந்த அளவில் உண்ணவும்.

  • இஞ்சி தேநீர் அருந்தவும்

இஞ்சி தேநீரின் தசைவலி குறைக்கும் குணங்கள் வயிற்றுப்போக்கின் அறிகுறிகளிலிருந்து விடுபட உதவும். வாயு மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் அதைக் குடிப்பதால் குறையும்.

கர்ப்பகால வயிற்றுப்போக்கிற்கான சிகிச்சை

வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க, உங்கள் மருத்துவர் ஒரு பாதுகாப்பான பேதிநிறுத்தும் மருந்தைப் பரிந்துரைக்கலாம். எந்தவொரு திரவ இழப்பையும் சரிசெய்ய உதவும் ட்ரிப்ஸ் போடுவது போன்ற பிற நடவடிக்கைகளையும் பெரும்பாலும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பதுண்டு. உங்களுக்கு வயிற்றுப்போக்கு இருந்தால், நீர் அருந்துவதும், நீரிழப்பின் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்வதும் மிக முக்கியம்:

  • உலர்ந்த தோல் அல்லது வாய்

  • கிட்டத்தட்ட சிறுநீர் போகாமலே இருப்பது

  • கருத்த நிறமான சிறுநீர்

  • சோர்வு அல்லது தலைசுற்றல்

இதையும் படிக்கலாமே! - https://mylofamily.com/ta/article/186614

முடிவுரை

கர்ப்பகாலத்தில் உங்களுக்கு பேதியானால் பெரும்பாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உண்மையில், உங்கள் கர்ப்பகாலத்தில் பல சிறிய நோய்களும் அசௌகரியங்களும் குறிப்பிடத்தக்க விளைவுகள் இல்லாமல் வந்து போகலாம். இருப்பினும், மருத்துவரிடம் போகவேண்டியதை அல்லது அவசர சிகிச்சை தேவைப்படுவதைக் காட்டும் அறிகுறிகளைப் பற்றி அறிந்து விழிப்புடன் இருப்பது நல்லது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் கர்ப்பமாக இருக்கும்போது வயிற்றுப் போக்கானால் நான் என்ன உண்ணலாம்?

ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கும் பாதாம்பருப்புகள் அல்லது பிஸ்கட்டுகள் போன்ற விரைவாக செரிக்கக்கூடிய உணவுப்பொருள்களையோ தின்பண்டங்களையோ உண்ணுங்கள். உங்கள் மருத்துவர் பரிந்துரைக்காவிட்டால் எந்த மருந்தையும் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

கர்ப்பகாலத்தில் பேதியை நிறுத்துவது எப்படி?

  • உங்கள் உடல் இழக்கும் திரவங்களை நிரப்ப நிறைய திரவங்களைக் குடிக்கவும்.
  • பழச்சாறுகள், சோடாக்கள், பால் பொருட்கள் ஆகியவை வயிற்றுப்போக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் அவற்றை உட்கொள்ளக்கூடாது.

Tags

Home Remedies for Loose Motion in Pregnancy in English, Home Remedies for Loose Motion in Pregnancy in Hindi, Home Remedies for Loose Motion in Pregnancy in Bengali

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.